ஒரு மாதக் குழந்தையின் வளர்ச்சி

hold a baby

செல்வ களஞ்சியமே – 20

‘எங்க காலத்துல குழந்தைகள் பிறந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கண்ணையே திறக்காதுகள். இதென்ன பிறந்த அன்னிக்கே சுத்தி சுத்தி பார்க்கறது?’

என் முதல் பேரன் பிறந்த அன்று என் அம்மா ரொம்பவும் அதிசயமாகக் கேட்டாள். அவன் பிறந்தது இரவு 11 மணிக்கு மேல். வெளியே மழை கொட்டோகொட்டென்று கொட்டித் தள்ளியது.  குழந்தையை ஒரு பச்சை வண்ணத் துணியில் சுற்றி என்னிடம் கொடுத்தார் மருத்துவர். உடலில்  சிலிர்ப்பு! குழந்தையை வாங்கி மாப்பிள்ளையிடம் கொடுத்தேன். என் அம்மா, என் கணவர், என் மகன், மாப்பிள்ளை என்று நாங்கள் ஐவர் மட்டுமே இருந்தோம். புத்தம் புது மலரை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.

எங்கள் ஆனந்தத்தை புரிந்து கொண்டது போல குழந்தையும் கண்களை உருட்டி உருட்டி எங்களைப் பார்த்தது. தொட்டிலில் விட்டேன். என் பெண்ணைக் கவனித்துவிட்டு திரும்பிப் பார்த்தால் குழந்தையை சுற்றியிருந்த துணி விலகி இருந்தது. எல்லோருக்குமே ஆச்சரியம் தான்.

காலத்திற்குத் தகுந்தாற்போல குழந்தைகளும் வேகமாக வளருகிறார்களோ என்று தோன்றியது.

குழந்தையின் வளர்ச்சியை ஒவ்வொரு மாதமாகப் பார்க்கலாம்.

தொடர்ந்து படிக்க : முதல் மாதக் குழந்தை:

 

5 thoughts on “ஒரு மாதக் குழந்தையின் வளர்ச்சி

  1. 23ம் தேதியே (http://fourladiesforum.com/2013/05/23/பிறந்த-குழந்தை-நம்பிக்க/) தளத்தில் வாசித்து விட்டேன் அம்மா… உங்களின் தளத்திலும் உடனே பதிவு செய்ய + இணைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்… நன்றி…

  2. வாருங்கள் தனபாலன்!
    10 நாட்களாக ஊரில் இல்லை. அதனால் இந்தத் தாமதம். ஊருக்குப் போவதற்கு முன் நான்குபெண்கள் தளத்திற்கு எழுதி அனுப்பிவிட்டேன். நேற்றுதான் ஊரிலிருந்து திரும்பினேன். புது பதிவு இல்லையே என்று உடனே பதித்தேன்.
    இனி இப்படி நடக்காது. இன்னும் உங்கள் பதிவுகளையும் படிக்க வில்லை. கூடிய சீக்கிரம் படித்து பின்னூட்டம் இடுகிறேன். பொறுத்தருள்க!

  3. பூணூல் கல்யாணம் சிறப்பாக முடிந்ததா? ஆசிகள் குழந்தைகளுக்கு.. ஸந்தோஷ அலைச்சல். உங்களுக்கு. சாவகாசமாகத் தொடருவோம்.. அன்புடன்

  4. பகிர்வு படிக்க மிகவும் சந்தோஷமாக இருந்தது பச்சைவண்ணத்துணியில் சுற்றி பூக்குவியலாய் சின்னுவை மூன்று வருடம் முன்பு என் கைகளில் ஏந்தியது நினைவு வந்தது. உப நயனம் நன்றாக நடந்து முடிந்ததா? ஓய்வு மிகவும் அவசியம் பிறகு சந்திப்போம்

  5. “காலத்திற்குத் தகுந்தாற்போல குழந்தைகளும் வேகமாக வளருகிறார்களோ என்று தோன்றியது.”

    ஆம் உண்மைதான் போல…
    அழகு.

Leave a comment