Life

அம்மா……மின்னலு……!

lightning

 

‘என்னம்மா திண்டி? (டிபன்) இன்னிக்கு?’

‘சப்பாத்தி, கடாய் வெஜிடபிள்….!

‘மாவு பிசையட்டுமா?’

‘ஆயிடுத்து….’

‘கறிகா……

நான் ‘ய்’ சொல்வதற்குள் பதில் வந்தது.

‘கட் பண்ணி அடுப்புல போட்டாச்சு!’

சரி, மத்தியானம் என்ன செய்யப் போகிறாள் என்று கேட்டு இப்போதே என்ன வேணுமோ செய்து கொடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டு,

‘இன்னிக்கு மத்தியானம் என்னம்மா பண்ணப்போற?’

‘பலாக்கொட்டை போட்டு கீரை மசியல்….!’

‘பலாக்கொட்டை எடுத்து கொடு. உடைச்சு தரேன்…’

;டொக்……’

‘டொக் ….’

‘டொடக்…’

மூன்றாவது கொட்டை தூரப் போய் விழுந்தது.

‘…..அதை எடுத்துக் கொடு…..!’

‘இரு, நான் ஒடக்கறேன்….!’

‘டொக், டொக், டொக்….டொக்….’

ஒரு நிமிஷத்தில் எல்லாப் பலாக்கொட்டைகளும் உடைக்கப் பட்டுவிட்டன.

‘நெய் வேணும்மா….!’

‘டுர்ர்ர்ர்ர்ர்…..’ மிக்ஸி சத்தம். அடுத்த சில நொடிகளுக்குள் வெண்ணை காயும் வாசனை!

எப்படி இத்தனை வேகம்?

நான் பெற்ற பெண் தான் என்றாலும் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டதால் அவளை ஒரு அம்மாவாக, மனைவியாக இத்தனை வருடங்களில் இப்போதுதான் கிட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.

சின்ன வயதிலேயே ரொம்பவும் துறுதுறு. ‘இந்த வயசுக்கு ஆனாலும் ரொம்ப துறுதுறுன்னு இருக்கு…!’ என்றேன் இவரிடம் ஒரு நாள்.

‘அடுத்த தலைமுறை இதைவிடத் துறுதுறுன்னு இருக்குமே. அதைப் பார்த்துக்கணும் இல்லையா? அதான்…!’ என்றார், பெண்ணுக்கு மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து அடுத்த தலைமுறையையும் மனக் கண்ணால் பார்த்த தீர்க்கதரிசி!

கிடுகிடுவென அதே சமயம் காரியங்களை நேர்த்தியாகச் செய்யும் பாங்கு. அப்பா மாதிரியே ‘perfectionist!’

நானோ நேர்மாறு. எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்வது என்பது ரொம்பவும் அபூர்வம். அப்பாவும் மகளும் திட்டமிடுவதில் சிங்கம், புலி எல்லாம்.  எதைச் செய்தாலும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று செய்வேன். அவ்வளவுதான். இந்த perfection, professionalism இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள் நான்.

நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது இவர் சொல்லுவார்: ‘நீ 9 மணிக்கு வகுப்பில் இருக்கணும்னா reverse – ல ப்ளான் பண்ணனும். அதாவது 8.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிவிடவேண்டும். 8 மணிக்கு சாப்பிட்டு புடவை உடுத்திக் கொண்டு ரெடியாகிவிட வேண்டும். 8 மணிக்கு சாப்பிடனும்னா 7.30 க்கு டிபன் ரெடியா இருக்கணும். 7.30 க்கு டிபன் ரெடியாகணும்னா…..’

எனக்குத் தலை சுற்றியது. நான் இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டேன்.

‘ஐயா! சாமீ! ஆள விடுங்க….. இந்த மாதிரி ப்ளான் பண்ணாமலேயே நான் வகுப்பிற்கு சரியான நேரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்….!’

‘அப்பாவ காஷ்மீரில பார்த்துட்டு, பெண்ண கன்னியாகுமரில பார்த்தாலும் அந்த அப்பாவோட பொண்ணு இவன்னு சொல்லிடுவா..!’ என்று என் அம்மா என் பெண்ணைப் பற்றிச் சொல்லுவாள். ஜாடையில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் அப்பாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறாள் பெண். அவர் மாதிரியே இரண்டு, நான்கு சக்கர வண்டிகளை அனாயாசமாக அதே சமயம்  மிகவும் பத்திரமாக ஓட்டுவாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த பெண்.

புக்ககத்தில் இவளுக்குப் பெயர் பாதரஸ! (பாதரசம்) நின்ற இடத்தில் நிற்க மாட்டாள் என்பதால் இந்தப் பெயர்.

வரும் மே மாதம் பிள்ளைக்கு உபநயனம். ஜனவரி முதல் தேதி காலையில் போன். ‘ஹேப்பி நியூ இயர் மா.’ பெண்தான்.

‘தாங்க்யூடி கண்ணம்மா….விஷ் யு…’

என்னை இடைமறித்தாள்: ‘நீ என்ன பண்ற, தேஜஸ் பூணுலுக்கு நம்மாத்து மனுஷா யார் யாரை கூப்பிடணும்னு ஒரு லிஸ்ட் – அட்ரெஸ், போன் நம்பரோட  – ரெடி பண்ணி நாளைக்குள்ள அனுப்பிடு..’

‘மே மாசம் தானம்மா……?’

‘எல்லாம் பிளான் பண்ண வேணாமா? இப்பவே ஆரம்பிச்சாதான். நீ லிஸ்ட் ரெடி பண்ணு. சரியா? நாளைக்கு பேசறேன்’.

அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்!

சின்ன வயசிலேயே அவளுக்கு எல்லாமே ‘இப்பவே’ நடந்து விட வேண்டும்.

போனவாரம் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் சொன்னாள்: ‘இன்னிக்கு பசங்கள நாம தான் கொண்டு போய் ஸ்கூல்ல விடணும். விட்டுட்டு அப்படியே காய்கறி, பழம் வாங்கிண்டு வந்துடலாம்.’

ஆணைகள் சரமாரியாக வர ஆரம்பித்தன.

‘தேஜஸ் நீ போய் மேல குளி. அம்மா நீ கீழ் பாத்ரூம்ல குளிச்சுடு.’

உடனே ஓடி….இல்லையில்லை கொஞ்சம் வேகமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு நகர்ந்தேன்.

நான் குளித்துவிட்டு வருவதற்குள் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்து, டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி …. மின்னல்தான்!

காரில் உட்கார்ந்தோம். ஸ்கூலுக்கு அருகில் போகும்போது ஒரு இடத்தில் எல்லா வண்டிகளும் நின்றிருந்தன. கூடவே போலீஸ்கார்களும். சின்னப் பேரன் ‘அம்மா! அம்மா! அந்த போலீஸ் மாமா உன்னை நிறுத்த சொல்லி கை காட்டினார்.’

அவன் சொல்லி முடிப்பதற்குள் கார் அந்த இடத்தை  தாண்டி விட்டது. ஸ்கூலில் குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு, திரும்பினோம்.

‘எதற்கு நிறுத்த சொன்னான்(ர்)னு தெரியலையே….லைசன்ஸ் கேட்பா(ரோ)னோ?’

‘கவலைப்படாத மாம்! லைசென்ஸ், இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கு. மீறி ஏதாவது கேட்டா பார்த்துக்கலாம்.’

அதே இடத்தில் அதே போலீஸ். நிறுத்தச் சொல்லி கைகாட்டினார் அந்த போலீஸ் மாமா.

ஓரமாக வண்டியை நிறுத்தினாள். போலீஸ் மாமா ரொம்பவும் நட்பாக சிரித்தார். ‘ஏனில்ல மேடம்! சுனாவணே …(தேர்தல்) அதுக்கே எல்லா (G)காடிகளன்னு  செக் மாட்திவி..!’ (தேர்தல், அதுக்காக எல்லா வண்டிகளையும்  செக் பண்ணுகிறோம்)

அதற்குள் ஓர் வட இந்திய ராணுவ வீரர் ஒருவர் வந்து ‘டிக்கி கோலியே, பேக் டோர் கோலியே’ என்றார். எல்லாவற்றையும் ‘கோலி’ விட்டு, காத்திருந்தோம். ‘ஹோக் போது மேடம்!’ (போகலாம்!) என்றார்.

சற்று தூரம் வந்தவுடன் பெண் கேட்டாள்: ‘போலீஸ் என் வண்டியை நிறுத்தச் சொன்னரா?  நான் பார்க்கவே இல்லை….!’

‘நீ தான் மின்னல் வேகத்துல அந்த இடத்த தாண்டிட்டியே!  நாளைலேருந்து உன்ன ‘அம்மா மின்னலு…..’ ன்னு தான் கூப்பிடப் போறேன்!’

இருவரும் சிரித்தோம்.

 

இது என் 300 வது பதிவு. எனது எழுத்துக்களைப் படிக்கும் எல்லோருக்கும் நன்றி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

85 thoughts on “அம்மா……மின்னலு……!

 1. //கிடுகிடுவென அதே சமயம் காரியங்களை நேர்த்தியாகச் செய்யும் பாங்கு. அப்பா மாதிரியே ‘perfectionist!’//

  தங்கள் மகளுக்கும் கணவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  PERFECT ஆக இருப்பவர்களைக்கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  நானும் எதுசெய்தாலும் Perfect ஆகச்செய்யவே ஆசைப்படுவேன். பிறரிடமும் அதே போல Perfectness எதிர்பார்ப்பேன். அதில் தான் சிக்கலும் பிரச்சனைகளும் முளைக்கத் துவங்கும்.

  >>>>>>

 2. //இந்த perfection, professionalism இதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆள் நான்.//

  எது எப்படியிருந்தாலும், அடிக்கடி பதிவுகளைக் கொடுத்து, பதிவு எண்ணிக்கையை கிடுகிடுன்னு Perfect ஆக 300 க்கு கொண்டுவந்து விட்டீர்களே! சபாஷ்!! ;)))))

 3. //என்னை இடைமறித்தாள்: ‘நீ என்ன பண்ற, தேஜஸ் பூணுலுக்கு நம்மாத்து மனுஷா யார் யாரை கூப்பிடணும்னு ஒரு லிஸ்ட் – அட்ரெஸ், போன் நம்பரோட – ரெடி பண்ணி நாளைக்குள்ள அனுப்பிடு..’

  ‘மே மாசம் தானம்மா……?’

  ‘எல்லாம் பிளான் பண்ண வேணாமா? இப்பவே ஆரம்பிச்சாதான். நீ லிஸ்ட் ரெடி பண்ணு. சரியா? நாளைக்கு பேசறேன்’.//

  மிகவும் நல்லதொரு பழக்கம். வாழ்த்துகள்.

  //அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்!//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

  நல்ல வேளையாக இவர்கள் ப்ளானிங் கமிஷனுக்கு சீஃபி ஆகப்போகவில்லை.

  அங்கு போயிருந்தால் மிகவும் எழுச்சியான இவர்களையும் வழுவட்டையாக ஆக்கியிருப்பார்கள், நம் அரசியல்வாதிகள்.

  //சின்ன வயசிலேயே அவளுக்கு எல்லாமே ‘இப்பவே’ நடந்து விட வேண்டும்.//

  இப்போ இப்போ இப்போ ராமசாமி போல இருப்பார்கள் போலிருக்கு.

  >>>>>>>

 4. பேரன் தேஜஸ் உபநயனம் நல்லபடியாக நடந்து அவன் திரிகால சந்தியாவந்தனமும் காயத்ரி மஹாமந்திர ஜபங்களும் தினமும் செய்து தேஜஸுடன் திகழ என் வாழ்த்துகள்.

  நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  1. உங்கள் எல்லாகருத்துரைகளுக்கும் தனித்தனியே பதில் எழுத ஆசைதான். ஆனால் நேரமில்லை. உங்கள் ஆசிகளை என் பெண்ணிடமும், கணவரிடமும், தேஜஸ்ஸிடமும் சொல்லுகிறேன்.
   வருகைக்கும், வரிவரியாகப் படித்து ரசித்து மனதாரப் பாராட்டியதற்கும் நன்றி!

 5. மின்னலின் அம்மாவுக்கு ட்ரிபிள் செஞ்சுரி அடித்ததற்காக மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! நானும் இந்த மாதிரி ரிவர்ஸ் ப்ளானிங் எல்லாம் பண்ணாமலேயே ஆனால் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் சரியாகச் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன்.

  1. வாங்க கணேஷ்!
   நானும் உங்கள் கட்சிதான்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி!
   நல்வாழ்த்துக்களுக்கு நன்றி!

 6. வாழ்த்துகள்.

  இயல்பாக நிகழ்வுகளை எழுதுவதற்கு இன்னும் எனக்கு பயிற்சி தேவை. அந்த வகையில் இது இனிய பகிர்வு. இது 300-ம் பதிவு என்கிற வகையில் இன்னும் மகிழ்ச்சி.

  தொடர்ந்து சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். எழுதுங்கள். எழுதுவீர்கள்.
  நன்றி.

  1. வாருங்கள் தமிழ்!
   உங்களுக்கு இன்னும் சின்ன வயது. போகப் போக என்னைப் போல எழுத வந்துவிடும். ஆனால் எனக்கு உங்களை மாதிரி எழுதுவது என்பது அசாத்தியம்.
   நன்றி தமிழ்!

 7. மின்னலின் அம்மாவிற்கு பாராட்டுக்கள் 300 பதிவுகளை வெற்றிகரமாக முடித்தற்கு தனி பாராட்டுக்கள் சுவையான ஹாஸ்யமான பதிவு வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
   உங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   எங்கள் ப்ளாகின் வாழ்த்துக்களுக்கும், உங்கள் தொடர் வருகைக்கும் கொடுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி!

 8. பதிவுப் போடுறதிலே நீங்களும்தாம்மா மின்னலு !எழுத்தில் உங்கள் கைவண்ணமும் மின்னுது !மேலும் வளர வாழ்துகள் !

  1. வாருங்கள் பகவான்ஜி!
   உங்கள் உற்சாகமான பாராட்டுரை சந்தோஷத்தைக் கொடுக்கிறது. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!

 9. உங்கள் எழுத்து நடையை எனக்கும் கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க !
  சபாஷ் மற்றும் வாழ்த்துகள், உங்களுக்கும் தேஜசுக்கும் 🙂

  அன்புடன்,
  ஓஜஸ்

  1. வாருங்கள் ஓஜஸ்!நீங்களும் நானும் MAC அங்கத்தினர்கள்!
   உங்கள் அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   1. ஓஜஸ்! எனக்கும் நீங்கள் சொல்லும் apple MAC – க்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது! எனக்கு இன்னும் smileys போடக் கூட வரவில்லை!

 10. // அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்! //

  :-))))))

  1. வாருங்கள் வாசுதேவன்!
   இந்தியா முன்னேற எத்தனையோ வழிகளில் இதுவும் ஒன்று என்று நினைத்து சிரிக்கிறீர்களோ?

 11. மழையப் பார்த்து ஏங்கிடுச்சு
  கண்ணி ரண்டும் பூத்திடுச்சி
  மேக மெல்லாம் ஓடிப்போச்சு
  மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி

  குளமெல்லாம் வத்திப் போச்சு
  கொக்கு நாரை அதிகமாச்சி
  வயலெல்லாம் காஞ்சி போச்சு
  ஆடு மாடு மேஞ்சிடுச்சி

  நில மெல்லாம் மனைகளாச்சு
  நிறைய வீடு வந்திடுச்சி
  நில மற்று போனதாலே
  உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி

  மனதெல்லாம் மாறிபோச்சு
  மனிதநேயம் குறைஞ்சிடுச்சி
  பணத்துக்காக அடகு வச்சு
  கனத்த வட்டி வளர்ந்துடிச்சி

  இனத்துச் சண்டை வந்துடிச்சு
  இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி
  தேச நலன் குறைஞ்சிடுச்சி
  தேவை மட்டும் மாறிடுச்சு

  உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி
  உண்மையன்பு தேய்ந்சுபோச்சு
  உருப்படியாய் சேர்ந்து வாழும்
  உறவு மின்று செத்துடிச்சு

 12. நல்ல எளிமையான அதே நேரத்தில் மிகவும் தெளிவான நடை ஆமாம் அதெப்டி என் வீட்டு கதையை என் பெர்மிஷன் இல்லாமல் நீங்கள் எழுதலாம்?

  1. வாருங்கள் மதுரை தமிழன்!
   எல்லோர் வீட்டிலேயும் நடக்கும் கதைதான் இது. உங்கள் பெண்ணும் இப்படித்தானா? இன்னொரு மின்னலு?

 13. 300 எல்லாம எங்களுக்கு பத்தாது குறைந்தது 1000 வேண்டும் மசமசன்னு நீக்கமாக 1000 பதிவுகள் வருவதற்கு காரியத்தை பாருங்கோ மாமி துணைக்கு வேணுமுன்னா ஆத்துகாரரை கூப்பிட்டுகோங்கோ பதிவை படித்துட்டு எனக்கு கையும் ஒடல காலும் ஓடல அதனால வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் மன்னிச்சுடுங்கோ மாமி உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

  1. ஆயிரமா? மலைப்பாக இருக்கிறது.
   கையும் காலும் ஓடாததற்கு காரணம் என்னன்னு புரியலையே!
   வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

 14. கிடுகிடுவென அதே சமயம் காரியங்களை நேர்த்தியாகச் செய்யும் பாங்கு. அப்பா மாதிரியே ‘perfectionist!’///பின்னே அப்பா செல்லமாச்சே? இந்த பொண்ணுங்களே அப்பாவை கடைசிவரை தொடர்ந்துகிட்டே இருப்பது நல்ல விஷயமே

  1. வாருங்கள் கவியாழி! ரொம்பவும் அருமையா ஒரு கவிதையை எழுதி இருக்கிறீர்கள். பெண்கள் எப்பவுமே அப்பா செல்லம் தான்!

 15. நம்மைச்சுற்றி நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளைகூட நீங்கள் கவனித்து பதிவிடும் போது சற்றே வியப்பாயிருக்கிறது.நமது குழந்தைகளை நாம் சரியாக கவனிப்பதில்லைஎன்றே தோன்றுகிறது.பெண்கள் குறிப்பிட்ட வயதில் அமைதியாகிவிடுகிறார்கள் இல்லையா சகோ ?

  1. வாருங்கள் நாகராஜ்!
   நாம் சரியாக கவனிப்பதில்லை என்பதைவிட நம் கண்ணுக்கு அவர்கள் குழந்தைகளாகவே என்றும் இருக்கிறார்கள்.

   நீங்கள் சொல்வதுபோல பெண்கள் குறிப்பிட்ட வயதில் அமைதியாகி, மனதிற்குள் அழுத்தமானவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 16. 300 வது பதிவு. க்கு இனிய வாழ்த்து.
  நீஙகள் எழுதிய விதம் – அந்தப் பாணிமிக மிக அருமை.
  என்னால் கூட இப்படி எழுத முடியாது.
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  1. வாருங்கள் வேதா!
   உங்களை மாதிரி கவிதை என்னால் ஒரு வரிகூட எழுத முடியாது. உங்கள் முன் நான் ஒன்றுமே இல்லை.
   இனிய வாழ்த்துகளுக்கு நன்றி!

 17. எனக்கும் எதையும் ப்ளான் பண்ணித்தான் பழக்கம். உங்க பொண்ணைப்பார்த்தா சேம் ப்ளட்னுக்கு சொல்லிக்கலாம். :)) வாழ்த்துக்கள் உங்க மகளுக்கும், உங்களுக்கும்.

  1. வாருங்கள் புதுகைத் தென்றல்!
   என் பெண்ணைப் போல இருக்கும் உங்களைப் பார்க்க எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.
   வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!

 18. மின்னல் ஸாதாரண மின்னலில்லை. பளிச்பளிச் என்று பாங்காக மின்னுகிரது.ஒரு இல்லத்தரசி பாங்கோடு, பந்தா இல்லைமல் இல்லத்தரசியின் இலக்கணமாக, அதேநேரத்தில் இ்ந்தக்காலப் பெண்களின் கல்வியறிவோடு அழகாக குடும்பம் நடத்துவது உதாரணம்தான். அப்பா,அம்மா, இருவரின் குணங்களும் தெரிகிரது. ஒன்றைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். உங்களின் ஸாமர்த்தியமும் இருக்கிரது. என்ன இயற்கையான அழகான நடை. 300 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். பூணூல் காரியங்கள் ஜமாயுங்கள். அன்புடன்

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   அப்பாவிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறாள். என்னைப்போல எழுதுவாளா தெரியவில்லை.

   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 19. சிங்கையிலிருந்து போனவாரம்தான் மகனின் பூணல் கல்யாணம் பற்றி டெல்லியில் இருக்கும் என் மனைவியிடம் பேசினேன், அது அப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருந்த சில வாக்கியங்கள் இந்த கதையில் இடம்பெற்றிருப்பது, ஆச்சரியமாக உள்ளது. “நீ என்ன பண்ற, “சபரி” பூணுலுக்கு நம்மாத்து மனுஷா யார் யாரை கூப்பிடணும்னு ஒரு லிஸ்ட் – அட்ரெஸ், போன் நம்பரோட – ரெடி பண்ணி நாளைக்குள்ள அனுப்பிடு..”

  1. வாருங்கள் கோபால கிருஷ்ணன்!
   எல்லோர் வீட்டிலும் நடப்பதைத்தான் எழுதியிருக்கிறேன்.
   உங்கள் பிள்ளையின் பூணூலுக்கு இப்பொழுதே வாழ்த்துக்கள்!

 20. அருமைப்பா! அதிலும் , இழையூடும் பெருமை பதிந்த வார்த்தைகள், மனதை நெகிழச்செய்கிறது.

  300 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  1. வாருங்கள் பட்டு!
   உங்களிடமிருந்து ஒரு சின்ன பாராட்டு வந்தால் கூட மனமெல்லாம் பூரிக்கிறது.
   வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

 21. 300ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்கள் பேரன் தேஜஸின் உபநயனம் சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  நாளை சமையலுக்கு இன்றே திட்டம் போட்டுடுவேன். இத்தனை மணிக்கு இதைச் செய்யணும்னு. அதே போல் செய்துடுவேன். இப்போவும் வேகம் இருந்தாலும் முன்னைவிடக் குறைவு தான். நீங்களும் வேகம் அதோடு விவேகம் நிறைந்திருப்பதால் அடக்கமாகப் பெண்ணை விட வேகம் குறைவுனு சொல்லிக்கிறீங்க போல!

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  1. வாங்க கீதா!
   இந்தக் காலப் பெண்கள் போல நாம் இத்தனை வேகமாக நம் இளம்வயதிலேயே இருக்கவில்லை என்றே எனக்குத் தோன்றும். ஏனெனில் என் பேரன்களின் தேவைகள் மிகவும் அதிகம். நம் குழந்தைகள் நம்மிடம் இத்தனை எதிர்பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 22. நான் பெற்ற பெண் தான் என்றாலும் படிக்கும்போதே திருமணம் ஆகிவிட்டதால் அவளை ஒரு அம்மாவாக, மனைவியாக இத்தனை வருடங்களில் இப்போதுதான் கிட்டத்தில் இருந்து பார்க்கிறேன்.
  அருமை.
  300வது பதிவுக்கு வாழ்த்துகள்.

 23. பதிவைப் படிக்கும்போது சங்கப் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது. செவிலி, தாய்க்கு சொல்வதுபோல் இருக்குமே,சாப்பிடக்கூட அடம் பிடித்த மகள் இன்று தலைவனின் வீட்டில் நடத்தும் இல்லறத்தைப் பெருமையாகக் கூறுவதுபோல் நிறைய பாடல்கள் இருக்குமே,என்ன ஒருவித்தியாசம்னா இங்கு அம்மாவே நேரில் போய்வந்து புளகாங்கிதம் அடைந்திருப்பது.

  உபநயனம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.300 ஆஆஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

  1. வாங்க சித்ரா!
   சங்கப் பாடல்கள் படிச்சிட்டு இருக்கீங்களா?
   நம் பெண் இன்னொரு வீட்டில் போய் நல்ல பெயர் வாங்குவது எல்லா அம்மாக்களுக்குமே பெருமை தானே!
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 24. மின்னலின் அம்மாவின் 300வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
  பேரன் தேஜசின் உபநயனத்திற்கும் என் வாழ்த்துக்களைக் கூறி விடுங்கள்.
  உங்கள் பதிவு மிகவும் அருமை. இப்படித்தான் நம் பெண்கள் நம்மை ஓவர்டேக் செய்கிறார்கள். உங்கள் பதிவில் “ஈன்ற பொழிதினும் பெரிதுவக்கும் தாயை
  கண்டேன்.
  மேலும் தொடருங்கள்….
  வாழ்த்துக்கள்……

  1. வாங்க ராஜி!
   நம் பெண்கள் நம்மை ஓவர்டேக் செய்வது நமக்குப் பெருமைதான், இல்லையா?
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 25. //////////
  அப்பாவும் பெண்ணும் பிளானிங் கமிஷன் சீஃப் ஆ இருந்திருக்கலாம். இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும்!
  /////////////
  வேணாம்ங்க. எல்லா மாநில முதல்வர்கள்கிட்டயும் திட்டு வாங்கணும்!!

  அழகான பதிவு. வழக்கம்போலவே.

 26. 300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! மின்னல்-நடவடிக்கைகளைப் படிக்கவே ஆச்சர்யமாதான் இருக்கு! இப்படி ஒரு மகளைப் பெற்றிருக்கிறோம் என்ற உங்களின் சந்தோஷம் ஒவ்வொரு வரியிலும் தென்படுகிறது. அம்மாவுக்கும், மகளுக்கும் வாழ்த்துக்கள்! 🙂

  1. வாங்க தனபாலன்!
   முதலில் வரும் உங்களது கருத்துரைக்காகத் தான் காத்திருந்தேன்.
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 27. வணக்கம்
  அம்மா

  300வது பதிவுக்கு பாராட்டுக்கள் அம்மா இன்னு ஆயிரம் பதிவுகள் வாசக உள்ளங்களை சென்றடைய எனது வாழ்த்துக்கள் 300வது பதிவு மிக அருமையக உள்ளது பணி மேலும் சிறக்கட்டும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 28. உங்களது 300-வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் ரஞ்சனிம்மா…. “ஏம்மா…. மின்னல்!” உங்கள் மின்னல் மகளுக்கும் தான்! திட்டமிட்டு பணி புரிவதில் பல சௌகரியங்கள்…..

 29. சிறுகதைபோல் சுவாரசியமாக இருக்கிறது உங்கள் அனுபவம்.உங்கள் மகளை நானும் மின்னலு என்றுதான் அழைக்கப் போகிறேன்

  1. வாருங்கள் ருக்மணி!
   அடுத்தமுறை நீங்கள் வரும்போது முடிந்தால் அவளையும் வரச் சொல்லுகிறேன். நீங்கள் எழுதியிருப்பதை அவளும் படித்தால். ரொம்ப சந்தோஷம் அவளுக்கு!

 30. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_9.html) சென்று பார்க்கவும்…

  நன்றி அம்மா…

  1. வாருங்கள் பழனிவேல்!
   பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
   எங்கே உங்களை ரொம்ப நாட்களாகக் காணோம்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s