short story

கலகல இளவரசி!

 திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்த ஓவியத்திற்கு நான் எழுதிய கதை:

 

பலர் அன்னம் விடு தூது என்ற தலைப்பில் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகளைப் படிக்க: திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் தளத்திற்குச் செல்லவும்.

 

‘கலகல….கலகல………’

‘இளவரசி! நிதானம் நிதானம்…..இத்தனை சிரிப்பு வேண்டாம்…..’

‘இல்லையடி பேடையே! எப்போதோ வந்த எனது படத்திற்கு இத்தனை வரவேற்பா?’

’57 ஆம் வருடம் வந்த ஓவியம் இது. அப்படியானால் இப்போது உங்களுக்கு…. வயது…’

‘ஷ்…..! சும்மா இரு. வயதைப் பற்றி ஏன் பேசுகிறாய்?

(ம்…ம்….இளவரசியும், பேடையும் ரொம்பத்தான் வழியறாங்க…..!)

‘அதுவும் சரி தான்….. உங்கள் இளமை ஊஞ்சல் ஆடுகிறதே!’

‘என்ன, என்னவோ முணுமுணுப்புக்கேட்கிறதே! யாரது?’

‘அது…..அது…..ஒன்றுமில்லை இளவரசி…என் காதலன் தான்….கொஞ்சம் உடல்நிலை சரியில்லை….’

‘ம்ம்ம்…..கொஞ்சம் அந்தப் பக்கம் போகச் சொல்லு….குறுக்கே வரவேண்டாம்….!’

‘அப்படியே…இளவரசி……!

(இத்தனை வருடத்துக்கு அப்புறமும் இளவரசியா? மகாராணி பட்டம் சூட்டிக் கொண்ட பிறகும்…..!)

‘அப்புறம் நீ சொல்லடி பேடையே! எத்தனை பேர் இதுவரை கவிதை எழுதியிருக்கிறார்கள்?’

‘நான்கு  பேர் கவிதை. இன்று ஸ்ரவாணி என்று ஒருவர் கதையில் கவிதை எழுதியிருக்கிறார்….!’

‘கலகல……கலகல…..!’ சிரிக்கிறாள் இளவரசி.

(யாரோ எழுதி வைச்சிட்டாங்க…’கலகலன்னு சிரிச்சாள் இளவரசி’ ன்னு அதுக்காக இப்படியா ‘கலகல….!’ எனக்கு சந்திரமுகி ‘லகலக’ ஞாபகம் வருகிறது!)

‘ஏய்! இங்க வா. உனக்கு என்ன வேண்டும்?’

‘ஒன்றுமில்லை….’

‘சும்மா முணுமுணுக்காதே! என்ன வேணும்?’

எனக்காக நீங்க தூது போகணும்…!’

‘உனக்காக நானா? ஏனடி பேடை கேட்டாயா உன் காதலன் பேசுவதை?’

‘இளவரசி! அதுக்கு கொஞ்சம் மரை கழண்டிருக்கிறது. அதான்….நீங்க போங்கம்மா, நான் அதுகிட்ட பேசிக்கிறேன்…!’

‘ம.கொ.தா.க.  சங்கத்துக்கிட்ட போகவேண்டியதுதான்….!’

‘என்ன என்ன, சங்கமா? முதற் சங்கமா, இடைசங்கமா. கடைச்சங்கமா?’

‘அட, நீங்க ஒண்ணு! இன்னும் அந்தக் காலத்துலேயே இருக்கிங்க! 2013 க்கு வாங்க!

‘சரி சரி இப்போ உனக்கு என்ன வேணும்?’

‘ஏன் இளவரசி, உங்களுக்காக நாங்க தூது போகும்போது நீங்க எனக்காக தூது போகக் கூடாதா? அது அன்னம் விடு தூது என்றால் இது இளவரசி விடு தூது….’

‘சரி நான் இப்ப என்ன செய்யணும்….?’

‘பத்து நாளா சாப்பாடு இல்லை; தூக்கம் இல்லை ..’

‘ஏன்? ஏன்? ஏன்?’

‘ஹும்….இன்னும் சுந்தராம்பாள் காலத்துலேயே……..’

‘……………………….!?’

‘ஏன் சாப்பாடு இல்லை தூக்கம் இல்லை?’

‘நீங்களும் நாங்களும் இருக்கும் இந்தப் படத்தை வெங்கட் போட்டாலும் போட்டார்…..நீங்களும் இவளும் அதைப் பற்றியே பேசி பேசி…….’

‘நீங்கள் சொல்லும் டயலாக் எல்லாம் இவள் என்னிடம் சொல்லி சொல்லிக் காண்பித்து வெறுப்பு ஏத்துகிறாள்….’

‘அட! அப்படியா?’

‘நான் இங்கு குத்துக்கல்லாட்டம் இருக்கும்போது ……

“செல்லடி பைங்கிளியே

சொல்லடி தூது அவனிடமே

தாமரை இலைத்தண்ணீராய்

அவன் நெஞ்சம்… அதில்

தஞ்சமாய் என் நெஞ்சம்……”

என்று பாடுகிறாளம்மா…..

யாரவன் என்று கோபமாகக் கேட்டால்.

என்றால்

“வெளிர்த்துப்போய் வாடிப்போய்

வேதனையில் விரகத்தில்

மயங்கிய அந்த தமயந்தி போல்

நானில்லை ………”

என்கிறாள் எங்கோ பார்த்தபடி.

யார் இந்த நளன் என்றால்

“நிடதநாட்டிலே மன்னனாக

நீ விரும்பும் அழகுடனே

நளன் என்னும் நாமத்துடன் உன்

நாயகன் அவனும் அவதரித்தான்”

என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பதில் கூறுகிறாள்.

எதுவும் புரியாமல் அவள் அருகே சென்று ‘உடம்பு சரியில்லையா’ என்றால்

“முக நூலிலும் அலை பேசியிலும்

பேசும் பெண்கள் நிறைந்த காலத்தில்

வடிவாய் அழகாய் அன்னத்திடம்

பேசும் நங்கை…. “

எங்கள் இளவரசி என்கிறாள்.

அப்போதுதான் எனக்குப் புரிந்தது உங்கள் படத்திற்கு வந்த கவிதைகளைப் படித்துவிட்டு இவள் இப்படிப் பேசுகிறாள் என்று.

‘புரிந்தது இல்லையா? பின் இன்னும் என்ன கோபம், அன்னமே?’

‘இனிமேல் தான் அம்மா க்ளைமாக்ஸ்: ஸ்ரவாணி அவர்கள் தனது கதை+கவிதையில்

“முதலில் நீ ஒன்றை எனக்குக் கூறுவாயாக.

உனக்கு நீரையும் பாலையும் பிரித்து உண்ணக் கூடிய மாய

வித்தையைக் கற்றுத் தந்தது யார் ?”

என்று கேட்டதற்கு இவள்

 

“அது இறைவன் எமக்களித்த வரம் இளவரசி ..”

 

என்று சொல்லியதை பலரும் ரசித்தார்களாம். அன்றிலிருந்து இவள் என்ன செய்கிறாள் தெரியுமா?

 

வீட்டிலிருக்கும் பாலிலிருந்து பாலை பிரித்து சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் தண்ணீரை மட்டும் வைத்துவிட்டுப் போகிறாள்……இளவரசி…..!’

 

‘பத்து நாட்களாக வெறும் தண்ணீரைக் குடித்து குடித்து எப்படி என் உடம்பு வாடி விட்டது பாருங்கள்!’

 

‘என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் இளவரசி!’

Advertisements

16 thoughts on “கலகல இளவரசி!

 1. மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதியுள்ள இந்தக் க்தையும் நல்லாவே இருக்கு. பாராட்டுக்கள்.அன்னம் தான் தூது போக வேண்டும் என்று ஏதாவது சட்டமா என்ன?
  அதுபோல கவிதைதான் கொடுக்க வேண்டும் என சட்டம் ஏதும் இல்லை. க்தையும் கொடுக்கலாம் தான். வாழ்த்துகள்.

 2. ஹா… ஹா… அழகாக மாத்தி யோசித்து ரசனையான கதையைத் தந்திருக்கிறீர்கள். அடைப்புக்குறிக்குள் வரும் உங்களின் மொழிகள் புன்னகையை வரவழைத்தன. அருமை!

 3. உங்களது பகிர்வினை எனது தளத்தில் வெளியிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி…..

  இங்கே மீண்டுமொரு முறை படித்து ரசித்தேன்….

  நன்றிம்மா.

 4. கல கலப்பான கதை இப்படிகூட தூது விட முடியும் என்று தெரிந்துகொண்டேன் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ரஞ்சனி

 5. வீட்டிலிருக்கும் பாலிலிருந்து பாலை பிரித்து சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் தண்ணீரை மட்டும் வைத்துவிட்டுப் போகிறாள்……இளவரசி

  இளவரசி அன்னமாக மாறிவிட்டாளோ –
  பாலிலிருந்து தண்ணீரைப்பிரிக்கும்
  நேர்த்தியான நுட்பத்தை கற்றுக்கொண்டாளோ..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s