Uncategorized

பேவு பெல்ல – கசப்பும் இனிப்பும்

ugadi

நான் தும்கூர் வருகிறேன் என்றாலே எனக்கும் என் பேரன்களுக்கும் கொண்டாட்டம் தான். நான் அவர்களுடனும் அவர்கள் என்னுடனும்  கொண்டாடிக் களிக்கும் நாட்கள் இவை. அவர்களை எனக்கும், என்னை அவர்களுக்கும் பிடிக்கும். நாங்கள் MAC அங்கத்தினர்கள்.

வந்த அடுத்த நாள் சின்னப் பேரனின் ஆங்கிலப் புத்தகத்தில் (‘The Story of Aviyal’ ) ‘அவியலின் கதை’ என்று ஒரு பாடம். அவனது நோட்டுப் புத்தகத்தில் ஒரு ராஜா, சமையல்காரர், பரிமாறுபவர், அவியலை ரசித்துச் சாப்பிடுபவர் என்று வரைந்து கொடுக்கச் சொன்னான். என் சித்திரம் வரையும் ஆற்றல் இத்தனை வருடங்கள் ஆகியும் பரவாயில்லை போலவே இருந்தது. அடுத்தநாள் பெரிய பேரன் வந்து ஜீரண உறுப்புகள் வரைந்து கொடுக்கச் சொன்னான். பள்ளி நாட்களுக்குச் சென்று திரும்பினேன்.

நேற்று காலையில் இருந்தே என் பெண்ணின் வீடு புதுக் கோலம் பூண ஆரம்பித்துவிட்டது.

நாளை ‘யுகாதி ஹப்பா’ (யுகாதிப் பண்டிகை). வாசற்படியில் இருந்த பழைய தோரணங்கள் அவிழ்க்கப்பட்டு புதிய தோரணங்கள் கட்டப்பட்டன. வாசலில் புதிய ரங்கோலி – வெளுப்பும், சிகப்புமாக ஒவ்வொரு வரிசையாக உயிர்கொண்டு எழுந்தது. காலையிலேயே கடைக்குப் போய் வெற்றிலை, மாவிலை, வேப்பிலை, பூ, பழங்கள் என்று வாங்கி வந்தாள்.

புதிதாக வெண்ணை எடுத்து நெய் காய்ச்சியாயிற்று. ஒருபுறம் புது நெய்யின் வாசம். இன்னொரு பக்கம் புதிதாக வறுத்து பொடி செய்யப் பட்ட சாறு (ரசம் + குழம்பு இரண்டிற்கும் இதை பயன்படுத்துகிறார்கள்.) பொடியின் வாசனை.

பெரிய பேரன் IPL பார்த்துக் கொண்டே மாவிலை தோரணங்களை செய்தான். நானும் அவனுடன் உட்கார்ந்து கொண்டு தோரணம் தயாரிக்க உதவினேன். எல்லாம் தயாரித்து முடித்தவுடன், மாப்பிள்ளை வந்து ஒவ்வொரு அறை வாசலிலும் அவற்றைக் கட்டினார். மாவிலை தோரணங்களின் இரு பக்கங்களிலும் வேப்பிலைக் கொத்து ஒன்றை தொங்க விட்டார்.

காலையில் எழுந்திருந்து குழந்தைகளையும் கணவரையும் சின்னச்சின்ன பாய்களில் உட்கார வைத்து தலையில் எண்ணெய் வைத்துவிட்டாள் என் பெண். பிறகு அவளும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்து பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தாள். பூ, வெற்றிலை, தேங்காய், பாக்கு, மஞ்சள், சந்தனம், குங்குமம், ஊதுவத்தி, கற்பூரம் இவற்றுடன் ஒரு கிண்ணத்தில் சிறிது வேப்பிலைக் கொழுந்தையும் வெல்லத்தையும் சேர்த்து பிசைந்து வைத்தாள். ஒரு கிண்ணத்தில் ஊற வைத்த பயத்தம் பருப்பு; இன்னொரு கிண்ணத்தில் ஊற வைத்த கடலைப் பருப்பு. ‘கெஜ்ஜே வஸ்திரம்’ என்று சொல்லப் படும் பஞ்சினால் திரிக்கப் பட்ட மாலைகள். அவற்றின் நடுநடுவில் குங்குமத்தை நீரில் குழைத்து இரண்டு விரல்களால் பஞ்சை மெலிதாக உருட்டுகிறார்கள். இந்த மாலைகளை ‘தேவ்ரு மனே’ (பூஜை அறை) வாசலிலும், வெளியே வீட்டு வாசற்படியிலும் கட்டுகிறார்கள்

மாப்பிள்ளை சாளிக்ராமத்திற்கு அபிஷேகம் செய்து சந்தனம், பூ சமர்பித்த பின் எல்லோர் கையிலும் பூ மற்றும் சிவப்பு அக்ஷதையை கொடுத்தார். எல்லோரும் அதை பெருமாளிடத்தில் சமர்ப்பித்த பின் விழுந்து வணங்கினோம். பிறகு எல்லோருக்கும் பேவு, பெல்ல (வேப்பிலை, வெல்லம்) பிசைந்து வைத்திருந்ததையும் ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்தார். பிறகு நானும் என் பெண்ணுமாக ஆரத்தி எடுத்தோம். குங்குமத்தை நீரில் கரைத்து அதன் நடுவில் இரண்டு சின்னச்சின்ன விளக்குகளை ஏற்றி ஆரத்தி சுற்றினோம்.

இந்தப் பக்கங்களில் ஆண்கள் கூட பெண்கள் மாதிரியே நமஸ்காரம் செய்கிறார்கள். மிகவும் அபூர்வமாகத் தான் சாஷ்டாங்க நமஸ்காரம். எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு என் மாப்பிளையும் பேரன்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார்கள் அது நம் பக்கத்து வழக்கம் ஆதலால்.

காலை சிற்றுண்டிக்கு ‘மாவின் காய் சித்திரான்ன’ (மாங்காய் கலந்த சாதம்). எந்த கலந்த சாதமாக இருந்தாலும் அதில் கட்டாயம் வேர்க்கடலை வறுத்துப் போடுகிறார்கள். மிகவும் ருசியாக இருந்தது.

பூஜை முடித்தவுடன் ‘ஹப்பதடிகே’ (பண்டிகை சமையல்) செய்ய ஆரம்பித்தாள் என் பெண். இரண்டு வகை ‘பல்ய’ (பொரியல்கள்), இரண்டு வகை கோசம்பரி (கோசுமல்லி), பேளே சாறு (பருப்பு ரசம்), சித்திரான்ன, (சித்திரான்ன இருப்பதால் குழம்பு செய்வதில்லை) பாயசம், பேளே ஒப்பட்டு (Obbattu) (பருப்பு போளி)

பாயசம் வெறும் தட்டுக்கு மட்டும் தான். ஒப்பட்டுதான் முக்கிய இனிப்பு.

நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கமும் போட்டாயிற்று. பதிவும் எழுதியாயிற்று.

எல்லோருக்கும் இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள்!

Advertisements

47 thoughts on “பேவு பெல்ல – கசப்பும் இனிப்பும்

 1. நானும் யுகாதி பண்டிகை கொண்டாடியது போல் உணர்ந்தேன்.
  ஒப்பட் எல்லாம் சாப்பிட்டு தூக்கமும் போட்டாச்சா? ஆகட்டும். ஆகட்டும்.(சும்மா ஜோக்கு தான். ) நல்ல விவரமாக எழுதியிருக்கிறீர்கள் யுகாதி கொண்டாட்டம். .
  உங்களுக்கும் உங்கள்மகள் குடும்பத்தாருக்கும், Happy Ugadi

  1. வாங்க ராஜி!
   பெண் வீட்டில் நமக்கு வேலை ஒன்றும் இல்லை. சாப்பிட வேண்டியது; தூங்க வேண்டியது. அவ்வளவுதான்!
   பண்டிகை வாழ்த்துகளுக்கு நன்றி!

 2. //

  பேவு பெல்ல – கசப்பும் இனிப்பும்
  by ranjani135

  நான் தும்கூர் வருகிறேன் என்றாலே எனக்கும் என் பேரன்களுக்கும் கொண்டாட்டம் தான். நான் அவர்களுடனும் அவர்கள் என்னுடனும் கொண்டாடிக் களிக்கும் நாட்கள் இவை. அவர்களை எனக்கும், என்னை அவர்களுக்கும் பிடிக்கும். நாங்கள் MAC அங்கத்தினர்கள்.

  வந்த அடுத்த நாள் சின்னப் பேரனின் ஆங்கிலப் புத்தகத்தில் (‘The Story of Aviyal’ ) ‘அவியலின் கதை’ என்று ஒரு பாடம். அவனது நோட்டுப் புத்தகத்தில் ஒரு ராஜா, சமையல்காரர், பரிமாறுபவர், அவியலை ரசித்துச் சாப்பிடுபவர் என்று வரைந்து கொடுக்கச் சொன்னான். என் சித்திரம் வரையும் ஆற்றல் இத்தனை வருடங்கள் ஆகியும் பரவாயில்லை போலவே இருந்தது. அடுத்தநாள் பெரிய பேரன் வந்து ஜீரண உறுப்புகள் வரைந்து கொடுக்கச் சொன்னான். பள்ளி நாட்களுக்குச் சென்று திரும்பினேன்.

  நேற்று காலையில் இருந்தே என் பெண்ணின் வீடு புதுக் கோலம் பூண ஆரம்பித்துவிட்டது.

  நாளை ‘யுகாதி ஹப்பா’ (யுகாதிப் பண்டிகை). வாசற்படியில் இருந்த பழைய தோரணங்கள் அவிழ்க்கப்பட்டு புதிய தோரணங்கள் கட்டப்பட்டன. வாசலில் புதிய ரங்கோலி – வெளுப்பும், சிகப்புமாக ஒவ்வொரு வரிசையாக உயிர்கொண்டு எழுந்தது. காலையிலேயே கடைக்குப் போய் வெற்றிலை, மாவிலை, வேப்பிலை, பூ, பழங்கள் என்று வாங்கி வந்தாள்.

  புதிதாக வெண்ணை எடுத்து நெய் காய்ச்சியாயிற்று. ஒருபுறம் புது நெய்யின் வாசம். இன்னொரு பக்கம் புதிதாக வறுத்து பொடி செய்யப் பட்ட சாறு (ரசம் + குழம்பு இரண்டிற்கும் இதை பயன்படுத்துகிறார்கள்.) பொடியின் வாசனை.

  பெரிய பேரன் IPL பார்த்துக் கொண்டே மாவிலை தோரணங்களை செய்தான். நானும் அவனுடன் உட்கார்ந்து கொண்டு தோரணம் தயாரிக்க உதவினேன். எல்லாம் தயாரித்து முடித்தவுடன், மாப்பிள்ளை வந்து ஒவ்வொரு அறை வாசலிலும் அவற்றைக் கட்டினார். மாவிலை தோரணங்களின் இரு பக்கங்களிலும் வேப்பிலைக் கொத்து ஒன்றை தொங்க விட்டார்.

  காலையில் எழுந்திருந்து குழந்தைகளையும் கணவரையும் சின்னச்சின்ன பாய்களில் உட்கார வைத்து தலையில் எண்ணெய் வைத்துவிட்டாள் என் பெண். பிறகு அவளும் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்து பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தாள். பூ, வெற்றிலை, தேங்காய், பாக்கு, மஞ்சள், சந்தனம், குங்குமம், ஊதுவத்தி, கற்பூரம் இவற்றுடன் ஒரு கிண்ணத்தில் சிறிது வேப்பிலைக் கொழுந்தையும் வெல்லத்தையும் சேர்த்து பிசைந்து வைத்தாள். ஒரு கிண்ணத்தில் ஊற வைத்த பயத்தம் பருப்பு; இன்னொரு கிண்ணத்தில் ஊற வைத்த கடலைப் பருப்பு. ‘கெஜ்ஜே வஸ்திரம்’ என்று சொல்லப் படும் பஞ்சினால் திரிக்கப் பட்ட மாலைகள். அவற்றின் நடுநடுவில் குங்குமத்தை நீரில் குழைத்து இரண்டு விரல்களால் பஞ்சை மெலிதாக உருட்டுகிறார்கள். இந்த மாலைகளை ‘தேவ்ரு மனே’ (பூஜை அறை) வாசலிலும், வெளியே வீட்டு வாசற்படியிலும் கட்டுகிறார்கள்

  மாப்பிள்ளை சாளிக்ராமத்திற்கு அபிஷேகம் செய்து சந்தனம், பூ சமர்பித்த பின் எல்லோர் கையிலும் பூ மற்றும் சிவப்பு அக்ஷதையை கொடுத்தார். எல்லோரும் அதை பெருமாளிடத்தில் சமர்ப்பித்த பின் விழுந்து வணங்கினோம். பிறகு எல்லோருக்கும் பேவு, பெல்ல (வேப்பிலை, வெல்லம்) பிசைந்து வைத்திருந்ததையும் ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்தார். பிறகு நானும் என் பெண்ணுமாக ஆரத்தி எடுத்தோம். குங்குமத்தை நீரில் கரைத்து அதன் நடுவில் இரண்டு சின்னச்சின்ன விளக்குகளை ஏற்றி ஆரத்தி சுற்றினோம்.

  இந்தப் பக்கங்களில் ஆண்கள் கூட பெண்கள் மாதிரியே நமஸ்காரம் செய்கிறார்கள். மிகவும் அபூர்வமாகத் தான் சாஷ்டாங்க நமஸ்காரம். எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு என் மாப்பிளையும் பேரன்களும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வார்கள் அது நம் பக்கத்து வழக்கம் ஆதலால்.

  காலை சிற்றுண்டிக்கு ‘மாவின் காய் சித்திரான்ன’ (மாங்காய் கலந்த சாதம்). எந்த கலந்த சாதமாக இருந்தாலும் அதில் கட்டாயம் வேர்க்கடலை வறுத்துப் போடுகிறார்கள். மிகவும் ருசியாக இருந்தது.

  பூஜை முடித்தவுடன் ‘ஹப்பதடிகே’ (பண்டிகை சமையல்) செய்ய ஆரம்பித்தாள் என் பெண். இரண்டு வகை ‘பல்ய’ (பொரியல்கள்), இரண்டு வகை கோசம்பரி (கோசுமல்லி), பேளே சாறு (பருப்பு ரசம்), சித்திரான்ன, (சித்திரான்ன இருப்பதால் குழம்பு செய்வதில்லை) பாயசம், பேளே ஒப்பட்டு (Obbattu) (பருப்பு போளி)

  பாயசம் வெறும் தட்டுக்கு மட்டும் தான். ஒப்பட்டுதான் முக்கிய இனிப்பு.

  நன்றாக சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கமும் போட்டாயிற்று. பதிவும் எழுதியாயிற்று.//

  பதிவிட்டு எங்கள் பசியையல்லவா கிளப்பி விட்டுள்ளீர்கள் ! ;)))))

  இனிய யுகாதி நல்வாழ்த்துகள்.

 3. ஆஹா… யுகாதிப் பண்டிகையை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பது எனக்குத் தெரியாத விஷயம். இல்ல உங்களால ஹிப்-டாக்ஸா (விலா-வரியா) தெரிஞ்சுக்கிட்டாச்சு. கிட்டத்தட்ட நாம தமிழ் வருஷப் பிறப்பை கொண்டாடறதுடன் ஒத்துப் போகிறது. உங்களுடன் நானும் சேர்ந்து பண்டிகை கொண்டாடிய திருப்தி. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  1. வாங்க கணேஷ்! உங்களால புதுசா ஒரு வார்த்தை (ஹிப்-டாக்ஸா!) தெரிந்து கொண்டேன்.
   இந்தமுறை தான் இவர்களுடன் யுகாதி முதல் முறையாகக் கொண்டாடினோம். எனக்கும் நம் புது வருட கொண்டாட்டம்தான் நினைவுக்கு வந்தது.
   வாழ்த்துகளுக்கு நன்றி!

 4. நான் நினைத்துக் கொண்டேன். நீங்கள் தும்கூர் போயிருப்பீர்களென்று. நல்ல கன்னட வார்த்தைகளெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. நான் கூட சித்ரான்னங்கள் என்ற தலைப்பில் தான் கலந்த சாதங்கள் எழுதினேன். நானும் உங்களுடன் தும்கூர் வந்த மாதிரி இருந்தது. யுகாதியில் பங்கு கொண்ட மாதிரியும் இருந்தது. பஞ்சுமாலை, வஸ்திரங்கள்,பூத்திரி எல்லாம் அவர்களின் சிறந்த தயாரிப்பு.
  உங்கள்,பெண்,மாப்பிள்ளை,பேரன்களுக்கு,என் யுகாதி ஹப்பவிற்கு வாழ்த்துகள்
  ஒப்பட்டு நன்ராக இருந்தது. கோசம்பரி,பல்யா, எல்லாம் ருசியாக இருந்தது. சமையல் எழுதுவதினாலில்லை. அவர்களுடன் பழகி, ஒன்றாக இருந்த ஞாபகம் வந்தது.. கதையில்லை. நிஜம்.. நல்ல படைப்பு. நன்றி.
  நமக்கும்,வேப்பிலைக் கட்டியும். வேப்பம்பூ பச்சடியும் உண்டு. அன்புடன்

  1. வாங்கோ, வாங்கோ காமாக்ஷிமா!
   நானும் உங்களை ரொம்பவும் நினைத்துக் கொண்டேன் – ஆலூ, கொத்தமல்லி பரோட்டா நீங்கள் எழுதியிருந்ததை என் பெண்ணிடம் காண்பித்து உங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.
   இங்கு நம்மைப் போல வேப்பம்பூ பச்சடி செய்வதில்லை. வேப்பிலையையும் வெல்லத்தையும் கலந்து வைத்து அப்படியே சாப்பிடுகிறார்கள் – கொஞ்சம் கொஞ்சம்!
   தமிழ் வருடப்பிறப்பும் இந்த வருடம் இங்கு தான்!.

  1. வாங்கோ ருக்மிணி!
   உங்கள் மாட்டுப் பெண்ணும் பேரன்களும் இதேபோல கொண்டாடி இருப்பார்கள் இல்லையா? என் பெண்ணிடம் நிறைய சொல்லிக் கொண்டிருந்தேன் அவர்களைப் பற்றி.
   உங்களுக்கும் யுகாதி பண்டிகை வாழ்த்துகள்.

 5. யுகாதி பற்றியும்,அதை அவர்கள் கொண்டாடும் விதம் பற்றியும் தெளிவாக்கிவிட்டீர்கள்.கூடவே சில கன்னட வார்த்தைகளும் தெரிந்துகொண்டோம்.

  உங்களுக்கும்,உங்கள் மகள் குடும்பத்திற்கும் இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள்!

  1. எங்களையும் உங்களுடன் தும்கூர் அழைத்துச் சென்று வந்தது போல் உணர்வு. நேற்று நானும் ”பேவு பெல்ல” சாப்பிட்டேன்! ஒரு நண்பரது வீட்டில் 🙂

   அனைவருக்கும் இனிய யுகாதி தின நல்வாழ்த்துகள்.

   1. வாங்கோ வெங்கட்!
    நீங்களும் பேவு-பெல்ல சாப்பிட்டீர்களா? வாழ்க்கை என்பது கசப்பு இனிப்பு கலந்ததுதான் என்று சிம்பாலிக் ஆக சொல்லத்தான் இதை சாப்பிடுவது. நாமும் அறுசுவை பச்சடி செய்கிறோமே!
    வாழ்த்துகளுக்கு நன்றி!

  2. வாங்க சித்ரா!
   கன்னட மொழி 90% நம் தமிழ் மாதிரிதான். வெகு சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம். ஒரு காலத்தில் பழைய கன்னட மொழி என்பது நம் தமிழ் மொழி தான் என்று சொல்வார்கள்.
   பண்டிகை வாழ்த்துகளுக்கு நன்றி!

 6. கர்நாடகாவில் யுகாதி எப்படி இருக்கும் என்று நேரடி வர்ணனை தந்தமைக்கு மிக்க நன்றி ரஞ்சனி மேடம்! 🙂 உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்!

  1. வாங்க மகி!
   இத்தனை வருடங்களில் முதல்முறையாக என் பெண்ணுடன் இந்தமுறை யுகாதி கொண்டாடினேன். அதனால்தான் இத்தனை விவரங்கள்!
   வாழ்த்துகளுக்கு நன்றி!

  1. வாங்க விஜயன்!
   பேவு என்று வேப்பிளையையும், பெல்ல என்று வெல்லத்தையும் குறிப்பிட்டேன்.
   இங்கே தானே இருக்கப் போகிறீர்கள்; நிறைய கற்றுக் கொள்ளலாம்!
   யுகாதி தான் இங்கு மிக முக்கியப் பண்டிகை.

 7. இங்கு என் பிள்ளையுடன் தெலுகு யுகாதி கொண்டாடிய அலுப்பு தீருமுன் உங்களின் கன்னட யுகாதி படித்து இன்று அதையும் கொண்டாடிய மகிழ்வு ஏற்பட்டது ரஞ்சனி
  உங்கள் அனைவருக்கும் எங்களின் யுகாதி நல்வாழ்த்துக்கள்

  1. வாங்கோ விஜயா!
   சென்னையில் இருந்தவரை தெலுங்கு வருடப்பிறப்பு என்றுதான் சொல்வோம்; கொண்டாடுவோம். இங்கு வந்த பின் யுகாதி ஆகியிருக்கிறது.
   வாழ்த்துகளுக்கு நன்றி

 8. வணக்கம்
  அம்மா

  அருமையான படைப்பு விளக்கம் அருமை வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 9. கன்னடத்தை தாய்மொழியாய் கொண்ட எனக்கே உகாதி பண்டிகை இப்படிதான் கொண்டடபடுகிறது என்பதை தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரி.வீட்டில் கொண்டாடும் விசேஷங்களில் நம் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள நல்ல பதிவு

   1. இல்லை அம்மா, என் கணவருக்கு, வேறு ஒரு மாநிலத்துக்கு transfer ஆகி இருப்பதால், சாமான், எல்லவற்றையும் ஒதுக்கும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்! ஸ்கூல் மாற்றம், அது, இது என்று கொஞ்சம் பிசி! எப்பவும் active ஆக இருக்க ஆசை தான் , என்ன செய்ய அம்மா, அடுத்த ஊர் சென்று செட்டில் ஆகும் வரை வரை ஒரே வேலை தான் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s