Uncategorized

அர்விந்த்யுவராஜ் எழுதிய கட்டுரை

இந்தக் கட்டுரை நான் எழுதியது அல்ல. திரு அர்விந்த் யுவராஜ் எழுதியது.  மிகவும் பயனுள்ளதாகவும், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காகவும் என் தளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

பாராட்டுக்கள் திரு அர்விந்த் அவர்களுக்கே! அவரது வலைத்தளம் இந்தக் கட்டுரையின் மேலே அவரது பெயருடன் இருக்கிறது.

 

இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அவரது வலைத்தளத்திற்குச் சென்று அவர்க்கு உங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தால் சந்தோஷப் படுவேன்.

நன்றி!

அரவிந்த் யுவராஜ்

படம்

 

“தண்ணீர் லாரியில் சிக்கி இளம்பெண் பலி”  

நேற்று  கடை ஒன்றின் வெளியே மாலைச் செய்தியாக தொங்கிக்கொண்டிருந்த வாசகங்களில்  இதுவும் ஒன்று.

அந்த வாசகத்தின் அருகே,  சக்கரங்களில் சிக்கி சிதைந்த இளம்பெண்ணின் உடல். அருகில் ஒரு இருசக்கர வாகனம்… நல்ல தெளிவான வண்ணப் புகைப்பட இணைப்புவேறு…

பார்த்த உடன் எனக்குள் ஏற்பட்ட படபடப்பு இன்னும் அடங்கவில்லை…

நகரங்களில் இது சாதாரண செய்திதான் .

” ஐயோ பாவம்” … “இந்த லாரிக்காரனுங்களே இப்படித்தான்”  … “விதி” .. இப்படியெல்லாம் பெருமூச்சுடன் நகர்வது இயல்பாகிப்போன ஒன்று.

அதைத்தாண்டி நம்மால் எதையும் செய்துவிடமுடியாது என்பதும் நிதர்சனம். ஆனால் அவளின் பெற்றோர், உற்றார் உறவினர்களின் நிலையை  நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தாலே நடுங்குகிறது.

இளைஞர்கள் பைக்குகளில் பறந்து செல்வதையும் , சாலையின் குறுக்கே படுத்து எழுந்து மற்றவர்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பதையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். “எப்பிடி போறாய்ங்க பாரு”…. “இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுகளோ”…. “எங்கயாவது அடிபட்டு விழுந்தாத்தான் புத்திவரும்” என்கிற சாபங்களை நம் சாலைகள் கேட்டுப் பழகிவிட்டன..

பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக நிதானமாக ஓட்டுவதாகவும் ,அதிக வேகம் போவதில்லை என்றும் நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 15  வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி…

View original post 518 more words

Advertisements

49 thoughts on “அர்விந்த்யுவராஜ் எழுதிய கட்டுரை

 1. பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் விபத்தினைப்பெருமளவு குறைக்கலாம்.

  மிகவும் பயனுள்ள் அருமையான கட்டுரை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  1. ஆஹா!
   யார் வந்திருப்பது? வைகோ ஸாரா? நம்பவே முடியவில்லையே!

   அருள் கூர்ந்து என் கட்டுரையைப் படித்து கருத்துரையும் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல பல!

 2. ”..பிடிக்கும்போது, அச்சமயம் வண்டிமீது ஓட்டும் நபருக்கு இருக்கும் ஆளுமையைப் பொறுத்தே அங்கு என்ன நடக்கும் என்பது முடிவு செய்யப்படுகிறது…”’ மிக உபயோகமான பதிவு. பலர் விழிப்புணர்வு பெறணும்.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  1. வாங்கோ வேதா!
   இந்தக் கட்டுரை எழுதிய திரு அர்விந்த் அவர்களுக்கே உங்கள் பாராட்டுக்கள்.
   அவரது வலைத்தளத்தின் இணைப்பு மேலே அவரது பெயருடன் இருக்கிறது.

   நன்றி!

  1. வாங்கோ வாசுதேவன்!
   இதென்ன புதிதாக இருக்கிறதே உங்கள் கேள்வி?

   உடனே பதில் தேவை! இல்லேன்னா கீதா கிட்ட சொல்லிடுவேன்! (நற….நற…..!)

 3. இந்த தலைமுறைப் பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வண்டியோட்டி விதி முறைகள். மிக மிக நாசுக்காக அறிவுரை என்று தெரியாமல் அறிவுறுத்தியதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  பாராட்டுக்கள் ரஞ்சனி

  1. வாங்கோ ராஜி!
   உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் திரு அர்விந்த் அவர்களுக்கே. முடிந்தால் அவரது வலைபூவிற்குச் சென்று பாராட்டுங்கள் ப்ளீஸ்!

 4. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பெண்ணின் தாய் தான் வண்டியை ஓட்டி இருக்கிறார். சாலையின் மேடு, பள்ளத்தில் அந்தப் பெண் தடுமாறிக் கீழே விழ, பின்னாலேயே வந்த லாரி மேலே ஏறி விட்டது. அம்மாவின் கண்ணெதிரே மகள் மரணம்! கொடுமையிலும் கொடுமை. :(((((

  1. இங்கு பெங்களூரிலும் இதே போல ஒரு நிகழ்வு. பேருந்தை தவற விட்டுவிட்ட பெண் தந்தைக்கு தொலைபேசி வரவழைத்து, அவர் வண்டியின் பின்னால் அமர்ந்து சென்று பேருந்தை பிடித்து நிறுத்தி, பேருந்தில் ஏறச் சென்ற பெண் பாலன்ஸ் தவறி சக்கரங்களுக்கு நடுவில் அகப்பட்டு இறந்திருக்கிறார். இந்த அவசரத்தை எப்போது நாம் மறக்கிறோமோ, அப்போதுதான் விபத்துக்கள் குறையும்.
   வண்டி இருக்கிறதே, 5 நிமிடத்தில் போய்விடலாம் என்று கடைசி நிமிஷத்தில் கிளம்புகிறார்கள். என்ன செய்வது?

   நாம் மூத்த பதிவர் திரு வை.கோபாலக்ருஷ்ணன் அவர்கள் வந்ததைத்தான் திரு வாசுதேவன் மதிமுக என்று குறிப்பிட்டு இருக்கிறார்! எனக்கும் புரியவில்லை. திண்டுக்கல் அண்ணாச்சிக்குத் தான் நன்றி சொல்லணும்!

 5. ஆனால் இப்போது பெண்கள் இருசக்கர வண்டிகளை ஓட்டுவதைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது… அவ்வளவு வேகம்…

  பயனுள்ள குறிப்புகளை பகிர்ந்து கொண்டதற்கும், நல்லதொரு தளத்தை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி அம்மா…

  திரு அர்விந்த் யுவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்… வாழ்த்துக்கள்…

  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் எனது சந்தேகத்தை தீர்த்ததற்கும் நன்றி!

   திரு அர்விந்த் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதுகிறார். அவரது எழுத்துக்களை படிப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

  1. வாங்கோ ஷீலா!
   நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. போனவாரம் கூட நான் ஆட்டோவில் வரும்போது ஒரு பெண்ணை எச்சரிக்கை செய்துவிட்டு வந்தேன். ஆட்டோகாரர் ரொம்பவும் வருத்தப்பட்டு ‘இப்படித்தான்மா துப்பட்டா பறக்க வேகமா போறாங்க. அவங்களோட சக்கரத்துலேயே மாட்டிகிட்டாலும் ஆபத்துதானே. சொன்ன புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க’ என்றார்.

   ஒவ்வொருவரும் தன் கடமையை உணர்ந்து செயலாற்றினால் இந்த மாதிரி விபத்துக்கள் குறையும்.

 6. அவர் சொல்லியிருப்பது பத்துக் கட்டளைகள் அல்ல… முத்துக் க்ட்டளைகள்! ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய அவசிய விஷயங்கள்! சென்னையில் முன்னால் செல்லும் வாகனம் நின்றால் என்ன ஏது என்று கூட யோசிக்காமல் இடதுபுறம் கிடைக்கும் கேப்பில் தங்கள் டூ வீலரைச் செலுத்தி தான் மட்டும் போய்விட விரும்பும் அவசரக்குடுக்கைகள் (முட்டாள்கள்!) பலரைப் பார்த்து கோபப்பட்டுத் திட்டி, திட்டும் வாங்கியிருக்கிறேன் நான்.

  1. வாங்க கணேஷ்!
   நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
   எப்படி கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று கோவம் தான் வருகிறது. தங்கள் உயிரையும் பிறர் உயிரையும் மதிக்காத இவர்களை யார் திருத்துவது?

  1. வாருங்கள் அர்விந்த்!
   எல்லா பாராட்டுக்களும் உங்களுக்கே!
   உங்களது சமுதாய பொறுப்புணர்வு மிகவும் பாராட்டுக்குரியது!

  1. வாருங்கள் கண்ணதாசன்!
   ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, சாலை விதிகளைக் கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்.

 7. அருமையான பதிவு ரஞ்சினி அவர்கள் மீள் பதிவு இட்டதால் அதிகம் பேர் பார்வையிட முடிகிறது பாராட்டுகள்

  1. வாங்க நாகராஜ்!
   இன்னும் பலரையும் இந்தக் கட்டுரை போய்ச் சேர வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள்.

 8. பயனுள்ள பகிர்வு என்று பாராட்டுவதா? படித்த செய்தியைப் பார்த்து பரிதாபப் படுவதா? புரியவில்லை ரஞ்சனி என் அத்தைப் பெண்ணின் மகனும் பங்களூரில் இதேமாதிரி தான் 27 வயதில் விபத்தில் மாண்டான் வேகத்தைவிட விவேகம் தான் முக்கியம் என்பதை ஆண் பெண் இருபாலரும் உணார வேண்டும் என்பதுதான் என் ஆசை

  1. வாங்க விஜயா!
   இதைபோல நிறைய கேள்விப்படும் போதெல்லாம் மனது மிகவும் வேதனைப் படுகிறது.
   நீங்கள் சொல்வது போல வேகத்தைவிட விவேகம் தான் முக்கியம் என்பதை எல்லோருமே உணர வேண்டும்.

 9. வணக்கம்
  அம்மா

  ஒரு தாய் தன் பிள்ளைக்கு புத்தி புகட்டுவது போல நாலுபேராவது திருந்தி வாழவேண்டும் என்ற சிந்தனை ஆளுமையுடன் சிறப்பான கட்டுரையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றியம்மா நீங்கள் கூறிய கருத்தை கடைப்பிடித்தாள் ஒவ்வொரு மனிதனும் விபத்தில் சிக்காமல் இருக்கலாம் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 10. பயனுள்ள பதிவு.நல்ல ஒரு பதிவை ரீப்ளாக் செய்திருப்பது பாராட்டுக்குரியது.

  நம்ம ஊர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு குட்டிப்பெண் தன் அம்மாவை டூ வீலரில் தன் தம்பியை வைத்துக்கொண்டு வேகமாக செல்வதாகவும்,இனி அவ்வாறு போகவேண்டாம் என சொல்லுமாறும் கேட்டுக்கொண்டாள். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

  “அப்படிப் போக ஆரம்பித்தால் துவங்கியதன் நோக்கம் மாறி, இந்தக் கட்டுரையே விபத்துக்குள்ளாகிவிடுமென்பதால்”______ரசிக்கும்படி இருக்கிறது.

  1. வாங்க சித்ரா!
   எத்தனை சொன்னாலும் சிலர் கேட்பதேயில்லை. தனிமனித சமுதாயப் பொறுப்புணர்வு என்பது இல்லை. அதுதான் பிரச்னையே!

  1. வா ஜெயந்தி!
   மிக நன்றாக உரைக்கும்படி, அதேசமயத்தில் தனது ஆதங்கத்தையும் வெளியிட்டிருக்கிறார், இல்லையா?
   இன்னும் நிறைய பேருக்குப் போய்ச் சேர வேண்டும்.

 11. அருமையான அக்கரையான பதிவு… திரு .அரவிந்துக்கும் நன்றி தெரிவித்துவிட்டேன்… அதேபோல் என் கணவர் அடிக்கடி சொல்வார். ஆண்களைப் போல் பெண்கள் பிரச்சனைகளை எளிதாக எடுத்துச் செல்ல மாட்டார்கள்.. அதனால் வீட்டிலோ,அலுவலகத்திலோ ஏற்படும் டென்ஷங்களுடன் வண்டி ஓட்டுவதால் அவர்களின் அருகில் வண்டியில் செல்லும்போது கூடுதல் அக்கறை கொள்ளவேண்டியுள்ளது என்பார்…என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்…

  1. வாங்க எழில்!
   எனக்கும் நீங்கள் எழுதிய (ஆண்கள்-பெண்கள்) கட்டுரை நினைவுக்கு வந்தது.
   முகநூலில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

 12. செல் ஹெட் ஃபோன் பேசுவதைத் தவிர்க்கவும் டூ வீலர் ஓட்டும்போது…

  என்பதை பத்து தரம் சிகப்பு கலர்லே கெட்டியா அன்டர்லைன் செய்து
  சத்தமா சொல்லவும்.

  அகமுடையானிடம் சண்டை போட்டு விட்டு
  அடுத்த ஆறு நிமிடங்களுக்குள் வண்டி எடுக்கவேண்டாம்.
  கொஞ்சம் உட்கார்ந்து மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு பிறகு
  டூ வீலரோ ஃபோர் வீலர்ட்டேயோ போகவும்.

  இன்னொண்ணு கூட சொல்லணும்

  இரவு நேர பிற்பகுதியில் ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
  அப்படி கண்டிப்பாக டூ வீலரில் போய்த்தான் ஆகவேண்டும் என்றிருந்தால்,
  தகுந்த துணையுடன் செல்லவும்.

  சுப்பு தாத்தா.

 13. மிகவும் உபயோகமான பகிர்வு. அடிப்படையான விஷயங்களைக் கடைப் பிடித்தாலே போதும்தான். இளமையும், அவசரமும் அதைச் செய்ய விடுவதில்லை. போக்குவரத்துத் ஹுரை “ரத்த தானம் செய்யுங்கள்… ஆனால் சாலையில் அல்ல” போன்ற வாசகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அதை எல்லாம் யார் மதிக்கிறார்கள்!

 14. வாங்கோ ஸ்ரீராம்!
  வீட்டிலிருந்து கிளம்பும்போதே பெற்றோர்கள் சொல்லி அனுப்புகிறார்களே, ‘பார்த்து போ!’ என்று. ஏன் அவர்களுக்கே தெரியும், எது நல்லது எது கேட்டது என்று. ஆனாலும் ‘எனக்கு ஒன்றும் ஆகாது’ என்ற ஒரு குருட்டு நம்பிக்கை.

  அதுதான் வருத்தமாக இருக்கிறது.

 15. “வேகமாக ஓட்டுவதற்கும் கட்டுப்பாடில்லாமல் ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.”

  அதுவும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் தண்ணீர் லாரிகளின் வேகம் மிக அதிகம்.
  நல்ல பதிவு. மிகவும் தேவையான பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s