குழந்தை வளர்ப்பு · Women

செல்வ களஞ்சியமே – 11

இன்றைக்கு நான் ரொம்பவும் சந்தோஷத்துடன் இந்த செல்வ களஞ்சியமே பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

காரணம் நான் இந்தக் கட்டுரைகளை எழுதி வரும் நான்குபெண்கள் தளம் வலைச்சரத்தில்  இந்த கட்டுரைகளின் மூலமா அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, திருமதி அருணா செல்வம் அவர்களால்.

இதை என் கட்டுரைகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக, அங்கீகாரமாக நினைக்கிறேன்.

தவறாமல் ஒவ்வொரு வாரமும் படித்து, உற்சாகமான கருத்துரைகளை கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!

இனி: செல்வ களஞ்சியமே பகுதி – 11

mother n baby

‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு.

இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பா லூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும்.

என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம் போகணுமானால் போய்விட்டு வா’ என்று எல்லோர் எதிரிலும் கூற, எங்களுக்கு ஒரு மாதிரி ஆனது. பிறகு அந்த மாமி கூறினார்: ‘வெளியில் வந்து எப்படி இதைக் கூறுவது (சிறுநீர் கழிக்க வேண்டுமென்று) என்று எத்தனை நேரமானாலும் அடக்கி வைத்துக் கொள்வேன். போனவாரம் ஒரே வலி ‘அந்த’ இடத்தில். மருத்துவரிடம் போன போது ‘நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்ளுவீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.

என்ன ஆகும் இப்படிச் செய்வதால்?

தொடர்ந்து படிக்க: குழந்தைக்குப் பாலூட்டுவது எப்படி?

Advertisements

16 thoughts on “செல்வ களஞ்சியமே – 11

 1. நமது இள ம்பெண் களுக்கு மிகமிக தே வையான ஆலோசனைகள் உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக சொல்லவேண்டும் இன்றைய இளம்பெண்கள் மாமியார்கள் அல்லது பெரியவர்கள் சொல்லும் எந்த யோசனையும் உதாசீனபடுத்துகிறார்கள் எதற்கெடுத்தாலும் நான் படித்தவள் என்று மெத்தனமாக பேசுகிறார்கள்

 2. அவர் சொன்னதில் தப்பே இல்லை. நானெல்லாம் யார் வீட்டுக்குப் போனாலும் ரொம்ப நேரம் ஆனால் கேட்டுக் கொண்டு போய் விட்டு வந்துடுவேன். அப்புறமா யார் அவஸ்தைப் படறது? இருக்கிறதே போதும். :))))) வெளியே போனாலும் கூச்சப் படாமல் சொல்லிக் கேட்டு கழிவறை எங்கே இருக்குனு தெரிஞ்சுண்டு போயிடுவேன். நம்ம உடம்பை நாமதான் பார்த்துக்கணும்.

 3. ஆசிகள் வலைச்சரத்தில் உங்களுடைய கட்டுரைகள் விசேஷமாகக் குறிப்பிட்டிருப்பது
  பார்த்து மிக ஸந்தோஷம். பாராட்டுகள். இனிமேல்தான்
  உங்கள் கட்டுரை படிக்க போகவேண்டும். டேபிள் பிஸி. வேலையும் துளி பிஸி..
  அன்புடன் காமாட்சி.

  1. வாங்கோ காமாஷிமா,
   வாழ்த்துக்களுக்கு நன்றி. நானும் இனிமேல் தான் அங்கு போய் படித்துவிட்டு மறுமொழி கொடுக்க வேண்டும். இரண்டு நாட்கள் சென்னை பயணம். இன்றுதான் திர்ம்பினோம்.

 4. எப்போது சிறுநீர் வெகு நேரம் தங்குகிறதோ அப்போது இன்பெக்ஷன் வரும். எங்க வீட்டுக்கு வருகிறவங்ககிட்ட பாத்ரூம் உபயோகிக்கணுமான்னு நானே கேட்டுட்டுவேன்.

  1. வாங்கோ வாசுதேவன்!
   நல்ல வேலை. இனிமேல் நானும் இப்படியே செய்கிறேன். குடிக்க நீர் வேண்டுமா என்று கேட்டுவிட்டு உடனே இதையும் கேட்கலாம். நல்ல யோசனை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s