Uncategorized

முதல் மழை எனை நனைத்ததே

தமிழ் இசை

சமீபக் கால திரைப்பாடல்களில் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல் இது.

என் விருப்பத்திற்கு பல காரணங்கள்.

முதல் காரணம் திரு ஹரிஹரன் அவர்களின் தேன்குரல். என்ன ஒரு வளமான குரல்! வார்த்தைகளை அழகாக உச்சரிக்கும் பாங்கு; பாடலின் காணொளியைப் பார்க்கத் தேவையே இல்லை; பாடலின் சூழலுக்கே நம்மைக் கொண்டு சென்று விடும் ஆற்றல் இவரது இழைந்து குழையும் குரலுக்கு உண்டு.

அவருக்கு ஈடு கொடுக்கும் திருமதி மஹதியின் அமுதக் குரல். அதுவும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இவரது குரலில் வரும் ‘ஹம்மிங்’ நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்று விடும்.

இது இருவர் சேர்ந்து பாடும் பாடலாக இருந்தபோதிலும் ஹரிஹரனுடன் தான் ஒரே இடத்தில் இருந்து கொண்டு இந்தப் பாடலை பதிவு செய்யவில்லை என்று தனது நேர்காணல் ஒன்றில் மஹதி கூறியிருந்தார். அவர் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப் பட்டதாகவும், தான் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப்பட்டு இரண்டையும் ‘மிக்ஸ்’ செய்தார்கள் என்றார் இந்தப் பாடகி.

அந்தக் காலத்தில்  நடிக நடிகையரே பாடவும் செய்வார்கள். இவர்கள் பாடிக் கொண்டே நடக்க, பின்னணி இசைப்பவர்கள் தங்கள் இசைக்கருவிகளை சுமந்து கொண்டு நடந்து கொண்டே இசைப்பார்களாம். பாவம் காமிராமேன். பாடும் நடிக நடிகையரை  மட்டும் படம் பிடிக்க வேண்டும்!

‘பீமா’ படத்தில் வரும் இந்தப் பாடலின் காட்சி அமைப்புக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

அமைதியான இசைக்கேற்ற அமைதியான இடங்கள்…

View original post 298 more words

Advertisements

12 thoughts on “முதல் மழை எனை நனைத்ததே

  1. அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்பதுண்டு.இன்றுதான் காட்சியைப் பார்த்தேன். பாடலும்,காட்சியும் சம்மந்தமில்லாமல் இருக்கிறது.

    1. இது எனக்குப் பழைய பாடல் போல…
      .ஆனாலும் முன்பு மிக விரும்பிக் கேட்டதுண்டு.
      பாடல் என்றால் யாரும் மிக விரும்புவர் தானே!.
      நன்று.
      வேதா. இலங்காதிலகம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s