Women

பெண்களிடம் சில கேள்விகள்

women's day

 

 

 

 

 

 

 

அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்?

அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்?

யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்?

குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்?

ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்?

இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்?

அடுத்தவர் குறைகளை சுட்டிக் காட்டும் பெண்களுக்கு தங்கள் குறைகள் தெரிவதில்லையே, ஏன்?

அலுவலகத்தில் அத்தனை பேருடனும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் பெண்ணால் புகுந்த வீட்டில் ஏன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிவதில்லை?

என் குடும்பத்திற்கு நான் எத்தனை தியாகம் செய்திருக்கிறேன் தெரியுமா என்று கேட்காத பெண்களே கிடையாது. உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்ததை எப்படி தியாகம் என்று சொல்லலாம்?

கை நிறைய சம்பளம்; பெரிய வீடு; பெரிய திரை தொலைகாட்சிப் பெட்டி; ஹோம் தியேட்டர் – இத்தனை இருந்தும் உங்களால் ஒரு நிமிடமாவது இவற்றையெல்லாம் அனுபவிக்க முடிகிறதா? அப்புறம் எதற்கு சம்பாதிக்கிறீர்கள்?

அலுவலகத்தில் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை வீட்டில் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

பிள்ளையின் சந்தோஷத்திற்காக அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு மருமகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், மகன் எப்படி சந்தோஷமாக இருப்பான்?

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்களே என்று என் மேல் கோவப்படாமல் நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

மகளிர் தின வாழ்த்துகள்!

Advertisements

49 thoughts on “பெண்களிடம் சில கேள்விகள்

 1. நீங்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானவையே ?
  என்னால் பதில் சொல்ல இயலவில்லை.
  யாரிடமிருந்தாவது பதில் வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

  நல்ல சிந்தனை . பெண்களை யோசிக்க வைக்கும் பதிவு,
  பகிர்விற்கு நன்றி.

 2. எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் என்று சொல்லித் தப்புவோமா?
  நல்ல கேள்விகள். ” மண்ணும் சிறப்புபுறும்”…என்று பதிவு போட்டுள்ளேன்.
  அதில் ஏதும் பதில் இருக்குமொ தெரியவில்லை.
  இனிய பெண்கள் தின வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 3. தோழி…

  இதெற்கெல்லாம் ஒரே பதில்…

  “அலுவலகத்தில் வேலைக்கான சம்பளம் சிடைக்கிறது.

  குடும்பத்தில் அது மற்றவர்களுக்காகச் செலவழிக்கப் படுகிறது.“

  இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

 4. என்ன பதில் வரப் போகிறது பெண்களிடமிருந்து எனப் பார்த்துவிடுவது என்று காத்திருக்கிறேன்…. நல்ல கேள்விகள்…..

 5. கேள்விகளால் ஒரு வேள்வி ரஞ்சனிம்மா! இந்தக் கேள்விகளை ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுக் கொண்டு பதில் தேடினால் வாழ்வு வளமாகும்தானே! இந்த மார்ச் 8ல் உங்களுக்கு என் மகளிர்தின நல்வாழ்த்துகள்!

 6. இந்த கேள்விகள் நிறைய மனங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது அம்மா. எனக்குத் தெரிந்து யாருமே தெரிந்து இந்த கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்வதில்லை. இந்த எல்லா கேள்விக்கும் தரமான கல்வி ஒன்றே தீர்வு என்று நான் நினைக்கிறேன். வெறும் அச்சடித்த காகிதங்களை சேகரிக்கச் சொல்லித் தரும் தரமற்ற கல்வி இது போல் இன்னும் பல கேள்விகளை பெண்கள் மீது மட்டுமல்ல மனித சமுதாயம் மீதே எழுப்பலாம். ஆனால் பதில் …?
  எனக்குத் தெரிந்து திருக்குறளில் நீங்கள் கேட்ட எல்லா கேள்விக்கும் விடை இருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அறத்தை முதலில் கற்காமல் பொருளை பெற்றுக் கொண்டு இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற மனப்போக்கு தான் இன்றைய பிரச்சினை. அறத்தின் வழி நின்று பொருள் ஈட்டி இன்பத்தை பெறுவதே உங்களின் கேள்விக்கான தீர்வு என்பது என்னுடைய பணிவான பதில். தவறிருப்பின் திருத்தவும்.

  1. இந்தக் கேள்விகளை எல்லோருமே தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு பதில் சொல்லலாம். சுய பரிசோதனை எல்லோருக்கும் தேவை.
   எல்லோருடைய பதிலும் அவரவர்கள் மனசாட்சிகேற்ப இருந்தால் சமுதாயம் மேம்படும்.

 7. ஏன்?ஏஏன்?ஏஏஏன்?விடை தெரிந்தாலும்,சொல்ல முடிவதில்லை. சொன்னாலும் மழுப்பலாகவே இருக்கும்.இந்த கேள்விகளுக்கான பதிலை உங்கள் அனுபவத்திலிருந்து ஒரு பதிவாக்கிவிடுங்கள்.

  மகளிர் தின வாழ்த்துக்கள்.

  1. எனக்கு பதில் சொல்ல வேண்டாம். அவரவர்கள் தங்களை தாங்களே கேட்டுக்கொண்டு கொஞ்சம் திருந்தலாம். அதைதான் நான் எதிர்பார்க்கிறேன்.

 8. நீங்கள் கேட்டிருக்கும் அத்தனைக் கேள்விகளூம் மிகவும் நியாயமானவைதான் ஒரு கேள்விக்குக்கூட என்னிடம் விடை இல்லை ரஞ்சனி ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாக யோசிக்க வேண்டும் இதற்கு பதில் சொல்ல
  நல்ல பகிர்வு மகலிர் தின நல்வாழ்த்துக்கள்

 9. ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்?

  இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்?

  அடுத்தவர் குறைகளை சுட்டிக் காட்டும் பெண்களுக்கு தங்கள் குறைகள் தெரிவதில்லையே, ஏன்? இந்தக் கேள்விகளையெல்லாம் ஒத்துக்கொள்கிறேன்…
  மற்றவை அவள் வளர்ப்பு சார்ந்தது என்பது என் எண்ணம்…
  தன்னை(கணவன், குழந்தைகள்) மட்டுமே கவனித்துக்கொள் என மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பப்படும் பெண்கள்…
  அப்படியான மூளைச் சலவைக்கும் காரணம் அந்த தாய் அடிமைப்படுத்தப்பட்டதன் விளைவே…
  ஒரு சுதந்திரமான தாய் தன் மகளை உறவுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவாள் என்பது என் எண்ணம்

 10. நியாயமான கேள்விகள் தான். ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுக்கொண்டு திருந்தினால் உண்டு. என்னைக் கேட்டால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி. நாம அப்படி மாமியாருக்கு அடிமையா இருந்தோம் நமக்கு வருகிற மருமகள் ஏன் அப்படி இல்லை என்கிற எதிர்பார்ப்பு தான் பிரச்சனைக்கு காரணம். எங்கும் அமைதியையும் அன்பையும் மட்டும் எதிர்பார்த்தால் பிரச்சனைகள் வர வாய்ப்பு குறைவு. பிரச்சனை இல்லையென்றால் கேள்வி இல்லை. சரியாங்க ,?

 11. இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்?

  அம்மா தாங்கள் கூறும் கேள்விகள் அணைத்திருக்கு ஏன்னா பதில் கூறமுடியாது ஏன் என்றால் எனக்கு திருமணம் ஆகவில்லை அதனால் இந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறேன்

  என்றும் இயற்கை அழகுதான் சிறந்தது

  நானும் அப்படித்தான் இருக்கிறேன்

  செயற்கை அழகு சில காலம் தான்

  இது தான் உண்மை

  நன்றிகள்

 12. இதை எல்லாம் குறிப்பிட்டு எழுதிவிட்டுப் பல பெண்களிடம் மொத்துப் பட்ட அனுபவம் உள்ளது. :)))) எனக்கும் இந்த சந்தேகம் தீரவில்லை. படிப்பு ஒன்றே இதற்கான முழுத் தீர்வு எனச் சொல்ல முடியாது. ஆணோடு பெண் தன்னை ஒத்திட்டுப் பார்ப்பதைக் குறைக்க வேண்டும். ஆணுக்கான உலகம் வேறு; பெண்ணுக்கான உலகம் வேறு. இதற்கான பதில்கள் ஒருவரியில் சொல்லிவிட முடியாது. :))))

 13. awesome, super , duper, nachchunu irukku ororu kelviyum… spl the one என் குடும்பத்திற்கு நான் எத்தனை தியாகம் செய்திருக்கிறேன் தெரியுமா என்று கேட்காத பெண்களே கிடையாது. உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்ததை எப்படி தியாகம் என்று சொல்லலாம்?

  for most of them its self pity… they dont take pride in their act..

  let me know about what we discussed the other day over the phone.

 14. அம்மா,
  ஒரு பெண் கண்டிப்பாக தன் மாமியாரை மதிப்பாள், அவள் ஒரு மகளாய் நடத்தப்படும் போது. தன் மாமியாரிடமும் , நாத்தனாரிடமும் பகைமை பாராட்டுவதில்லை, நானும் உங்களை போல் ஒரு உணர்ச்சிகள் நிறைந்த பெண் , என்னையும் உங்களில் ஒருத்தியாய் நினைக்க கோருகிறாள்!

 15. ஹலோ ரஞ்சனி….இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ! உங்கள் கேள்விகள் அருமை.
  எனக்கு சரி என்ற பதில்களை எழுதியுள்ளேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

  1.8. உங்கள் கேள்வியிலேயே பதிலும் உள்ளது. தனக்கு கிடைக்காத மரியாதையை பிறருக்கும் கொடுக்க விரும்புவதில்லை ஒரு பெண். இதில் மாமியார் மட்டுமல்ல சில சமயங்களில் அவள் கணவருக்கும் இதே மரியாதைதான்! கண்டிப்பாக இது மாற்றிக் கொள்ள வேண்டிய குணம்தான்.

  2. அலுவலகப் பெண்கள் வீட்டுக்குள்ளும், அவளது உரிமைகளிலும் தலையிடுவதில்லையே! ஆனால் புக்ககத்தாரோ (சிலர் ) அவளின் அந்தரங்க விஷயங்களில் தலையிடும்போது கோபம் வருவது இயற்கைதானே?

  3. என்னைப் பொறுத்தவரை எந்தப் பெண்ணும் இந்த வார்த்தைகளை காப்பாற்றுவதில்லை என்பதே என் எண்ணம். நம் கூடவே வாழ்பவர்களின் குணங்கள் தானாகவே நமக்கும் வருவது இயல்பு. அதேபோல்தான் ஒரு கணவனும் மனைவிக்கு ஏற்றாற்போல் சில விஷயங்களில் மாற வேண்டியுள்ளது.

  4, 9.தன் குடும்பத்தின் ,குழந்தைகளின் நலனுக்காகத்தானே அவள் தன்னையும் தன உடல்நலக் குறைபாடுகளையும் மறைத்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் வாழ்கிறாள். பல பெண்கள் நேரம் காலமின்றி உழைப்பதும் தன பிள்ளைகளுக்ககத்தானே ? அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதுதான் அவள் செய்யும் தியாகம். அந்த மனக்குறைதான் அப்படி வெளிப்படுகிறது.

  5. இக்காலப் பெண்கள் தனிப் பேருந்து தனிச் சலுகைகளை எதிர் பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன் பல முறை பேருந்து பயணங்களில் ‘மகளிர்’ இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருப்பதை நான் பார்க்கிறேன். சமீபத்தில் ஒரு பேருந்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நிற்க பெண்கள் சீட்டில் அமர்ந்திருந்த எந்த ஆணும் அவளுக்கு இடம் கொடுக்க முன் வராதது எனக்கு வருத்தமும் ஏமாற்றமும் அளித்தது. அவர்களெல்லாம் பஸ் ஸ்டேன்டிலேயே ஏறி இடம் பிடித்தவர்களாம் ….மகளிர் இருக்கைகளில்!

  6. ஆய கலைகள் அறுபத்திநான்கில் அழகுக் கலையும் ஒன்றாச்சே ! அழகை விரும்பும் பெண் தன்னை மேலும் அழகு படுத்திக் கொள்வதால் அவளுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்குமாமே !! அதில் தவறு இருக்கா?!!

  7.அடுத்தவர் குறைகளை சுட்டிக் காட்டுவது பெண்கள் மட்டுமே என்பது சரியல்ல!

  10, 11. தான் சம்பாதிப்பதும், உழைப்பதும் தன் குடும்பத்துக்கும் , தன்னைச் சுற்றியுள்ள உறவுகளுக்கும்தானே? அடுத்தவர் சந்தோஷத்தில் தன்னை மறப்பவள்தானே பெண்! அந்த உரிமைதான் வீட்டில் சற்று அதிகாரத்தையும் காட்டுகிறதோ ?

  12. இந்த உறவில்தான் ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகிறாள்! மாமியாரும், மருமகளும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை தீரும். இது பல பெண்கள் யோசிக்க வேண்டிய விஷயம் !

  படித்த பெண், வேலையில் இருக்கும் பெண், வீட்டில் இருக்கும் பெண், அறிவான பெண், ஆற்றலுள்ள பெண் என்று எந்தப் பெண்ணுக்கும் தன் வீட்டாரிடம் மரியாதை கிடைக்காதபோதோ, தான் அவமானப் படும்போதோ, தன்னை அடுத்தவர் இழிவாகப் பேசும்போதோ தன்மானம் தலை தூக்கி, தன் இயலாமையே அவளை ஆத்திரமாகவும், ஆணவமாகவும், அதிகாரமாகவும் பேச வைக்கிறது. எங்கு பெண்மை மதிக்கப் படுகிறதோ, ஆராதிக்கப் படுகிறதோ அங்கு பெண் தெய்வமாகிறாள். சட்டென்று பொங்குவதும், அன்பு கிடைக்கும்போது நெகிழ்ந்து உருகிப் போவதும் தாய்மை நிரம்பிய பெண் மனம் மட்டுமே.

  . ஒரு பெண்ணாக இருந்து நான் யோசித்ததில் கிடைத்த பதில்களை எழுதியுள்ளேன். சரியெனில் ஏற்றுக் கொள்வதும், தவறு எனில் மன்னிப்பதும் உங்கள் விருப்பம். எல்லா பெண்களும் இந்தக் கேள்விகளைப் படித்து தம்மை மாற்றிக் கொண்டால் ஒவ்வொரு நாளும் நமக்கு மகளிர் நாளே!!

 16. இந்த_நாளில் எல்லோரும் இப்படிதான் இருக்கிரார்கள். இதற்கென்ன பதில் சொல்ரது?
  அப்படீன்னு யாராவது பதில் சொல்லி விடப் போகிரார்கள்? பெண்கள் ஸமுதாயமே பூரா மாறுதல்களுக்கு உட்பட வேண்டும். இம்மாதிரி குறைகளெல்லாம் இருந்தது என்பதே மறக்கப்படல் வேண்டும்
  யாவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள். அன்புடன்

 17. நல்ல கேள்விகள்.
  இது பெண்களுக்கு மட்டுமில்லை..
  எல்லோரும் இப்படி இல்லை.. இப்படியும் சிலர் இருக்கலாம்.
  இந்த குணங்கள் அவரவர் இயல்பு. இப்போதெல்லாம் முரண்களைச் ஒல்லிக் காட்டும் அளவுக்கு குணங்களைச் சொல்ல முன்வருவதில்லை. பத்திரிகை, மீடியா.. சீரியல் எல்லாமே மிகைப் படுத்தி விடுகின்றன.. பின் வசதியாய் மறந்து போய் விடுகின்றன..
  இந்த கேள்விகள் நிஜம். ஆனால் இதைத் தாண்டி நமது அன்பும் நிஜம். அதுதான் ஜெயிக்கிறது எப்போதும்.

  1. ஆண் பெண் இருவருமே யோசித்துப் பார்க்க வேண்டும் ஐயா! இரு துருவங்களாக இருக்கும் இவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்க்கை நடத்தும்போது குடும்பம் என்ற ஒரு அமைப்பிற்காக சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது மிகவும் அவசியம்.

   ஒரு சிறந்த சிந்தனையை முன் வைத்த உங்கள் கருத்துரைக்கு நன்றி!

 18. இந்த கேள்வியையும் மறந்துட்டீங்களே
  பெண்களுக்கு ஏன் ஆண்கள் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் போல் இருந்தால் எதிரிகளை பந்தாய் பரக்கவிடலாம் இல்லையா?.

 19. //யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்?//

  ஒன்னுத்துக்கும் உதவாம ஊர் சுத்தும் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சு மருமகள் திருத்துவான்னு எதிர்பார்க்கும் மாமியார்கள் நிறையப்பேரைப் பார்த்திருக்கேன். கால்நூற்றாண்டு காலம் கெட்டுப்போனதை இவள் உடனே திருத்த முடியுமா?

  மத்ததெல்லாம் நான் இன்னும் கொஞ்சம் உக்காந்து யோசிக்கணுமோ!!!

 20. I read one “Kavidhai”. “If I had not been in kitchen I would have seen that apple falling”. It depicts the inner feeling of a women whose knowledge, intelligence.. were all submerged by so called Family, religition..etc. The questions posted here are pretty natural if you think from family plane. But the deeper issue still lies and persists. Women still have long way to go. Working women concept and debates started when lots of women started going to job in 80’s in urban area. But we all should remember women were working in paddy fields for thousands of years. I do not know whether such questions are applicable to them? We have to throw more light on working women condition in rural areas, that outnumbers the urban working women population by huge margin.

 21. Regarding question on seperate bus for women, I would like to put what Mr.Solib Soreebjee (former attorney general) said “In India maximum molestation on women is happening in public bus”. So they are all needed unless such nasty crimes decreases and women becomes how to protect themselves from such crimes.

 22. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_20.html) சென்று பார்க்கவும்… நன்றி…

 23. well the newly married lady in ninetypercent of the families are not properly treated asked to resign jobs… when the elders show good ways and respects the feeling of young couples things would automatically change….nowadays young men suddenly lose jobs so the tesion increases to the young lady. it is surprising that you do not offer any hints to mothers of young men who gets married.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s