India

நம்மூரிலிருந்து பெங்களூருக்கு மாடி ரயில்!

double decker train
இன்றைக்கு செய்தித்தாளைப் பிரித்தவுடனே ‘ஆஹா..! என்று சந்தோஷத்துடன் கூவினேன்.

‘நம்மூரிலிருந்து இங்கு வர புது ரயில்…!’

‘அதான் நிறைய இருக்கே… இன்னும் என்ன புது ரயில்….?’

‘இது ஆ(ர்)டினரி ரயில் இல்ல. மாடி ரயில்…!’

‘மாடி ரயிலா…!’

‘ஆமா, டபுள் டக்கர் ரயில்….!’

செய்தியை அவசர அவசரமாக படிக்க ஆரம்பித்தேன்.

இது தென்னிந்தியாவின் முதல் டபுள் டக்கர், ஏ.ஸி. சேர் கார் எனப்படும் உட்காரும் வசதி கொண்ட ரயில். சென்ற ஞாயிறு அன்று (24.02.2013) சோதனை ஓட்டம் செய்து பார்த்திருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்தில் தினமும் பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையில் ஓட ஆரம்பித்துவிடும்

சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் ஏழு விரைவு வண்டிகள் இருக்கின்றன. ஆனாலும் பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையினால் இன்னொரு ரயில் இந்த நகரங்களுக்கு இடையே விட ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. இந்த ரயிலில் மற்ற ரயில்களை விட 40% அதிக இடவசதி இருக்கும். ஷதாப்தியில் 78 இருக்கைகள், பிருந்தாவனம் ரயிலில் 72 இருக்கைகள். இவற்றைவிட கூடுதலாக ஒரு சேர் காரில் 12௦ இருக்கைகள் இந்தப் புது ரயிலில் இருக்கும். மொத்தம் 11 சேர் கார்கள். 132௦ பயணிகளை சுமந்து செல்லும். பயண சீட்டின் விலை மற்ற ரயில்களை விட சற்றுக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் இருவருமே சீனியர் சிடிசன்ஸ்!

டபுள் டக்கர் என்ற பெயர் இருந்தாலும் 3 தளங்கள் இதில் இருக்கும். ரயில் பிளாட்பாரத்தில் இருந்து உள்ளே நுழையும் தளம், அடுத்ததாக ஒரு தளம், அதற்கு மேல் ஒரு தளம். இவற்றில் இருக்கைகள் முறையே 22, 48, 50 என்று அமைந்திருக்கும்.

இந்த டபுள் டக்கர் ரயில் ( No. 22625) சென்னையிலிருந்து காலை 7.25க்குப் புறப்பட்டு, மதியம் 1.20க்கு பெங்களூரை அடையும். பெங்களூரிலிருந்து (No. 22626) மதியம் 2.40க்குக் கிளம்பி இரவு 8.40க்கு சென்னையை அடையும்.

சென்னை சென்ட்ரல், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் பெங்களூர் கேன்ட், பெங்களூர் சிடி என்று 9 நிறுத்தங்களுடன், மணிக்கு 11௦ கி.மி. வேகத்தில் சுமார் 6 மணி நேரத்தில் பெங்களூரை வந்து அடையும் இந்த மாடி ரயில் சிவப்பும், மஞ்சளுமான வண்ணத்தில் மின்னுகிறது. புகைப்படங்களைப் பாருங்கள். என்ன அழகு!

என் வருத்தம் என்னவென்றால், எங்களைப்போல ஒரே நாள் சென்னை பயணம் செய்து திரும்புகிறவர்களுக்கு இந்த ரயில் சரிப்படாது. பாதி நாள் வீணாகிவிடுமே! நமக்கு சென்னை மெயில் தான் சரி. இரவு ஏறிப் படுத்தோமா, அடுத்த நாள் வந்த வேலையைப் பார்த்தோமா, அன்றிரவு அதே ரயிலை பிடித்து மறுநாள் ஊர் வந்து சேர்ந்தோமா என்கிற நிலைதான் எப்போதுமே.

யாரங்கே! சென்னை மெயிலை மாடி ரயிலாக மாற்றச் சொல்லுங்கள்!

தொழிற்களப் பதிவு

http://tk.makkalsanthai.com/2013/02/blog-post_9287.html

 

சிக்குபுக்கு ரயிலே 

Advertisements

34 thoughts on “நம்மூரிலிருந்து பெங்களூருக்கு மாடி ரயில்!

 1. அட்டகாசமாக மயக்குவது மாடி ரயில் மட்டுமல்ல , உப்கள் பதிவும் தான்.
  மாடி ரயில் பற்றிய விவரங்கள் அசத்தல். மற்ற ரயில்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து எழுதிய நல்ல உப்யோகமான பதிவு.

 2. என் பெண்களும் குதித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை இதில் அழைத்துக்கொண்டு போகச்சொல்லி. பெங்களுர் சென்னை கும்பலுக்கு ஒரு மாடி ரெயில் போதாது என்று நினைக்கிறேன். எப்பொழுது டிக்கெட் பார்த்தாலும் கிடைப்பதில்லை. நாங்கள் கடந்த ஒரு வருடமாக காரிலேயேதான் சென்னைக்கு போய் வருகிறோம்.

  1. ரயில் பயணம் என்பது எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று. குழந்தைகளை ஒரு முறையாவது ரயிலில் கூட்டிச் செல்லுங்கள். ரொம்பவும் மகிழ்வார்கள்.

  1. ஏற்கனவே தில்லி – ஜெய்பூர் மார்க்கத்தில் மாடி ரயில் இருக்கிறது. இப்போது இந்த மார்க்கத்திலும். வசதிதான் – இன்றைய பட்ஜெட்டிலும் மேலும் சில மாடி ரயில்கள் பற்றி சொல்லி இருக்கிறார்கள். பார்க்கலாம். விரைவாக வந்தால் நல்லது!

   1. இதெல்லாம் சரிதான். ஆனால் IRCTC தளத்திற்குப் போய் டிக்கட் பதிவு செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. அதற்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும், இல்லையா?

 3. அன்பு ரஞ்சனி…ரயில் பதிவு அருமை! ஆனால் டிக்கட் கிடைப்பதுதான் கஷ்டம்! எப்படியாவது இந்த ரயிலில் உங்களைப் பார்க்க வருவது என்று தீர்மானித்து விட்டேன்! விரைவில் சந்திப்போம் !!

  1. வாருங்கள் ராதா!
   கட்டயமாக இந்த ரயிலில் இடம் கிடைக்கும். உடனே பதிவு செய்துவிடுங்கள். நானும் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.
   விரைவில்….எப்போது?

 4. அதென்னமோ ரயிலில் பயணிக்கும் பாக்கியம் எனக்கு அமைவதில்லை. எப்ப எந்த ஊருக்கு கிளம்பினாலும், அவசரமா முடி‌வெடுத்து பஸ்ஸைப் பிடிடா பாரதபட்டான்னு ஓட வேண்டியிருக்கு தலைவிதி! உங்கள் விவரிப்பையும் படத்தையும் பாத்ததும் ஒரு தடவை புக் பண்ணி பெங்களூர் இதுல போனா என்னன்னு சபலம் தட்டுது ரஞ்சனிம்மா!

 5. பதிவு அட்டகாசம்! ரசித்தேன்.

  நேத்து செய்தியில் மாடி ரயில் பற்றிப் படித்தவுடன், கோபால் புகழ்ந்துதள்ளிக்கிட்டு இருக்கார். என் கவலை என்னன்னா….. அட்லீஸ்ட் இதுலேயாவது கரப்ஸ், எலீஸ் இல்லாமலும் சுத்தமாவும் இருக்கணும் என்பதுதான்.

 6. மாடிரயிலைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாக பிச்சுபிச்சு வச்சிட்டீங்க. இதிலிருந்தே அதில் பயணிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் புரியுது.

  ம்ம்..அடுத்த பதிவர் சந்திப்பு பெங்களூரிலா!நம்மூரில் இருக்கும்வரை ரயில் பயணம் என்றால் என்னவென்றே தெரியாது.இங்கு வந்தபிறகு ரயிலில் போவதுண்டு.மாடி ரயில்தான்.சூப்பரா இருக்கும்.

  ஒருநாள்தானே,போனாப்போகுது,ஆசை தீர ஒரு தடவ ஏறி எறங்கிடுங்க.

  1. அடுத்தமுறை சென்னை பிரயாணம் மூன்று நாட்கள் என்று சொல்லிவிட்டேன், கணவரிடம்! ஒரு நாள் மாடி ரயிலில் போக, ஒரு நாள் திரும்பி வர நடுவில் ஒரு நாள் சென்னையில் வந்த வேலையைப் பார்க்க!
   இது எப்படி இருக்கு?

   1. எங்க ஊருக்கு(கோவையிலிருந்து பெங்களூருக்கு) ட்ரெயின் போடலன்னு வருத்தத்துல இருக்கோம் நீங்க டபுள் டெக்கர் பத்தி எழுதி கடுப்பேத்தறீங்களே அம்மா நியாயமா இது? 🙂 இருந்தாலும் நம்ம மாநில வளர்ச்சியை நினைத்து மனச தேத்திக்கிறேன்….

 7. வாங்க எழில்!
  இன்னும் நிறைய இடங்களுக்குப் பெங்களூரிலிருந்து போதுமான ரயில் வசதி இல்லை. திருச்சி, தஞ்சாவூர், மாயவரம் ஆகிய ஊர்களுக்கு ஒரே ரயில் தான். பொழுதெல்லாம் கணணி முன் உட்கார்ந்திருந்தாலும் பயணச்சீட்டு கிடைக்காது.
  இந்த முறை நாகர்கோயில் போகும் ரயிலை தினசரியாக மாற்றி இருக்கிறார்கள்.

  மாநில வளர்ச்சியை நினைக்கும் உங்கள் பெரிய மனதுக்கு வாழ்த்துகள்.

  வருகைக்கும், கருத்துரைத்ததற்கும் நன்றி. உங்கள் வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

 8. டபுள் டெக்கர் ரயில் வரப்போவதை நாளிதழில் பார்த்துவிட்டு உடனே உற்சாகத்துடன் கூடிய உங்கள் பதிவை பார்க்கையில் நானும் அந்த ரயிலில் பயணிக்க வேண்டும் போல் உந்துதல் ஏற்படுத்தி விட்டது உங்கள் பகிர்வு!

 9. ஆஹா ஒஹொ என்று எழுதித் தள்ளிவிட்டீர்கள் டிக்கெட் வாங்கிக்கொடுப்பது யார் மாமி/ புகழ்ந்து தள்ளியிருப்பதைப் பார்த்தால் ஹைதிராபாத்திலிருந்து முதலில் சென்னைப் போய்விட்டு மாடி ரயிலில் தான் உங்களைப் பார்க்க வர வேண்டும் என தோன்றுகிறது எப்படி வசதி?

  1. எப்போது வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். இரவு பகல் கண் விழித்து உங்களுக்காக டிக்கட் வாங்கிவிடுகிறேன், சரியா?
   இப்படித்தான் வசதி! என்ன சொல்கிறீர்கள் விஜயா?

 10. வணக்கம்
  அம்மா

  நல்ல தகவலை சொன்னீர்கள் உங்கள் ஊரில் உள்ள அனைவரும் 2அடுக்கு மாடி புகையிரதத்தில் பயணம் செய்ய கொடுத்துவைச்சவங்க மிக்க சந்தோசமாக உள்ளது அம்மா உங்கள் ஊருக்கு வந்து பார்ப்போம்,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. நிஜமாகவா! வியப்பாக இருக்கிறதே! உங்கள் ஊரிலிருந்தே இங்கு வர நாகர்கோயில் விரைவு வண்டி இருக்கிறது. டிக்கெட் கிடைப்பதுதான் கஷ்டம்.

   சென்னை வந்து இந்த ரயிலில் ஏறி எங்கள் வீட்டிற்கு வந்துவிடுங்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s