தமிழ் இசை

இசையின் வசமானவர்களுக்கு,

வணக்கம். இந்த பாடலை அனுப்பியவர் இசைப்பாவின் மூத்த பங்களிப்பாளர் ரஞ்சனி அவர்கள். அவர்கள் முழுச் சுதந்திரம் கொடுத்து இப்பாடலை வெளியிடக் கோரினார்கள். நான் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. இதன் பாராட்டுகள் அனைத்தும் அவர்க்குரியதே.

இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்பதில்லை. இசை காதுக்கு இனிமையாக இருப்பதில்லை; அல்லது பாடகர் தமிழை கொலை செய்திருப்பார்; குரலினிமை இல்லாத இசை அமைப்பாளரே பாடி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார். மொத்தத்தில் ‘உனக்கு வயதாகி விட்டது’ என்பான் என் பிள்ளை!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என்று எழுத, வரவில்லை என்று சொன்ன கணவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டுக் கொண்டு திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து அவரிடமிருந்து செம திட்டு! ‘இதை விட வயலன்ஸ் படம் வேறு கிடைக்கவில்லையா பார்க்க?’ என்று இடைவேளையின் போதே ஆரம்பித்த திட்டு இன்று வரை ஓயவில்லை. அதனால் ‘விஸ்வரூபம்’ போகலாமா என்று பிள்ளை கேட்டபோது அப்பாவுக்கு டிக்கட் வாங்காதே என்று சொல்லிவிட்டேன். ஹி…ஹி….!

சரி இப்போது ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது. எனது அலைபேசியில் காலர் டியூனாகப் போட்டுக் கொண்டேன். ஒரு புதிய அலையையே உருவாக்கி விட்டது இந்தப் பாடல்!

என் மாணவர்களுக்கு ரொம்பவும் வியப்பு நான் காலர் டியூன் போட்டுக் கொண்டது. இத்தனை நாள் இல்லாமல் இது…

View original post 429 more words

7 thoughts on “

 1. இந்தப் படம் வந்தப் புதிதில் என் பேரன் அர்விந்த் காலை மாலை அல்லும் பகலும் இதையே தான் தன மழலையில் பாடிக் கொண்டேயிருப்பான்.
  அவன் என்னிடமிருந்து கற்றுக் கொண்டானோ இல்லை நான் அவனிடமிருந்தா என்று புரியாமல் பாடி வீட்டில் எல்லோரையும் இம்சை பண்ணிக் கொண்டிருந்தோம்.
  மிகவும் பிடித்தப் பாடல்.
  நன்றி பகிர்விற்கு.

  1. வாருங்கள் ராஜி!

   எனக்கும் ரொம்பவும் பிடித்த பாடல் இது.
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. வாருங்கள் சசிகலா!

   பலரையும் கவர்ந்த பாடல் இது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் வரிகளும், படமாக்கப்பட்ட விதமும், இசையும் என எல்லாம் இணைந்த பாடல். மனப்பாடப்பாடல்போல வெளிவந்த போது பலரால் பாடப்பட்டது. கமல்ஹாசன் ரசிகரான எனக்கு இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும். தாமரை நல்ல தமிழில் அருமையாக இப்பாடலை எழுதியிருக்கிறார். பகிர்விற்கு நன்றி.

 3. வருகைக்கும், உங்களது அனுபவ பகிர்வுக்கும் நன்றி, சித்திரவீதிக்காரரே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s