செல்வ களஞ்சியமே – 6

mother

 

பிள்ளைத் தமிழ் என்பது இலக்கிய வகையில் ஒன்று. பாட்டுடை தலைவன் அல்லது தலைவியின் குழந்தைப் பருவத்தை பாடுவதுதான் இந்தப் பிள்ளைத்தமிழ்
நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகவும் அனுபவித்து யசோதையின் நிலையில் தன்னை வைத்துப் பாடுகிறார். அதில் யசோதை கண்ணனை நீராட்டத்திற்கு அழைக்கும் பாடல்கள் 10. அதில் ஒரு பாடலின் கடைசி வரிதான் ‘அழகனே நீராட வாராய்’.
குளிப்பதற்கு அடம் பிடிக்கும் குழந்தையை யசோதை எவ்வாறு தாஜா பண்ணி நீராட அழைக்கிறாள் பாருங்கள்:
‘நீ பிறந்த திருவோணம் இன்று,
நீ நீராட வேண்டும்…’
‘இன்னைக்கு உன் பிறந்த நாள், குளிக்கணும் இல்லையா?’
‘நப்பின்னைக் காணிற் சிரிக்கும்…’
‘உன் தோழி நப்பின்னை நீ குளிக்காமல் இருந்தால் சிரிப்பாளே… அவள் பார்ப்பதற்கு முன் குளித்துவிடு’
இதையெல்லாம் எதற்கு இங்கே சொல்லுகிறேன் என்றால் குழந்தையுடன் நிறைய பேச வேண்டும்.
ஒரு சின்ன பிளாஷ்பேக்:

தொடர்ந்து படிக்க: குழந்தையை காலில் போட்டு நீராட்டுவது எப்படி?

தமிழ் இசை

இசையின் வசமானவர்களுக்கு,

வணக்கம். இந்த பாடலை அனுப்பியவர் இசைப்பாவின் மூத்த பங்களிப்பாளர் ரஞ்சனி அவர்கள். அவர்கள் முழுச் சுதந்திரம் கொடுத்து இப்பாடலை வெளியிடக் கோரினார்கள். நான் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. இதன் பாராட்டுகள் அனைத்தும் அவர்க்குரியதே.

இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்பதில்லை. இசை காதுக்கு இனிமையாக இருப்பதில்லை; அல்லது பாடகர் தமிழை கொலை செய்திருப்பார்; குரலினிமை இல்லாத இசை அமைப்பாளரே பாடி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார். மொத்தத்தில் ‘உனக்கு வயதாகி விட்டது’ என்பான் என் பிள்ளை!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என்று எழுத, வரவில்லை என்று சொன்ன கணவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டுக் கொண்டு திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து அவரிடமிருந்து செம திட்டு! ‘இதை விட வயலன்ஸ் படம் வேறு கிடைக்கவில்லையா பார்க்க?’ என்று இடைவேளையின் போதே ஆரம்பித்த திட்டு இன்று வரை ஓயவில்லை. அதனால் ‘விஸ்வரூபம்’ போகலாமா என்று பிள்ளை கேட்டபோது அப்பாவுக்கு டிக்கட் வாங்காதே என்று சொல்லிவிட்டேன். ஹி…ஹி….!

சரி இப்போது ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது. எனது அலைபேசியில் காலர் டியூனாகப் போட்டுக் கொண்டேன். ஒரு புதிய அலையையே உருவாக்கி விட்டது இந்தப் பாடல்!

என் மாணவர்களுக்கு ரொம்பவும் வியப்பு நான் காலர் டியூன் போட்டுக் கொண்டது. இத்தனை நாள் இல்லாமல் இது…

View original post 429 more words