குழந்தை வளர்ப்பு

அழகனே நீராட வாராய்!

bathing baby

எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்துவிட, என் அம்மா அக்காவின் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவளுடன் இருந்தாள். எனது தலைப் பிரசவத்திற்கு அக்கா வீட்டிற்குத்தான் போனேன்.

குழந்தை பிறந்த 3 மாதங்களில் குழந்தையுடன் புக்ககம் வந்துவிட்டேன். மாமியாரிடம் ’குழந்தையை குளித்து விடுகிறீர்களா?’ என்றதற்கு  அவர் தன் இயலாமையை தெரிவிக்க திகைத்துப் போனேன். என்ன செய்வது?

அம்மாவிடம் சரணடைந்தேன். அம்மா நிதானமாகச் சொன்னாள். ‘குழந்தையை குளிப்பாட்டுவது ஒன்றும் பிரமாதமே இல்லை. முதலில் என்னென்ன வேண்டுமோ அதையெல்லாம் எடுத்து வைத்துக் கொள். குழந்தைக்கு தேய்க்க வேண்டிய எண்ணெய், சோப்பு, அல்லது சிகைக்காய் பொடி, குழந்தையை துடைக்க டவல். நீ உட்கார மணை.

பிறகு என்னவாயிற்று என்கிறீர்களா? தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்தப் பதிவுகள் நான் பிரத்யேகமாக ‘நான்கு பெண்கள்’ தளத்திற்காக எழுதுவதால் இங்கே முழுவதையும் போட அனுமதியில்லை. படிப்பவர்கள் தயவு செய்து மேலே கொடுத்திருக்கும் இணைப்பை தொடர்ந்து சென்று படிக்கவும்.

உங்கள் கருத்துக்களையும் அங்கேயே கூறவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Advertisements

11 thoughts on “அழகனே நீராட வாராய்!

 1. ரஞ்சனி,
  எனக்கு ஒரு விஷயம் புரிய வில்லை.
  நீங்கள்{ ” இங்கே ” சொடுக்கவும் } என்று எழுதியிருக்கும் இடத்தில் சொடுக்கினால்
  4 பெண்கள் தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.
  “இங்கே” எழுதும் technique என்ன முடிந்தால் சொல்லுங்களேன்.
  சிரமம் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

  ராஜி

 2. வாருங்கள் ராஜி!
  புதிய பதிவு போடுகிறோம் இல்லையா? அங்கேயே இதைச் செய்ய வேண்டும்.
  முதலில் நீங்கள் கொடுக்க வேண்டிய இணைப்பை (link) காப்பி செய்து கொள்ளுங்கள்.

  உதாரணம்: நான்கு பெண்கள் தளத்தில் வந்திருக்கும் என் பதிவின் இணைப்பு

  பிறகு புதிய பதிவு போடும் பகுதியில் இங்கே என்று தட்டச்சு செய்யுங்கள். அதை, அதாவது ‘இங்கே’ என்று இருப்பதை select செய்து கொள்ளுங்கள்.
  மௌசை ‘ கே’ அருகில் வைத்து ரைட் சைட் மௌசை பிடித்துக் கொண்டு இடது பக்கம் இழுத்தீர்களானால் select ஆகும்.

  நாம் எழுதும் பகுதியில் மேலே ‘font’, bullets என்றெல்லாம் இருக்கிறது இல்லையா? அங்கு (ப்ளாக்ஸ்பாட்டில்) இணைப்பு என்று ஒரு option இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். புது ஜன்னல் திறக்கும். இந்த இணைப்பு எங்கே செல்கிறது என்று கேட்டிருக்கும். ஏற்கனவே காப்பி செய்திருக்கும் இணைப்பை அதில் போடுங்கள். (நான்கு பெண்கள் தளத்தின் இணைப்பை)
  இந்த இணைப்பு சரியா பாருங்கள் என்று இருக்கும். அதை சொடுக்கினால் நான்கு பெண்கள் தளத்திற்குப் போகும்.
  கீழே ‘இணைப்பை புதிய சாரளத்தில் திறக்கவும்’ என்பதை டிக் செய்யுங்கள். ok பண்ணிவிடுங்கள்.

  அவ்வளவுதான்!

  1. உடனே வந்து மிக மிக விளக்கமாக பொறுமையாக சொல்லிக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

   ராத்திரி டின்னர் வேலை எல்லாம் முடித்த பிறகு நீங்கள் சொல்லியபடி செய்ய வேண்டும்.

   மீண்டும் நன்றி.
   ராஜி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s