தமிழ் இசை

மூதறிஞர் திரு இராஜகோபாலாச்சாரியாரின் பாடல் வரிகள் இவை. திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா. சபையில் முதல் முதல் பாடபெற்ற தமிழ் பாடல் இது.

எல்லோருக்கும் தெரிந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். மனதை உருக்கும் பாடல். கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்.

எத்தனையோ பாடகர்கள் பாடியிருந்தாலும் எம்.எஸ். குரலில் கேட்கும்போது உண்டாகும் மன உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் எங்கள் அம்மா வாங்கித்தந்த புத்தகங்கள் வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும்தான். எளிய தமிழில் ராஜாஜி அவர்களின் கதை சொல்லும் பாணி மிகவும் நன்றாக இருக்கும். எத்தனை முறை படித்திருப்போம் என்ற கணக்கே இல்லை.

அதே அவரது பாணியிலேயே எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல் இது.

இறைவனிடம் எதுவுமே கேட்கக்கூடாது; அவருக்கு நமக்கு என்ன தேவை என்று தெரியும். நமக்குப் பிடித்ததைவிட, நமக்கு தேவையானவற்றை அவரே தருவார் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பாடல் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இராக மாலிகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்

பாடலாசிரியர் : சக்கரவர்த்தி ராஜாஜி

பாடியவர் : எம்.எஸ்.சுபலட்சுமி

இசை அமைத்தவர் : தெரியவில்லை

ராகம்: சிவரஞ்சனி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்

View original post 531 more words

8 thoughts on “

 1. :எம்எஸ் அவர்களின் பாட்டுகளில் நான் மிகவும் விரும்பிக்கேட்கும் பாடல்.

 2. அருமை… எம்.எஸ்.ஸின் குரலினால் இந்தப் பாட்டு கேட்கும் போதெல்லாம் அதில் ஒன்றிவிட முடியும். நமக்குள் ஆயிரம் குறைகள் இருந்தாலும் எதையும் நினையாமல் குறைகள் இல்லாத உடலும், நல்ல மனமும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல இந்தப் பாடலின் வரிகளுடன மனது ஒன்றிவிடும். ரசனையாக எழுதின உங்களுக்கு ஒரு சல்யூட். அதுசரீ…. ராஜாஜி அவர்கள் எழுதின ராமாயணம் என்கிட்ட இருக்கு. வியாசர் விருந்து தான் கிடைக்கவே இல்லை. உங்ககிட்ட இருக்கா ரஞ்சனிம்மா… ஓசி வாங்கியாவது படிச்சிட ஆசை! (பயப்படாதீங்க. மறக்காம திருப்பித் தந்துடுவேன். ஹி… ஹி…)

  1. வியாசர் விருந்து இருக்கிறது கணேஷ். எங்களூருக்கு வாருங்கள். நிச்சயம் தருகிறேன். படித்துவிட்டு மறக்காம திருப்பிக் கொடுத்துடுங்க. ஹி…..ஹி…

   //குறைகள் இல்லாத உடலும், நல்ல மனமும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல இந்தப் பாடலின் வரிகளுடன மனது ஒன்றிவிடும். //

   மிகச் சிறப்பாகச் சொல்லிவிட்டீர்கள்!
   நன்றி கணேஷ்!

 3. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். எனது ரசித்த பாடல் வலைப்பூவிலும் இப்பாடல் வரிகளையும் காணொளியையும் ஆரம்பித்த புதிதில் பதிந்து இருக்கிறேன்….

  ராஜாஜி, எம்.எஸ்., கல்கி போன்ற பெரியவர்களெல்லாம் மீண்டும் பிறக்க வேண்டும் எனத் தோன்றுகிறது……

 4. hi

  After a long gap I read your post today & felt very happy to know about this song. I think all of us can associate ourselves with this song in some way. Like your grand son, when my daughter was small and she could not understand Tamil very well (ippovum pala nerangalil appadithan) was mesmerized by this song and whenever she just heard a glimpse of it she will come running.

  Thanks for sharing.
  Also thanks for introduing me to the link of Tamil music.

  Regds

  1. வாருங்கள் ஷீலா,
   நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்தப் பாட்டுக்கு உருகாதவர் யார்?
   எப்படி இசைப்பா தளத்தில் தமிழில் எழுதி இருக்கிறீர்கள்? ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
   நீங்களும் உங்கள் அனுபவத்தையும் பாடலையும் சேர்த்து எழுதுங்கள்.
   பிரசுரமாகும்.

   நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s