Tamil bloggers · Women

வைர விழா!

75th yearஉங்களிடம் இரண்டு கேள்விகள்:

தொலைக்காட்சி தொடர்களினால் யாருக்கு  லாபம்?

ஏக்தா கபூருக்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஏக்தா கபூர் எடுக்கும் ஹிந்தி தொடர்களால் நம் தமிழ் தொலைகாட்சிகளுக்கு லாபம். அந்தத் தொடர்களுக்கு பழைய, புதிய திரைப் படங்களின் பெயர்களை இட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே!

இவர்களையெல்லாம் விடுங்கள். பழைய, வயதான நடிக நடிகையருக்கும் இந்தத் தொடர்களால் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?

பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.

தொலைக்காட்சியில் வரும் பழைய, வயதான நடிக நடிகையர் போலவே என்னைப் போன்ற வயசாளிகளுக்கு   பதிவுலகம் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது.

எங்களின் பொழுதுகள் வீணடிக்கப் படுவதில்லை. வளரும் தொழில் நுட்பத்தை நாங்களும் கற்று அதை எங்களுக்கு தகுந்த முறையில் பயன்படுத்துகிறோம். பொழுது போகவில்லையே என்று அலுத்துக் கொள்வதில்லை. யாரிடமாவது அரட்டை அடிக்கலாமா, வம்பு பேசலாமா என்று அலைவதில்லை. முக்கியமாக அது இல்லை, இது இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டு மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!

எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.

வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.

நாங்கள் எத்தனை உற்சாகமாக இருக்கிறோம் என்பதை நாளை (19.01.2013) தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாடிடும் திருமதி ருக்மிணி சேஷசாயியின் பதிவுகளைப் படித்தால் தெரியும்.

யார் வழிக்கும் போகாமல் இவர் தனது பதிவுகளை குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவதற்கென்றே வைத்துக் கொண்டு விட்டார். பெரியவர்களின் விளையாட்டுக்கு இவர் வருவதே இல்லை. சென்ற ஆகஸ்டில் நடந்த பதிவர் விழாவிலும், பிறகு பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு வந்த போதும் இவரை சந்தித்திருக்கிறேன்.

இவருடன் பேசிக்கொண்டு இருப்பதே மனதுக்கு நிறைவைத் தரும் விஷயம்.

சமீபத்தில் ‘ஆழி கடந்தான் வாழி’ என்று சுந்தரகாண்டத்தை குழந்தைகளுக்கு புரியும்படி எழுதி இருந்தார். ஹனுமத் ஜெயந்தியை ஒட்டி இந்தக் கதையை எழுதி இருப்பதாக சொன்னார்.

இவரது தாய்மொழி கன்னட. படித்தது தமிழ் முதுகலை பட்டப்படிப்பு! நான் வியப்புடன் இவரைப் பார்த்தபோது சொன்னார்: ‘எங்கள் பள்ளியில் மூன்று தமிழ் ஆசிரியைகள். ஒருவருக்கு தாய்மொழி தெலுங்கு. இன்னொருவருக்கு மலையாளம். எனக்கு கன்னட.’

பதிவுலகத்தில் மட்டுமில்லாமல், ஜெயா தொலைக்காட்சியிலும், சுட்டி விகடனிலும் கதைகள் சொல்லி சாதனை புரிந்துள்ளார் இவர்.

 

புதுவருட வாழ்த்திற்காக இவருக்கு நான் தொலைபேசிய போது தனது 75 வது பிறந்தநாளை தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட இருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.

வரும் வாரம் எங்கள் வீட்டில் ஒரு திருமணம் கேரளாவில். அதற்கு கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் போக இயலவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறோமே என்று கொஞ்சம் வருத்தம் தான்.

அடுத்த மாதம் இன்னொரு திருமணம் சென்னையில். அப்போது வந்து பார்ப்பதாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.

இந்தப் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் தவறாமல் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது  ஆரோக்கிய வாழ்விற்கு  இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு, அவரை  வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

 பாட்டி சொல்லும் கதைகள் 

 

 

 

இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:’

நான் ஆணையிட்டால்!

Advertisements

24 thoughts on “வைர விழா!

 1. புதுவருட வாழ்த்திற்காக இவருக்கு நான் தொலைபேசிய போது தனது 75 வது பிறந்தநாளை தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட இருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.//

  அருமையான பகிர்வுக்கு இனிய வாழ்த்துகள்.

  1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி! திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் தளத்திற்கும் சென்று வணங்கி விட்டு வாருங்கள், ப்ளீஸ்!

   1. திருமதி ருக்மிணி அவர்களின் பதிவில் உங்கள் இனிய வாழ்த்துக்களைக் கண்டேன்.
    நன்றி!

 2. பாராட்டுக்கள் ரஞ்சனி போன வாரம் நாம் சந்தித்த போது நீங்கள் இவரைப் பற்றி நாம் பேசியது நினைவிருக்கிறது நீங்கள் எழுதியதுபோல் நாம் இருந்த இடத்திலிருந்து உலகம் சுற்றும் வாலிபிகள்தான்

  1. ஆமாம் விஜயா! அவரது தளத்திற்கு போய் அவருக்கு நல் வாழ்த்துக் கூறினீர்களா? நானே இணைப்பு கொடுத்திருக்கேன் பாருங்கள் பாட்டி சொல்லும் கதைகள் என்று. அதை ‘க்ளிக்’ கினீர்களானால் அவரது தளம் திறக்கும்.

 3. வணக்கம்
  அம்மா

  ருக்மிணி சேஷசாயிஅம்மாவின் மேல் வைத்த பாசம் உங்களை விடவில்லை இந்தப் படைப்பின் பிரகாரம் மற்றவர் மேல் அன்புசெலுத்தும் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார் நல்ல மொழிநடையில் அழகாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் அம்மா
  ருக்மிணி அம்மாவும் வாழ்வில் நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனை நானும் பிராத்திக்கிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாருங்கள் ரூபன். இங்கும் பின்னூட்டம் போட்டு, திருமதி ருக்மிணி அவர்களின் வலைத்தளத்திலும் அவர்களை வாழ்த்தி எழுதியதற்கு மனமார்ந்த நன்றிகள் ரூபன்.

   உங்கள் மனம் மிகவும் அழகியது. கடவுள் உங்களுக்கு எல்லாச் செல்வங்களும் நிரம்பக் கொடுக்கட்டும்.

  1. // பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?

   பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.//

   சரியாகச் சொன்னிர்கள் மேலும் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும் , படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளவும் உதவுகின்றன.

   மிக்க நன்றி பதிவுக்கு

   தொடர வாழ்த்துகள்…

   1. அறியாதவற்றை அறியவும்,படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன. நல்ல கருத்து திரு சேக்கானா M நிஜாம்! நன்றி!

 4. நட்பின் ஆழம் உங்கள் பதிவில் தெறிகிரது. திருமதி ருக்மணி சேஷ ஸாயியின் திறமைகள் உங்கள் மூலம் தெறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி..அவருக்கு என் வாழ்த்துகள்.
  அவரின் தளத்திற்கும் போகிறேன். அன்புடன்

 5. மிகவும் நல்ல தகவல் உங்கள் அன்பு புரிகிறது. அங்கு சென்றேன்…வாழ்த்திட சாதாரண பதிவுகளாகவே உள்ளது. மீண்டும் முயற்சிக்கிறேன்.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

 6. ருக்மணியம்மாவை இன்று மாலை சந்தித்து, வாழ்த்தி ஆசிபெற்று வருகிறேன் – உங்கள் சார்பாகவும், உங்களுக்கும் சேர்த்தே! இணையத்தில் எழுதுவதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் அனுபவங்களைப் பகிரும் போது எங்களைப் போன்றவர்களுக்கு‌ செயல்படுவதற்கான ஊக்க மருந்தாகவல்லவோ அவை அமைகின்றன! தொடரட்டும்மா…!

 7. ரஞ்சனி,
  உங்கள் பதிவின் மூலம் ஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
  அவருடைய வலை தளத்தை தொடர ஆரம்பித்துவிட்டேன்.

  நீங்கள் சொல்வது போல் நமக்குப் புரிந்த வகையில் இணையத்தை யாருக்கும் தொல்லை கொடுக்காமல் உபயோகிக்கிறோம். நம்முடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.

  ஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  அன்புடன்,
  ராஜி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s