மகிழ்ச்சிக்குக் காரணங்கள்

ranjani narayanan

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

இன்றைய செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி:

உலக மக்களில் மிகவும் மகிழ்ச்சியாக  இருப்பவர்கள் பட்டியலில்  இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள்!

பணப் பற்றாக்குறை, சண்டைகள், முரண்பாடுகள், இயற்கையின் சீற்றம் இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தோனேஷியா, இந்தியா, மெக்ஸிகோ நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளார்கள்.

பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது. மிக முன்னேறிய நாடான அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருக்கும் மக்கள் அத்தனை சந்தோஷமாக இல்லையாம்.

மக்களின் மகிழ்ச்சியை  எது நிர்ணயிக்கிறது? நல்ல  சாப்பாடு ஒருவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கலாம்; கேர் ஆப் பிளாட்பாரம் என்றால் தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் மகிழலாம். இதனால் தெரிய வருவது யாதெனில், மகிழ்ச்சி என்பது ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பொறுத்தது அல்ல. ஒருவருக்கு மகிழ்ச்சியைக்  கொடுக்கும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மகிழ்வைக்  கொடுக்காமல் போகலாம்.

ஆனால் இந்த ஆய்வின்படி குடும்ப அமைப்பு – நிலையான, புரிதலுடன் கூடிய உறவுகள் – ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்ற ஒரு ஆச்சர்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது.

சந்தோஷத்திற்கான 10 மந்திரங்கள் இதோ:

1.மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம்

இதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது என்று நாம் எண்ணுவது; மற்றவர்களின் தனித்தன்மையை உணர மறுப்பது. இதனால் நம் அமைதி குலைகிறது; நமக்கு…

View original post 437 more words

16 thoughts on “மகிழ்ச்சிக்குக் காரணங்கள்

 1. பரவாயில்லை. நாம் இந்தியர்கள் ஸந்தோஷமாக இருக்கிறோம் என்பதைக்கேட்க மிக்க ஸந்தோஷமாக இருக்கிரது. அப்பா இப்போவாவது நம்மை எல்லோரும் வழி கேட்பார்கள்.. ஆனந்தமென் சொல்வனே!!!!!!!!!!!

  1. மகிழ்ச்சி என்றவுடன் எப்படி பாடல் பொங்கி வருகிறது பாருங்கள்!
   வந்ததற்கும் ஆனந்தமாக ஒரு பாடல் பாடியதற்கும் நன்றி!

 2. அட இதுகூட நல்ல இருக்கே!! நாம இதுலயாவது முதல் மூன்று இடங்களில் வந்தது இன்னும் ரொம்ப சந்தோசம்!!

  1. மகிழ்ச்சி என்பது நன்றாகத்தான் இருக்கும், சமீரா! மகிழ்ச்சியை பற்றிப் படித்து சந்தோஷப் பட்டது இன்னும் சந்தோஷம்!

 3. மகிழ்ச்சியாய் இருக்கிறது இந்தியனாய் இருப்பதற்கு

  1. போதுமென்ற மனம் வேண்டுமே! அதுதான் மிகவும் அரிது, இல்லையா?
   நன்றி வருகைக்கும், கருத்துரைக்கும்!

 4. புன்னகை முகமாக இருந்தால். சிரிததுப் பேசினால் மனக் கவலைகளும் (எத்தனை பெரிதாக இருநதாலும) கஷ்டங்களும் பறந்து விடும் என்று நினைப்பவன் நான. மகிழ்ச்சியில் டாப் 3 இடங்களில் நாம் வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா.

 5. உங்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது கணேஷ்!
  உங்களின் மகிழ்ச்சி பிறரையும் தொற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி என்பது உங்களுடன் பழகியவர்களுக்குத் தெரியும்!
  உங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  நன்றி!

 6. பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது

  ஆனந்தப்பகிர்வுக்கு வாழ்த்துகள்..

 7. thunbhathaiyum inbhamagave parkum mano balam irupathanalthan ippadi 2nd pjace kidaichu irukunnu ninaykyren.theekul viralai vaithaal ninnai theendum inbham thondruthada………thunbham inge inbham agirathe?

  1. வாருங்கள் ராஜூ பாரதி!
   எத்தனை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்!
   மனதுக்கு நெருக்கமான பாடலை சொல்லி இருக்கிறீர்கள்.

   உங்கள் பின்னூட்டம் நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருப்பது என்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணம் இப்போது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s