எனர்ஜியின் ரகசியம்!

thank u

பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று கிரிக்கெட் வீரர்கள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம்.

பதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.

பூஸ்ட் குடிப்பதை விட பின்னூட்டம் தரும் ஊட்டச்சத்து அதிகம்.

இன்று வேர்ட்ப்ரஸ்-ஸிலிருந்து 2012 Review Report என்று அனுப்பியிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனை வருகையாளர்கள், எத்தனை வாசிப்புகள், வருகையாளர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள், யார் அதிகப் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்! படித்துப் பாருங்கள்.

என்னுடைய பதிவுகளுக்கு அதிகப் பின்னூட்டம் போட்டவர்கள் லிஸ்டில் திரு வைகோ முதலிடம் வகிக்கிறார்.

இவரது பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களை சற்று ஓரம் கட்டி விடும் அபாயமும் இருக்கிறது. நமது எழுத்துக்களை படிக்க வந்தவர்கள் இவரது பின்னூட்டங்களைப் படித்து சிலாகித்துவிட்டு அதற்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள்! (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும்!) இது எப்படி இருக்கு?

தனக்கு வந்த விருதுகளை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர் முதலிடம்!

மிகச் சமீபத்தில் தான் எழுத வந்தேன் என்பார். ஆனால் நகைச்சுவை கலந்து இவர் எழுதுவது படிக்கப் படிக்க அலுக்காத ஒரு விஷயம்.

இவர் சமீபத்தில் எழுதிய அடை பற்றிய பதிவு படியுங்கள்.

உங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி திரு வைகோ ஸார்!

இவருக்கு அடுத்தபடியாக திரு திண்டுக்கல் தனபாலன். நாம் பதிவு எழுதி வெளியிட்டவுடன் இவரது பின்னூட்டம் பறந்து வந்து விடும். கொஞ்ச நாட்களாக இவர் பதிவுலகில் வலம் வராமல் இருக்கிறார். புது வருடத்தில் மீண்டும் பதிவுலகத்திற்கு வந்து தனது எழுத்துக்களாலும், பின்னூட்டங்களினாலும் அனைவரையும் சந்தோஷப் படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி திரு தனபாலன்!

மூன்றாவதாக திருமதி காமாட்சி. இவரது இந்த வருட அறிக்கை அசத்துகிறது. ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்!

நான்காவது திரு வெங்கட் நாகராஜ். பயணக் கட்டுரைகளும், வெள்ளிக்கிழமைகளின் ப்ரூட் சாலட்டும் பரிமாறி எல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். இவரது மனைவி திருமதி ஆதியும், மகள் ரோஷ்னியும் கூட பதிவர்கள். தமிழ் மணம் ரேங்க்-கில் எனது ஒரே சவால் இவர்தான். (ஹா…ஹா…)

நன்றி திரு வெங்கட்!

ஐந்தாவதாக பதிவர் சந்திப்பில் நான் கண்ட தங்கப் பெண் சமீரா! எனது மிக இளைய வயதுத் தோழி. இத்தனை வருடங்கள் பதிவர்களின் எழுத்துக்களை படித்து பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்த சமீரா இந்த வருடம் சொந்த வலைபூ ஆரம்பித்திருக்கிறாள். புது வருடத்தில் மேலும் மேலும் எழுத்துலகில் வளர்ந்து தன் முத்திரையைப் பதிக்க வாழ்த்துக்கள்.

இவர்களைத் தவிர இன்னும் என் உள்ளம் கவர்ந்த இருவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஓரளவுக்கு ஊகித்திருப்பீர்கள்.

முதலில் திரு தமிழ்: கதை பிறந்த கதை என்ற பதிவில் என் வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக் கூறி இருக்கிறார். வரும் வருடங்களில் இன்னும் இன்னும் சிறப்பாக எழுதி தனக்கென்று பதிவுலகத்தில் ஒரு இடம் பிடிக்க ஆசிகள். நன்றி தமிழ்!

இரண்டாவதாக திரு ஓஜஸ்: மாலைப்பொழுதினிலே என்ற ஒரு அழகான பாடலைப் போட்டு எனது வலைப்பூவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு பரிசளித்த திரு ஓஜஸ்-ஸுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி.

இவரது யாம்’ என்ற இன்றைய பதிவிலும் என்னை குறிப்பிட்டு இருக்கிறார்.

சமீபத்தில் தோழிகளான அனுஸ்ரீனி, ராஜலக்ஷ்மி பரமசிவம், மஹா என்று நான் அழைக்கும் மகாலட்சுமி விஜயன் (முகம் தெரியாத முதல் தோழி என்று அழைத்து மனத்தைக் கவர்ந்து விட்டார் இவர்!) திருமதி சித்ரா சுந்தர், திருமதி ஷீலா, திரு தமிழ் இளங்கோ, திருமதி இராஜராஜேஸ்வரி இன்னும் இன்னும் பலருக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றிகள்!

வரும் வருடம் எல்லோருக்கும் எல்லாம் இனிதாக நடக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

 

snake year

 

40 thoughts on “எனர்ஜியின் ரகசியம்!

 1. //பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று கிரிக்கெட் வீரர்கள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம்.//

  ஆமாம். பார்த்திருக்கிறோம்!

  //பதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.//

  நீங்க எது சொன்னாலும் அது மிகச்சரியாகவே இருக்கும். ;)))))

 2. //பூஸ்ட் குடிப்பதை விட பின்னூட்டம் தரும் ஊட்டச்சத்து அதிகம்.//

  தங்களின் இந்தக்கூற்றினை நாங்கள் எல்லோரும் நம்பியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளோம்.

  அடிக்கடி இதனைக் குடித்துப்பார்த்துள்ள உங்களைப்பார்த்தாலே நல்ல ஊட்டமாகவே உள்ளீர்கள்.

  [படத்தில் … தங்கள் புகைப்படத்தில் .. பார்த்துச்சொல்கிறேன் … கோச்சுக்காதீங்கோ.]

  ஆனால் நீங்கள் இன்னும் ஊட்டமாக வேண்டும். அதற்கு இன்னும் உங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும். அதனால் இதோ எழுதத் தொடங்கி விட்டேன்.

  இன்றைக்கும் என் இரவுத்தூக்கம் போச்சு. அதனால் என்ன?

  எப்படியாவது உங்களை மேலும் ஊட்டமாக்க வேண்டும் என்பதே என் சபதம்.

  1. உங்கள் ஊகம் தப்பு. நினைவு தெரிந்த நாளாக காப்பி தான்! காப்பியைக் குடித்துவிட்டு இப்படியா என்று கேட்டால், என் அம்மாவுக்கு அந்தப் பெருமை போய் சேரும்!

   என்னை மேலும்(ஐயையோ!) ஊட்டமாகக வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணம் வாழ்க!

 3. //இன்று வேர்ட்ப்ரஸ்-ஸிலிருந்து 2012 Review Report என்று அனுப்பியிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனை வருகையாளர்கள், எத்தனை வாசிப்புகள், வருகையாளர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள், யார் அதிகப் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்! படித்துப் பாருங்கள்.//

  ஆஹா, படித்து முடித்து விட்டேன். சந்தோஷம். நான் உங்களை வலைச்சர ஆசிரியராக ஆக்கியபோதே சொன்னேன். நீங்க எங்கேயே போகப்போறீங்கன்னு.

  இன்று W O R D P R E S S R E P O R T மட்டும் தான் வந்துள்ளது. நாளை பாருங்கோ W O R L D L E V E L P R E S S R E P O R T E R S களெல்லாம் உங்களைப்பேட்டி காண வருவார்கள்.

  உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் உங்களை ஓர் இன்பச் சுற்றுலாவுக்குச் செல்ல இலவச டிக்கெட்கள் கொடுத்து அனுப்புவார்கள். தங்குமிடம் சாப்பாடு போன்ற சகல வசதிகளும் செய்து தருவார்கள்.

  அந்தந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் முதலிய முக்யஸ்தர்கள் பலரும் ஏர்போர்ட்டுக்கே வந்து மாலையிட்டு உங்களை வரவேற்று, அரசாங்க விருந்தினராக்கிக் கொண்டாடத்தான் போகிறார்கள்.

  >>>>>>>>

 4. //என்னுடைய பதிவுகளுக்கு அதிகப் பின்னூட்டம் போட்டவர்கள் லிஸ்டில் திரு வைகோ முதலிடம் வகிக்கிறார்.//

  அது யார் அந்த திரு.வைகோ?

  ஓஹோ, என்னைத்தான் அப்படி அழைத்துள்ளீர்களா?
  WORDPRESS REPORT இல் அழகாக என் பெயரை முழுவதுமாக வை. கோபாலகிருஷ்ணன் என்று சொல்லியிருக்கிறார்களே!

  நீங்களும் அது போலச் சொல்லக்கூடாதோ!

  அது மிகப்பெரிய ரயில் வண்டி போல உள்ளது என்று நீங்கள் கருதினால் செல்லமாக கோபு என்றோ VGK என்றோ சொல்லக்கூடாதோ!!

  சரி அதை விடுங்கோ ….. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தான் என்னை அழைக்கிறார்கள். மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

  >>>>>>>

  1. வைகோ என்பது பிடிக்கவில்லையா?
   சரி இனிமேல் கோபு ஸார் என்று அழைக்கிறேன்.

 5. //இவரது பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களை சற்று ஓரம் கட்டி விடும் அபாயமும் இருக்கிறது.//

  அடடா, இப்படியொரு குறை வேறா, உங்களுக்கு

  // நமது எழுத்துக்களை படிக்க வந்தவர்கள் இவரது பின்னூட்டங்களைப் படித்து சிலாகித்துவிட்டு அதற்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள்! (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும்!) இது எப்படி இருக்கு?//

  அச்சச்சோஓஓஓஓஓஓ – அப்படியா சேதி …..

  சரி நான் இனி என் பின்னூட்டங்களை அதிகமாக எழுதாமல் குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

  ஏதோ புதுவருஷம் பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு ஏதோ புதுப்பதிவு வெளியிட்டிருக்காங்களே, ஆசையா நமக்கு மெயில் கொடுத்து அழைக்கிறாங்களே, சரி என்னவென்றுப் போய்ப் பார்ப்போம்ன்னு வந்தேன்.

  எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் தான். 😉

  >>>>>>>

  1. இதை ஒரு காம்ப்ளிமென்ட் ஆகத்தான் சொன்னேன். தவறாக அர்த்தம் வந்திருந்தால் மன்னிக்கவும்!

 6. //தனக்கு வந்த விருதுகளை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர் முதலிடம்!//

  ஆஹா, இது என்ன பெரிய சமாச்சாரம். காசா பணமா செலவு? யார் யாரோ அன்புடன் எனக்குக் கொடுத்தார்கள். நான் அதை கோயில் பிரஸாதம் போல எல்லோருக்கும் பகிர்ந்து அளித்தேன்.

  அன்பினைப் பகிரப் பகிர அது குறையாது. அக்ஷய பாத்திரமாக பெருகும். கல்வியும் அன்பும் அள்ள அள்ளக் குறையாது. என்றும் மனதில் நிற்கும்.

  அதுபோலவே நான் பகிர்ந்தளித்த விருதுகளும். பலரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது என்பதே உண்மை.

  >>>>>>>

  1. பல பதிவர்களைப் போலவே நானும் உங்களின் விருதுகளினால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தேன் என்பது நிஜத்திலும் நிஜம்.

 7. //மிகச் சமீபத்தில் தான் எழுத வந்தேன் என்பார்.//

  அதுதான் உண்மை மேடம். நான் என் முதல் பதிவு வெளியிட்ட நாள் 02.01.2011. வலையுலகில் எனக்கு இன்னும் இரண்டு வயதே பூர்த்தியாகவில்லை. [இன்று இரவுடன் பூர்த்தியாகிறது]
  வலையுலகில் நான் இன்னும் ஓர் குழந்தை மட்டுமே.

  எனக்கு ஒன்றரை வயது ஆகும் போது நான் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் தடுக்கிவிட்டு நான் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டேன். அதனால் அதன் பிறகு என் வேகம் குறைந்து விட்டது. ஓடிவதில் ஆசையும் குறைந்து போனது.

  //ஆனால் நகைச்சுவை கலந்து இவர் எழுதுவது படிக்கப் படிக்க அலுக்காத ஒரு விஷயம். இவர் சமீபத்தில் எழுதிய அடை பற்றிய பதிவு படியுங்கள்.
  இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html //

  என் பதிவுக்கு இங்கு விளம்பரம் கொடுத்துள்ளதற்கு மிக்க நன்றி மேடம்.
  ஏற்கனவே அங்கு இதுவரை 170 பின்னூடங்களாக எண்ணிக்கை மாறி, அடி எது நுனி எதுன்னு தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து விட்டது,

  அந்தப்பதிவினில். அக்ஷயபாத்திரமாக, அடை வினியோகம், வருவோர் போவோருக்கெல்லாம் செய்யப்பட்டு வருகிறது.

  வழக்கமான வாடிக்கையாளர் சிலர் வராதது தான் குறை. அவர்களும் வந்து விட்டால் அந்த எண்ணிக்கை சுலபமாக 200 ஐத் தொட்டுவிடும்..

  >>>>>>

  1. கட்டாயம் வந்து விடுவார்கள். கவலை வேண்டாம்! உங்கள் பெயர் கின்னஸ் புக்கில் இடம் பெற்று விடும்!

 8. //உங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி திரு வைகோ ஸார்!//

  சரிங்க ரஞ்ஜு மேடம். அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன்.
  நல்லதொரு சந்தோஷமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ஒரு ஆலோசனை:
  =================
  தங்கள் பதிவினில் மேலே கூண்டுக்கிளிகள் உள்ள இடத்திலும், கீழே பின்னூட்டங்கள் உள்ள இடத்திலும் தாங்கள் கொடுத்துள்ள Background Colour நல்லாவே இல்லை.

  அதாவது பின்னூட்டங்களை பளிச்சின்னு படிக்க முடியாமல் அழுமூஞ்சி போல உள்ளது.

  லைட் மஞ்சள் கலரிலோ அல்லது வெள்ளையாகவோ இருந்து விட்டால் சுலபமாக பளிச்சின்னு தெரியுமே. உடனே மாற்றுங்கள், மேடம். ப்ளீஸ்.

  பிரியமுள்ள,
  VGK

  1. ரொம்பவும் லைட் கலரில் போட்டால் கிளிகள் தெரியாது. வேறு டெம்ப்ளேட் மாற்றுகிறேன்.

   நன்றி கோபு ஸார்!

 9. ரஞ்ஜனி,

  உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 10. நன்றி அம்மா!! என்னைப்பற்றி குறிப்பிட்டு இன்ப கடலில் என்னை ஆழ்த்திவிட்டீர்கள்….
  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… என் பதிவுகள் சிறக்க என்றும் உங்கள் ஆசிகளை நாடுகிறேன்…

 11. //என்னுடைய பதிவுகளுக்கு அதிகப் பின்னூட்டம் போட்டவர்கள் லிஸ்டில் திரு வைகோ முதலிடம் வகிக்கிறார்.//

  மயில்வாகனன் முருகன் உலகை வலம் வந்தது போன்று திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் பதிவுலகில் வலம் வந்து, எல்லோருடைய பதிவிலும் வந்து கருத்துரை தந்துவிடுவார்.

  எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

 12. ரஞ்சனி ,

  நான் இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்த்தேன்.
  மிக சமீபத்தில் தான் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி உள்ளோம் .
  ஆனாலும் என் பெயரைப் போட்டு என்னை அடையாளம் காட்டியுள்ளீர்கள் .
  மிக்க நன்றி .
  உங்களுடைய அடுத்தப் பதிவில் ஏற்கனவே பின்னூட்டம் அளித்துவிட்டேன்.

  நல்ல அருமையான பதிவு.

  அன்புடன்

  ராஜி

  .
  Sent from http://bit.ly/itamil

  1. உங்களுக்கும் எனர்ஜி வரட்டும் என்றுதான்!
   நன்றி ராஜி, புது வருடத்தில் நம் நட்பு மேலும் சிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

 13. எத்தனையோ பேர்களுக்கு மத்தியில் எங்கள் இருவர் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டமைக்கு நன்றி!!!

 14. என்னுடைய வலைப்பூவின் முதலாம் ஆண்டு நிறைவிற்கு நீங்கள் இருவரும் உங்கள் பதிவில் என்னைக் குறிப்பிட்டு, எனக்காக நான் விரும்பிக் கேட்ட பாடலையும் போட்டு – அந்த நாளை மறக்க முடியாததாகச் செய்து விட்டீர்களே!
  ஒரு சின்ன நன்றி நவிலல்! அவ்வளவே.

 15. வாழ்த்துக்கள் அம்மா ,பின்னூட்டம் தான் வலை பதிவர்களின் ஊட்டம் ! Anual ரிப்போர்ட் அருமை .தொழிற்களம் விழாவிற்கு தாங்கள் வராததில் சிறு வருத்தம்

  1. எனக்கும் வருத்தம் தான் விஜயன்.
   புது வருட வாழ்த்துக்கள் விஜயன்.

 16. ”..பதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.”
  உண்மை சகோதரி. ஆனால் நானொரு தூர்அதிஷ்டசாலி . நிறையப் பேருக்கு கருத்துப் போடுவேன் . ஆனால் அவர்கள் வரமாட்டார்கள் .இது எனக்குப் புரியவில்லை.
  அடுத்து ஓரு உண்மையைக் கூறியுள்ளீர்கள் அதை அவர் தான் யோசித்து நடக்க வேண்டும்.அது இது தான்:-
  ”….இவரது பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களை சற்று ஓரம் கட்டி விடும் அபாயமும் இருக்கிறது. நமது எழுத்துக்களை படிக்க வந்தவர்கள் இவரது பின்னூட்டங்களைப் படித்து சிலாகித்துவிட்டு அதற்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள்! (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும்!) …””
  இனிய நல்வாழ்த்து மேலும் முன்னேற.
  வேதா. இலங்காதிலகம்.

  1. உங்கள் கவிதைகளுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறதே சகோதரி! வருத்தம் வேண்டாம்.
   இந்தப் புது வருடம் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தரட்டும்.
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 17. சமீபத்து தோழிகளான என்ற லிஸ்டில் என் பெயர் இருப்பது அல்வா சாப்பிட்டதுபோல் இருக்கு ரஞ்சனி …….
  என்பெயரை பார்க்கிற வரை கண்கள் அலைபாய்ந்தது உண்மை…
  நம் பெயரும் இடம்பெறுமா……. என்று ஒரு நப்பாசை… அல்ப ஆசை ……..

  நன்றி ரஞ்சனி……

 18. “பதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.
  பூஸ்ட் குடிப்பதை விட பின்னூட்டம் தரும் ஊட்டச்சத்து அதிகம்.”

  அழகான உண்மை.

 19. வாருங்கள் பழனிவேல். உங்களைப் போன்றோர் என் பதிவைப் படித்து ரசிப்பது மிகப் பெரும் ஊட்டசத்து அல்லவா?
  நன்றி!

 20. நல்ல பகிர்வு. நான் நிறைய பேருக்கு பின்னூட்டம் அளித்தாலும் எனது பதிவுக்கும் அதிகமாக நிறையப்பேர் வருவதில்லை

  1. கவலைப் படாதீர்கள் கவியாழி! விடா முயற்சி பலன் தரும். அவர்கள் போடுகிறார்களோ இல்லையோ நான் போய் படித்துவிட்டு பின்னூட்டம் போடா மறப்பதே இல்லை.

   வரும் வருடத்தில் உங்களுக்கு நிறைய வாசகர்கள், பின்னூட்டம் கிடைக்க வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s