இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! பாகம் ஒன்று

first anniversary

எனது வலைத்தளம் இன்று முதலாண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது.

இந்த ஓராண்டில் நான் படித்து மகிழ்ந்த தளங்களையும், அதனால் ஏற்பட்ட தோழமைகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும், பாராட்டுக்களையும்,  பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புப் பதிவு.

(உஸ்……அப்பாடா!)

***********

ஒரு வாரத்திற்கு முன்னால் வேர்ட்ப்ரஸ் இலிருந்து ஒரு வாழ்த்து செய்தி: போன வருடம் இந்த நாள் தான் நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டீர்கள், வாழ்த்துக்கள் என்று! முதல் வாழ்த்து!

ஆனால் முதல் பதிவு போட்டது 24.12.2012

அதனால் இந்த நாளையே என் வலைதளத்தின் முதல் பிறந்தநாள் என்று கொண்டாடலாம்!

வலைப்பூ ஆரம்பித்ததன் நோக்கம் எனது படைப்புக்களை ஒரே இடத்தில் தொகுப்பதுதான்  என்றாலும், வேறு வேறு படைப்புக்களைப் படிக்க ஆரம்பித்த பின் என் வலைப்பூவிற்காகவே எழுத ஆரம்பித்தேன்.

சுய தம்பட்டம்:

வலைச்சரத்தில் ஆசிரியர் பதவி – நினைத்து நினைத்து மகிழும் ஒரு நிகழ்வு!

மூன்று முறை வலைச்சரத்தில் தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தப் பட்டேன்.

தமிழ் மணம் 205 ரேங்க். (சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றாலும் ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் என்றே தோன்றுகிறது.) தமிழ்மணம் 2 வது 5 வது ரேங்க் பெற்றவர்களுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பூஜ்யம் – அவ்வளவே வித்தியாசம்!

மேலும் இரண்டு வலைத்தளங்கள் ஆரம்பித்தது.

http://pullikkolam.wordpress.com

http://thiruvarangaththilirunthu.blogspot.in

புதிதாக இவற்றில் எழுதுவது இல்லை. முதல் தளத்தில் இருப்பதையே இங்கும் போடுகிறேன். சில புதிய பதிவுகளும் இருக்கின்றன.

எதிர்காலம்:

எனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன.

ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பிறவிப் பயன் இது.

***********

என்னிடம் ஒரு குணம். நல்லது என்று மனதிற்கு படுபவற்றை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். இது நான் படிக்கும்  புத்தகங்கள்  என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்காது. சிலசில உணவகங்களும்,ஊர்களும், உறவுகளும்  இந்தப் பட்டியலில் அடங்கும்!

இவற்றைத் தவிர

எனது ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்;

யோகா பயிற்சியாளர் திருமதி ரேகா ஸ்வரூப்;

துணைவரின் மருத்துவர் டாக்டர் சிவராமையா;

எங்கள் ஜோசியர் திரு. உமேஷ் ஜோயிஸ், திரு அருளாளன்

என்னிடம் தங்களதுஆரோக்கியத்தை பற்றி பேசுபவர்கள் எல்லோருக்கும் இவர்களை பரிந்துரைப்பேன். விளைவு: நான் பார்த்தே இராத பலர் என் பெயரைச் சொல்லிக் கொண்டு  இவர்களை நாடுவார்கள்!

சிலர் சில சமயங்களில் இதற்காக கோபப் பட்டதும் உண்டு! ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல?’ என்று!

சமீபத்திய உதாரணம்: வலைச்சரத்தில் பலரை அடையாளம் காட்டியிருந்தும், சிலர் மட்டுமே நன்றி பாராட்டி இருந்தார்கள்.

‘இவள் யார் நம்மை அடையாளம் காட்ட?’ என்று நினைத்திருப்பார்களோ, என்னவோ?

அப்போது எனக்குள் நான் நல்லவளா கெட்டவளா என்ற கேள்வி எழுந்தது.

ஆனாலும் இந்த குணம்  மாறவில்லை. இப்போது பதிவுலகத்திலும் எனக்குப் பிடித்த தளங்களை தொடருவதுடன், பின்னூட்டமிட்டு, என் வலைபதிவில் இணைப்பு கொடுத்து…. அவர்களது பதிவை ரீ-ப்ளாக் செய்து…. எனது சமூகம் என்று அவர்களை அடையாளம் காட்டி…

தொட்டில் பழக்கம்…..மாறாது இல்லையா?

எனது வலைதளத்தின் மூலம் பலரின் நட்பு கி டைத்திருக்கிறது.

வலைப்பதிவுக்கு அப்பால் என்னுடன் நட்பாக இருக்கும் ஒருவர் திருமதி காமாட்சி. 

அவ்வப்போது தொலைபேசவும் செய்கிறோம். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எங்கள் நட்பு இதேபோல வரும் வருடங்களிலும் தொடர வேண்டும்!

ஒரு முறை நான் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் போது இவரும் அறிமுகம் ஆகியிருந்தார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்கிறாய் என்று நெகிழ்ந்து போனார் இவர்.

எனக்கு எங்கு போனாலும் ஒரு ராசி. என்னைவிட வயது குறைந்தவர்கள் என்னுடன் மிக எளிதில் நட்பு கொள்ளுவது. பதிவுலகத்திலும் இது தொடர்வது அதிசயமே!

எனக்குப் பிடித்த இரண்டு இளைய தலைமுறை:

ஆடி பதினெட்டாம் நாள். காலையில் கலந்த சாதங்கள் செய்துவிட்டு கணணி முன் உட்கார்ந்து பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் என்னும் பெயரில் எழுதும் திரு தமிழ் ‘ஆடித் திருநாள் என்னும் பதிவு எழுதியிருந்தார். படித்து விட்டு

‘பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு! காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்!

கல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.

இந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல!’

என்று ஒரு பின்னூட்டம் போட்டேன்.

அடுத்த நாள் ஓஜஸ் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல்: எனது நண்பன் தமிழ் அவர்களின் பதிவைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என்னுடைய நாற்சந்தி   வலைத்தளத்தில் வந்தியத்தேவன்  பற்றிய பதிவைப் படித்து கருத்து இருந்தால் சொல்லவும் என்று.

ரொம்பவும் நீளமாகப் போய்விட்டபடியால் அடுத்த பதிவில் தொடருகிறேன்.

7 thoughts on “இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! பாகம் ஒன்று

   1. அன்புள்ள ரஞ்சனி உங்களின் வலைத்தளத்தின் முதல் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி வாழ்க வளர்க

 1. எங்கு போனாலும்,நானும், இப்பதிவில்கூட என்னைக் குறிப்பிட்டிருக்கிறாய். மிக்க ஸந்தோஷம். ரஞ்ஜனி மாமியோடு பேசலியா என்று ஆபீஸிலிருந்து வரும்போதே என் பிள்ளை, கேட்காமலிருப்பதில்லை. ஒரு வருஷ குழந்தைக்கு அனுபவங்கள் ஏராளம். இன்னும் தொடர்கிறது. தொடர்ந்து அனுபவங்கள் கிட்டட்டும். வைணவ கிரந்தங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு, மகத்தான காரியம். தகுதி வளர்கின்றது. வளர்ச்சிகள் நல்ல காரியங்கள். மிக்க ஸந்தோஷமும்,பாராட்டுகளும் உனக்கு.எந்த உன் வலைப்பூவில் கமென்ட் எழுதினோம், என்னவென்று யோசனை வந்துவிடுகிறது?இன்றைய வலைச்சரத்தில் திருவரங்கத்திலிருந்து பாராட்டு.நேற்று சொல்லுகிறேனைப் பற்றியும்
  அறிமுகம். நானும் பார்த்தேன்,உனக்குத் தெரியும். இருந்தும் எழுதுகிறேன். அன்புடன்

 2. வாருங்கள் காமாட்சி அம்மா!
  நான் உங்களை அம்மா என்று கூப்பிடுவதை பார்த்து திரு சிம்மன் நானும் நீங்களும் அம்மா மகள் என்றே நினைத்துக் கொண்டு எழுதியது நினைவுக்கு வருகிறது. எத்தனை ஜென்மத்து வாசனையோ?

  பதிவுலகில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் உங்கள் நட்பு. இந்த வார வலைச்சரத்தில் உங்கள் அறிமுகத்தைப் பார்த்து என் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு வந்தேன்.

  உங்களது மனமார்ந்த அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி!

 3. ரஞ்ஜனி,

  ஓராண்டு நிறைவுக்கும்,இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கும் வாழ்த்துக்கள்.

  “எனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன;
  ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.எனது பிறவிப் பயன் இது”_______உங்கள் விருப்பம் நிறைவேறுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே.

  “தொட்டில் பழக்கம்…..மாறாது இல்லையா?”______இப்படி இருந்தால்தானே ரஞ்ஜனி!ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்?நாம் நாமாக இருப்போமே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s