இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! (2)

first anniversary 2

இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம் – தொடர்ச்சி

நானும் படித்து பின்னூட்டமிட்டேன். இந்த இரு இளைஞர்களின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எங்களுக்குப் பாலமாக கல்கி அவர்கள் இருந்தார் என்பது மிகப் பெரிய விஷயம்! இருவரையும் தொடர ஆரம்பித்தேன்.

இந்த இருவரில் எனக்கு முதலில் திரு தமிழ் பற்றி சிறிய பயம் இருந்தது; ரொம்பவும் கண்டிப்பான தமிழ் ஆசிரியரோ என்று! இப்போது இவரும் நானும் நல்ல நண்பர்கள்!

ஆனால் திரு ஓஜஸ் முதலிலிருந்தே மிகவும் நட்புடன் இருந்தார்.

நமக்குத்தான் கொஞ்சம் நட்பானவுடன் நெக்குருகி அடுத்த நாளே காலை சிற்றுண்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் குணமாயிற்றே.

அவரிடம் ஒரு முறை மின்னஞ்சலில் கேட்டேன் : ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று.

வந்ததே ஒரு பதில்! ‘உங்களைப் போன்ற நல்லவர்களின் மனதில்!’

ஒரு வினாடி திகைத்தாலும், மறு வினாடி புரியாத பாடம் புரிந்தது:

‘உங்கள் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான். உங்கள் எல்லையில் நீங்கள் இருங்கள். என் எல்லையில் நான்!’

இளைஞரான இவரிடமிருந்து நான் கற்ற பாடம் மறக்க முடியாத ஒன்று.

‘காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்’ இல்லையா?

***********

தமிழ் பதிவுலகில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பிரபல எழுத்தாளர்களும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.

பலபல திரட்டிகள். உலகம் முழுவதும் நம் எழுத்தைப் படிக்கிறார்கள். நமது பொறுப்புகளும் அதிகம்.

சென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.

நம் எழுத்துக்களின் பாதிப்பு உடனே பின்னூட்டங்கள் என்னும் வடிவில் நமக்கு வரும்.

எப்போதும் புகழ்ந்தே எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்ல எழுத்துக்களை உருவாக்காது. எதிர்மறையான கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்.

பிறரது எழுத்துக்களைப் படித்துவிட்டு – நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று மொக்கையாக பின்னூட்டம் போடாமல், நிஜமான உணர்வுகளை எழுத வேண்டும். சில பதிவர்களுக்கு இது பிடிப்பதில்லை. எதிர்மறையான கருத்துக்களை – அல்லது அவர்களது எழுத்துக்களை உண்மையாக விமரிசனம் செய்தால் பிடிப்பதில்லை. நம் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவார்கள்.

இந்தப் போக்கு நல்லதல்ல.

***********

பதிவுலகில் மறக்க முடியாத நிகழ்வு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா.

பல பதிவர்களை சந்தித்தேன். இத்தனை பேர்களா என்று ஆச்சரியப் பட்டேன். வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதுபவர்களில் நான் ஒருவள் மட்டுமே. நிறைய இளைஞர்கள், யுவதிகளைச் சந்தித்தேன்.

ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக பழகுவது மிகவும் வியப்பாக இருந்தது. அதே போல இங்கும் வேர்ட்ப்ரஸ்ஸில் தமிழில் எழுதுபவர்கள்  ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

தொடர்பதிவுகள் எழுதலாம். மற்றவர்களை நம் பதிவில் (விருந்தினர் பதிவுகள்) எழுத வைக்கலாம். நான்கு பேர்களாக அல்லது ஒரு குழுவாக  சேர்ந்து எழுதலாம்.

ஏற்கனவே திரு தமிழும், திரு ஓஜஸ்ஸும் சேர்ந்து இசைப்பா என்று ஒரு வலைத்தளம் துவங்கி இருக்கிறார்கள்.

ஒத்த கருத்தை உடையவர்கள் சேர்ந்து இதைப்போல செய்யலாம்.

எல்லாமே எல்லையைத் தாண்டாமல் தான்!

என் ப்ளாக் மூலம் என் பழைய தோழியை 33 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன். இதை விட வேறு என்ன வேண்டும்?

இதுவரை என் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து உங்கள் ஊக்கத்தை அளியுங்கள்.

பதிவர்கள் விழாவில் எடுத்த காணொளி

27 thoughts on “இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்! (2)

 1. மாமி,
  மனம் கனிந்த வாழ்த்துகள். மேலும் உங்கள் எழுத்துகளில் உள்ள நகைச்சுவை தொடரட்டும். அது தான் உங்கள் பலம். கல்கி என்னும் தமிழன் எனக்கு செய்த நன்மைகள் பல. அதில் நம் நட்பும் ஒன்று.

  பல நாட்களுக்கு முன் நான் அனுப்பிய முதல் மின்னஞ்சலையும், குறுவரிகளையும் நீங்கள் நினைவில் கொண்டதற்கு நன்றிகள். //‘உங்கள் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான்’// நானே இதை பற்றி சிந்தித்ததில்லை. ஆனால் இணையத்தில், யார் இந்த கேள்வி கேட்டாலும், இது தான் பதில் 😉 நாற்சந்தியின் நன்றிகள் பல !!!

  1. என் பலம் நகைச்சுவைதான் ஓஜஸ். நான் நகைச்சுவையாகப் போடும் பதிவுகளுக்குத்தான் நிறைய பின்னூட்டம் வருகிறது.

   உங்கள் நிலையில் நீங்கள் மாறாமல் இருப்பது பாராட்டுக்குரியது.

   நன்றி!

 2. முதலில் இரண்டாம் ஆண்டு துவக்கத்துக்கும், ஆண்டு முழுதும் நன்கு எழுதிக் குவிக்கவும் வாழ்த்துகள். 2005- நவம்பரில் தான் நானும் வலைத்தளம் ஆரம்பித்தேன். ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் 2006 ஏப்ரல் வரை அதிகமாய் எழுதவில்லை. அதுக்கப்புறமாய்த் தான் மெல்ல மெல்ல ஆரம்பம். :)))))

  //எப்போதும் புகழ்ந்தே எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்ல எழுத்துக்களை உருவாக்காது. எதிர்மறையான கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்.

  பிறரது எழுத்துக்களைப் படித்துவிட்டு – நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று மொக்கையாக பின்னூட்டம் போடாமல், நிஜமான உணர்வுகளை எழுத வேண்டும். சில பதிவர்களுக்கு இது பிடிப்பதில்லை. எதிர்மறையான கருத்துக்களை – அல்லது அவர்களது எழுத்துக்களை உண்மையாக விமரிசனம் செய்தால் பிடிப்பதில்லை. நம் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவார்கள்.

  இந்தப் போக்கு நல்லதல்ல//

  அருமையான கருத்து. ஆனால் இப்படிப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் வரவேற்கப் படுவதில்லை. இதன் மூலம் தோழிகளை இழந்திருக்கிறேன். மறைமுகமாய் நம்மைக் கிண்டல் செய்து எழுதுவார்கள். இன்னமும் அனுபவம் உண்டு. :)))))))))

  ஆனால் ஒரு விஷயம், முதலில் பாராட்டி விட்டுப் பின்னர் குறைகளைச் சொல்லலாம். அது என்னமோ பின்னூட்டம் போடுகையில் தெரிவதில்லை. முதலில் குறைதான் கண்ணெதிரே!

  //வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதுபவர்களில் நான் ஒருவள் மட்டுமே. //

  வேர்ட் ப்ரஸில் என் இளைய தோழி ப்ரியா என்பவரும் எழுதுகிறார். சமீப காலமாக அவர் பிசியாக இருப்பதால் இணையத்துக்கே அதிகம் வருவதில்லை. இன்னும் சிலரும் எழுதுகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த விழா குறித்துத் தெரியவில்லையோ என்னமோ!

  1. நிஜத்தை யாரும் விரும்புவதில்லை கீதா. எனக்கும் ப்ரியா என்று ஒருவர் வேர்ட்ப்ரஸ்-இல் எழுதுபவரைத் தெரியும். நீங்கள் குறிப்பிடுபவர் இவரா என்று தெரியவில்லை.
   எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நானே இந்த விழா குறித்து அவர்களது பதிவில்
   தெரிவித்து இருந்தேன்.

   தொடர்ந்து வந்து கருத்துரை கொடுப்பதற்கு நன்றிகள் கீதா!

 3. ரஞ்சனி,

  முதலில் உங்கள் வலைதளத்திற்கு என்னுடைய மன்மார்ந்த வாழ்த்துக்கள்!!!

  //சென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.//

  உண்மையே.ஒவ்வொரு வரி எழுதும் போதும் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

  பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  நான் ஒரு புதிய பதிவர். உங்களைப் போன்ற பதிவர்களின் பதிவைப் படித்து கற்றுக் கொள்வது ஏராளம் ஏராளம். .

  என்னுடைய முதல் பதிவிற்கு முதல் பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்தியதற்கு
  மிக்க நன்றி.

  ராஜி

  1. நானும் ஒரு வருடம் முன்பு புதிய பதிவர்தான், ராஜி!
   பின்னூட்டங்கள்தான் நம்மை பண்படுத்தும்.
   பிறரது எழுத்துக்கள் மூலம் நாம் பார்த்திராத கோணங்களும் தெரிய வருகிறது.

   பாசிடிவ் பின்னூட்டங்களின் மூலம் பலவற்றையும் சாதிக்கலாம். நம் படைப்புக்கள் எல்லாமே நமக்கு அருமைதான். பிறரது கண்ணோட்டத்தில் தான் என் தவறுகள் தெரிய வரும். படிப்பவர்கள் இவற்றை நிச்சயம் சொல்ல வேண்டும். அப்போதுதான் நல்ல எழுத்துக்கள் உருவாகும்.

   நன்றி ராஜி!

 4. ஒரு வினாடி திகைத்தாலும், மறு வினாடி புரியாத பாடம் புரிந்தது:…பயனுள்ள பாடம் …

  இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம் – தொடர்ச்சி — நிறைவான வாழ்த்துகள்…

  Kind Regards,
  RajaRajeshwari Jaghamani

  1. ///இரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்//

   நல்ல பல கருத்துக்களை சொல்லி இருக்கிறிர்கள்.பாராட்டுக்கள்….

  2. அந்த பயனுள்ள பாடத்தின் மூலம் ஒரு நல்ல நட்பு உருவாகி இருக்கிறது எனக்கும், திரு ஓஜஸ்-ஸுக்கும் இடையில்.

   நிறைவான வாழ்த்துக்களுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி!

 5. ஆண்டு நிறைவிற்கு வாழ்த்து.
  நல்ல அனுபவங்களை எழுதியுள்ளீர்கள் மிக ரசனையாக உள்ளது.
  I am also wordpress-
  இனிய நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  1. நீங்கள் வேர்ட்ப்ரஸ் என்று தெரியும் வேதா! நான் குறிப்பிட்டது விழாவிற்கு வந்தவர்களைப் பற்றி.

   இனிய நல்வாழ்த்துக்களுக்கு நன்றி!

 6. வெற்றிகரமாக பல பதிவுகள் கொடுத்து, ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

 7. வாழ்த்துக்கள் அம்மா,

  நீங்கள் தோழியை கண்டு பிடித்தாற் போன்று ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். எனக்கு எங்கள் கிராமத்தை சார்ந்த ஒருவர், என்னில் மூத்தவர், வலையுலகில் முன்னோடி அவர்களை காண முடிந்தது பிறகு நேரில் சென்று சந்திக்கவும் தூண்டுகோளாகவும் இருந்தது.

 8. வாருங்கள் வேல்முருகன்! இந்த மாதிரி அனுபவங்கள் உலகம் சிறியது என்பதை நிரூபிக்கிறது, இல்லையா?
  வாழ்த்துக்களுக்கும், உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 9. அம்மா தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்!!!

  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறீர்கள். மேலும் பல பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் ஆசிகளை நாடும் உங்கள் மகள்!!!

 10. ரஞ்ஜனி,

  உங்க அனுபவங்களைப் பாடமாக் கொடுத்திருக்கீங்க.வருத்தங்களும் புரிகிறது. அவர்கள் சில வருடங்களாக(எழுத்தின் மூலமாக)பழக்கமானவர்களாக இருக்கலாம்.அடுத்த சந்திப்பின்போது பாருங்க,நீங்களே ஆச்சரியப்பட்டு வந்து சொல்லப்போறீங்க எல்லோருக்கும் உங்களைத் தெரிந்திருக்கிறதென்று!

 11. ரொம்பவும் இதமாக ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள் சித்ரா, நன்றி!

 12. நீங்கள் கொடுத்த/கொடுக்கிற/கொடுக்கப்போகிற அத்தனை அறிவுரைகளுக்கும், ஆதரவுகளுக்கும் நன்றி.

  //எனக்கு முதலில் திரு தமிழ் பற்றி சிறிய பயம் இருந்தது; ரொம்பவும் கண்டிப்பான தமிழ் ஆசிரியரோ என்று! இப்போது இவரும் நானும் நல்ல நண்பர்கள்! //

  நான் ஒரு எளிய தமிழ் வாசிப்பாளன் மட்டுமே!

  உங்களின் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துகள்.

 13. அன்புள்ள தமிழ்,
  நான் ஒரு முறை உங்கள் ‘டெமுஜின் கதை’ க்குப் பின்னூட்டம் கொடுக்கும்போது ‘வரலாற்று நாவல்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு நீங்கள் ‘பொறுத்தருள்க இது நாவல் இல்லை. நிஜமான வரலாறு’ என்று பதில் சொல்லியிருந்தீர்கள்.

  அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் ‘கண்டிப்பான தமிழ் ஆசிரியர்’ என்பது.

  இப்போது உங்களை அறிவேன். இனி அவ்வளவு பயப்பட மாட்டேன்!

  வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்!

 14. Hi  Mam,   Happy Pongal.   what happended?   i have not received any mailer about your new post since past fortnight. have you not posted anything or i have not received the mailer. I am getting difficulty in opening your blog also.   Regds

  ________________________________

  1. Thank you and wish you the same.
   I am sorry to know that you are unable to open my blog ad you don’t get email notification for my posts. One more reader of my blog also wrote that she could see only small boxes instead of letters.

   I shall my friends who also write blogs in wordpress and let you know.

   warm regards,
   ranjani

 15. நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.

  தமிலரின் தேசியக் கொடி
  (National Flag of Tamilar)
  http://gvetrichezhian.tumblr.com/

  உலக மாந்தரின், தமிலரின் தேசியக் கொடி “சுவடியும் எலுதுகோலும்” தான். சுவடி என்பது கல்வியின் சின்னம். எலுதுகோல் என்பது தொலிலின் சின்னம். கல்வியும் தொலிலும் உலக மாந்தருக்கு, தமிலருக்கு இரு கன் ஆகும்.

  தமிலு மொலியின் னோக்கம் (Purpose of the Tamilu Language)
  http://vetrichezhian9.wordpress.com/2013/04/29/3/

  எலுத்துச் சீர்மய் (Character Reform):
  http://blogs.rediff.com/ulikininpin14/2013/05/08/azaaaaaaasa-asaaaaaa-character-reform/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s