Life

முப்பதும் தப்பாமே…..!

 

thiruppavaiஇன்றைக்கு மார்கழி முதல் நாள்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.

ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளிடம் முன் வைப்பார்.

நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.

‘சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்….

என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா?

ப்ளாக்ஸ்பாட்டில் படிக்க:

 

 

 

Advertisements

22 thoughts on “முப்பதும் தப்பாமே…..!

 1. அருமையான விவரிப்பு… நானும் மைலாப்பூரில் பிறந்து வளர்ந்ததால் உணர முடிந்தது.

  ” நம்மால் முடிந்ததை தானே செய்ய முடியும் ” அருமையான வரி.. மேலெழுந்த வாரியாக பார்த்தல் சாதாரண வரியாக தோன்றினாலும், போதும் என்ற பொன்னான மனது வருவதற்கு முக்கியமான, அடித்தளம்.
  அருமை அருமை…..

 2. உங்களுடைய ஆண்டாள் பக்தி மட்டுமல்ல ஆசிரிய பக்தியும் இந்தப் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளீர்கள்.ஆண்டாள் திருமணம் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விதைத்து விட்டீர்கள்.
  நல்லதொரு பதிவு.

  ராஜி

 3. ரஞ்சனி அம்மா என் மடிக்கணினி களவு போய் விட்டது அதனால் தான் பதிவுகள் படிக்க இயலவில்லை ,இந்த மறுமொழி கூட என் நண்பனின் கணினியில் இருந்து வெளியிட்டது தான்..:(,தங்களுக்கு மின் கடிதம் இட்டது நானே ஸ்பாம் கிடையாது

 4. ரஞ்ஜனி,

  ஆசிரியரை நினைவு கூர்ந்தது அருமை.நான் படித்த பள்ளியிலும் 30 நாளும் திருப்பாவையைப் பாடுவோம்.’கூடாரவல்லி’யன்று சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாகத் தருவார்கள்.சர்க்கரைப் பொங்கலா அல்லது முதல் வகுப்பு கட் ஆவதா எனத்தெரியவில்லை,அன்று கொஞ்ஜம் ஜாலியாக இருப்போம்.பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டுப் போய்ட்டீங்க.

  தமிழ் வாத்தியார்னு சொல்றீங்க,ஆனால் பெயரைப் பார்த்தால் ‘ஸர்மா ஸார்’ என்றிருக்கே!அவரது பிரச்சினைகள் தீர்ந்ததில் மகிழ்ச்சி.

  “எனக்கு ஒரு நாராயணனும்,அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும் கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது”‍‍‍_____கேட்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது.

 5. வாருங்கள் சித்ரா! சொன்னவுடன் தான் தமிழ் வாத்தியாரின் பெயர் பற்றிய சந்தோகம் வருகிறது. அவர் ஸர்மா ஸார் தான். பெயர் காரணம் தெரியவில்லை.

  வருகைக்கும், ரசித்துப் படித்து பழைய நினைவுகளில் இருந்து இங்கு பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. முப்பதில் எதை சொன்னாலும் நல்லதுதான்.
   ஆண்டாள் என்று ஒருவள் இருந்தாள்; அவள் திருப்பாவை முப்பது பாடல்கள் பாடினாள் என்று நினைத்தால் கூடப் போதும் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

   வருகைக்கு நன்றி விஜயா!

  1. வாருங்கள் தியானா!
   இப்போதுதான் உங்கள் பதிவையும் படித்து பின்னூட்டம் இட்டுவிட்டு வந்தேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s