கன்னட கொத்து!

 

முதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான்.

அதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.

ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்!) இருவரையும் சேர்த்தோம்.

என் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’

ஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா? வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா?

ஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’

அப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன்.

நாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா?’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்!

என் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா! நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர்.

‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது….  தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று  அவர்களை அடக்கினேன்.

என் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்(!) இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்!

ஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார்.

இதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………!’ என்றாள்.

‘………….பாப்பா……!’

ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று…..

என் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள்? குழந்தைகளும் வீட்டில் இல்லையே? ஸ்கூல் போய் விட்டார்களே! கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ?

தலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன்.

நான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்!

இதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்!

மகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்றேன்.

அவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க!’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ? கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே?’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார்.

என்ன இது? அவரிடமே கேட்டேன். ‘தமிளா?’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக!) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார்.

இப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்!

முயற்சி திருவினையாக்கும் இல்லையா?

 

 

 

 

 

 

 

.

 

 

 

30 thoughts on “கன்னட கொத்து!

  1. நன்றி தனபாலன்! நிஜத்தில் தமிழுக்கும் கன்னடாவுக்கும் நிறைய ஒற்றுமைகள். வெகு சுலபத்தில் கற்றுக் கொண்டு விடலாம்.

 1. நன்கு கனடா ஸொல்ப கொத்து. அன்புடன்
  எப்படியிருக்கு பின்னாடி கன்னட கொத்து. எப்படி அமைப்பு?

  1. தும்ப சென்னாகிதே! நிம்ம நெனப்பின ஷக்தி அபார!
   தன்யவாதகளு!
   ப்ரீதிய
   ரஞ்ஜனி

  1. நீங்கள் ராத்திரி சொன்ன ‘good night’ ஐ இப்போதான் பார்த்தேன். ஸாரி!
   குட் மார்னிங்!

  1. ஆஹா! தனபாலன்! எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
   எங்கள் வீட்டிற்கு வாருங்கள் ப்ளீஸ், தடபுடலாக ஐயங்கார் விருந்து வைக்கிறேன்!
   மறுபடி மறுபடி நன்றி!

 2. கன்னடா ஸொல்ப ஸொல்ப கொத்து….

  சாக்கா, பேக்கா என்று சில பல வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு இரண்டும் மூன்று முறை பெங்களூர் வந்து சென்றிருக்கிறேன்! 🙂

  சுவையான பகிர்வுக்கு நன்றிம்மா.

  1. ரொம்பவும் சுலபமாக கற்றுக் கொண்டு விடலாம் இந்த மொழியை. எழுதுவது, படிப்பது கொஞ்சம் கஷ்டம். நம்மைப்போல எழுத்துக்களை பக்கத்துப் பக்கத்தில் எழுதாமால் ஒரு எழுத்திற்கு கீழே இன்னொரு எழுத்தை சுருக்கி எழுதுவார்கள்.

   முயற்சி இருந்தால் எதுவும் சுலபம் தான்!

   நன்றி வெங்கட்!

 3. ஒரு விஷயத்தை வெறும் அவசியத்திற்காக என்று மட்டும் நினைக்காமல் ஆர்வத்தோடு செய்யும்போது அது தரும் சந்தோஷமே தனி தான்… எதையும் கற்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு என்றும் சலிப்பு என்பதே இருப்பதில்லை…. as long as there is curiosity and a will to learn, one can never be bored in life… ! your spirit can be an inspiration to a lot of youngsters !

 4. எனக்கு உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்க வேண்டுமென்று ஆசைதான்!
  கற்பதே ஒரு ஆர்வமான விஷயம் – எதைக் கற்றாலும்!

  நன்றி சௌபர்னிகா!

 5. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  – தமிழ் களஞ்சியம்

 6. உங்கள் பதிவின் முதன்மை மொழி என்ன என்று தந்திருக்கிறீர்கள் என பார்க்கவும். ஏனெனில் இத்தனை பார்வைகள் இருந்தும், தங்கள் இடுக்கைகள் வேர்டு பிரஸ்ஸின் முன்னணி இடுக்கைகளில் வராமலிருக்கும் போது எனக்கு இந்த சந்தேகம் தோன்றுகிறது. தமிழ் மணத்தின் சூடான இடுக்கைகளில் தங்கள் இடுக்கை இடம் பெற்றிருப்பதைக் கண்டேன். மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.

  1. உங்களது அக்கறைக்கு நன்றி!
   என்ன செய்வது என்று பார்க்கிறேன்.

   முன்னணி இடுகையில் வந்தாலும் வராவிட்டாலும் பதிவுகளை அசராமல் போடுவேன்!

   நன்றி!

 7. ரஞ்சனியவரே, நிம்ம ப்ளாக் தும்ம்ம்ம்ப சென்னாகிதே! பெங்க்ளூர்னல்லி கன்னடா கொத்தில்லாந்தரே தும்ப பேஜார் ஆகத்தே! நானு நிம்தரா கன்னடா அப்யாஸா மாடி மாத்தாட்தீனி!

  அன்புடன்,
  தக்குடு

  1. பன்னி, பன்னி தக்குடுரவரே!
   மொதலிகே நிம்ம ஹோகளிகேகே தன்யவாத! நிம்ம கன்னட இவாகலூ சென்னாகே இதே. இன்னு அப்யாஸ மாடிதரே இன்னு ஹொளயுத்தத்தெ!

   ஷுபாஷயகளு!

 8. வாவ் … கன்னடம் கத்துக்கிட்டு டீச்சர் ஆகிடீங்களா? உண்மையில் முயற்சி திருவினையாக்கும் தான்… நானும் ஹிந்தி கதுகறேன் கதுகறேன்… கதரிகிடே இருக்கேன்,,,,,,,
  உங்க அனுபவத்த தொடந்து எழுதுங்கம்மா ரொம்ப நல்ல இருக்கு….

  1. எனக்கும் ஹிந்தி வராது சமீரா! தமிழ் நாட்டுல இருக்கறவங்க வெளியூர் போனாதான் வேற பாஷை வரும்!

   ரசித்ததற்கு நன்றி!

 9. பதிவு அருமை. கன்னட ஆசிரியை ஆகியிருப்பது சிறப்பு …

  நானும் பத்து வருடத்திற்கு முன்பு பெங்களூரு வந்தேன். முதலில் கன்னடம் மிகவும் கடினம் என்பது போல் தோன்றியது. ஆனால், போகப் போக நான் புரிந்து கொண்டது, தமிழை விடுத்து பிற மூன்று தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு அடுத்து தமிழுடன் நெருங்கிய தொடர்பு கன்னடதுக்கே உள்ளது.

  தமிழின் தொன்மையான சொற்களும், சில வட்டார சொற்களும் மிகுதியாக காணப்படுவதே எனது இந்த அனுமானத்துக்குக் காரணம்…

 10. நீங்கள் சொல்வது ரொம்பவும் நிஜம். ஹளே கன்னட (பழைய கன்னடம்) என்பது நமது இலக்கிய தமிழ் தான்.
  புரந்தரதாசர், டி.வி. குண்டப்பா இவர்களின் பாட்டுக்களில் நிறைய தமிழ் வார்த்தைகள் வரும்.
  நாம் நகைத்தான் என்பதை தான் இவர்கள் ‘நகுதிதா’ (ன்) என்கிறார்கள். ‘நகே ஹப்பா’ (சிரிப்பு விழா) என்கிறார்களே!
  நிறைய ஒன்றுமைகள்.

  நான் தமிழ் மூலம்தான் கன்னட கற்றுக் கொண்டேன்!

 11. சூப்பர் முயற்சி. பாஷைகளை கற்றுக் கொள்வது எத்தனை இனிமையான விஷயம்!.

  பாராட்டுக்கள், ரஞ்சனி.

 12. நான் வேலைக்காக மைசூர் வந்து ௫ வருடங்கள் ஆகிறது…இப்பொழுது கண்னடம் பேசுவதில் புலமை அதிகரித்து விட்டது

 13. கன்னடம் கத்துகிட்டு ஆசிரியராகவும் ஆனீங்களா…… பிரமிப்பா இருக்கும்மா.

 14. ஹலொ ரஞ்சனி உங்களின் கன்னடகொத்து பார்த்த்பின் நான் ஆந்திரா வந்த பிறகு தெலுங்கு கற்றுக்கொண்டது நினைவு வந்தது ரொம்ப அருமை உங்களின் விடாமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

   1. well madam yourviews are interesting.and you haveinadvertently revealed your iyengar/superior caste. let us calmly think how many of our dalit brothers could reveal their caste names as such. for example ranjaniparayar and narayanan pallar… another ambedkar and periar should be born in tamil nadu.

 15. wellmadam your views are interesting no doubt. but inadvertently you have mentioned your caste iyengar. let us discuss how many of our dalit brothers could be allowed touse their caste names such as ranjini parayar….narayanan pallar….. another ambedkar and another periar should be born again in tamil nadu….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s