லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….!

‘டொக்…. டொக்….’

‘யாரது?’

‘நாங்கள் Worldpress.com இலிருந்து வந்திருக்கிறோம். இங்கு ரஞ்ஜனி நாராயணன் என்பது….?’

‘நான்தான், நான்தான்…உள்ளே வாருங்கள்…!’

‘நீங்களா…?’

‘நானேதான்! ஆதார் கார்ட் காட்டட்டுமா?’ (எனக்கு ஆதார் கார்ட் வந்துவிட்டதே!)

‘வேண்டாம்…உங்கள் பெயரைப் பார்த்துவிட்டு ரொம்பவும் சின்ன வயதுப் பெண் என்று நினைத்துவிட்டோம்….’

60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்…

மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன். (நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…)

‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’

‘திரு வை.கோ. சொன்னார்…நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்….’

‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ (இது கொஞ்சம் ‘ஓவர்’ – இடித்தது என் செல்லம்)

ஷ்…..சும்மா இரு என்று அதை அடக்கினேன்.

‘கிட்டத்தட்ட 237 பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஸார்! எல்லாமே நானே எழுதியது….என் சொந்த முயற்சியில்…’

‘…அப்படியா…..?’

‘ஆமா ஸார்…அவள் விகடனில் கூட ‘வலைப்பூவரசி’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.’

‘ஓ!……’

‘அப்பறம்….ஒருதடவ வலைச்சரம் ஆசிரியராகவும் இருந்தேன்……..’

‘இத்தனை எழுதின அப்பறம்  திருப்தி ஏற்பட்டிருக்க வேணுமே?’

‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு…’

‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்….!’

‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்….

‘உங்க அரிப்பு, குடைச்சல்  எல்லாத்துக்கும் ஒரு  நல்ல மருத்துவரைப் பாருங்க. அத்த விட்டுட்டு எங்களைப் படுத்தினால்….’

‘…..ஸார், என்ன சொல்றீங்க?’

‘நிறுத்துங்க!’

என்ன சொல்றீங்க?

‘நிறுத்துங்க…’

‘புரியலையே!’

‘மணிரத்னம் படமெல்லாம் பாக்க மாட்டீங்களா?’

‘………………………….!?’

’எழுதறத நிறுத்துங்க….’

‘என்ன சொல்றீங்க?’

‘ஆமாம்மா, நீங்க இனிமே எழுதக் கூடாது…’

‘ஸார், ஸார், இன்னும் ஒரு ஆசை நிறைவேறணும். வோர்ட்பிரஸ் freshly pressed – ல ஒரு முறையாவது என் இடுகை வரணும்…’

‘இது வேறயா?’

‘ஆமா ஸார்….நாற்சந்தி, தமிழ், ரூபன் இவங்க இடுகைகளெல்லாம் வரது….’

‘நீங்களும் முச்சந்தி, கன்னடம், அதிரூப சுந்தரி என்று எழுதினால் வருமோ என்னவோ…?’

‘ஸார், ஸார்….’

‘இதோ பாருங்கம்மா… இப்படியே ஒரொரு ஆசையா சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா எங்களை யார் காப்பத்துவாங்க? அதனால உடனே நிறுத்துங்க…..’

‘ஸார்! வைகோ ஸார்! என்னக் காப்பாத்துங்க….!’

‘இங்க பாருங்க, நாங்க எல்லோரும் உங்களால பாதிக்கப் பட்டவங்க….யாரும் உதவிக்கு வரமாட்டாங்க…’

‘சிவஹரி…சிவஹரி….நீங்களாவது உதவி செய்யுங்க….’

‘அருமை சகோ…கவலைப் படாதீங்க! நான் இருக்கிறேன்…இன்னிக்கு வலைச்சரத்திலே ஒரு கல்வெட்டுப் பதிவு உங்களைப் பற்றி போட்டிருக்கேன்….அதைப் படிச்சுட்டாவது உங்களோட மனச மாத்திக்கக் கூடாதா? எழுதறத நிறுத்தக் கூடாதா?’

‘யூ டூ சிவஹரி……?

’றேன்…. த்திடறேன்……..நிறுத்திடறேன்……. எழுதறத நிறுத்திடறேன்….. ப்ளாக் எழுதறத நிறுத்திடறேன்……’

********************************************

“ரஞ்ஜனி! ரஞ்ஜனி! எழுந்திரு…..!

‘மாதவா! அம்மாவை எழுப்பு… ப்ளாக் எழுத ஆரம்பிச்சு தூக்கத்தலேயும் ப்ளாக் உளறல்!?”

ஹப்பா! கனவா? நல்லவேளை…நாளையிலிருந்து திரும்ப….

லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….

பின்குறிப்பு:

நான் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் என்னை மன்னிப்பார்களாக!

69 thoughts on “லாம்….. எழுதலாம்……ப்ளாக் எழுதலாம்…….!

 1. மிகவும் நகைச்சுவையான கனவுப்பதிவு. எனக்கும் இதுபோல இன்னும் என்னவெல்லாமோ கனவுகள் வரும்.
  வெளியில் சொல்லிக்கொள்ள கொஞ்சம் வெட்கமாக இருக்கும்.

  தொடரும்…….

  1. அப்படின்னா என்ன? அதான் ‘வெட்கம்’ என்றீர்களே அதைத்தான் கேட்கிறேன்!

   1. வெட்கம் என்றால் என்னவென்று விவரித்துச் சொல்லவும் எனக்கு வெட்கமாகவே உள்ளதுங்க.

    அதனாலே ப்ளீஸ் என்னை விட்டுடுங்க!

    வேறு யாரிடமாவது கேட்டுத்தெரிஞ்சிக்கோங்கோ! ;)))))

    அன்புடன்
    vgk

 2. //60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்…//

  ஆஹா! அப்போ எனக்கு முறையே ஸ்வீட் 10, 20. 30 வயதுகள் அல்லவா! ஸ்வீட்டோ ஸ்வீட் தான்.

  உங்களுக்கு மட்டும் என்ன! அப்போ முறையே 8.18. 28.
  இன்னும் அதிக ஸ்வீட் தான். ;))))

  //மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன்.//

  அதில் என்ன சந்தேகம் மேடம். நாம் மனதளவில் என்றும் மார்க்கண்டேயனே தான். என்றும் பதினாறே தான்.

  //(நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…)//

  தயவுசெய்து அதுமட்டும் வேண்டாம் மேடம்.
  இளமையில் நம் நடையழகு!!
  முதுமையில் நரையழகு!!!!
  என்பார்கள்.

  ஆனால் முதுமையிலும் நம் நடை [எழுத்துநடை] அழகே என்று நாம் அடித்துச்சொல்லலாம். இளைஞர்களுக்குச் சவாலே விடலாம். கவலையே படாதீங்கோ.

  தொடரும்……..

  1. சும்மா ஜோக்குக்காக எழுதியது. ‘டை’ அடித்துக் கொள்ளுவதில்லை.

   முதுமையையும் நல்லவிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் நான்.

 3. //‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’

  ‘திரு வை.கோ. சொன்னார்…நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்….’

  ‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ //

  ஆஹா! சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களின் பரம விசிறி தான் நான். இல்லாவிட்டால் இப்போ நடு ராத்திரி மணி 1.30 க்கு எனக்கும் சொப்பனத்தில் நீங்கள் ஓர் புது பதிவு இட்டிருப்பதாகத் தெரிந்து திடுக்கிட்டு எழுந்து வந்து தங்களின் மெயில் பார்த்து, வரிசையாகப் பின்னூட்டம் இடுவேனா?

  தொடரும்…..

  1. நான் பதிவு போட்டவுடன் உங்களுக்கு மெயில் அனுப்பிவிட்டேன் – அப்புறம் மறந்து விடப் போகிறோமே என்று. நீங்கள் உடனே இத்தனை பின்னூட்டங்கள் போடுவீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.

   1. //நீங்கள் உடனே இத்தனை பின்னூட்டங்கள் போடுவீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.//

    நானும் தான்.! 😉
    ஏதோ எழுத ஆரம்பித்தேன்.
    எழுதிக்கொண்டே போனேன்.
    சற்றே ஹனுமார் வால் போல நீண்டு விட்டது.
    vgk

 4. இங்கு இப்போதும் வழக்கம் போல் கரண்ட் கட்.

  எப்போதுமே

  “இருட்டு உள்[ளு]
  முரட்டுப்பொண்ணு
  சுருட்டுப்பாய்”

  என்பது போல ஆகிவிட்டது எங்கள் தமிழ்நாட்டின் நிலை.

  கையில் விசிறி, எமெர்ஜென்ஸி லாம்ப், இன்வெட்டெர், லாப்டாப் பேட்டரி இவைகளின் துணையுடன், கொசுக்களின் ரீங்காரத்துடன், நான் இவற்றை டைப்பிக் கொண்டிருக்கிறேன். ஏன் ஏன் ஏன் ஏன் ?????

  தங்களின் விசிறிகள் மன்றம் ஆரம்பித்து அதற்குத் தலைவர் ஆகவேண்டும் என்ற வெறியல்லவோ காரணம். ;))))) அதனாலேயே எப்போதும் நான் விசிறியும் கையுமாவே இருக்கிறேன்; அதுவும் வீட்டில் ஒன்றுக்கு இரண்டு உபத்ரவத்திற்கு மூன்று என ஸ்பிலிட் ஏ.ஸி. போட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 7000 முதல் 8000 வரை எலெக்ட்ரிக் பில் கட்டிவந்தும். ;(

  தொடரும்………

  1. நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை.

   எப்படி இருந்தாலும் எனக்கு விசிறிகள் மன்றம் ஆரம்பித்து விடுங்கள்.

   அடாது கொசுக்கள் ரீங்காரம் செய்தாலும், விடாது கரண்ட் போனாலும் …..ஓகே ஸார்?

   1. மனதுக்குள்ளேயே சிவனுக்கு மிக அழகாகக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார் ஓர் தீவிரபக்தர் என்று நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    அதுபோலவே நானும் ஒரு பதிவருக்கு [அம்பாளுக்கு] என் மனதுக்குள் கோயில் கட்டி, விசிறிகள் மன்றம் ஆரம்பித்து, நானே அதன் தலைவராகவும், நானே அதன் செயலாளராகவும், நானே அதன் பொருளாளராகவும், நானே அவருக்கான அனைத்துலக விசிறிகளாகவும் இருந்த அனுபவம் எனக்கு உண்டு.

    அவரைத் தவிர வேறு யாருக்கும் தீவிர ரஸிகராகவோ, விசிறியாகவோ, தலைவராகவோ வேறு பதவிகளிலோ, இருக்க என் மனம் இடம் தராமல், இன்றும் சற்றே என்னைத் தடுத்து வருகிறது.

    அதனால் பிறகு பார்ப்போம். கோச்சுக்காதீங்கோ!
    vgk

 5. //‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு…’

  ‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்….!’//

  இது மிகச்சிறந்த எல்லா எழுத்தாளர்களுக்கும் உள்ள ஓர் ஆரோக்கியமான அரிப்பு தான். கவலை வேண்டாம்.
  [உங்களைப்பேட்டி காண கனவில் வந்தவனுக்கு இந்த அரிப்பைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் ஓர் மக்குப் ப்ளாஸ்திரி.]

  //‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்….//

  குடைச்சல் இருக்கட்டும். அதை நானும் வரவேற்கிறேன்.
  தினமும் ஓர் பதிவு வீதம் எழுதுங்கோ. எழுதி Draft ஆக சேமியுங்கோ.

  அதில் ஒன்றும் தப்பே இல்லை. ஆனால் தினம் ஒரு பதிவு என தயவுசெய்து வெளியிடாதீங்கோ. அதுக்கு மதிப்போ வரவேற்போ நிச்சயம் இருக்காது. இது என் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். 2011 இல் மட்டும் நான் இப்படித்தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் ஒரு பதிவு கொடுத்து வந்தேன். மொத்தம் அன்0த ஆண்டில் 200 பதிவுகள். அதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு 20 முதல் 50 வரை மட்டுமே பின்னூட்டங்கள் வந்து கொண்டிருந்தன.

  2012 ஆரம்பத்தில் ஜனவரி முதல் ஏப்ரில் வரை நான்கே மாதங்களில் தினம் ஒரு பதிவு வீதம் மேலும் சுமார் 100 பதிவுகள் கொடுத்து வந்தேன். அப்போதும் சுமார் 50 பின்னூட்டங்களே வந்தன. பிறகு புதிய பதிவுகள் ஏதும் கொடுக்காமல் நீண்ட இடைவெளி கொடுத்து விட்டேன்.

  அப்படியும் சிலர் [தூங்கும் புலியாக இருந்து வந்த என்னை] விருதுகள் தருவதாகச் சொல்லி இடறி விட்டனர். எழுந்த நான் விருது அளித்தவர்களுக்கு நன்றி கூறி மட்டும் ஒருசில பதிவுகள் கொடுத்து வந்தேன். அவ்வாறு கொடுக்கப்பட்ட விருதுகள் ஒன்றல்ல இரண்டல்ல … 2012 இல் மட்டும் 12 விருதுகள். கடைசியாகக் கிடைத்த 10,11,12 ஆகிய விருதுகள் ஒவ்வொன்றையும் 108 பதிவுகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். உங்களுக்குக்கூட அதில் 2-3 விருதுகள் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  அதில் ஒரு சாம்பிள் இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
  அதற்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை [என் பதில்கள் உள்பட] 219

  தொடரும்………

  1. நிஜம்தான் நீங்கள் சொல்வது. தினம் எழுதினாலும் படிக்க ஆள் வேண்டுமே!
   நீங்கள் சொல்வதுபோல எழுதுவதை சேமித்து வைத்துக் கொள்ளுகிறேன்.
   விருதுகள் உங்களைத் தேடி வருகின்றன என்றால் அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் பரந்த மனசு யாருக்கு வரும்?

   நிஜமாகவே நீங்கள் ‘Vaiko the Great’ தான்.

   எனக்கும் மூன்று விருதுகள் உங்கள் மூலம் கிடைத்தன.
   என்றென்றும் நன்றி உடையவளாக இருப்பேன்.

 6. நகைச்சுவைக் கனவு நல்லாருக்கு.

  ‘உங்கள் பெயரைப் பார்த்துவிட்டு ரொம்பவும் சின்ன வயதுப் பெண் என்று நினைத்துவிட்டோம்’_உற்சாகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

 7. பகிர்வதற்கு மனதில் ஆயிரம் எண்ணங்கள் கொட்டிக் கிடப்பினும், நான் பேசாமலேயே, புதிய பதிவுகள் ஏதும் தராமலேயே இருந்து வந்தேன். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.

  முக்கியமான காரணம் என் மேலிடத்தின் [தர்மபத்தினி அவர்களின்] குறுக்கீடுகள் மட்டுமே. நான் இந்த ப்ளாக்கைக் கட்டிக்கொண்டு அழுவது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை.

  [அவளைக்கட்டிக்கொண்டு அழுவது எனக்குப்பிடிக்கவில்லை என உடனே நினைத்து விட வேண்டாம். என் ஸ்வீட் 21-22 அவளின் ஸ்வீட் 17-18 இல் எங்களுக்குத் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் முழுதாக முடிந்து விட்டது. திருமண நாள் : 03 07 1972.

  இன்றும் எங்கள் இல்வாழ்க்கை மிகவும் ஸ்வீட் ஆகவே ஓடிக்கொண்டு இருக்கிறது. ஸ்வீட் என்றால் சாதாரண ஸ்வீட் அல்ல. தினமும் இரண்டு வேளையும் இன்சுலின் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவளுக்கு ஸ்வீட். தினமும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கும் ஸ்வீட் … எங்கள் இருவர் இரத்தத்திலும் கூட]

  தொடரும்…….

  1. இதேபோல எப்போதுமே இருவரும் ஸ்வீட் ஸ்வீட்டாக இருக்க, 40 வருட தாம்பத்திய வாழ்க்கை மேலும் மேலும் சிறக்க அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

   1. தங்களின் பிரார்த்தனைகளுக்கு
    [அதுவும் அம்பாளிடம் 😉 ]
    மிக்க நன்றி.
    vgk

 8. பிறகு சமீபத்தில் 2012 செப்டம்பரில் ஒன்றும் அக்டோபரில் ஒன்றுமாக இரண்டே இரண்டு பதிவுகள் மட்டும் கொடுத்தேன். அதுவும் எனக்கு ஆங்கிலத்தில் வந்திருந்த நகைச்சுவையான சம்பவங்களை தமிழாக்கம் செய்து, அதில் எனக்கே உரித்தான நகைச்சுவைகளையும் சேர்த்துக் கொடுத்திருந்தேன்.

  நீண்ட நாட்களுக்குப்பின் நான் பதிவுகள் கொடுத்ததும், வாசக நண்பர்களுக்கு, ஒரே குஷி.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் எப்போதாவது தான் வரும் …. ஆனால் ரஸிகர்கள் கூட்டம் அலை மோதும் அல்லவா.

  அதுபோல என் சமீபத்திய 2 பதிவுகளுக்கு வந்துள்ள பின்னூட்டங்கள் [என் பதில்கள் உள்பட] இதுவரை முறையே 175 + 170 எனக் குவிந்து போய்விட்டன.

  எனவே தினமும் ஒரு பதிவு வீதம் கொடுக்க நினைப்பதை தாங்களும் சற்றே மறுபரிசீலனை செய்யுங்கள். அவ்வாறு தினமும் கஷ்டப்பட்டு ஓர் பதிவு கொடுப்பதால் நமக்கு ஓர் மதிப்போ மரியாதையோ இருக்காது.

  மிகத்தரமான பதிவாக மாதம் ஒன்றோ அல்லது இரண்டோ கொடுப்பது தான் சாலச்சிறந்தது, என்ற தேவ ரகசியத்தை உங்களுக்கு மட்டும் சொல்லிக் கொள்கிறேன். வேறு யாரிடமும் தயவுசெய்து சொல்லி விடாதீர்கள்.

  தொடரும்………

  1. நீங்கள் என்னுடன் ரகசியமாகப் பகிர்ந்து கொண்ட தேவ ரகசியத்தை நானும் இனிமேல் கடைப்பிடிக்கிறேன்.

   நீங்கள் சொல்வது மிக மிக சரி. தினமும் ஏதாவது போடுவதை விட தரமாக ஒன்று அல்லது இரண்டு போடுவது சுலபமாகவும் இருக்கும்.

   நூற்றுக் நூறு ஒப்புக் கொள்ளுகிறேன்.

   நல்ல அறிவுரைக்கு நன்றி!

   1. எல்லோரும் எல்லாவற்றையும் இதுபோல சுலபமாக தனக்கு நன்மைதானே என்று நினைத்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அதனால் நானும் யாருக்கும் இப்போதெல்லாம் எந்த ஒரு ஆலோசனைகளும் சொல்வது கிடையாது.

    நான் சொல்வதை நல்லதொரு அறிவுரையாக பாஸிடிவ் ஆக தாங்கள் ஏற்றுக்கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    vgk

 9. எனக்கு ஓர் தங்கையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்கும் பாக்யம் சுத்தமாக எனக்குக் கிடைக்கவில்லை.

  அந்தக்குறையைப் போக்க இந்த வலையுலகில் நிறைய தங்கச்சிகளும், பெண் குழந்தைகளும் எனக்கு வாய்த்துள்ளார்கள்.

  அதில் ஓர் குழந்தையே என் அன்பின் “மஞ்சு” என்கிற ”மஞ்சு பாஷிணி”. இவங்க குவைத்தில் இருந்தாலும், இங்கு என்னுடன் திருச்சியிலேயே எங்காத்திலேயே இருப்பது போல ஓர் பிரமை எனக்கு.

  அந்த அளவுக்கு தினமும் தொலைபேசியிலும், மின்னஞ்சல் சுட்டிகளிலும் தொடர்பு.

  இரவு தூங்கினீங்களா அண்ணா, காஃபி சாப்பிட்டீங்களா அண்ணா, டிபன் சாப்பிட்டீங்களா அண்ணா, சாப்பாடு சாப்பிட்டீங்களா அண்ணா என வேளாவேளைக்கு நல்லதொரு ஆத்மார்த்தமான அன்பான விசாரிப்புகள்.

  இந்த என் அன்புத்தங்கை “மஞ்சு” 01 10 2012 முதல் வலைச்சர ஆசிரியராக பதவியேற்றுக்கொண்டதுடன், சும்மா இல்லாமல் எனக்கே எனக்கென்று ஒரு முழுநாள் முழுவதுமாக [02 10 2012] ஒதுக்கி கீழ்க்கண்ட பதிவின் மூலம் என் மீது பாசமழையைப் பொழிந்து தள்ளி விட்டாள்.

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455

  அந்த ஒரே நாளில் அங்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை [மஞ்சுவின் பதில்கள் உள்பட] 126. இது வலைச்சரச் சரித்திரத்திலேயே ஒரு Record Break என்று சொலுகிறார்கள்.

  தொடரும்………

  1. நீங்கள் எல்லா பதிவர்கள் மேலும் காட்டும் அக்கறையே இத்தனை பின்னூட்டங்களுக்கும் காரணம்.

   உங்களது தோழமை கிடைத்ததற்கு ரொம்பவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நான்!

   1. நானும் அன்பு மஞ்சுவின் வலைச்சர பதிவுகள் பார்த்தேன். உங்களது அத்தனை இடுகைகளின் (95) இணைப்பையும் எப்படிக் கொடுத்தாரோ என்று வியந்து போனேன்.

   2. தங்களின் புரிதலுக்கு மிகவும் சந்தோஷம்.
    நல்ல நட்புகள் அமைய நானும் புண்ணியம் செய்துள்ளேன் என்பதே எனது எண்ணமும்.
    இதே நட்பு என்றும் நீடிக்கப் பிரார்த்திப்போமாக!
    vgk

 10. என் அன்புத்தங்கை மஞ்சுவுக்காகவும், மேலும் என் மீதும் என் எழுத்துகள் மீதும் மிகுந்த ஆவலுடன் உள்ள ஒருசிலருக்காகவும் நானும் தொடர்ச்சியாக பதிவுகள் தர முடியாமல் இருப்பினும் மாதம் ஒருமுறை ஒரே ஒரு பதிவாவது வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன். அதற்காவது எனக்கு ப்ராப்தம் இருக்க வேண்டும். இறையருளும் [குறிப்பாக அம்பாள் அருளும் ] கைகூடி வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  தங்களின் இந்தப்பதிவு சூப்பரோ சூப்பராகவே உள்ளது.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

  தொடரும்…….

  1. நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். உங்கள் மேலும் உங்கள் எழுத்துக்கள் மேலும் பரிவு உடையவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

   1. // உங்கள் மேலும் உங்கள் எழுத்துக்கள் மேலும் பரிவு உடையவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.//

    நிச்சயமாக ! பருப்பில்லாமல் கல்யாணமா? ;)))))
    -=-=-=-=-
    [தங்கள் மகளின் கல்யாணம் பற்றி தாங்கள் நகைச்சுவையாக எழுதிருந்த முதல் பதிவும் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டே இதைப் பின்னூட்டமாக டைப் அடிக்கிறேன்]
    vgk

   2. //நானும் அன்பு மஞ்சுவின் வலைச்சர பதிவுகள் பார்த்தேன். உங்களது அத்தனை இடுகைகளின் (95) இணைப்பையும் எப்படிக் கொடுத்தாரோ என்று வியந்து போனேன்.//

    மஞ்சு ஓர் தனிப்பிறவி. பிறரிடம் அன்பையும் பாசத்தையும் பொழிவதைத்தவிர வேறு ஏதும் அறியாத குழந்தை குணம் கொண்டவள்.

    நான் 07.09.2012 அன்று பல்வேறு சோகங்களிலும், மனவருத்தங்களிலும், துயரங்களிலும் மூழ்கி தத்தளித்தபோது, என்னைத்தடுத்தாட்கொண்டு, ஆறுதல் அளித்து அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தினமும் என்னைக் கண்காணித்து வருபவள்.

    தக்க நேரத்தில் என் தவிப்பை உணர்ந்து என்னைக் காப்பாற்ற நினைத்து மஞ்சு மூலம் MIRACLE நடத்தி
    உதவியுள்ளார் என் குருநாதர்.

    எனக்கும் இந்த மஞ்சுவின் நட்பு இன்று வரை மிகவும் வியப்பளிப்பதாகவே உள்ளது.

    vgk

 11. //பின்குறிப்பு:
  நான் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் என்னை மன்னிப்பார்களாக!//

  இது மட்டும் தான் எனக்குப்பிடிக்கவில்லை.
  நமக்குள் இதெல்லாம் தேவை தானா? மேடம்.
  மனம் திறந்து சொல்லுங்கோ, ப்ளீஸ்.

  [அப்புறம் பெங்களூர் விஜயநகர் “இந்திரப் ப்ரஸ்தா” ஏ.ஸி. ரெஸ்டாரண்ட் மாடிக்கு நாம் சேர்ந்து போகவேண்டும். அதை மட்டும் மறந்துடாதீங்கோ. கீழே கையேந்தி பவன் போல எப்போதும் ஒரே கூட்டமாக இருக்கும். அதனால் அங்கே வேண்டாம். அதன் மாடிக்கு மட்டுமே நாம் செல்ல வேண்டும்]

  பிரியமுள்ள
  VGK

  [இதையெல்லாம் நான் அடித்து முடிப்பதற்குள் வெள்ளிக்கிழமை போய் சனிக்கிழமை விடிந்து விட்டது.
  இப்போது இங்கே அதிகாலை மணி 03.20

  Good Night அல்லது Good Morning எதையாவது உங்கள் செளகர்யப்படி எடுத்துக் கொள்ளுங்கோ! ;)))))) ]

  1. அடடா! இரவெல்லாம் தூங்கவில்லையா?

   நிச்சயமாக இந்திரப்பிரஸ்தா மாடிக்கே போகலாம்.

   1. //அடடா! இரவெல்லாம் தூங்கவில்லையா?//

    பணி ஓய்வு பெற்றதிலிருந்து, அதுவும் குறிப்பாக பதிவுலகுக்கு வந்ததிலிருந்து, பெரும்பாலும் இரவு நேரங்களில் தூக்கம் வருவது இல்லை. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள், எப்படியும் தூங்கி விடுவேன். அதிலிருந்து ஆரம்பித்து சுமார் 6 மணி நேரங்கள் முதல் 8 மணி நேரங்கள் வரை தூங்கிப்போவேன். காலையில் எழுந்திருக்க மிகவும் தாமதமாகும். அதன் பிறகு பகலிலெல்லாம் தூங்கவே மாட்டேன். ஏதோ HAPPY RETIRED LIFE ஓடிக்கொண்டு வருகிறது. அதிகாலை எழுந்திருந்து பஸ் பிடித்து, அலுவலகம் சென்ற நாட்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்தே போய் விடும் போல் உள்ளது.

    //நிச்சயமாக இந்திரப்பிரஸ்தா மாடிக்கே போகலாம்.//

    தாங்கள் இவ்வாறு சொன்னதே போய் வந்தது போல மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))) சந்தோஷம் + நன்றி.

 12. விக்கிரமாதித்தன் கதைகளில் தூங்கா நகரம் என்று ஒரு கதை. அந்த பட்டணத்து மக்கள் போன்று வலையுலக பதிவர்கள் பலர் உள்ளனர். நல்ல நகைச்சுவை! அண்ணனும் (திரு VGK) தங்கையும் நகைச்சுவையில் போடும் போட்டி வாசகர்களுக்கு “ஸ்வீட்டோ ஸ்வீட்“. அண்ணன் பதிவுகள் என்று எழுதா விட்டாலும் அவரது மறுமொழிகளே நல்ல பதிவுகள் போன்று உள்ளன.

 13. உங்கள் கனவை மிகவும் ரசித்தேன்…

  நான் தான் விசிறிகள் மன்றம்-செயலாளர் என்பதை இப்போதே முன்பதிவு செய்து கொள்கிறேன்…

  அடிக்கடி இவ்வாறு கனவு காண வாழ்த்துக்கள் அம்மா…

  வைகோ அவர்களின் கருத்துக்களும் சூப்பர்…

  நன்றி….

  1. என்ன பாக்கியம்! என்ன பாக்கியம்!
   வைகோ அவர்கள் தலைவர், நீங்கள் செயலாளர் – இப்போதே விசிறிகள் மன்றம் ஆரம்பித்து விட்டதைப்போல தலை கிறுகிறுகிறது!
   நன்றி தனபாலன்!

 14. அட கனவா… கனவிலும் பதிவுலகம் தான்… :))

  சிறப்பான பகிர்வு..

  1. உங்களுடன் போட்டி போட வேண்டுமென்றால் சும்மாவா?
   நன்றி வெங்கட்!

 15. சிரித்து மீளமுடியவில்லை சகோ.

  கனவிலும் என் எழுத்து நடை வந்திருக்கின்றதே.

  கனவு நனவாக கந்தன் அருளட்டும்

  1. நீங்கள் என் நடையில் எழுதும் முன் உங்களை நான் முந்திக் கொண்டு விடவேண்டும் என்று!

   நன்றி சிவஹரி!

 16. அடடே… கனவில் வந்ததையும் இப்படி (நகைச்)சுவை ததும்ப ரசனையாய் சொல்லி அசத்திட்டீங்க. வை,.கோ ஸாரின் கருத்துக்களையும் பதிவுக்கு ஈடாக ரசித்தேன். கனவுகள் தொடரட்டும்…

  1. உங்கள் சிரித்திரபுரத்திற்கு முன் நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை கணேஷ் ஸார்!
   வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி!

 17. இடைவிடாமல் சிரித்தேன் ரஞ்சனி மேடம் தங்களின் இந்த பகிர்வை படித்து….

  இன்று மட்டுமல்ல… என்றுமே தங்களின் மனதுக்கும் தங்களின் பகிர்வுகளுக்கும் வயது 16 தான் என்பதை அறியமுடிகிறது…. மனம் விட்டு சிரிக்கவைத்துவிட்டீர்கள் மேடம்….

  ச்சோ ச்சுவீத்து & க்யூட் பதிவு என்று சொன்னால் அது மிகையில்லை….

  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா….

 18. ஹாஹா. நல்லதோர் பதிவு. ப்ளாக் எழுதுவதின் சைடு எபெக்ட்ஸ் எல்லாம் என்னன்னு எனக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியுது இப்போ. 😉

  1. ஒரு விட முடியாத பந்தம் ஆகிவிடுகிறது! வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி டாக்டர்!

 19. மாதவா! அம்மாவை எழுப்பு… ப்ளாக் எழுத ஆரம்பிச்சு தூக்கத்தலேயும் ப்ளாக் உளறல்!?”

  ரசனையான உளறல்கள்….

 20. அப்பப்பா என்ன ஒரு காமெடி பதிவு! அதை விட வைகோ சார் நீங்களும் எழுதித் தள்ளிய கருத்துகள் எல்லாமாக ரசித்தேன். அவர் எனக்கும் பரிசுகள் தந்துள்ளார். மறக்க முடியாதவர்.
  நிறைய பதிவுகள் எழுதி. மகிழ நல்வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

 21. கவலைப்படாம பதிவு போடுங்க. எவ்வளவு ’அறுவை’ யா இருந்தாலும் படிச்சிப் பின்னூட்டம் போட நான் இருக்கிறேன். ஒரே ஒரு நிபந்தனை…………….

  என்னுடைய அறுவைப் பதிவுகளைத் தவறாம படிச்சி நீங்க…..

  1. கவலைப்படாமல் படிக்க ஒருவர் கிடைத்தபின் இனிமேல் கவலைப் படாமல் பதிவு போட வேண்டியதுதான்.

   உங்கள் பக்கம் காணவில்லையே! இணைப்பு கொடுங்களேன் ப்ளீஸ்!

 22. இந்த பதிவில் என் பெயர் இடம் பெற்றதற்கு என்ன கைமாறோ??
  மிக்க மிக்க நன்றிங்மா!

  1. அன்புள்ள தமிழ்,
   இதுபோல அப்பப்ப உங்கள் பெயரை என் பதிவுகளில் பயன்படுத்திக் கொள்ளுவேன். இதையே கைம்மாறாக எடுத்துக் கொள்ளவும்.

   வருகைக்கு நன்றி

 23. ரஞ்ஜனி ப்ளாக் எழுதறது ஒரு தொத்து வியாதி மாதிரி.எப்பவும்,எங்கேயும், அதே நினைவு. கனவு கண்டாய்,நல்ல கனவு கண்டாய்,ப்ளாகை எல்லோரும்,ரஸிப்பதை,நேரில் கண்டாய்!
  அருமையான கனவு.கண்டதை பங்கிட்டிருக்கும் பாங்கு.
  ஒருதரம் பின்னூட்டம் எழுதி போஸ்ட்டே ஆகலே.

  இது இரண்டாம் முறை. முதலில் எழுதின மாதிரி வரலே.இரவு பூரா கமென்ட் எழுதியிருக்கும் வை.கோ.
  மனதிலிருத்ததிரும்பத் திரும்பப் படித்தேன்.
  அருமை. அருமை.பேஷ்.இதைவிட என்ன ரஞ்ஜனியைப்
  பாராட்ட வார்த்தை தெறியலே.

  அருமை
  மனதிலிருத

  1. நீங்கள் சொல்வது ரொம்ப ரொம்ப நிஜம். தொத்து வியாதிதான்.

   திரு சிவஹரி வலைசரத்தில் என் எழுத்து நடையில் ஒரு பதிவு போடவேண்டும் என்று நினைத்ததாகச் சொல்லி இருந்தார்.

   அதற்கு சும்மா தமாஷா ஏதாவது எழுதலாம் என்று எழுதினேன்.

   திரு வைகோ அவர்கள் நான் wordpress.com இலிருந்து worldpress.com க்கு போவதாக வலைச்சரத்தில் ஒரு காமென்ட் போட்டிருந்தார். இரண்டையும் வைத்து ஒரு கற்பனை இது.

 24. இன்னொருமுறை திரு வைகோ விற்கு நன்றி சொல்ல வேண்டும். அதிக கருத்துரைகள் போட்டு இந்த பதிவை சிறக்க – நிறைக்கச் செய்ததற்கு!

 25. வாவ் நல்ல நகைசுவைய எழுதி இருக்கீங்க!!! கனவுலயும் ப்ளாக் தானா??
  பாவம் அங்கிள்!!!

  நன்றி அம்மா!!

 26. என்னுடைய பதிவுகளைப் படிக்காமலேயே தப்பித்துவிடுவார் அவர்!

  நன்றி சமீரா!

 27. அன்புள்ள சகோதரி! ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு வணக்கம்! இந்தவார என் விகடன் – திருச்சி இணைய இதழில் உங்கள் கோபு அண்ணாஅவர்களது வலைப் பதிவினைப் பற்றி எழுதியுள்ளார்கள். http://en.vikatan.com/article.php?mid=33 அவரது புகைப் படத்தினையும் வெளியிட்டுள்ளார்கள்.. என் விகடனில் ( http://en.vikatan.com) சென்று பார்க்கவும். நன்றி!.

 28. முதுமையையும் நல்லவிதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள் நான்.

  இதை விட உங்களை பாராட்ட வேறு என்ன பெரிதான தகுதி வேண்டும். எத்தனை பேர்களால் இப்படி மனம் விட்டு எழுத முடியும்? பலரும் மனப்பிறழ்வில் தான் தங்களை உணர முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்

  வாழ்க் வளமுடன்.

 29. படிக்க ஆரம்பித்த உடன் நினைத்தென் இது ஏதொ வில்லங்கமான பகிர்வுதான் என்று என்னை ஏமாற்றவில்லை ரஞ்சனி நீங்கள் நகைச்சுவையுடன் கூடிய கனவு நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் தொடரட்டும் கனவுகளும் ப்ளாக் எழுத்துக்களும்

 30. வாருங்கள் விஜயா! வில்லங்கமான பதிவைப் படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி!

 31. மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்….ஹி….ஹி….’ என்றேன். (நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்…)//

  டை அடிச்சுண்டு அது வேறே அரிப்பும், எரிச்சலும் தாங்காமல் போனால்! ஹிஹிஹி,மீ டூ சின்னப் பொண்ணு. குழந்தைத் தலைவினே எனக்குப் பெயர் வைச்சிருக்காங்க அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க எல்லாம், (இதுக்கு இவ்வளவு போட்டியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அடைப்புக்குறிக்குள்ளே என்னோடம.சா. பேசினது வெளியே வந்துடுச்சு, கண்டுக்காதீங்க. லூஸ்லே விடுங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s