மன்னிக்க வேண்டுகிறேன்!

ஒரு பதிவு எழுதியவுடன் பிரசுரம் ஆகும்போது இடது பக்கத்தில் ‘reblog’ என்று ஒரு option இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. ஒவ்வொரு தடவையும் அதை க்ளிக் பண்ணினால் என்ன ஆகும் என்று நினைப்பேன்.

ஆனால் சும்மா இருந்து விடுவேன். இன்று சும்மா இல்லாமல் க்ளிக் பண்ணிவிட்டேன்.

ranjani135 reblogged ‘இன்னிக்கு படிக்க வேண்டாம்’! to 40 followers on ranjani narayanan. Congrats!

You may want to visit their blog. Perhaps you’ll enjoy their blog as much as they enjoyed yours!’

என் மெயில் பெட்டியில் மேற்கண்ட செய்தி!

அப்புறம்தான் தெரிந்தது என்னுடைய பதிவை நானே மறுபடி பிரசுரித்து விட்டேன் என்று!

என்ன செய்வது? யாரும் பார்க்காமல் தலையில் அடித்துக் கொண்டு, அதை குப்பைத்தொட்டிக்குத்தள்ளி…

வீட்டில் குப்பை கொட்டுவதுடன் பதிவிலும் குப்பை கொட்டி….

எல்லோரிடமும் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று ‘மாப்பு’  (மாஃப்) கேட்டுக் கொண்டுவிட வேண்டியதுதான் என்று இதனை எழுதுகிறேன்.

விஜயதசமி அன்று ஒன்றுமே எழுத வில்லையே என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு தப்பு பண்ணி மன்னிப்பும் கேட்டு…. அதையே விஜயதசமி பதிவா போட்டு …

அடடா! ரஞ்ஜனி என்னே உன் சாமார்த்தியம்….!

தொடரட்டும் உன் தப்பும் தவறும்!

10 thoughts on “மன்னிக்க வேண்டுகிறேன்!

 1. எனக்கும் இ-மெயில் வந்தது – தங்கள் பக்கத்தில் புதிய பதிவு என்று – படித்தால் பழைய பதிவு… 🙂 சரி எதாவது டெக்னிகல் பிரச்சனையாக இருக்குமென நினைத்தேன் – இது உங்களோட யுக்திதானா [தெரியாமல் செய்த] :))

 2. ஆஹா!! உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப சாமர்த்தியம் தான் அம்மா!! (ஸ்மார்ட் ரஞ்சினி…..-சும்மாம்ம்ம்மா)

  1. சமீரா நீ என்னை அசட்டு ரஞ்ஜனி அம்மா என்று சொன்னால் கூட கோவம் வராது எனக்கு!
   எல்லோருக்கும் தெரிந்தது தானே!
   ஹி….ஹி….

  1. பாவம் என்னைபோல எத்தனை பேர் இந்த ரீப்ளாக் பத்தி யோசிச்சு இருப்பாங்களோ தெரியாது டாக்டர் ஐயா!
   ஒரு சுவாரஸ்யமான பதிவைக் கொடுத்த சந்தோஷம்!
   நன்றி ஐயா!

 3. எனக்குக்கூட இந்த ரி ப்ளாக்னு இருக்கே அது என்ன ன்னு தெறியலியேன்னு எப்பவும் யோசிப்பேன். அப்பா
  ஒரு வழியா தெறிந்தது.அனுபவங்கள் ஆசிரியராகி
  விடுகிறது. படிக்க ஸ்வாரஸ்யமும் கொடுக்கிறது.
  திரும்ப வந்துள்ளதே என ஒரு நிமிஷம் யோசித்தேன். நேரம் வேண்டுமா இருக்கே!

  ஆசிரியராகிவிடுகிறது.

  1. என் பிள்ளை எல்லா options யையும் க்ளிக் பண்ணிப் பாரு. அப்பத்தான் உனக்கே புரியும் என்று அடிக்கடி சொல்லுவான். பண்ணிப் பாத்து அசடு வழிஞ்சாச்சு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s