Uncategorized

என்னுடைய இன்னமுதே!

இதுவும் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவுதான். 

‘நாங்கள் போனதில்லை’ என்று பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த இரண்டாவது பாகம்.

மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.

இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!

திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம்.

எழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது.

பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி!

‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார்.

அவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார்.

‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார்.

எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும்.

‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்?’

யோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்… கணபுரத்தென் கருமணியை…..

 

 

 

Advertisements

12 thoughts on “என்னுடைய இன்னமுதே!

 1. காட்டிலும் மேட்டிலும் கால் கடுக்க நடந்து கடவுளைக் காண்பது என்பதெல்லாம் இப்போது அருகிவிட்டது சகோ.!

  பக்தியின் மகத்துவம் அதனுள் தான் பொதிந்து இருக்கின்றது.

  திருக்கண்ணபுரம் குறித்த மேற்படி தகவலுக்கும் நன்றி சகோ.!

 2. அழகான வர்ணனை, அழகான படங்கள்… இரண்டு பதிவுகளும்…
  கோசலை தன் குல மதலை காணவேண்டும் என்று ஆவல் அதிகரிக்கிறது !
  ஒரு வருஷம் தங்குவதை விடுங்கள்… தஞ்சை , குடந்தை பக்கம் உள்ள கோவில்கள் எல்லாம் ஒரு 10 நாட்களாவது பொறுமையாக சுற்றிப்பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசைதான் … எப்போது நடக்கும் என்று தான் தெரியவில்லை !

  1. ரொம்ப நாட்களாக உன்னுடைய பதிவுகளைப் படிக்க வேண்டும் என்று ஆசை. சௌரிராஜப் பெருமாள் நிறைவேற்றி விட்டார்.

   ஒருமுறை சேவித்துவிட்டு வந்தால் மறுபடி மறுபடி போக வேண்டும் என்றே தோன்றும்.

   எல்லாக் கோவில்களும் நன்றாக இருந்தாலும் திருக்கண்ணபுரம் என்னை ரொம்பவும் ஈர்க்கிறது!

   நன்றி சௌபர்நிகா!

 3. திருக்கண்ணபுரம் செல்லவேண்டும் என்ற ஆசையினை இப்பகிர்வின் மேல் தகவல்கள் அதிகரித்து விட்டது ரஞ்சனிம்மா…

  மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி.

 4. என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ!!!!! என்று பாட்டை பாடிக்கொண்டே எழுதத் தோன்றுகிரது.
  சுகமாக போய்விட்டு வந்த அனுபவங்களைக்காட்டிலும்,
  சிரமப்பட்டு போய் செய்யும் தரிசனங்கள்,தரிசனங்கள் கொடுக்கும் பரவசம் அனுபவித்துத்தான் உணரமுடியும்.
  படித்தே உணரமுடிந்துவிட்டது திருக்கண்ணபுர தரிசனம்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அதுவும் கிடைத்தது.அன்புடன்

  1. திருக்கண்ணபுரம் போவது எப்போதுமே சிரமம் தான். இந்த முறை சொந்த வண்டியில் போயிருந்தும் வழி தவறி சிரமப் பட்டோம்.

   நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

 5. ரஞ்ஜனி,

  ‘திருக்கண்ணபுரம்’_போன‌தில்லை.நீங்க எழுதியது, போனது போலவே உள்ளது.இந்தியா வரும்போது அதிர்ஷ்டம் இருந்தால் போய்வருகிறேன்.

  “யோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது”_முடிந்தளவு எழுதுங்க,கோயில்களைப் பற்றி எழுதுவதைப் படிக்கும்போது சென்று தரிசனம் செய்த‌ ஒரு மன நிறைவு.

 6. கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், அங்கு போய்விட்டு வந்தபின் கிடைக்கும் அனுபவம் சொல்லி முடியாது.

  அடுத்த பகுதியும் எழுதிவிட்டேன்.
  படித்துப் பாருங்கள்.

  நன்றி சித்ரா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s