மூன்றாம் நாள்: முத்தான வணக்கம்!

இன்றைக்கு உங்களுக்கு ‘பிலிம்’ காட்டலாம் என்று இருக்கிறேன். தயாரா?
இது ஒரு சங்கத்தமிழ் குறும்படம்.

 

மூலக் கதையாசிரியர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
திரைகதை, வசனம், இயக்கம்: திரு சொக்கன்
கதை என்ன?
காதலனும் காதலியும் திருமணம் செய்துகொள்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். காதலியின் தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள், வழியில் சந்தித்த சிலரிடம் விசாரிக்கிறாள்.
“என்னுடைய மகள் ஒருத்தியும், இன்னொருத்தியின் மகனான ஒருவனும் காதல் கொண்டார்கள். இன்றைக்கு அந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஆகவே, ஊரை விட்டுக் கிளம்பி இந்தக் காட்டுப் பாதையில் சென்றுவிட்டார்கள். அப்படிப்பட்ட யாரையும் நீங்கள் பார்த்தீர்களா? சொல்லுங்கள்!”
மேலும் படிக்க: