bloggers · Tamil bloggers

விருது வாங்கலையோ …விருது!

Dear All,
 
Please visit my blog in the following Link.
 
There is an award waiting for you. kindly accept it.

 
 
Yours faithfully,
Vai. Gopalakrishnan
ஜூலை 31 ஆம் தேதி இந்தக் கடிதம் திரு வை.கோ. அவர்களிடம் இருந்து வந்தது.
‘Dear all,’ என்று போட்டு எனக்கு வந்திருக்கிறதே என்று சற்று யோசனை.
கொஞ்ச நேரம் ஆயிற்று…..அந்த ‘all’ இல் நானும் ஒருவள் என்று தெரிந்து கொள்ள!
அவர் கொடுத்த இணைப்பில் போய் பார்த்தால்………கிட்டத்தட்ட என்னைப்போல 108 பதிவர்களுடன் இந்த விருதினை பகிர்ந்து கொண்டிருக்கிறார் திரு வை.கோ. என்று தெரிய வந்தது.
ப்ளாக்ஸ்பாட்-டில் இருப்பவர்கள் இதை உடனே தங்கள் side-bar இல் போட்டுக் கொண்டு விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பேசாமல் இருந்து விட்டேன்.
                                                                                                              முதல் விருது!
                                                                                                  
தனக்கு வந்த 11 வது விருதினையும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டார் திரு வை.கோ., இதை நான் சொல்ல மறந்ததை சுட்டிக் காட்டி இணைப்பும் கொடுத்துள்ள வை.கோ அவர்களுக்கு நன்றி. மறந்து போனதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
எத்தனை பெரிய தப்பு இது! வை.கோ அவர்கள் பெரிய மனது பண்ணி மன்னிப்பார் என்று நம்புகிறேன்.
                                                                                                               இரண்டாவது விருது!
                                                                                                                  
இன்னும் ஒரு மாதம் கழித்து இன்னும் ஒரு விருது. இந்த முறையும் திரு வை.கோ. அவர்கள் தான் வாங்கிய விருதினை
எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.  அவரது கடிதம் கீழே:
அன்புடையீர்,
 
வணக்கம்.
 
இன்று நான் பெற்ற மேலும் ஓர் விருதினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:
 
 
தயவுசெய்து வருகை தந்து விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு தங்கள் பிரியமுள்ள
 
VGK
                                                                                                               மூன்றாம் விருது!

போனமுறை எல்லோருடைய பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விருதினைக் பகிர்ந்து கொண்டவர், இந்த முறை அத்தனை பதிவாளர்களின் வலைத்தளத்தின் இணைப்புகளையும்  (108 இணைப்புகள்!) அவரவர் பெயர்களின் கீழ் சேர்த்திருந்தார்!

வித விதமானஇனிப்பு, கார வகைகளுடன், நுரை பொங்கும் காபி யுடன்…… சின்னச்சின்ன பரிசுப்பொருட்களுடன்…. பரிசு

பெற்றவர்கள் நேரில் சென்று வாங்கவில்லை என்ற ஒரு குறைதான்!

அதுகூட இந்தப் படங்களை பார்த்தவுடன் உற்சாகமாக மாறிவிட்டது.

இந்த அதிசய மனிதர் மூலம் எனக்கு இன்னொரு மகுடம் காத்திருக்கிறது! அது……

வரும் திங்கட்கிழமை வரை காத்திருங்கள் ப்ளீஸ்…..!

வை.கோ அவர்களே! நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…!

Advertisements

15 thoughts on “விருது வாங்கலையோ …விருது!

    1. ஆமாம், வெங்கட்!
      உங்களைப் போன்றவர்கள் எல்லாம் சிறப்பித்த வலைச்சரத்தில் நான் என்ன செய்ய முடியுமென்று தெரியவில்லை.

      திரு சீனா, திரு வை.கோ., இருவரின் பெயரையும் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை!

  1. அன்புக்கும் மரியாதைக்கும் உகந்த திருமதி ரஞ்சனி நாராயணன் மேடம். அவர்களே, வணக்கம்.

    நான் அன்புடன் பகிர்ந்துகொண்ட மூன்று விருதுகளில் இரண்டை மட்டும் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளது எனக்கு மகிழ்வளிக்கிறது. மற்றொன்றை சந்தோஷத்தில் தாங்கள் மறந்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.

    நினைவூட்டலுக்காக இதோ கீழே இணைப்புக் கொடுத்துள்ளேன். அதில் Serial No. 16 உங்களுடையது தானே.!

    http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    Serial No, 16

    மேலும் பல விருதுகள் பெற்று எழுத்துல்லகிலும், இல்வாழ்க்கையிலும் ஜொலித்திட என் மனமார்ந்த ஆசிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள்.,

    அன்புடன்
    VGK

    1. ரொம்ப ஸாரி! இதோ மூன்றாவது விருதையும் போட்டுக் கொண்டு விடுகிறேன்.

      மேடம் என்றெல்லாம் கூப்பிட வேண்டாம்.

      உங்களது மனமார்ந்த ஆசிகளுக்கு நன்றி!

  2. //இந்த அதிசய மனிதர் மூலம் எனக்கு இன்னொரு மகுடம் காத்திருக்கிறது! அது……

    வரும் திங்கட்கிழமை வரை காத்திருங்கள் ப்ளீஸ்…..!//

    அடடா அது என்னவென்று எனக்கே தெரியவில்லையே! தெரியாமல் என் தலையே வெடித்துவிடும் போல உள்ளதே! சரி திங்கட்கிழமை வரை தலையைப் பிய்த்துக்கொள்ளத்தான் வேண்டும் போலிருக்கு,

    //வை.கோ அவர்களே! நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…!//

    என்னங்க நீங்க? ஏதேதோ பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுகிறீர்கள்.!

    திறமையானவர்களைத் தேடித்தான் எல்லா வாய்ப்புகளும் தானே ஓடி வரும்.

    ஏதோ நம்மிடம் அட்ரஸ் கேட்டிருப்பார்கள்.

    ”இதோ இங்கே இருக்காங்க பாருங்க” என வழி சொல்லி அனுப்பியிருப்போம். வேறொன்றும் அறியேன் பராபரமே!.

    அன்புடன்
    VGK

    1. ஆஹா.. உங்கள் கதைகளில் வரும் நகைச்சுவையை பின்னூட்டத்திலும் புகுத்தி இருக்கிறீர்களே!

      வேறொன்றும் நான் அறியேன் பராபரமே! – சூப்பர்!

  3. வாழ்த்துக்கள் அம்மா…

    ///ப்ளாக்ஸ்பாட்-டில் இருப்பவர்கள் இதை உடனே தங்கள் side-bar இல் போட்டுக் கொண்டு விட்டார்கள். ///

    wordpress-ல் செய்ய முடியாதா அம்மா…?

    1. போட முடியாது. html code வேண்டும்.
      அதேபோல நீ பின்தொடரும் வலைபதிவுகளில் புதிய பதிவு வந்தால் உன் தளத்தில் அதுவும் வருகிறது, இல்லையா? அதுபோல வோர்ட்பிரஸ் – இல் முடியுமா என்றும் தெரியவில்லை!

  4. வோர்ட்பிரஸ்ஸில் இது கொஞ்சம் கடினம் தான். வெறும் ஆர்.எஸ்.எஸ். பீட் கொடுத்து மற்றத் தளங்களின் புது இடுகைகளைப் பார்க்கலாம். இது நாமே நம் தளத்தில் செய்துக் கொள்ள வேண்டும்.

  5. விருதுகளுக்கெல்லாம் தகுதியானவர்தான் நீங்கள்மா. வை.கோ, ஸாரிடமிருந்து விருது பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள். இன்று முதல் வலைச்சரத்தில் உங்களைக் காணலாம என்பது நீங்க தற்திருக்கற கூடுதல் ஸ்வீட், அசத்துங்க, தொடர்ந்து வருகிறேன் அங்க,.

  6. விருதெல்லாம் யார் கொடுக்கிறா ,எப்படி கொடுக்கிறான்னு தெறியாது. விருதுவாங்கினது எனக்குக் கூட சொல்லலியே ரஞ்ஜனி.பாராட்டுகள்.எல்லாமே நான் பார்ப்பது தாமதமாகிவிடுவதால் என் பின்னூட்டமும் தாமதம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s