விருது வாங்கலையோ …விருது!

Dear All,
 
Please visit my blog in the following Link.
 
There is an award waiting for you. kindly accept it.

 
 
Yours faithfully,
Vai. Gopalakrishnan
ஜூலை 31 ஆம் தேதி இந்தக் கடிதம் திரு வை.கோ. அவர்களிடம் இருந்து வந்தது.
‘Dear all,’ என்று போட்டு எனக்கு வந்திருக்கிறதே என்று சற்று யோசனை.
கொஞ்ச நேரம் ஆயிற்று…..அந்த ‘all’ இல் நானும் ஒருவள் என்று தெரிந்து கொள்ள!
அவர் கொடுத்த இணைப்பில் போய் பார்த்தால்………கிட்டத்தட்ட என்னைப்போல 108 பதிவர்களுடன் இந்த விருதினை பகிர்ந்து கொண்டிருக்கிறார் திரு வை.கோ. என்று தெரிய வந்தது.
ப்ளாக்ஸ்பாட்-டில் இருப்பவர்கள் இதை உடனே தங்கள் side-bar இல் போட்டுக் கொண்டு விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பேசாமல் இருந்து விட்டேன்.
                                                                                                              முதல் விருது!
                                                                                                  
தனக்கு வந்த 11 வது விருதினையும் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டார் திரு வை.கோ., இதை நான் சொல்ல மறந்ததை சுட்டிக் காட்டி இணைப்பும் கொடுத்துள்ள வை.கோ அவர்களுக்கு நன்றி. மறந்து போனதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
எத்தனை பெரிய தப்பு இது! வை.கோ அவர்கள் பெரிய மனது பண்ணி மன்னிப்பார் என்று நம்புகிறேன்.
                                                                                                               இரண்டாவது விருது!
                                                                                                                  
இன்னும் ஒரு மாதம் கழித்து இன்னும் ஒரு விருது. இந்த முறையும் திரு வை.கோ. அவர்கள் தான் வாங்கிய விருதினை
எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.  அவரது கடிதம் கீழே:
அன்புடையீர்,
 
வணக்கம்.
 
இன்று நான் பெற்ற மேலும் ஓர் விருதினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதற்கான இணைப்பு இதோ:
 
 
தயவுசெய்து வருகை தந்து விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு தங்கள் பிரியமுள்ள
 
VGK
                                                                                                               மூன்றாம் விருது!

போனமுறை எல்லோருடைய பெயர்களை மட்டும் குறிப்பிட்டு விருதினைக் பகிர்ந்து கொண்டவர், இந்த முறை அத்தனை பதிவாளர்களின் வலைத்தளத்தின் இணைப்புகளையும்  (108 இணைப்புகள்!) அவரவர் பெயர்களின் கீழ் சேர்த்திருந்தார்!

வித விதமானஇனிப்பு, கார வகைகளுடன், நுரை பொங்கும் காபி யுடன்…… சின்னச்சின்ன பரிசுப்பொருட்களுடன்…. பரிசு

பெற்றவர்கள் நேரில் சென்று வாங்கவில்லை என்ற ஒரு குறைதான்!

அதுகூட இந்தப் படங்களை பார்த்தவுடன் உற்சாகமாக மாறிவிட்டது.

இந்த அதிசய மனிதர் மூலம் எனக்கு இன்னொரு மகுடம் காத்திருக்கிறது! அது……

வரும் திங்கட்கிழமை வரை காத்திருங்கள் ப்ளீஸ்…..!

வை.கோ அவர்களே! நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை…!