bloggers · Humour · Internet · Tamil bloggers

ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவு!

 

தலைப்பு எங்கே……?

‘நாமாக நாம்’ இருந்து யோசித்தால் எழுத விஷயம்  நிறையக் கிடைக்கும். சில சமயங்களில் நம் பதிவுகளிலிருந்தே புது புது விஷயங்கள் கிடைக்கலாம்.

தினமும் என் பதிவுகளை வாசிக்க வருபவர்கள் எதைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்பேன். பாதிக்கு மேற்பட்டவர்கள் ‘உடல் மெலிய’ ‘இரண்டு மாதத்தில் உடல் இளைக்க’, ‘உடனடியாக இளைக்க’ என்று தேடிக் கொண்டு வந்திருப்பார்கள். அது எப்படி ‘உடல் மெலிய’ என்று என் வலைதளத்திற்கு வருகிறார்கள் என்பது பெரிய புதிர்!  நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பது அவர்களுக்கு எப்படித்  தெரியும் என்பது அதைவிடப் புரியாத புதிர்!

அதேபோல அழகுக் குறிப்புகளுக்காகவும் என் வலைதளத்திற்கு வருவார்கள். ‘உடல் மெலிய’ குறிப்புகள் கொடுக்க நான் கொஞ்சம் (‘கொஞ்சம் அல்ல; நிறைய நீ யோசிக்க வேண்டும்’- இது என் மனசாட்சி) யோசிப்பேன். அழகுக் குறிப்பு கொடுக்க யோசிக்கவே மாட்டேன். அழகுக் குறிப்பு கொடுக்க அழகாக இருக்க வேண்டும் என்று இல்லையே!

‘உடல் மெலிய’ குறிப்பு கொடுக்க முடியாத குறையை ‘புகைப்படத்தில் ஸ்லிம் ஆகத் தெரிய’ குறிப்புகள் கொடுத்துப் போக்கிக் கொண்டேன்!

ஒரு வாசகி என்னுடைய ‘முகத்தின் அழகு மூக்குத்தியிலே’ படித்துவிட்டு மூக்குத்தி பற்றிய உங்கள் சொந்தக் கதையை எழுதுங்களேன் என்று கருத்துரை இட்டு இருக்கிறார். எழுதிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு, அவருக்கு விரைவில் எதிர்பாருங்கள் என்று பதிலும் எழுதி விட்டேன். மனதில் இப்போதே இப்போதே என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஏகத்துக்கு யோசனைகள்!

‘மூக்குத்தியும் நானும்’, ‘நானும் என் மூக்குத்தியும்’, ‘நானும் என் வைர மூக்குத்தியும்’(!!), நானும் என் 8 கல் வைர பேசரியும்’ (உனக்கே இது கொஞ்சம் ‘ஓவர்’ ஆகத் தெரியல?’ – மறுபடியும் மனசாட்சி!)

அடடா! எத்தனை அருமையான ‘பளபள’, ‘ஜிலுஜிலு’ தலைப்புகள்!

நிறையபேர் என்னைக் கேட்கும் கேள்வி இது:

பதிவு எழுதுவதால் என்ன பயன்? எனக்கு வியப்பாக இருக்கும். என்ன கேள்வி இது? படிப்பதனால் என்ன பயன்? படிப்பதுதானே? அதுபோலத்தான் இதுவும். என்ன பயன்? எழுதுவதுதான்! படிப்பதும் படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதும் தரும் இன்பம் வேறு எதில் கிடைக்கும்?

சில சமயம் தனிமையில் யோசிப்பதும் உண்டு. சற்று சிந்தித்தால் ‘பதிவர்’ என்ற அடையாளம் கிடைக்கிறது. எழுத்தாளர் என்றால் எதில் எழுதுகிறீர்கள் என்பார்கள். ‘ஓ!, நான் அந்தப் புத்தகம் படிப்பதில்லை’ என்று பதில் வரும்.

பதிவர் என்றால் இந்தக் கேள்வியே வராது. நம் எழுத்துக்கள் அச்சில் வருமா, வராதா என்ற கவலை இல்லை; நாமே அச்சேற்றி விடலாம். இதைவிடப் பயன் வேறு என்ன வேண்டும்?

அடுத்து என்ன எழுதுவது என்று மனதில் சதா ஒரு சிந்தனை, அதற்கான தேடல்கள், ஆயத்தங்கள்  இவை நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த ஒரு பலன் போதாதா?

திரைப்படத்துக்கும் மேடை நாடகத்துக்கும் உள்ள வேறுபாடுதான்  பதிவர் என்பதற்கும் எழுத்தாளர் என்பதற்கும்  என்று கூடச் சொல்லலாம். திரைப்படம் வெளிவந்த பிறகே விமரிசனம். மேடை நாடகங்கள்  அரங்கேறும்போதே கைத்தட்டல் அல்லது அழுகின தக்காளிகள் – இரண்டுமே பறக்கும்!

பத்திரிகை வெளிவந்தபின் தான் நம் எழுத்து வெளிவந்திருக்கிறதா என்றே தெரியும். வலைத்தளத்தில் பதிவை வெளியிட்டவுடன் பின்னூட்டம் வந்துவிடும் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் இல்லையா?

முகம் தெரியாத பலரின் நட்பு கிடைக்கும். எந்தவித பாசாங்குகளும் இல்லாத, எழுத்துக்களை மட்டுமே அடையாளமாகக் கொண்ட நட்பு! பதிவு நன்றாக இருந்தால் பின்னூட்டம் இடலாம். இல்லையென்றால் சும்மா இருந்துவிடலாம்! எவ்வளவு சௌகரியம்! சிலசமயங்களில் நம் கருத்துக்களையும் நாசூக்காகத் தெரிவிக்கலாம். யாரும் யாருக்கும் எந்தவிதத்திலும் கட்டுப் பட்டவர்கள் இல்லை.

இவை எல்லாவற்றையும் விட, பிறர் எழுதும் எழுத்துக்களிலிருந்து நாம் கற்பது இருக்கிறதே, அதை எதனுடனும் ஒப்பிட முடியாது.

படிப்போம், எழுதுவோம் கற்போம்!

 

 

தொழிற்களத்தில் என் இன்றைய பதிவு:

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7945.html

Advertisements

12 thoughts on “ஒரு பதிவிலிருந்து அடுத்த பதிவு!

 1. தொழிற்களத்தில் அருமையாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்…, வாழ்த்துக்கள்!

  எழுதக்களில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை கொண்டு என்னை போன்ற புதியவர்களை செதுக்குங்கள்… நன்றி!

 2. இதைப் படித்தவுடனே சின்னச் சின்ன மூக்குத்தியாம், சிகப்பு கல்லு மூக்குத்தியாம் பாட்டு மனஸில் வந்தது. பார் உன் மூக்குத்திகூட மனஸில் பதிந்து பதிவு கேட்கிறார்கள். நன்றாக இருக்கு மூக்குத்தியும்.

  1. என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு, உங்களைப் போன்ற சான்றோர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறதே, எவ்வளவு பேருக்கு இது வாய்க்கும்?
   நன்றி டாக்டர் அவர்களே!

   நீங்கள் என் எழுத்துக்களைப் படிப்பது மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது!

 3. ரஞ்ஜனி,

  படிப்பதில் ஒரு சுகம் இருப்பதுபோலவே எழுதுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.நல்ல பதிவு.

  iPad இருப்பதால் படத்தைப் பெரிதாக்கி மூக்குத்தியைப் பார்த்துவிட்டேன். இல்லையென்றால் இப்பதிவுக்கான படம் மாதிரி முயற்சித்திருப்பேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s