bloggers · Humour · Tamil bloggers

பதிவு எழுத மூடு வேண்டுமா?

மூடு இல்லை…….!

வேண்டும் – வேண்டாம் இரண்டு பதில்களையும் சொல்லலாம். சில நாட்கள் மிகவும் சுலபமாக எழுத்துக்கள் தாமாகவே வரும்; வளரும்; வடிவு பெறும். சில நாட்கள் என்ன செய்தாலும்……..ஊஹூம்!

அப்போது என்ன செய்வது? அதையே ஒரு பதிவாகப் போட்டுவிடலாம். ‘என்ன எழுதுவது? எதை எழுதுவது?’ என்ற தலைப்பில்! அல்லது இதேபோல வேறு ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எழுதுங்கள்.

சிலருக்கு ஓட்டலில் ரூம் போட்டு எழுதினால் தான் வரும்; சிலருக்கு பூங்காவில் போய் உட்கார்ந்தால்தான்  கற்பனைச் சிறகடிக்கும்; இல்லையானால் சிறகு முறிந்துவிடும். இதைபோல நீங்கள் கேட்டது, படித்தது இதையெல்லாம் வைத்து ஒரு பதிவு தேற்றலாம். கொஞ்சம் கற்பனை சேர்த்தால் நகைச்சுவை பதிவு எழுதலாம்.

பதிவு எழுத மூடு இல்லாதபோது நீங்கள் முன்பு (மூடு இல்லாத போது) எழுதிய, பாதியில் நிற்கும் பதிவுகளை பூர்த்தி செய்யலாம்.

எப்போதுமே ஒரே ரீதியில் எழுதிக் கொண்டே இருக்க முடியாது என்பது மிகவும் உண்மை. மலை ஏறுபவன் எத்தனை  நேரம் ஏறுவான்? சம பூமிக்கு வரத்தான் வேண்டும் இல்லையா? அதேபோலத்தான் எழுதுவதும்.

தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அடுத்த நாள் எழுதப் போவதற்கு இன்றே முன்னுரை எழுதி வைத்துக் கொள்ளலாம். சிறுசிறு குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டால் அடுத்து அடுத்து எழுத உதவியாயிருக்கும்.

ஆனால் எழுத வேண்டும் என்ற அக்கினி குஞ்சு ஆறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எழுத வேண்டும் என்கிற உந்துதல் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

எப்போதோ நீங்கள் கேள்விப்பட்ட செய்தி, தினசரி செய்தித்தாளில் படித்த செய்தி மனதில் ஒரு மூலையில் உறங்கிக் கொண்டு இருக்கும். அதை தட்டி எழுப்பி வார்த்தைகளில் கொட்டி விடலாம்.

சில தலைப்புகள் சாகா வரம் பெற்றவை. சா.வ.பெ. வரிசையில் முதல் இடம் அழகுக் குறிப்பு, சமையல் குறிப்பு இவைகள் தான்.

சமையல் அறை அரசிகளான நமக்கு சமையலறைப் பொருட்களை வைத்துக்கொண்டு சமையலும் செய்ய வரும். அழகுக் குறிப்பும் சொல்ல வரும், இல்லையா?

உதாரணமாக, என் யோகா தோழி ஜ்யோதி ஒருநாள் வகுப்பில் சொன்னாள்: “இன்னிக்கிக் காலையில் ஓட்ஸ் இட்லி செய்தேன்……” எல்லோருக்கும் வியப்பு. ஓட்ஸ் இட்லியா, எப்படி செய்வது?

“ஓட்ஸ் கொஞ்சம் எடுத்து நீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இட்லி மாவைச் சேர்த்து நன்றாக கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி விடுங்கள். ஓட்ஸ் இட்லி தயார்!”

வீட்டுக்கு வந்தவுடன் தோசை மாவுதான் இருந்தது. ஊற வைத்த ஓட்ஸ் கலந்து தோசையாக வார்த்தேன். நன்றாகவே இருந்தது. நாளை வகுப்பில் சொல்லி விட வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே போனேன்.  அத்துடன் ஓட்ஸ் வைத்துச் செய்துகொள்ளும் ஒரு அழகுக் குறிப்பும் நினைவுக்கு வந்தது.

அடுப்படியில் நின்று கொண்டே ஓட்ஸ் தோசை செய்து மங்கிப் போன முகத்திற்கு ஊற வைத்த ஓட்சை தேய்த்துக் கொண்டால் (scrubber போல) இறந்துபோன செல்கள் உதிர்ந்து முகம் பொலிவுறும் என்பதுதான் அது.

இரண்டையும் சொன்னேன். அன்றைக்கு வகுப்பில் நான்தான் கதாநாயகி!

இதைப்போல நீங்களும் நிறைய எழுதலாம். ஒரு எச்சரிக்கை: ஓட்ஸ்ஸுக்குப் பதிலாக சீரகம் மிளகு என்று எழுதிவிடாதீர்கள் அழகுக் குறிப்பில்!

மீண்டும் நாளை…..!

 

தொழிற் களத்தில் வெளியான என் இடுகை இது: http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_1821.html

Advertisements

22 thoughts on “பதிவு எழுத மூடு வேண்டுமா?

 1. செம பதிவு. சூப்பர் நடை. உங்கள் எழுத்துகளை முதல் முறை படிக்கிறேன். என்னுடைய நிலமையும் “எழுத மூட் இல்லை”. என்னமோ எனக்கே இது எழுதப் பட்டது போல உள்ளது…..

  தமிழ் தம்பி : “தொடர்ந்து எழுத வேண்டும்……” இந்த பத்தியில் உள்ளவற்றை சரிவர செய்து வருகிறார்.

  இந்த ஓட்ஸ் மேட்டர் நன்கு. வீட்டில் சொல்லி உள்ளேன். உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது, உங்க சென்ஸ் ஆப் humor. நானும் சீக்கரம் எழுதுகிறேன்!!!

  நாற்சந்தியிலிருந்து,
  ஓஜஸ் 🙂

  1. தங்கள் வரவு நல்வரவு (தொடர்ந்து….) ஆகுக! எழுதுங்கள் எழுதுவதில் இருக்கும் மகிழ்ச்சி ஈடில்லாதது.

   வீட்டில் அவங்களும் என்னை மாதிரியேவா?

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஓஜஸ்!

 2. //எழுதுவதில் இருக்கும் மகிழ்ச்சி ஈடில்லாதது.

  அண்ணன் ஓஜஸ் அவர்கள் உங்கள் பதிவை ஃபார்வர்டு செய்து படிக்கச் செய்தார்.

  இத்தனை நாள் எப்படி மறந்து போனேன் என்று தெரியவில்லை உங்கள் தளத்தைத் தொடர. ஆனால் இனி கவலையில்லை. தொடர்ந்து (உங்கள் தளத்தில்) வாசிப்பில் இருந்தால் எழுதுவது ஒன்றும் பெருங்காரியமில்லை.

  நன்றிகளுடன்
  தமிழ்

 3. அருமை. எனக்கு பல சமயங்களில் உட்கார்ந்து யோசித்தும் வராத விஷயங்கள் மின்னல் போல ஒரு ப்ளாஷில் தொடர்ந்து எழுதி முடித்த அனுபவங்கள் நிறைய. நீங்க சொன்ன மாதிரி விஷயம் எழுத வராததையே ஒரு பதிவாக்கிடறது சூப்பர் ஐடியா. நன்றிங்க.

  1. என் தளத்திற்கு நீங்கள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது டாக்டர் ஐயா!
   It is a great honor!
   வருகைக்கும் கருத்துரைக்கும் உளமார்ந்த நன்றிகள்!

 4. உங்கள் அனுபவத்தையே பதிவாக எழுதி இருக்கிறிர்கள்..அருமை…

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

 5. மிக அருமையான பகிர்வு……..உங்கள் பகிர்வுக்கு நன்றி…

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 6. ஏதாவது ஒரு விஷயத்தை இன்று கண்டிப்பாக எழுதவேண்டும் என நினைத்து எழுத ஆரம்பித்துவிட்டாற்கூட போதும். முடிவு வரும்.
  எழுதமுடியலியே என்ற நினைப்பு வரும் பட்சத்தில் அதே எண்ணம்தான்
  மேலோங்கி நிற்குமே தவிர சிந்தனை வராது. கொஞ்சம் அமைதிகூட வேண்டும். நீ சொன்ன மாதிறி அதையே எழுத்தில் வடிக்கும் திறமையும் கொஞ்சம் வேண்டுமே. சொல்லிலே கலைவண்ணம் காட்டச் சொல்கிறாய். அருமையான சொல்லிலே ஒரு கலை வண்ணத்தை

  உன் இந்தக் கட்டுரையில் பார்க்க முடிகிறது. ஸந்தோஷம்

 7. வாருங்கள், காமாட்சி அம்மா! இப்போதுதான் உங்கள் வெங்காய ஓலன் என்னவருக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டு இருந்தேன். நேற்று நீங்கள் எழுதியதற்கு இன்று பதில் எழுதுகிறேன்.

  அமைதி கட்டாயம் வேண்டும். எழுதும்போது சில சமயம் இவர் கூப்பிடுவது கூட கேட்காது!

  மனதிற்குள் ஓடும் எண்ணங்களை எழுத்தில் கொண்டுவருவது அத்தனை சுலபமில்லை என்று சில சமயம் தோன்றும்.

  நன்றி!

 8. சில நாட்கள் என்ன செய்தாலும்……..ஊஹூம்!//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா… ஏன் கேக்குறீங்க… நானும் பத்துநாளா எதாவது எழுதிடலாம்னு பாக்குறேன்.. ம்ஹூம்…. ஒன்னும் தேறல! 😦

  1. வாங்க ஆமீனா!
   சிலநாட்கள் எனக்கும் இப்படி ஆகும். ஒரு முறை Spider Solitaire விளையாடுவேன். உங்களுக்கும் தெரிந்து இருக்கும்.

   அதைபோல வேறு ஏதாவது செய்ய ஆரம்பியுங்க ….அப்புறம்….ஆஹா…வந்திருச்சி…பாட்டுப் பாடிக் கொண்டே எழுத ஆரம்பித்து விடுவீர்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s