bloggers · Internet · Tamil bloggers

பதிவில் உங்கள் அனுபவ முத்திரை!

போன பதிவில் வலைபதிவர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தேன். திரு திண்டுக்கல் தனபாலன் எனது வலைப்பதிவில் ஒரு கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே அதைக் கொடுக்கிறேன்:

// “ஒரு பதிவு எழுதுவதற்கு முன், அந்தப் பதிவை மேலும் மெருகூட்ட, அந்தப் பதிவிற்கான புத்தகங்கள் தேட வேண்டும்… படிக்க வேண்டும்…” என்று எழுத நினைத்தேன்…

அப்படிச் செய்தால் பல புத்தகங்கள் படித்தது போலவும் ஆகும்… நாமும் நிறைய தெரிந்து கொள்ளலாம்… மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்… (அதை விட மகிழ்ச்சி ஏது ?)

தெய்வம் இருப்பது எங்கே ? என்னும் பதிவை எழுதுவதற்கு பல புத்தகங்களை படிக்க வேண்டி இருந்தது… அத்தனையும் எழுதி விட்டேன்… பார்த்தால் அனுமார் வால் போல், பதிவு ரொம்ப நீ…ள…ம்… பிறகு மாற்றி உரையாடல் போல் எழுதி முடித்தது ஒரு தனிக்கதை… (அதுவும் உரையாடல் போல் எழுதுவது சிறிது சிரமம் தான்)//

வலைபதிவர்கள் படிக்க வேண்டும்; குறிப்பாக ஒரு வலைபதிவை எழுதப் போகும் முன் சற்று ‘வீட்டுப்பாடம்’ செய்ய வேண்டும்! மிக அருமையான கருத்து திரு தனபாலன்! நன்றி!

இவரது வலைப்பதிவுகள் தனித்துவம் பெற்று இருப்பதற்கு இதுதான் காரணம்.

படித்ததை அப்படியே எழுதி விடலாமா? கூடாது. எழுதும் விஷயத்தில் சிறிது அனுபவம் கலந்து கொடுத்தால் சுவாரஸ்யமான பதிவு கிடைக்கும். உங்களது, உங்கள் நண்பர்களது அனுபவம் நீங்கள் எழுதப் போகும் விஷயத்திற்கு சம்மந்தப்பட்டிருந்தால் அதையும் சேர்த்து எழுதுங்கள்.

ஒரு சின்ன உதாரணம்:

ஒரு நாள் காலை டெக்கான் ஹெரால்ட் தினசரியில் ‘Spoonerism’ என்று ஒரு சிறிய கட்டுரை வந்திருந்தது. அதாவது ஆங்கிலத்தில் பேசும்போது வேடிக்கைக்காக இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்தை மாற்றி பேசுவது:

‘Mixed Words’ என்பதை ‘Wixed Mords’ என்று சொல்லுவது. சில உதாரணங்கள்:

When I was young I loved tairy fales.

My favorites are “Beeping sleauty” and “Back and the Jean stalk.”

I often wumble with my fords!

டாக்டர் வில்லியம் ஆர்ச்பால்ட் ஸ்பூனர் (Reverand Dr. William Archebald Spooner) என்பவரது பெயரால் இந்த ஸ்பூனரிஸம் வழங்கப்படுகிறது.

இவர் சொன்ன மிகப் பிரபலமான ஸ்பூனரிஸம் ஒன்று:

I received a crushing blow என்பதற்கு பதில் I received a blushing crow! என்று சொன்னாராம்.

இதைப்படித்த உடன் எனக்கு நாங்கள் சின்னவர்களாக இருந்த போது என் அம்மா பேசும் ‘க’நா பாஷை நினைவுக்கு வந்தது! இதை இரண்டையும் சேர்த்து ஒரு பதிவு (“க” நா பாஷை தெரியுமா?) என்று எழுதினேன்.

அதில் நான் சொல்ல மறந்த விஷயத்தை இங்கு சொல்லுகிறேன்: ‘சந்திரலேகா’ என்று அந்தக் காலத்தியப் படம் (பார்த்திருக்கவில்லை என்றாலும் இந்தத் தலைமுறையினர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்) அதில் என்.எஸ். கலைவாணர் அரச மாளிகையில் அடைபட்டு இருக்கும் சந்திரலேகாவைப் பார்க்க மாளிகை வாசலுக்கு வருவார். இங்கிருக்கும் காவலாளிகளிடம் தான் வெளியூர் என்று சொல்லி உள்ளே நுழைய முயலுவார். உள்ளே போக முடியாது. கூட இருக்கும் டி.ஏ. மதுரத்திடம் இங்கேயே உட்காரலாம் என்பதை ‘உரையிலே தக்காரு’ (தரையிலே உக்காரு) என்பார். அந்தக் காலத்திலேயே ஸ்பூனரிஸம் பயன்படுத்திய மேதை அவர்.

இன்னொருமுறை அடுத்த மாதம் ‘புதுமைச் சிறப்பிதழ்’வாசகிகளின் கதை கட்டுரை வரவேற்கப்படுகின்றன என்று ‘மங்கையர் மலர்’ புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.

என்ன எழுதுவது? அப்போதெல்லாம் சன் தொலைக்காட்சியில் ‘……….வாரம்’ என்ற பெயரில் திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். இப்போதும்தான்!

உடனே எனக்குள் ஒரு ‘பல்ப்’! ‘பழையது வாரம்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதினேன். ஒரு வாரம் முழுவதும் பழைய படங்களைப் போடுகிறார்கள். ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் பேரன் பேத்திகளுக்குப் பழைய படம் என்றாலே மிகவும் இளப்பம். தினமும் தாத்தா பாட்டியை திரைப்படங்கள் பார்க்க விடாமல் ரகளை செய்கிறார்கள். கடைசி நாளன்று இந்த’சந்திரலேகா’ படத்தை பார்த்து வியந்து போவது போலவும் ‘பழமையிலும் ஒரு புதுமை இருக்கும்’ என்று குழந்தைகள் சொல்வது போலவும் முடித்திருந்தேன்.

அம்மாவின் கைசாப்பாடு எப்பவுமே ருசிக்கும். ஏன்? அறுசுவையுடன் அன்பு என்னும் ஏழாவது சுவையையும் கலந்து கொடுக்கிறார்.

அதேபோல நீங்களும் படித்ததையும் உங்கள் அனுபவத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் உங்கள் வலைப்பதிவு எல்லோரையும் கவரும்.

http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_7845.html

Advertisements

10 thoughts on “பதிவில் உங்கள் அனுபவ முத்திரை!

 1. நிறைய விஷயம் தெரிஞ்சிக முடியுதும்மா உங்க பதிவு வாசித்தால்!!! பதிவிற்கு மிக்க நன்றி!!
  நான் கூட சிறு வயதில் ‘கா” பாஷை பேசி இருக்கிறேன்.. அது குடும்ப பாஷை போல நாங்கள் மட்டும் பேசுவோம் மற்றவர்க்கு புரியாதபடி…

 2. //அதேபோல நீங்களும் படித்ததையும் உங்கள் அனுபவத்தையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்தால் உங்கள் வலைப்பதிவு எல்லோரையும் கவரும்.//

  சரியான விதத்தில் முடித்த பகிர்வு… கா பாஷை, ட்ல பாஷை என நானும் பேசியிருக்கிறேன்…. அது நினைவில் வந்தது!

  1. ஒரு பதிவின் வெற்றி என்பது படிக்கிறவர்கள் தங்களுக்கும் இந்தப் பதிவுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை உணர்வதுதான், இல்லையா?

   நன்றி திரு வெங்கட்!

  1. இவற்றையெல்லாம் எழுதுங்கள். உங்கள் பள்ளி அனுபவங்கள், மாணவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் என்று உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

   உங்கள் வலைபயணத்திற்குஇப்போதே என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s