bloggers · Internet · Life · Tamil bloggers

என் சொந்தப் படைப்புகளே என் வலைப்பதிவில்!

25.9.2012 இதழ் ‘அவள்’ விகடனில் என்னுடைய வலைப்பதிவு பற்றி ‘வலைப்பூவரசி !’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தகவலை வெளியிடும் அதே நேரத்தில், அந்தச் செய்தியில்  ‘பத்திரிகைகளில் வந்த தன்னுடைய படைப்புகளை பகிர்ந்து இருக்கிறார். குறிப்பாக பிற வலைதளங்களில் இடம் பெற்றுள்ள முக்கியமான பதிவுகளை சுட்டிக் காட்டுகிறார்’ என்று குறிப்பிட்டு இருப்பது வேறு விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று தோன்றுகிறது.

வேறு யாருடைய பதிவுகளையோ நான் என் பதிவில் போட்டிருப்பது போல!

முதல்முதலில் நான் வலைபதிவு ஆரம்பிக்கும் முன்பே Instamedia.com, a2ztamilnadunews.com ஆகியவற்றில் ஆங்கிலத்தில் எழுதி வந்தேன்.  சில மாதங்கள் கழித்து a2ztamilnadunews.com – இல் தமிழில் எழுதுங்கள் என்றார்கள். சுமார் அறுபது கட்டுரைகள் எழுதி இருந்தேன்.

அந்தக் கட்டுரைகளை போன டிசெம்பர் மாதம் வலைப்பதிவு ஆரம்பித்து பதிய ஆரம்பித்தேன். அவற்றில் சிலவற்றை எங்கள் மின்னிதழில் போட விரும்புகிறோம் என்று ooooor.com -இலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஏற்கனவே அவை வெளியிடப்பட்டு விட்டன என்று சொன்னதற்கு, எங்களுக்கும் எழுதுங்கள் என்றார்கள். வேறு வேறு கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். அவைகளையும் என் வலைப்பதிவில் போட்டேன்.

இந்த சம்பவத்திற்குப்பின் எல்லாக் கட்டுரைகளின் கீழும் published in….என்று குறிப்பிட ஆரம்பித்தேன்.  அப்போது எனக்கு இணைப்புக் கொடுக்க தெரிந்து இருக்கவில்லை. இதைத்தான் அந்தச் செய்தியாளர் ‘பிற வலைத்தளங்களில்….’ என்று எழுதிவிட்டாரோ என்று தோன்றுகிறது!

இப்போது எந்த இணையதளத்தில் என் கட்டுரை வருகிறதோ அதன் இணைப்பையும் கொடுத்து வருகிறேன்.

சில நாட்களுக்கு முன் திருமதி காமாட்சி அம்மாவைப் பற்றி திரு சைபர்சிம்மன் அவரது வலைதளத்தில் எழுதி இருந்தார். திருமதி காமாட்சி அம்மா நான் பெரிதும் மதிக்கும் வலைபதிவர். அதனால் என் தளத்தில் அந்தக் கட்டுரைக்கு இணைப்புக் கொடுத்திருந்தேன் – அதுவும் ஒரு சிறிய முன்னுரையுடன்.

இரண்டு நாட்களுக்கு முன் ‘Six lessons I learnt from my great grand mother’ என்று ஆங்கிலக் கட்டுரை படித்தேன். என் பாட்டியை நினைவு படுத்தும் இந்த பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருந்தேன்.

இவை இரண்டு தவிர மீதி 209 பதிவுகள் என் சொந்தப் படைப்புகளே!

‘அவள்’ விகடனுக்கும் இதைப் பற்றி மின்னஞ்சல் செய்திருக்கிறேன்.  அடுத்த இதழில் என் கடிதம் வரும் என்ற நம்பிக்கை!

 

 

 

 

Advertisements

30 thoughts on “என் சொந்தப் படைப்புகளே என் வலைப்பதிவில்!

 1. வாழ்த்துகள்…

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  வலைப்பூ தலையங்க அட்டவணை
  info@ezedcal.com
  http//www.ezedcal.com

 2. வாழ்த்துகள். இப்போது பத்திரிகைகளில் வலைப் பக்கங்களைப்பற்றி அறிமுகப் படுத்தவும் எழுதவும் தொடங்கி விட்டார்கள். வலைப் பக்கங்களின் தவிர்க்க முடியாத தாக்கம் சினிமா முதல் பத்திரிகைகள் வரை நான்கு உணர்ந்திருக்கின்றன. எனவே எதாவது ஒரு பக்கத்தை எங்காவது அறிய வரும்போது சம்பந்தப் பட்ட நிருபர் மேலோட்டமாகப் பார்த்து விட்டு ‘நாலுவரி’ எழுதிப் பத்திரிகைக்கு அனுப்பி விடுகிறார். உங்கள் விளக்கத்தை அனுப்பி விட்டீர்கள். குறைந்தபட்சம் அவர்களுக்காவது உண்மை தெரியட்டும். அடுத்த வலைப் பக்கத்தைப் பற்றி எழுதும்போது சற்று கவனமாக எழுதும்படி சம்பந்தப் பட்ட நிருபருக்கு சொல்லப் பட்டிருக்கலாம்!

 3. நன்றி ஸ்ரீராம்! என் புலம்பலுக்கு ஒரு இதமான பதில் கொடுத்திருக்கிறீர்கள். போனவாரம் அவள் விகடன் செய்தியாளர் தொலைபேசியில் உங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன் என்று தகவல் சொன்னார். எழுதுவதற்கு முன் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்க வேண்டும் இல்லையா?

  நன்றி ஸ்ரீராம்!

 4. ரஞ்சனி,

  முதலில் வாழ்த்துக்கள்.அவள்விகடனில் உங்க வலைப்பதிவு பற்றியும் வந்திருக்கா.சந்தோஷமான நேரத்தில் நம்மைப்பற்றிய தவறான விமர்சனத்தைப் படிக்கும்போது வேதனையாகத்தான் இருக்கும். மின்னஞ்சல் விளக்க‌ம் கட்டாயம் வரும்.கவலை வேண்டாம்.

 5. உங்கள் பதில் மிகவும் ஆறுதலாக இருக்கிறது, சித்ரா!
  ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னல் எனது கடுமையான உழைப்பு இருக்கிறது.
  நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
  நன்றி!

 6. எனக்கு கடையில் புத்தகம் தாமதமாகக் கிடைத்தது. அதற்கு முன்னர் உங்களின் இப்பதிவு பார்த்தேன். எனக்குப் ஸரியாக புரியவில்லை வலைப்பூவரசி என்ற பேரைப் பார்த்த பிரகுதான் விஷயம் புரிந்தது. இது எப்படி ஏற்பட்டது? உங்களுக்கு அவர்கள் ஸரியான பதிலைக் கொடுப்பார்கள்.
  வலைப்பூவரசி இன்னும் இரண்டுதரம் பெயரைச் சொல்லிப் பார்த்தேன். எவ்வளவு அர்த்தமுள்ள பட்டம்.
  இதை நினைத்து நான் மிகவும் ஸந்தோஷப் படுகிறேன்
  பாராட்டுகளும் உனக்கு. மற்றதை அவர்கள் திருத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு. சில ஸமயம்
  ஸந்தோஷத்தை பூரணமாக அனுபவிக்க முடியாமல்
  இப்படி ஆகிவிடுகிறது. வலைப்பூவரசியே என்னுடைய அன்பும் ஆசிகளும்.

  1. இரண்டு முறை அவள் விகடனுக்கு மின்னஞ்சலில் என் விளக்கத்தை அனுப்பினேன். delivery failed என்று வந்து விட்டது. தபாலில் தான் அனுப்ப வேண்டும் போலிருக்கிறது.

 7. இன்று தான் சமீரா அவர்களின் நதிக்கரையில் உங்களைப் பற்றிய செய்தி அவள் விகடனில் பிரசுரமானதாக தகவலறிந்தேன்.வாழ்த்துக்கள் அம்மா….ஆனால் இந்தப் பதிவைப் படிக்கையில் இதுப் போன்ற சிக்கலும் ஏற்படுமா.. என்று தோன்றுகிறது. நிச்சயம் உங்கள் உழைப்பு வீணாகாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s