self-confidence · Tips

நினைவில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்!

 

 நாம் நினைப்பது, உண்மையாக நம்புவது நம் வாழ்வில் அப்படியே நடக்கிறது. ஒரு விஷயத்தைப்  பற்றித் தொடர்ந்து நினைப்பது, ஒரு சொல்லை திருப்பித்திருப்பி உச்சரிப்பது அல்லது ஒரு செய்தியை திரும்பத்திரும்ப மனதில் நினைப்பது முதலியன மனிதனின்  செயல்களை வடிவமைக்கிறது. அதனால் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே நமக்குள் சிந்திப்போம்.

வெளி உலகத்தில் நடப்பவை நம்மை பாதிக்கின்றன. அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுவோம். நம் ஆழ் மனதில் சேரும் சுமைகளை இறக்கி வைப்போம். மனதில் குழப்பங்கள் வேண்டாம். எதிலும் ஒரு தெளிவு இருக்கட்டும்.

 

உங்களை நீங்கள் விரும்புங்கள். குற்ற உணச்சியோ, பயமோ இல்லாமல் வாழுங்கள். நாம் ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மை படைத்தவர்கள். நினைவிருக்கட்டும்.

 

வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானியுங்கள். அதைக் கடை பிடியுங்கள். நீங்கள் உங்கள் முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் போனால் பிறர் உங்களை அவர்களது சுயநலத்திற்காக பயன்படுத்தக் கூடும்.

 

உங்கள் முழு கவனமும் வாழ்வில் முன்னேறுவதில் இருக்கட்டும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.

 

வாழ்வில் எங்கும் எப்போதும் எல்லோருடனும் இணக்கமாகவும், இசைவுடனும் வாழுங்கள். தங்கு தடையற்ற அன்பை எல்லோருக்கும் வாரி வழங்குங்கள். நீங்கள் கொடுக்கும் அன்பு ஆசிகளாக திரும்ப வந்து உங்களை வாழ்விக்கும்

 

சுய மரியாதைக்கும், நான் என்கிற அஹங்காரத்துக்கும் உள்ள வேறுபாட்டை அறியுங்கள். உங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள்; அஹங்காரம் வேண்டாம்.

 

உங்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கும் வசதிகள், வாய்ப்புக்களை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள். அவைகளைப் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். கடந்த கால வேண்டாத நினைவுகளை ஒதுக்கி விடுங்கள்.

 

வாழ்க்கையில் உங்கள் குறிக்கோளை தெளிவாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள் – பணம், புகழ், வளர்ச்சி – உங்களுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் எந்தக் குறிக்கோளும் தவறில்லை.

 

உண்மையானவராக இருங்கள். இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழுங்கள். நமக்கும் மேலே இருக்கும் ஒரு உன்னத சக்தியைப் பணியுங்கள்.

 

Advertisements

12 thoughts on “நினைவில் கொள்ள வேண்டிய 10 கட்டளைகள்!

 1. ஒவ்வொன்றுமே முத்தான அறிவுரைகள்…. நிச்சயம் தொடர வேண்டியவை. சேமித்து வைத்துக்கொள்கிறேன். தொடர்ந்து பகிர வேண்டுகோளுடன்…

  வெங்கட்.
  புது தில்லி.

 2. நல்ல கருத்துகள்.
  -நாம் சில வார்த்தைகளை நினைக்கும்போது சொல்லும்போது வானில் தேவர்கள் ‘ததாஸ்து’ என்பார்களாம் அப்படியே நடந்து விடுமாம். எனவே எப்போதும் நல்ல சிந்தனையே இருந்தால்தான் நல்லது என்று எங்கள் வீட்டில் சிறு வயதிலிருந்தே பெரியவர்கள் சொல்வார்கள்!
  -நம்மை நாம் விரும்பினால் மட்டுமே பிறரையும் நேசிக்க முடியும்!
  -சுயமரியாதைகள் அகங்காரத்தின் பெயராலேயே அறியப் படுகின்றன!

  1. //-நாம் சில வார்த்தைகளை நினைக்கும்போது சொல்லும்போது வானில் தேவர்கள் ‘ததாஸ்து’ என்பார்களாம் அப்படியே நடந்து விடுமாம். எனவே எப்போதும் நல்ல சிந்தனையே இருந்தால்தான் நல்லது என்று எங்கள் வீட்டில் சிறு வயதிலிருந்தே பெரியவர்கள் சொல்வார்கள்!//

   நான் எழுத மறந்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள். நன்றி ஸ்ரீராம்!

 3. கடந்த கால நினைவுகள் வேண்டாமா. கொஞ்சமாவது வேணும்.
  நம்மை நாமே எடைபோட்டுக்கொள்ள அதுவும் சிறிது இருந்தால்தான் ஸரியாக இருக்கும்.
  நலலதையே நினைக்க நல்லதே நடக்கும். எண்ணங்கள் நமது
  தோழனோ, தோழியோதான். அசுவினி தேவர்கள் ஆசிர்வதிப்பார்கள். மறந்து போய்கூடகெடுதல் நினைக்கக்
  கூடாது என்றெல்லாம் பெறியவர்கள் பசங்களுக்கு கதை சொல்லும்போது சொல்லிக்கொடுப்பார்கள்.
  இப்பொழுது இதை யெல்லாம் சொல்லிக்கொடுக்க யாரைத்
  தேட முடியும்.
  உன்னுடயது படிக்க எதையெல்லாம் கடைபிடிக்கிறோம் நாம், எதெல்லாம் முடிவதில்லை என்று ஒரு பட்டி மன்றமே மனதில்
  நடந்து விட்டது..
  அருமையாகயிருக்கு படிப்பதற்கு. பாராட்டும்படியாக இருக்கு.

 4. உங்களது பின்னூட்டமே கிட்டத்தட்ட ஒரு பதிவு போல இருக்கிறது, காமாட்சி அம்மா!

  சிலபேர்கள் யாரோ எப்பவோ திட்டியதை இன்னும் சொல்லிச்சொல்லி மாய்ந்து போவார்கள். அது தேவை இல்லை, இல்லையா?

  இதனால் நம் வயிற்றில் அமிலங்கள் சுரப்பதைத் தவிர வேறு பலன் உண்டா?

  இதைத்தான் வேண்டாம் என்று சொன்னேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s