மனதில் பதிந்த பதிவர்கள் திருவிழா!

போன முறை சென்னையிலிருந்து ஷதாப்தி ரயிலில் திரும்பி வரும் போது பக்கத்தில் ஓர் இளம் பெண். வழக்கம்போல் நானும் என் புத்தகமும் என்று அமர்ந்திருந்தேன். காலை சிற்றுண்டி வந்தவுடன், தலை நிமிர்ந்த என்னைப் பார்த்து அந்த இளம் பெண் கேட்டாள்:

‘மாமியின் ஒரே பொழுதுபோக்கு படிப்பதுதானா?’

‘இல்லையில்லை…. படிப்பதுடன் ப்ளாக் எழுதுவதும் என் பொழுதுபோக்கு!”

‘ஆஹா…அப்போ நீங்க எங்க தலைமுறை…!’

ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடந்த தமிழ் பதிவர் திருவிழாவில் இதை நேரடியாக உணர்ந்தேன்.

ஆட்டோவிலிருந்து இறங்குபோதே “வணக்கம் ரஞ்ஜனியம்மா!” என்ற குரல்!

‘அட நம்மை அடையாளம் தெரிந்து கொள்ளுகிறார்களே!’

மாடி ஏறியவுடன் ஒரு அடையாள அட்டை கொடுத்தனர். நம் பெயர், நம் வலைத்தளத்தின் பெயர் எல்லாம் அதில் எழுதி இருந்தது. இதனால் பல சங்கடங்கள் தவிர்க்கப்பட்டன.

பலர் வந்து ரொம்ப நாட்கள் பழகியவர்கள் போல அறிமுகம் செய்துகொண்டனர். கொஞ்சம் ஆச்சரியம்; கொஞ்சம் ‘அப்பாடா’ என்ற ஆசுவாசம்!

ஒரு இளம் சிட்டு சிரித்தது என்னைப் பார்த்து. ‘கண்மணி?’ என்றேன். ‘இல்லையில்லை, சமீரா…!’ என்று மறுபடி கண்கள், முகம் எல்லாம் பளபளக்க சிரித்து முதல் பார்வையிலேயே மனதைப் பறிகொண்டாள், அந்தப் பெண். பதிவர் இல்லை; பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டு போஷாக்கு கொடுக்கும் பெண் இவள். ‘சேட்டைக்காரனைப் பார்க்க வேண்டும்….’ என்று நிமிடத்துக்கு நூறு  தடவை சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லச்சொல்ல எனக்கும் ஆவல் அதிகரித்தது.

திருமதி வல்லிசிம்ஹன்  மல்லிகைப்பூ கொண்டு வந்து கொடுத்து, பூவைவிட வெள்ளையான தன் சிரிப்பால் எல்லோரையும் மயங்க வைத்துக்கொண்டு இருந்தார். திருமதி ராஜி, அவரது கவிதை வழிச் செல்லும் மகள் தூயாவுடன் வந்தார். நிகழ்ச்சி முடிவில் இந்தக் குழந்தை வந்து ‘போயிட்டு வரேன் பாட்டி’ என்று விடை பெற்றது நெகிழ வைத்தது.

திரு மதுமதி மைனஸ் தாடியுடன் வந்து வியப்பூட்டினார்! (தாடி இல்லாமல் ரொம்பவும் இளமையாக இருக்கிறீர்கள்!)

திரு பால கணேஷ், திரு திண்டுக்கல் தனபாலன் (பின்னூட்டம் போடுவதில் சமீராவின் அண்ணன் இவர் – பதிவரும் கூட!) வந்து அறிமுகம் செய்து கொண்டனர். எப்படி எல்லோருடைய பதிவுகளையும் படிக்கிறீர்கள் என்று ஒவ்வொருவரும் இவரைக் கேட்டனர்.

திருமதி ருக்மிணி சேஷசாயி (சுட்டிக் கதைகள்), திருமதி லட்சுமி திருமதி சாதிகா, (எல்லாப்புகழும் இறைவனுக்கே), குட்டி சுவர்க்கம் திருமதி ஆமினா (தனது குட்டி சுவர்க்கத்தை கூடவே கூட்டி வந்திருந்தார்) கண்மணி அன்போடும், தனது தந்தையாரோடும் வந்திருந்தார்கள்.

காலை நிகழ்ச்சி பதிவர்களின் சுய அறிமுகத்துடன் முடிந்தது.

திரு கேபிள் சங்கர், திரு சி.பி. செந்தில்குமார், திரு சுரேகா, திரு தமிழ்வாசி, திரு சௌந்தர் (கவிதை வீதி), திரு மணவை தேவாதி ராஜன், வேல்வெற்றி வேல்முருகன், சேட்டைக்காரன், வலைசரம் திரு. சீனா புலவர் திரு ராமானுசம், திரு கணக்காயர்  சென்னைப் பித்தன் என்று பதிவுலகில் தங்களுக்கென்று முத்திரை பதித்திருக்கும் பதிவர்கள் பலரை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

பல இளம் பதிவர்களுடன் பேச முடியவில்லை. தயக்கம் தான்!

மதிய இடைவேளைக்குப் பிறகு மூத்த பதிவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். திரு பட்டுக்கோட்டை பிரபாகர் மூத்த பதிவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

திருமதி சசிகலாவின் ‘தென்றலின் கனவுகள்’ கவிதைப்புத்தகம் திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் வெளியிடப்பட்டது.

திரு. மயிலன் (மருத்துவர்) தனது கவிதை வாசித்து கலகலப்பு மூட்டினார். சந்தடி சாக்கில்  தனது திருமண அழைப்பையும் கவிதையில் வழியே வைத்தார்.

திருமதி அகிலா,  கோவை மு. சரளா, திரு லதானந்த் தங்களது கவிதைகளை அரங்கேற்றினர்.

மதிய உணவு இடைவேளையில்  திரு சிவகுமார் (மெட்ராஸ் பவன்) ஒரு யோசனை சொன்னார்: ‘பெண் பதிவர்கள் எல்லோரும் சேர்ந்து இதுபோல ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் தோள் கொடுத்து நடத்தி வைக்கிறோம்’.

பதிவர்கள் என்று ஒரே பெயரில் இணைவது நல்லது; ‘பெண்’ என்று தனிப்பிரிவு வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது.

எல்லோருக்குமே நடந்தது தெரியும்; இத்தனை பெரிய பதிவு வேண்டுமா?

இதை நான் எழுதுவது ‘சொல்லுகிறேன்’ என்ற தலைப்பில் எழுதும் திருமதி காமாட்சி அவர்களுக்காக. தன்னால் வர இயலவில்லை; அதனால் நடந்தது அத்தனையும் எழுது என்றார் அவர். திருமதி ருக்மிணியைப் போல இவரும் வயதில் மூத்தவர்.

‘என்னவாயிற்று? ஏன் பதிவர் சந்திப்பைப் பற்றி ஏதுவுமே எழுதவில்லை?’ என்று  இன்றுகாலை மின்னஞ்சல் செய்திருந்த திருமதி பட்டு ராஜ் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு, துளிக் கூட குழப்பமில்லாமல் ஏற்பாடு செய்யப்பட்ட விழா இது. இதன் பின்னணியில் உழைத்த அத்தனை பேருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

திரு பிரபாகர் மூத்த பதிவர்கள் இன்றைய தொழில் நுட்பம் கற்று இளைஞர்களுக்கு சமமாக எழுதுவது மிகவும் பாராட்டத் தக்கது என்றார். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் செல்லவேண்டும் என்றார்.

ஒரு பதிவர் இந்த எழுத்துக்கள் மூலம் சிறிது வருமானம் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனை சொன்னார். இதை வழி மொழிகிறேன் நான்!

இன்னொரு விஷயம் நான் இங்கே குறிப்பிட விரும்புவது: ‘பிளாக்ஸ்பாட்’ டில் எழுதுபவர்கள் அதிகபேர்களின்  கவனத்தை கவருகிறார்கள். வோர்ட் பிரஸ்ஸில் எழுதும் என்னைப் போன்றவர்கள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை.

கொஞ்சம் எங்களையும் கவனியுங்கள் ப்ளீஸ்!

படங்களை அடுத்த பதிவில் போடுகிறேன்!

என்னுடைய 200 -வது பதிவாக இந்தப் பதிவு அமைந்தது சந்தோஷமாக இருக்கிறது!

திரு பிகேபி யின் உரையைப் படிக்க: http://minnalvarigal.blogspot.com/2012/08/blog-post_30.html

பி.கு. உடல் நலமின்மையால் தாமதமாக எழுதுகிறேன். மன்னிக்கவும்!

 

37 thoughts on “மனதில் பதிந்த பதிவர்கள் திருவிழா!

 1. ஒரு தகவலும் தெறிந்துகொள்ள முடியவில்லையே என்று யோசனை பலமாகத்தானிருந்தது. உறவினர்கள் அதிகமுள்ள ஊறில் நேரம் கிடைக்க வேண்டாமா, என்று பலபல ஸமாதானங்கள். நாம் என்ன பிரபலமான எழுத்தாளருமில்லை. வயதானவர்களுக்கு இப்படி சிந்திக்க
  நிறைய விஷயங்கள் கிடைக்குமே. உன் பதிவு பார்த்து மிக்க ஸந்தோஷம். இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களும் இருந்திருக்குமே. இன்னு்ம் போட்டோக்களெல்லாம் பார்க்க ஆவலாயிருக்கிறேன். வாஸ்தவமாகவே ப்ளாகர் காமில் எழுதுபவர்கள்
  அதிகம் அறிமுகமாகிறார்கள்.
  என்னைப் பொறுத்தவரைஎந்தெந்த தேசங்களிலிருந்து பார்வையாளர்களென்பதை வேர்ட் ப்ரஸ் காமில் தெறிந்து கொள்வது
  மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது.
  எனக்காக இந்தப் பதிவைப் போட்டது மிக்க ஸந்தோஷம். பெறியவருக்கு சாப்பாடு கொடுக்க நேரம். பிறகு எழுதுகிறேன். அன்புடன் நன்றியும்

  1. உங்கள் பதில் பார்த்தவுடன்தான் மனதிற்கு நிம்மதி ஆயிற்று. அடுத்த பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது.

 2. நன்றாக தொகுத்து பதிவு செய்துள்ளீர்கள் அம்மா… பாராட்டுக்கள்…

  உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி… உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்… மிக்க நன்றி அம்மா…

  200 – வது பதிவு… மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…

  1. நன்றி தனபாலன்! புகைப்படத்தில் பார்த்த உங்களை நேரில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சியான விஷயம்.

 3. It was very unfortunate that I could not attend the blogger’s meet due to the health condition of my mother. But thanks a lot for your visual description. Congrats for getting honored on the function. Hope to meet you all in next blogger’s meet. your writings are always encouraging. I am resuming my blog post very soon.

 4. உங்களையெல்லாம் பார்க்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்த பதிவர் திருவிழா அமைப்பாளர்களுக்கும், இறைவனுக்கும் இன்னும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களது வலைப்பூ மென்மேலும் சிறக்கவும், மேலும் பல புதிய பதிவர்கள் எழுத உந்துதலாய் அமைவதற்கும் உளமாற வாழ்த்துகிறேன். நன்றி!

  1. ரொம்பவும் சுறுசுறுப்பு ஐயா நீங்கள்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! உங்களைப்போல் இருப்பவர்கள் தான் எனக்கு முன்னோடி – எழுதுவதில்!

  1. உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி, வேல் முருகன்! ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் என்னை கவர்ந்து விட்டார்கள். உங்கள் அமைதியான போக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது! நான் சாப்பிடும் வரை எழுந்திருக்காமல் காத்திருந்த பொறுமை மிகவும் பாராட்டத்தக்கது!

 5. ரஞ்சனி,

  200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.சந்தித்த பதிவர்களை நினைவு வைத்து எழுதியது பிடிச்சிருக்கு.

  “வோர்ட் பிரஸ்ஸில் எழுதுபர்வர்கள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை” _ எனக்குப் புரியவில்லை.நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் சொல்லுங்க.நன்றி.

  1. அன்பு சித்ரா,
   ப்ளாக் ஸ்பாட்டில் (Blogspot) எழுதுபவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

   வேர்ட்ப்ரஸ் – ஸில் எழுதுபவள் இந்த சந்திப்பில் நான் ஒருவள்தான்!
   நிறையப் பதிவர்கள் இந்த சந்திப்புப் பற்றி எழுதி இருக்கிறார்கள்; ஒருவர் கூட என்னைப் பற்றி எழுதவில்லை – திருமதி வல்லி சிம்ஹன் ஒரு புகைப்படம் போட்டிருகிறார். நான் பெண் பதிவர்கள் எல்லோரையும் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன்.

   மூத்த பதிவர்களை மேடைக்கு அழைத்து பாராட்டிய போது அவர்களது பதிவிலிருந்து ஒவ்வொருவரது எழுத்துக்களையும் நினைவு கூர்ந்தனர்.

   ஆனால் ‘பெங்களூரில் இருந்து வந்திருக்கிறார்’ என்பதை தவிர வேறு எதுவுமே என்னைப்பற்றி சொல்லவில்லை.

   இதன் காரணமாகவே ‘வோர்ட் பிரஸ்ஸில் எழுதுபர்வர்கள் அதிகம் கவனிக்கப் படுவதில்லை’ என்று நான் எழுதினேன்.

 6. அசராமல் இரண்டு சதம் அடிச்சதுக்கு முதலில் என் வாழ்த்து(க்)கள்..

  எத்தனைமுறை இந்தப் பதிவர் மாநாடு பற்றிப் படிச்சாலும் எனக்குப் பத்தலை! விழாவை மிஸ் பண்ணிட்டேனேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறது:(.

  நல்லவேளை நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க. இந்த ஐடியா கொடுத்தவருக்கு என் வணக்கங்கள். இல்லைன்னா உங்களையெல்லாம் பார்த்திருக்கவே முடியாது!

  மனசு மகிழ்ச்சியில் இருக்கு என்பது நிஜம்:-)))

  1. நல்வரவு துளசி அவர்களே! அடுத்த முறை கட்டாயம் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்,
   அன்பு ரஞ்ஜனி

 7. சிறப்பான பகிர்வும்மா. உங்களது 200-வது பதிவிற்கு வாழ்த்துகள்.

  எனக்கு ஒரே குறை என்னவென்றால் – உங்கள் 200-வது பதிவிற்கு தான் நான் முதல் முதல் வருகிறேன். நேரம் கிடைக்கும்போது உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

  பதிவர் சந்திப்பு பற்றி எழுதிய பல பதிவுகளில் உங்களைப் பார்த்ததும் இங்கே வந்தேன். இனி தொடர்ந்து வருவேன்.

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  1. நல்வரவு வெங்கட் அவர்களே! இனி தொடர்ந்து சந்திப்போம் நம் பதிவுகளின் மூலம்!

 8. தங்களின் 200 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.;
  நேரில் சென்று கலந்துகொள்ள முடியவில்லையே என்ற குறையை தங்களின் இந்த எழுத்துக்கள் ஓரளவு போக்கிவிட்டன.

  ப்கிர்வுக்கு நன்றிகள். VGK

 9. அம்மா உடல் நலம் அடைய வேண்டுகிறேன்… 200 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. மேலும் பல நூறு காண விழைகிறேன்…..

  உங்கள் பதிவில் என்னையும் ஒரு பதிவர் அளவுக்கு மதிப்பிட்டு குறிபிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது.. உங்களை சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி…
  நீங்கள் பதிவர் தினத்தன்று வெகு சிரத்தையுடன் பதிவர் பெயர், பதிவின் பெயரினை குறித்து கொண்டது உங்கள் அருகில் இருந்ததால் அறிய முடிந்தது.. மிக பொறுமையாக எவரையும் விடாமல் விபரம் சேகரித்தீர்கள்… இது வெகுவாக என்னை கவர்ந்தது…
  யாருக்கும் இப்படி தோன்றி இருக்காது .. தோன்றினாலும் முழுமையாக எழுத்தும் பொறுமை இருப்பது கடினம் அம்மா!!!

  பதிவர்கள் ஒவ்வொருவருக்குள் ஒரு ஒரு பாணி!! அதில் உங்கள் பதிவமைப்பு அழகாக உள்ளது.. சந்தித்தவர்களை அழகாக குறிப்பிட்டு பதிவிட்டது சிறப்பாகவும் பெருமையாகவும் உள்ளது…

  1. நன்றி சமீரா! நம் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட்டது ஆச்சரியம் தான்!
   பதிவர் சந்திப்பில் விளைந்த இந்த நட்பும் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது!

 10. 200 வது பதிவுக்கு வாழ்த்துக்களம்மா..தங்களை சந்தித்து அலாவளாவியதில் மிக்க மகிழ்ச்சி.

 11. அன்பின் ரஞ்சனி மேடம்

  மிக்க மகிழ்ச்சி – சந்தித்ததில் – மூத்த பதிவர்களாக இருக்கிறோம்.. நல்லதொரு விரிவுரை – பதிவர் திருவிழாவினைப் பற்றி – இருநூறுக்கு பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  1. அன்பு சீனா ஐயா,
   இத்தனை விரைவில் வருகை தருவீர்கள் என்று நினைக்கவில்லை. வருகைக்கு நன்றி!

 12. தங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி..தங்களின் கட்டுரை சந்திப்பின் சாரமாகவும், சந்தித்த பதிவர்களின் வலைப்பூக்களை கொண்டு கட்டிய மாலையாகவும் இருந்தது.

 13. 200 வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!

  குட்டிசுவர்க்கத்திற்கான பெயர்காரணத்தை நான் சொன்னது நியாபகத்துல வச்சு குறிப்பிட்டிருக்கீங்களா ஹா..ஹா..ஹா… நன்றி மா!

  1. நல்வரவு ஆமீனா! உங்கள் குட்டி சுவர்க்கம் எல்லோரையும் கவர்ந்ததும் ஒரு காரணம்!

 14. பதிவர் சந்திப்பு என்று இருந்தால் உடனே கிளிக்கி வாசிக்கிறேன்.
  மிக விவரமாக எழுதியுள்ளீர்கள் .மிக்க நன்றி.
  தங்கள் 200வது பதிவிற்கும், சேர்த்து நிறைந்த நல்வாழ்த்து.
  மேலும் பெருகிப் புகழ் நிறையட்டும்.
  நானும் வேட் பிரஸ் தான் இந்தக் குறை என்னிடமும் உண்டு.
  என்ன செய்வது தொடங்கி, இப்போது பழகியும் விட்டது.
  இன்னொன்று தொடங்கினால் புளோக் ஸ்பொட்டில் தொடங்கலாம்,
  ஆனாலும் ஒன்றை வைத்து ஒழுங்காக நடத்தினாலே போதும் என்ற திருப்தியில் உள்ளேன்.
  நல்ல பதிவுகள் போட்டு அசத்துவோம்.

  1. நீங்கள் சொல்வது ரொம்ப சரி. ஒன்றை நடத்துவதே கடினம். தினமும் பதிவு போட முடிவதில்லை.
   நல்ல பதிவுகள் போட்டு உலகை நம் பக்கம் திருப்புவோம்.

 15. உடல் நலமின்மை என்று எழுதியிருந்தீர்கள். உடல் நலமடைய பிரார்த்திக்கிறேன். படிக்கும் பொழுதே நிகழ்ச்சியில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. ரசிக்க வைக்கிறது.
  நானும் வோர்ட்பிரஸில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். பிறகு பிளாக்ஸ்பாட்டில் எழுத ஆரம்பித்துவிட்டேன்
  நேரமிருப்பின் என்னுடைய வலைத்தளத்திற்கு சென்றுப் பார்க்கவும்

  http://tamilraja-thotil.blogspot.com/2012/08/blog-post_27.html

  1. உங்களது கண்ணான கன்னியொருத்தி படித்து விட்டு பின்னூட்டம் கொடுத்திருக்கிறேனே!

 16. Hi there just wanted to give you a brief heads up and let you know a few of the pictures aren’t loading properly.
  I’m not sure why but I think its a linking issue.
  I’ve tried it in two different internet browsers and both show
  the same results.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s