Friendship · Life

எல்லை காப்போம், வாரீர்!

 

“சுவத்துல இருக்குற crack- ஐ (விரிசல்) உடனே சரி பண்ணுங்கன்னு எத்தன தடவ சொல்லுறது?”

“என்னம்மா அவசரம்?”

“ஒரு வீட்டுல ரெண்டு cracks இருக்கக்கூடாது….”

இதை ஒரு வேடிக்கை என்று சிரித்து விட்டாலும், உறவில், நட்பில் விரிசல் என்பது வேதனை தரக்கூடிய ஒன்று. ஆங்கில வார்த்தை ‘crack’ க்கிற்கு இரண்டு அர்த்தங்கள் – மனநிலை சரியில்லாதவன், விரிசல்.

இந்தப் பதிவு ‘விரிசல்’ பற்றித்தான்.

காதலர்களுக்குள் ஊடல் முற்றி சண்டையாகிறது;

காதலித்துக் கைபிடித்தவனை/பிடித்தவளை பிடிக்காமல் போய் விடுகிறது;

பல ஆண்டுகளாக வேர் பிடித்த நட்பு கசந்து போகிறது;

ஒன்றாக தாம்பத்தியம் நடத்தியவர்களிடையே பிரிவினை தலை தூக்குகிறது;

பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் முகம் பார்க்க விரும்புவதில்லை;

உடன் பிறந்தவர்களிடையே பேச்சு வார்த்தை இல்லை;

எல்லாவற்றிற்கும் இந்த விரிசல் தான் காரணம்.

விரிசல் தோன்றப் பல காரணங்கள் இருக்கலாம்.

மிக முக்கியமானது ‘எல்லை மீறுதல்’

நம் ஒவ்வொருவருக்கும் ஓர் வசதி வலயம் (Comfort Zone) –சௌகர்ய வட்டம்- என்று ஒன்று உண்டு. புதிய முயற்சிகளுக்கு நம்மில் எத்தனை பேர் உடனடியாகத் தயாராகிறோம்? மாறுதல்களுக்கு எத்தனை தயங்குகிறோம்? இப்போது இருக்குமிடமே வசதியாக இருக்கிறதே, ஏன் புதிய இடத்திற்குச் செல்ல வேண்டும், புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை. எந்த வேலை செய்தாலும் நம் வசதி வலயத்துக்குள்  நின்று கொண்டு தான் செய்கிறோம். அதைத் தாண்ட எத்தனை யோசிக்கிறோம்?

அதேபோல நம் எல்லோருக்கும் ‘நான் இப்படித்தான்’ என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணத்தை ‘தான் என்ற அகங்காரம்’, செருக்கு, என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் ஈகோ என்கிறார்கள்.

உறவுகளில் விரிசல் ஏற்பட மற்றவர்களது சௌகரிய வட்டத்தினுள் அத்து மீறி நுழைவதும், ஈகோவைக் காயப் படுத்துவதும் தான்.

காதலிக்கும்போது தங்களது ‘நல்ல’ தன்மைகளை மட்டுமே காட்டும் ஆண்களும் பெண்களும், திருமணம் ஆனபின் அடுத்தவரின் ‘இன்னொரு பக்கத்தை’ – அப்படி ஒன்று உண்டு என்பதை – அறியத் தொடங்குகிறார்கள்.  காதலிக்கும்போது தன்னைப்பற்றி தவறான கருத்து வந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு மெல்ல மெல்ல விலகுகிறது.

கணவனை அடக்கி அல்லது திருத்தி (?!!) தன் வழிக்குக் கொண்டுவர நினைக்கிறாள் மனைவி. கணவனோ, மனைவி தனக்கு அடங்கியவள்தானே என்று நினைக்க ஆரம்பிக்கிறான். இருவரும் ஒருவர் விஷயத்தில் ஒருவர் அளவுக்கு மீறி தலையிடத் தொடங்குகின்றனர். அவள் தன்னை அடக்க நினைப்பதாக இவனும், இவன் தன்னை அடக்க நினைப்பதாக அவளும் …..மெல்ல மெல்ல விரிசல் ஏற்படுகிறது.

பிறர் நம்முடன் பேசும்போதோ பழகும்போதோ அவர்களது சில சொற்கள், செயல்கள் நமது சௌகர்ய வட்டத்தை தாண்டி உள்ள வந்துவிட்டால் நம்மால் தங்க முடிவதில்லை.

அதே போலத்தான். நம் ஈகோவை காயப்படுத்தி விட்டால் காதலில், சகோதரத்துவத்தில், உறவில், நட்பில், தாம்பத்தியத்தில் விரிசல் ஏற்படுகிறது.

வாகா எல்லையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமிடையேயான எல்லைப் பகுதி. இந்தப் பகுதி கதவு இந்திய எல்லை. கூப்பிடு தூரத்தில் அந்தப் பகுதி கதவு பாகிஸ்தான் எல்லை. இரு நாட்டில் வீரர்களும் இந்த எல்லையை இரவு பகலாகக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அந்தப் பக்கத்திலிருந்து யாரும் இந்தப் பக்கம் வந்துவிடக்கூடாது; இந்தப் பக்கத்தில் இருந்து யாரும் அந்தப் பக்கம் போய்விடக்கூடாது.

நமக்குள் இருக்கும் வசதி வட்டத்தின் நிலையும் இதைபோல் தான். நாமும் அதிலிருந்து வெளி வர விரும்புவதில்லை; யாரையும் உள்ளே விடவும் அனுமதிப்பதில்லை.

என்னதான் கணவன், மனைவி என்றாலும், அவரவர்களுக்கென்று தனிப்பட்ட மனது இருக்கிறது. அதில் அவர்களுக்கென்று ஒரு வட்டம் இருக்கிறது. இந்த விதி நட்புக்கும், காதலுக்கும், சகோதரத்துவத்திற்கும் பொருந்தும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு personal space தேவைப் படுகிறது. இதை தவறு என்று சொல்லவே முடியாது.

எங்கேயாவது போய் நாலு நாள் நிம்மதியாக இருந்துவிட்டு வரலாம் போல இருக்கு என்று ஒவ்வொரு நினைக்கிறோம் இல்லையா? நமக்கு என்று சற்று யோசிக்க, பிடித்ததைச் செய்ய, பிடிக்காததை செய்யாமலிருக்க நேரம் தேவைப் படுகிறது.

இதனை ‘me time’ என்று சொல்கிறோம். இப்படி நமக்கென்று நேரம் ஒதுக்கிக் கொள்வது பலவிதத்தில் நம் மன நலத்தைக் காக்கும்.

நம் வசதி வட்டம், ஈகோ இவற்றை நாம் காப்பாற்றிக்கொண்டு மற்றவர்களின் வசதி வட்டத்துக்குள் அத்து மீறி நுழையாமல், அவர்களது ஈகோவை காயப் படுத்தாமல் இருப்போம். உறவுகளில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுவோம். அதாவது எல்லை மீறாமல், எல்லை காப்போம்!

எனக்கு மிகவும் பிடித்த அர்த்தம் செறிந்த பாட்டு வரிகள்:

‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’

‘யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’

 

இந்தப் பாடல் கேட்க இங்கே 

Advertisements

5 thoughts on “எல்லை காப்போம், வாரீர்!

 1. நல்லதொரு பாடலுடன் ‘me time’ விளக்கம் அருமை…

  உடனே ஞாபகம் வந்த ஒரு பாடல் :

  கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை – என்னை
  கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை…

  வாதம் செய்வது என் கடமை – அதில்
  வழியைக் காண்பது உன் திறமை…!

  கண்டேன் கண்டது நல்ல வழி அது
  காதலன் உடனே செல்லும் வழி…!

  சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் – நீ
  சொன்னதை நானும் யோசிக்கிறேன்…!

  1. வாருங்கள் தனபாலன்!
   இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
   வருகைக்கும், அருமையான பாடல் பகிர்வுக்கும் நன்றி!

 2. எல்லை மீறாமல் எல்லை காப்போம் தலைப்பே ரொம்ப அருமையாக உள்ளது ரஞ்சனி நீங்கள் சொல்வது ரொம்ப சரி விரிசல் வந்த பிறகு சரிசெய்யவதை விட அது வராமல் காப்பது இன்னும் நல்லதல்லவா? வரும் முன் காப்போம் வாழ்வாங்கு வாழ்வோம். பாராட்டுக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s