Health and exercise · Life

வலி நிவாரணிகள்: எச்சரிக்கை!

வலி நிவாரணிகள்: எச்சரிக்கை!

இந்தியாவில் உள்ள பார்சி சமூகத்தினரிடையே  ஒரு பழக்கம். யாராவது இறைவனடி சேர்ந்து விட்டால் உடலை எரிக்கவோ புதைக்கவோ மாட்டார்கள். ஒரு பெரிய  வட்ட வடிவில் இருக்கும் ராட்சதக் கிணற்றில்  (Tower of Silence ) பூத உடலைப் போட்டுவிடுவார்கள். இறந்த உடல்களை உண்ணும் கழுகு, வல்லூறு போன்ற பறவைகளுக்கு இரையாகட்டும் என்று இந்த ஏற்பாடு. இதனால் வாழ்வின் சுழற்சி பூர்த்தியாகிறது என்று நம்புகிறார்கள்.

சுமார் 10 வருடங்களுக்கு முன் இறந்த உடலை உண்ணும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து போனது. ஏன் என்று ஆராய்ந்த போது இப்பறவைகள் இறந்து போகின்றன என்று தெரிய வந்தது. இதனால் இறந்த உடல்களை அப்புறப்படுத்த வேறு வழி கண்டறியும் நிலை ஏற்பட்டது.  ஆனால் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த வழக்கத்தை ஏன் மாற்ற வேண்டும்? எதனால் பறவைகள் இறக்கின்றன என்று ஆராய தொடங்கினர்.

இறந்த பறவைகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன. பறவைகள் இறப்பதற்கு முக்கியக் காரணம் வலி நிவாரணிகள் அதாவது (paracetamol – panadol) என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சமீப காலமாக பொதுவாக எல்லோருமே தலைவலியைக் குறைக்க வலி நிவாரணிகள் எடுப்பது அதிகமாகி வருகின்றது. இந்த வலி நிவாரணிகள் நமது கல்லீரலில் வெகு காலத்துக்கு தங்கி விடுகின்றன. இந்த உறுப்புகளை சாப்பிடும் பறவைகளின் உடலிலும் இந்த வலி நிவாரணிகளின் மிச்சங்கள் போய்ச் சேருவதால் அவைகள் மோசமாக பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன என்று தெரிய வந்தது.

இன்னொரு சம்பவம்:

விமான பணிப்பெண் ஒருவர் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பதாலும், அலுவல் காரணமாக வரும் மன அழுத்தத்தாலும்  உண்டாகும் தலைவலியைப் போக்க இந்த பெனடால் வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுவாராம். 30வது வயதின் ஆரம்ப நிலையில் இருக்கும் இவர்  தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் எடுத்துக் கொண்டு வருகிறார்.

வலி நிவாரணிகள் நமக்கு உண்டாக்கும் தீமைகளுக்கு இவை உதாரணங்கள்.

நம் உடலைப் பற்றிய சில விஷயங்கள் நமக்கு தெரிவதே இல்லை. தலைவலியோ, ஜலதோஷமோ, ஜுரமோ, வயிற்றுப் போக்கோ எதுவானாலும்  நம் உடலே அவற்றை சரி செய்து கொண்டு விடும். நோயை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நம் உடலுக்கு இயற்கையிலேயே உண்டு. வயிற்றுப்போக்கினை நிறுத்தும் மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்கும்

வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ளுவதால் நம் உடல் அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியையும், வலி தாங்கும் ஆற்றலையும் மெல்ல மெல்ல இழக்கிறது. இதன் விளைவாக, நாம் நோய்வாய் படுவதும் அதிகரிக்கிறது.

ஒரு காலகட்டத்தில் எத்தனை வலி நிவாரணிகளை விழுங்கினாலும் வலி குறைவதே இல்லை என்னும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த வலி நிவாரணிகளின் இன்னொரு பக்க விளைவு: இதை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு எப்போதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தால், வழக்கமாக கொடுக்கும் மயக்க மருந்தின் அளவை விட அதிகம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த பெனடால் மாத்திரைகள் இந்தியாவில் க்ரோசின், மெடாசின் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.

தலைவலியை குறைக்க நீர் அதிகம் குடிக்கலாம்;

இன்னொரு முறை: சுடுநீரில் பாதங்கள்  இரண்டும் மூழ்கும்படி சிறிது நேரம் உட்காரலாம்.

உழைப்பு எத்தனை முக்கியமோ, அதே போல உடலுக்கு ஓய்வும் மிகமிக அவசியம். வலி நிவாரணிகளுக்கு பதில் தேவையான ஓய்வு கொடுங்கள். ஓய்வுக்குப்பின் உங்கள் உடல் இன்னும் உற்சாகத்துடன் உழைக்கும்

எதெற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகள் என்று போக வேண்டாம். அது நல்லதல்ல.

இறைவன் கொடுத்த இந்த உடலை இயற்கை முறையில் காப்போம்; செயற்கை மருந்துகளை தேவையன்றி பயன்படுத்த வேண்டாம்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களிடமும், உற்றார் உறவினரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள், ப்ளீஸ்!

 

 

 

Advertisements

2 thoughts on “வலி நிவாரணிகள்: எச்சரிக்கை!

 1. வலி நிவாரணி மாத்திரைகள் சொந்த அனுபவமே எனக்கு அதிகம்.ஒரு 15 வருஷங்களுக்கு முன் காலில் ஃப்ராக்சர். தொடர்ந்து மாத்திரைகள். பலன்
  தீராத வயிற்றுப் பிரச்சனைகள்..யாரும் சொல்லாமலேயே இனி எந்தவலிக்கும் மாத்திரைகள் சாப்பிடுவதில்லை என்ற முடிவிற்குப் பின்
  நிதானமான முறையில் மாருதல்கள். ஆக எந்த டாக்டரிடம் எந்த வைத்தியத்திற்குப் போனாலும் பெயின் கில்லரினால் ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லி அந்த மாதிறி மருந்துகளை தவிர்த்து விடுகிறேன். வலிகள் பழக்கப் பட்டதொன்று என நான் அடிக்கடி சொல்வதுண்டு. அது வழக்கமாகவும் இருக்கிறது.
  ஸைலண்ட் டவர் பற்றி எழுதியிருக்கிறாய். மனிதனின் மருந்து
  விருந்துண்ணும் பறவைகளையும் மாய்த்து விடுகிறது.
  அதே மனிதனையும் படிப்படியாக மாய்க்கிறது. அறிந்து கொள்ள வேண்டிய
  நல்ல விஷயம். படிப்பதற்கு பயனுள்ள விஷயம்.
  பிறருக்கு ஸமயத்தில் சொல்வதற்கும் பயன்படும். நல்ல பதிவு.

  1. பின்னூட்டத்திற்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

   பல வலி நிவாரணிகள் வெளி நாடுகளில் தடை செய்யப் பட்டவை. நம்மூரில் மருத்துவரிடம் போகாமல் மருந்துக் கடைகளிலேயே மருந்து வாங்கி சாப்பிடுபவர்களும் அதிகம்.எல்லோருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s