Food · Health and exercise · Life

காரா பூந்தியா? பர்கரா?

பூவா, தலையா? பணமா, பாசமா? என்று கேட்பது போல ‘காராபூந்தியா? பர்கரா? என்று என்ன கேள்வி இது?
இன்றைய செய்தித் தாளில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்திருக்கிறது நமது சுவை மிகுந்த காரா பூந்தி பற்றி. அதாவது ஒரு பர்கரை விட ஒரு கைப்பிடி காரா பூந்தி அதிக கொழுப்புள்ளது என்று. கொழுப்புப் பட்டியலில் பர்கரை தாண்டி பல படிகள் முன்னே இருக்கிறது நமக்குப் பிடித்த காரா பூந்தி. ஆமாம். எது அதிகக் கொழுப்பு என்ற போட்டியில் பர்கரைத் தோற்கடித்து விட்டது நம் காரா பூந்தி. சீஸ் உடனும், மயோனைஸ் உடனும் வறுத்த முட்டையுடனும் வாயில் நீரை ஊறவைக்கும் பர்கர் ஓர் கைப்பிடி காரா பூந்தி இடம் தோற்றுவிட்டது. பர்கர் சாப்பிடும் நவீன யுவ யுவதிகளை விட காரா பூந்தி சாப்பிடுபவர்கள் அதிக அபாயத்தில் உள்ளார்கள் – அதாவது கொழுப்பு அதிகம் உடலில் சேரும் – அபாயத்தில் உள்ளார்கள் என்று கன்ஸ்யுமர்ஸ்  அசோசியஷன் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
எப்படி என்றால்:
‘ ஜங்க்’  உணவு வகையாக இருந்தாலும் அவற்றிலுள்ள போஷாக்கு சத்துக்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஆனால் இந்திய சிற்றுண்டி  வகைகளான தட்டை, போளி, நேந்திரங்காய் சிப்ஸ் போன்றவற்றில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு இருக்கிறது, இவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதைப் பற்றி மூச்சு பேச்சு இல்லை.
நாம் ஆரோக்கியமான சிற்றுண்டி என நினைத்திருக்கும்  மைசூர்பா, அல்வா,அதிரசம் பெயரிடப்படாமல் கிடைக்கும் உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்றவைகள் எத்தனை தூரம் ஆரோக்கியமானவை என்று கண்டு பிடிக்க  நடந்த ஆய்வின் முடிவுதான் மேலே சொன்னவை. இந்த ஆய்விலிருந்துதான் காரா பூந்தி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி நம்மை ‘கொழுக்க’ வைப்பதில் முதலிடம் வகிப்பது தெரிய வந்திருக்கிறது.
உப்பும் உரைப்புமாக இருக்கும் கா.பூந்தியில் ஒவ்வொரு 100 கிராமிலும் மொத்தக் கொழுப்பு 48.33%; இதைத் தவிர சாச்சுரேடட் கொழுப்பு 13.5%.
“காரா பூந்தி சில்லறையாகவும், மொத்தமாகவும் கிடைக்கிறது. மக்கள் அதனை கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். ஆனால் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கைப்பிடி என்ற அளவில் சாப்பிடுவதால் எத்தனை சாப்பிட்டோம் என்று கணக்கு வைத்துக் கொள்வதும் கடினம்.” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொழுப்பு சத்துள்ள உணவுப் பட்டியலில் 42.5% கொழுப்புடன்  இரண்டாவது இடத்தைப் பிடிப்பது நம் அருமை உருளைக் கிழங்கு சிப்ஸ்! நெய்யில் செய்யப்படும் மைசூர்பா 36.3% கொழுப்புடன் மூன்றாவது இடம். ஒ! சிப்சை விட மைசூர்பா குறைந்த கொழுப்பா? என்றால் இல்லையாம்; அதில் இருக்கும் சர்க்கரை 41.3% !
சர்க்கரை நோய், அதிகமான பருமன், இருதய நோய் என்று பலவித நோய்களுக்கும் இருப்பிடமாகத் திகழும் நம் நாட்டில், மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : என்ன சாப்பிடுகிறோம், அதில் எத்தனை சதவிகிதம் கொழுப்பு, எத்தனை கலோரி என்பது தான். அதனால் தங்கள் உடலுக்கு அவர்கள் எத்தனை நல்லது அல்லது கெடுதல் செய்து கொள்ளுகிறார்கள் என்பது தெரிய வரும்.
சுவையான தின்பண்டங்களைப் பற்றி சில கசப்பான உண்மைகள்:
காராபூந்தியில் இருக்கும் கொழுப்பு: 141.65%
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
மைசூர்பா/ நேந்திரம் வறுவல்: நிஜத்தில் இருக்கும் சாச்சுரேடட் கொழுப்பு : 400% அதிகம்
இருக்க வேண்டிய அதிக பட்ச கொழுப்பின் அளவு: 20%
தட்டை/ உருளை வறுவல் :இருக்கும் உயர்ந்த பட்ச கொழுப்பு 6.4% / 7%
மைசூர்பா மற்றும் வீதியோரக் கடைகளில் விற்கப் படும் ஹல்வாக்களில் இருக்கும் கொழுப்பின்  அளவு 175.3%
அதைத்தவிர உயர்ந்த பட்ச சர்க்கரையின் அளவை (15%) விட 90% கூடுதல் சர்க்கரை இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! வெளியில்  சாப்பிடும்போது கவனம் தேவை.
‘நாக்கில் இனிக்கும் பண்டங்கள் வயிற்றுக்கு கெடுதல் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொனார்கள்?
Advertisements

2 thoughts on “காரா பூந்தியா? பர்கரா?

  1. அடடா! எனக்கு மிகவும் பிடித்த ஐட்டங்களான காராபூந்தி, நேந்தரங்காய் + உருளைக்கிழங்கு சிப்ஸ், நல்ல நெய்யில் செய்து வாயில் போட்டால் அப்படியே கரையும் ஸ்மூத் மைசூர்பா முதலியவற்றை சாப்பிடக்கூடாது என்கிறீர்களே!

    சுகர், ப்ரஷர், ஓவஃர் வெயிட் என்று எல்லாமே வேறு உள்ளதே! நான் என்ன செய்வேன்? என் வாயை என்னால் கட்டுப்படுத்தவும் முடிவதில்லையே!

    இதைப்பற்றி கூட நான் என் “உணவே வா .. உயிரே போ” என்ற் கட்டுரையில் எழுதியிருக்கிறேனே!

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

    எனினும் தங்களின் இந்தக்கட்டுரை என்னைத்தவிர
    மற்றவர்களுக்காவது பயன்படட்டும். பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    அன்புடன்
    vgk.

    1. என்ன செய்வது? இந்தியாவின் தலை நகரம் நமக்குத் தெரியும். சர்க்கரை நோயின் தலைநகரம்? இந்தியா! இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு சிலராவது உணர்ந்தால் நன்றாக இருக்கும், இல்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s