Women

முகத்தின் அழகு மூக்குத்தியிலே

 

மூக்குத்தி என்ற தலைப்பைப் பார்த்தவுடனே இளைஞர்களுக்கு சோனாக்ஷி சின்ஹா, சானியா மிர்சா (திருமணம் ஆவதற்கு முன்..) நினைவு வரும். பாட்டிகளுக்கும், தாத்தாக்களுக்கும் ‘கன்யாகுமரி’ அம்மன் நினைவுக்கு வரும்! (தாத்தாக்களுக்கு சோனாக்ஷி சின்ஹா, சானியா மிர்சா நினைவு வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை!)

 

மூக்குதிக்கும் கன்யாகுமரி அம்மனுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிரவர்களுக்கு: ஒரு ஆங்கிலேய மாலுமிக்கு கன்யாகுமரி அம்மனின் மூக்குத்தி கலங்கரை விளக்காக மின்னி கப்பல் கரை தட்டாமல் காப்பாற்றியதாக ஒரு செவி வழி வரலாறு உண்டு.

 

ஒரு காலத்தில் மூக்குத்தி என்கிற ஆபரணம் மிகவும் புனிதமாகவும், ஒரு பெண்ணுக்கு அவளது பெற்றோர்கள் அல்லது கணவனால் மட்டுமே பரிசாகக் கொடுக்கப்படும் ஆபரணமாகவும் இருந்தது. திருமணம் ஆன பெண்களுக்கு அவள் ‘சுமங்கலி’ என்பதை தெரிவிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது.

 

மூக்குத்தி பற்றி பல விஞ்ஞான பூர்வமான கருத்துக்களும் உண்டு. மூக்குக் குத்துவதால் நாசித் தொற்று அண்டாது என்றும், கரியமில வாயு கலந்த காற்றை வெளியே விடும்போது நமது சுவாசத்தை மூக்குத்தி சீராக்குகிறது என்கிறது ஒரு கருத்து இருக்கிறது.  மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்ணை யாரும் துர்போதனை செய்து மாற்றவோ, அறிதுயில் நிலைக்குக் (hypnotise) கொண்டு செல்லவோ முடியாது என்றும் நம்புகிறார்கள்.

 

மூக்கைக் குத்தும்போது ஒரு குறிப்பிட்ட நரம்பு தூண்டப்படுவதாகவும் அதனால் மாதவிடாய் சமயத்தில் தோன்றும் வலிகளும் பிரசவ கால வேதனைகளும் குறையும் என்று  இன்னொரு கருத்தும் நிலவுகிறது.

ஹிந்தி மொழியில் ‘நத்’ என்று வழங்கப்படும் மூக்குத்தி, நம் தேசத்தில் பலவிடங்களிலும் பலபல வடிவங்களிலும், அழகழகான உருவங்களிலும் கிடைக்கிறது.

 

பஞ்சாப் பெண்கள் ‘ஷிகர்புரி நத்’ அணிகிறார்கள். பீகாரில் ‘சுச்ஹி நத்’; மகாராஷ்டிராவில் முந்திரி வடிவ ‘குச்ஹெதர் நத்’ ; ராஜஸ்தானில் பெண்கள் அணிவது ‘நதுரி’ அல்லது ‘பௌரியா’; சில ராஜஸ்தானி பெண்கள் லவங்க வடிவ ‘லவங் நத்’ அணிகிறார்கள். ‘லட்கன் நத்’ என்பதும் இவர்கள் அணிவதுதான். இது சின்ன பெண்டுலம் போல இருக்கும் இதை மூக்கின் நடுத்தண்டில்  அணிவார்கள்.

 

இந்தியாவின் தெற்குப்பகுதியில் ‘மூக்குத்தி’, மூக்குப்பொட்டு, மூக்குத் திருகு’ என்று அழைக்கப்படுகிறது. ‘நத்து’, ‘புல்லாக்கு’ என்று மூக்கின் நடுத் தண்டிலிருந்து தொங்கும்  ஆபரணத்தை சொல்லுவார்கள்.

 

பொதுவாக ஒரே ஒரு வைரக்கல் அல்லது முத்து பதித்த வட்ட வடிவத்தில் இருக்கும். மூன்று கற்கள் பதித்த முக்கோண வடிவம், நான்கு கற்கள் பதித்த சதுர வடிவம்; 5 கற்கள் பதித்த ஐங்கோண வடிவம் (இவற்றை ‘பேசரி’ என்று சொல்லுவார்கள்) பல்வேறு வடிவங்களில் மூக்குத்திகள் கிடைக்கின்றன.

 

மூக்குத்திக்கு கீழே ‘முத்துக்கள்’ என்று பொதுவாக அழைக்கப்படும் சலங்கைகள்  கிடைக்கின்றன. இவைகள் வைரத்திலும் முத்திலும், தங்கத்திலும் அமைந்திருக்கும். இவற்றை தனியாக எடுத்து வைக்கலாம்.

 

மூக்குத்தியை தனியாகவோ தொங்கிகளுடனோ அணியலாம். எப்படி அணிந்தாலும் முகத்திற்கு தனி களை கொடுக்கும்.

 

இந்தக் கால இளம் குமரிகள் தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ ஆன சின்ன வட்ட வடிவ வளையங்களை மூக்கில் அணிவது நாகரிகமாக இருக்கிறது. இவை சின்னச்சின்ன கற்கள் பதிக்கப்பட்டும் அழகழகான சலங்கைகள் கட்டப்பட்டும் கிடைக்கின்றன.

 

மூக்குக் குத்திக்கொண்டு வலி வேதனை படுவதை சில பெண்கள் விரும்புவதில்லை. இவர்களுக்காக அப்படியே மூக்கின் வைத்து அழுத்திக் கொள்ளும்படியான (press-on) மூக்குத்திகளும் உண்டு. மேல்சொன்ன  அத்தனை வகைகளும் இவற்றிலும் உண்டு. இப்போது வெள்ளை மற்றும் கருப்பு உலோகங்களிலும் விதவிதமான மூக்குத்திகள் விற்கப்படுகின்றன.

 

மேற்கத்திய பாணியில் உடை அணிந்தாலும் சரி, பாரம்பரிய உடையானாலும் சரி எல்லாவிதமான உடைகளுக்கும் மூக்குத்தி பொருந்தும்.

 

அகத்தின் அழகு முகத்திலே……அந்த முகத்தின் அழகு மூக்குத்தியிலே!

 

Advertisements

6 thoughts on “முகத்தின் அழகு மூக்குத்தியிலே

    1. நீங்கள் வேடிக்கைக்குச் சொல்லுகிறீர்களா, இல்லை உண்மையாகவே சொல்லுகிறீர்களா, தெரியவில்லை.

      இதைப்பற்றி இதுநாள் வரை சிந்திக்க வில்லை. இப்போது எழுதலாமே என்று தோன்றுகிறது…..விரைவில்……எழுதிவிடுகிறேன்.

      நன்றி ஷாந்தி உங்கள் யோசனைக்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s