Health and exercise

உங்கள் எலும்புகளின் வயது என்ன?

 

உங்களுக்கு எலும்பு மெலிவு நோய் என்கிற ஆஸ்டியோபோரோசிஸ் வந்திருக்கிறது என்றால் உங்களைவிட உங்கள் எலும்புகளுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

எலும்பு மெலிவு நோய் என்றால் என்ன?

நம் எலும்புகள் அடர்த்தி குறைந்து பலவீனமாகி விடுவதுதான் எலும்பு மெலிவு நோய். எலும்புகள் பலவீனப் படுவதால் எளிதில் உடைந்து போகக் கூடும்.

நம் எல்லோருக்குமே தெரியும் நம் எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் தேவை என்று. நமக்குத் தேவையான கால்சியம், மாத்திரைகள் மூலமாக அல்லது உணவுகள் மூலமாக கிடைக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது அல்லது போதுமான அளவு உடலுழைப்பு இல்லாத போது எலும்புகள் பலவீனப்பட்டு உடைய ஆரம்பிக்கின்றன.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் 40 வயதுக்கு மேல் பல பெண்கள் ஆஸ்டோ கால்சியம் மாத்திரை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

சில சமயங்களில் இப்படி கால்சியம் மாத்திரை சாப்பிடுவது மாரடைப்பு நோய்க்குக் காரணம் ஆகலாம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதிகப்படியாக கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று சொல்லுகிறார்கள்.

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதால்  உடலுக்கு அதிகப்படியான கால்சியம் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. உடலால் ஏற்றுக்கொள்ளப் படாத  கால்சியம் டெபாசிட்டுக்களினால் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாறாக, உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம் நிதானமாக உடலால் உறிஞ்சப் படுகிறது. அதனால் அது பாதுகாப்பானது. ஆனால் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கால்சியம் மிகக் குறைவானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிரிட்டனில் இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எலும்பு மெலிவு நோயினால் பாதிக்கப் படுகிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 5 பேரில் ஒருவர் ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்பு மெலிவு நோய்க்கு ஆளாகிறார். 3 மில்லியன் மக்கள் இந்த நோயால் அவதிப் படுகிறார்கள்.

பெண்களுக்கு இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) க்கு பிறகு ஆஸ்ட்ரோஜென் குறைவாக சுரக்க ஆரம்பிப்பதால் இந்நோய்க்கு ஆளாகிறார்கள். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சிய சத்தை எலும்புகளுக்குக் கொண்டு செல்வது  ஆஸ்ட்ரோஜென் ஹார்மோன். இன்னொரு காரணம் புகைப்பிடித்தல். புகைப்பிடித்தல் எலும்புகளின் அடர்த்தியைக் குறைக்கிறது.

 

நம் வீட்டுக் குழந்தைகளுக்கும் இந்த நோய் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியக் குறைவான ‘ஜங்க்’ உணவுகள் சாப்பிடுவது மற்றும் வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்துகொண்டு வெகு நேரம் கணனியில் விளையாட்டுக்கள் விளையாடுவது மாதிரியான பழக்கங்கள் எலும்பு மெலிவு நோய்க்கு அழைப்புக் கொடுப்பதைப் போல. வளரும் பருவத்தில் உறுதியான எலும்புகளை அமைத்துக்கொள்ள தவறினால், பெரியவர்கள் ஆகும்போது எலும்பு மெலிவு நோய்க்கு ஆளாகக் கூடும்.

என்ன செய்யலாம்?

“கவலைப்பட தேவையில்லை. கால்சியம் மாத்திரகளை விட, உணவில் கால்சியம் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடலாம். அத்துடன் சரியான அளவில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன் கொடுக்கும்.” என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தைகளை அதிக நேரம் ஓடியாடி விளையாட அனுமதியுங்கள்.

எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ளுவது அவசியம்.

பால் குடிப்பது, கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்ப்பது நமக்கு தேவையான கால்சிய சத்தை கொடுக்கும். பால் பிடிக்காதவர்கள் தயிர், சீஸ் பனீர் முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ராகியில் நிறைய கால்சியம் இருக்கிறது. ராகி மாவில் தோசை, இட்லி, கஞ்சி செய்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.

எலும்பு மெலிவு நோய் வந்தவர்கள் கீழே விழாமலிருப்பது மிகவும் இன்றியமையாதது.  ஒருமுறை விழுந்துவிட்டால் எழுந்திருப்பது மிகவும் துர்லபம்.

உங்கள் வீட்டில் யாருக்காவது இந்நோய் இருந்தால் நீங்களும் பாதிக்கப்படலாம்.

உங்களை விட உங்கள் எலும்புகளுக்கு வயதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

Advertisements

11 thoughts on “உங்கள் எலும்புகளின் வயது என்ன?

    1. ஒரு குழந்தை பிறந்தவுடன் நமக்கு நம் ஆரோக்கியம் மறந்து விடும். நாம் நன்றாக இருந்தால்தான் நம் குடும்பம் நன்றாக இருக்க முடியும் என்று எல்லாப் பெண்களும் நினைக்க வேண்டும்.
      நன்றி விஜயா!

  1. விழிப்புணர்வு பதிவு.
    குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு.
    மெனோபாசிற்குப் பிறகு இந்த எலும்புத் தேய்மானத்தை அனுபவிப்போம்.
    நீங்கள் சொல்வது போல் உணவுப் பழக்கங்களை மேற்கொண்டால் இதிலிருந்து தப்பிக்கலாம்.

    நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு.

  2. அருமையான பதிவு.. பெண்களுக்கு தேவையான் பதிவு. நீங்கள் சொன்னது சரி மாத்திரையை விட உணவின் மூலமாய் எலும்பு தேய்மானத்தை தவிர்க்கலாம்.
    நன்றி நல்ல பதிவுக்கு.

  3. நமக்கு என்று நாம் என்றைக்கு சமைத்திருக்கிறோம்? பெண்களாகிய நாம் பிறருக்கு செய்வதில் ஒரு சின்ன அளவிலாவது நமக்கு என்று செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் எல்லாம் தவிர்க்கக் கூடியவையே.

    நன்றி கோமதி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s