Tips

புகைப்படத்தில் ‘ஸ்லிம்’ ஆகத் தெரிய….

புகைப்படத்தில் ‘ஸ்லிம்’ ஆகத் தெரிய….

நிஜமாகவே ‘ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லாதவர்கள் என்ன செய்வது? அதனால்தான் புகைப்படத்திலாவது ‘ஸ்லிம்’ ஆகத் தெரியலாமே என்று ஆசைப் படுகிறோம், இல்லையா? தப்பே இல்லை.

இதோ புகைப்படத்தில் ‘ஸ்லிம்’ ஆகத் தெரிய….சில ‘டிப்ஸ்’

  • காமிராவின் முன்னால் நேராக நிற்காதீர்கள்; உங்கள் இடுப்பை பக்கவாட்டில் திருப்பி உடம்பின் மேல் பகுதியை மட்டும் புகைப்படக்காரரை நோக்கித் திருப்புங்கள். இதனால் உங்கள் ‘அகலமான’ பாகங்கள் தெரியாமல் இருக்கும்.
  • நிமிர்ந்து உட்காருங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். ‘கூன்’ போடாதீர்கள். வயிற்றை உள்ளே இழுத்துக்கொண்டு, தோள்களை பின்னால் தள்ளி கீழே தளர விடுங்கள்.
  • மேல் கைகள் சற்று ‘குண்டாக’ இருக்கின்றனவா? கைகளை உடம்புடன் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டாம். இடுப்பின் மேல் கைகளை வைத்துக்கொள்ளவும். உட்கார்ந்து இருந்தால் ஒரு கையை மட்டும் பக்கத்தில் இருக்கும் மேசை அல்லது வேறு பொருள்களின்  மேல் வைத்துக் கொள்ளலாம். உடம்பிற்கும் கைகளுக்கும் இடைவெளி இருக்கட்டும்.
  • ‘டபிள் சின்’ (double chin) தெரியாமல் இருக்க முகத்தை சற்று தூக்கி முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். காமிராவை பாருங்கள். தரையைப் பார்க்க வேண்டாம்.
  • அழகான தோற்றமைவு (posture) உங்களை ‘ஸ்லிம்’ ஆகக் காட்டும். முதுகை நிமிர்த்தி, தலையை உயர்த்தி (யாரோ உங்கள் தலையை மேலிருந்து பிடித்து இழுக்கிறாப் போல) நில்லுங்கள்.
  • காலின் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார வேண்டாம். கால்கள் இரண்டையும் நிலத்தின்மேல் படிய வைத்து உட்காருங்கள். அல்லது குதி கால்களை ஒன்றின்மேல் ஒன்று (cross at heals) போட்டுக் கொண்டு உட்காருங்கள்.
  • முகத்தில் இயற்கையான புன்னகை பூக்கட்டும். புகைப்படத்தில் எப்படி இருப்போமோ என்று கவலைப் பட வேண்டாம். அந்த ‘டென்ஷன்’ முகத்தில் இருப்பது புகைப்படத்தில் நன்கு தெரியும். இயற்கையாக இருக்க முயலுங்கள். மனதில் சந்தோஷமான நினைவுகள் இருக்கட்டும்.
  • நீங்கள் என்ன உடை அணிந்திருக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். நீளக் கோடுகள் அல்லது சின்னச்சின்ன பூக்கள் உள்ள ஆடையை அணியுங்கள். புடவை அணிந்திருந்தால் முந்தானையை அழகாக மடித்து பின் செய்து கொள்ளுங்கள். சூடிதார் என்றால் ‘வேல்’-ஐ ஒரு பக்கம் போட்டுக் கொள்ளுங்கள்.
  • புடவைத்தலைப்பை இடதுபுறமாக முன்னால் கொண்டுவந்து புடவை பார்டர் தெரியும்படி பிடித்துக் கொண்டால் ‘தொப்பை’ தெரியாது. புடவை முந்தியின் அழகும் தெரியும்.
  • மற்றவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் நீங்கள் சற்று பின்னால் நில்லுங்கள். முன்னால் நிற்பவர்கள் புகைப் படத்தில் பெரிய அளவில் தோன்றுவார்கள். நீங்கள் அவர்களுக்கு பின்னால் ‘ஸ்லிம்’ ஆக தோன்றுவீர்கள்.

என்ன, புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தயாரா?

காமிரா!…. ஆக்…….. ஷன்……..ஷூட்!

 

Advertisements

2 thoughts on “புகைப்படத்தில் ‘ஸ்லிம்’ ஆகத் தெரிய….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s