General knowledge · Life · Technology

கேள்வி பிறந்தது அன்று!

இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினம் இருக்கிறதா? இது தான் பல நூறு வருடங்களாக மனித இனத்தை குழப்பும் கேள்வி. மனித இனத்துக்குப் புரியாத, புதிரான கேள்விகளில் இதுதான் முதலிடத்தை பிடிக்கிறது. புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா, கடவுள் இருக்கிறாரா இவை அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகள்.

தொலைக்காட்சி சானல் ஒன்றில் “அறிவியல் மாதம்” தொடங்கப்பட்டதை ஒட்டி சுமார் 2000 பேர்களை அறிவியல் கேள்விகளைக் கேட்க சொன்னபோது கேட்கப்பட்ட கேள்விகள் கீழே இருப்பவை:

இக்கேள்விகளில் ‘குளிர் சாதனப் பெட்டியை மூடியவுடன் உண்மையில் உள்ளே இருக்கும் விளக்கு அணைந்து விடுமா?’, ‘முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா’ போன்ற கேள்விகளும் அடக்கம்!

இதோ பத்து புதிரான கேள்விகளுக்கு பதில்!

1. மிகப்பெரிய அண்டத்தில் நாம் மட்டுமே இருக்கிறோமா?

இந்தப் பிரபஞ்சத்தில் பல பல கிரஹ அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றில் நம்மைப்போல் அறிவுடைய இனம் தோன்ற வாய்ப்புகள் கனிந்து காணப்படுகிறது. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஒளி ஆண்டுகளைத் தாண்டி அவற்றை எட்டக்கூடிய தொழில்நுட்பத்தை நம்மால் உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

2. புற்றுநோயை பூரணமாக குணமாக்க முடியுமா?

அற்புதமான மருந்துகளின் உதவியால் பலவிதமான புற்றுநோய்களிலிருந்து உயிர் பிழைப்பது சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. மாய மந்திரம் போல ஒரே இரவில் புற்றுநோயை குணமாக்குவது முடியாமல் போனாலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு நீண்ட காலம் வாழ்வது முடியும்.

3. கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அனுபவத்தால் அறியக்கூடிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை.

4. விண்வெளி எத்தனை பெரியது?

சில விண்வெளி வானியலாளர்கள் பிரபஞ்சத்திற்கு எல்லை இல்லை என்கிறார்கள். மற்றும் சிலர் ‘பிக் பாங்’ (Big Bang) என்னும் பெரு வெடிப்புக்குப் பிறகு பிரபஞ்சம் 150 பில்லியன் ஒளி வருடங்கள் அளவிற்கு பரந்து விரிந்து விட்டது என்கிறார்கள்.

5. எங்கே, எப்படி பூமியில் உயிர் தொடங்கியது?

இதற்கு எண்ணிலடங்கா கருத்துரைகள் இருக்கின்றன – பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்ததால் என்பதிலிருந்து சலன மின்னோட்டம் பூமியின் மேல் ஓட்டுக்குள் நுழைந்து வெளிவந்தால் என்பது வரை பல தத்துவங்கள் உள்ளன.

6. காலப் பயணம் சாத்தியமா?

அனுமான இணைப்புகளைக் கொண்ட காலப் பயணம் கருத்தியலில் சாத்தியம். ஆனால் இந்த அனுமான இணைப்புகள் (wormholes) நிலையானவை அல்ல. மேலும் எதிர்மறை திறனுடைய புவி ஈர்ப்பு (repulsive gravity) விசை தேவை. இப்படி ஒன்று இருக்கிறதா என்பது இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை.

7. விண்வெளியில் குடியேறுவது என்பது எப்போதாவது நடக்குமா?

நடக்கக் கூடும். ஒருவேளை பூமி நாம் வாழத் தகுதி இல்லாத இடமாக மாறிவிட்டால் என்ன செய்வது? அதனால் இப்போதிலிருந்தே நம்முடைய சூரிய மண்டலத்தில் வேறு எங்காவது குடியேற முடியுமா என்று மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் பிற கிரகங்களைஅல்லது சந்திரன்களை பூமியைப் போல மாற்றி அவைகளை மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக மாற்ற வேண்டும் என்பது பற்றி பல ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.

8. எண்ணெய்க்கு பதிலாக வேறு என்ன மாற்று எரிபொருள் வரக்கூடும்? எப்போது?

மாற்று எரிபொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை சாமான்யரும் வாங்கக் கூடிய விலையிலும், நம் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அளவிலும் இருந்தால் தான் எண்ணெய்க்கு மாற்றாக இருக்க முடியும். வளர்ந்து வரும் நானோ தொழில்நுட்பம் இந்தக் கேள்விக்குப் பதிலாக இருக்கலாம்.

9. பிரபஞ்சத்தின் முடிவு எப்போது?

ஒரு காலகட்டத்தில் பிரபஞ்சம் விரிவடைவது நின்று போய் தானாகவே நிலை குலைந்து நொறுங்கி விழுந்து விடும் என்றும், விரிவடையும் போது குளிர் அடைந்து, குளிர் அடைந்து ஜீரோ டிகிரியில் வந்தவுடன், தோன்றும் அந்த அறியப்படாத ஆற்றல் (dark energy) புவியீர்ப்பு விசையை வென்று விடும் என்றும் பல கருத்துகள் நிலவுகின்றன.

10. மனிதனின் ஆயுட்காலம் எதுவரை நீட்டிக்கப் படும்?

எலிகளின் ஆயுளை நீட்டிப்பதற்காக செய்த பரிசோதனைகள், மனிதர்கள் 100 வயதைக் கடந்து வாழும் காலம் வெகு விரைவில் வரும் என்று சில விஞ்ஞானிகளை நம்ப வைத்திருக்கிறது.

“கேள்வி பிறந்தது அன்று; நல்ல பதில் கிடைத்தது இன்று” என்று இந்த பதில்களுடன் நாம் திருப்தி பட முடியாது. ஏனெனில் இந்தப் பதில்கள் முடிவானவை அல்ல; நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Advertisements

3 thoughts on “கேள்வி பிறந்தது அன்று!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s