Uncategorized

தினசரி நடைப்பயிற்சி மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கிறது


மார்பகப்புற்று நோய் வராமல் தடுக்க பெண்களுக்கு தினமும் 90 நிமிட உடற்பயிற்சி தேவை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படி உடற்பயிற்சி செய்வது மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பை 30% வரைக் குறைக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

முன்பெல்லாம் 40 – 50 வயதான பெண்களுக்குத் தான் மார்பகப்புற்று வரும் என்ற நிலை இருந்தது. இப்போது மிகச்சிறிய வயதிலேயே பெண்கள் இந்நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

கான்சர் ரிசர்ச், யு. கே. ஆய்வின்படி பிரிட்டனில் எட்டு பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் மார்பகப்புற்று நோய் வருகிறது. பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு 48,000 பெண்கள் புதிதாக இப்புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 11,500 பேர்கள் இறக்கின்றனர்.

சற்று வயதான பெண்களுக்கு உடற்பருமனால் இந்நோய் வருகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை  விட உடற் பருமன் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு 10 மணி நேர மிதமான உடற்பயிற்சி –  வீட்டு வேலைகளையும் சேர்த்து – செய்வது பெண்களில் எல்லா வயதினருக்கும் இந்த நோய் வரமால் தடுக்க உதவுகிறது.

உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் வருவது சற்றுக் குறைவு. உடலுழைப்பு அதிகம் இருப்பதால் கொழுப்புத் திசுக்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. கொழுப்புத் திசுக்கள் தான் புற்றுநோய் கட்டிகளாக மாறுகிறது. இந்த திசுக்கள் ஆஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டேரன் ஆகிய ஹார்மோன்களை சுரக்க செய்கின்றன இவைதான் புற்றுநோய் கட்டிகள் வளரக் காரணம். உடற்பயிற்சி கொழுப்புத் திசுக்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

உடற்பயிற்சி செய்வதற்காக பெண்கள் ‘ஜிம்’ போக வேண்டிய அவசிய இல்லை. பெண்கள் மாரத்தான் ஒடுபவராகவோ, ட்ரெட்மில்லில் ‘ஜாக்’ செய்பவராகவோ இருக்கத் தேவை இல்லை. நடைப் பயிற்சி, வீட்டு வேலை அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை போதும்.

உடலுழைப்புடன் கூடவே தங்களது எடை கூடாமலும் பெண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

ஆகவே பெண்களே, நடங்க, நடங்க, நடந்துகிட்டே இருங்க. மார்பகப்புற்று நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்க!

மேலும் படிக்க: மார்பகப் புற்றுநோய்

Advertisements

4 thoughts on “தினசரி நடைப்பயிற்சி மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கிறது

  1. நீங்கள் சொல்வது போல் நம் பெண்கள் பெரும்பாலோர் இந்த சுய பரிசோதனையும்.
    மேமோகிராம் எல்லாவற்றையும் அலட்சியப் படுத்துகிறார்கள்.

    நல்ல விழிப்புணர்வு பதிவு.
    நன்றி விழிப்புணர்வு கொடுப்பதற்கு.

  2. மிக நல்ல பகிர்வு ரஞ்சனி வேறு எந்த பயிற்சி இல்லாவிடினும் தினமும் நடைப்பயிற்சி பெண்களுக்கு மிகவும் அவசியம் தனியாகவோ தோழிகளுடனோ நடப்பது உடம்புக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு என்று நம்புவோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s