நாட்காட்டியின் சரித்திரம் – 1

மனிதனின் பரிணாம வளர்ச்சியை கூர்ந்து நோக்கினால், பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஆரம்பக் காலங்களில் குகைகளில் வாழ்ந்து வந்த மனித இனம் இப்போது வேற்றுக்கிரகங்களில் குடியேறலாமா என்று யோசிக்கும் அளவிற்கு வானியல் துறையில் பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்றிருப்பதற்குக் யார் காரணம்?

அந்தக் காலத்திலேயே வான்வெளியையும், அங்கு ஒளிர்விடும் நட்சத்திரக் கூட்டங்களையும், அவற்றின் நடுவே ஒளிரும் கோள்களின் அசைவுகளையும் இரவும் பகலும் கவனித்து, ஆராய்ந்த ஒரு சில அறிஞர் பெருமக்கள் தான்.

அவர்கள் இந்த நட்சத்திரங்களும் கோள்களும் பயணிக்கும் பாதைகள், அவற்றின் பயண வேகம், பல்வேறு காலங்களில் வான்வெளியில் அவைகளின் சஞ்சாரம் என்று தாங்கள் கண்டறிந்த பலப்பல உண்மைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயன்படட்டும் என்று எழுதி வைத்தனர். அரசர்கள், செல்வந்தர்கள் ஆதரவால் கோள்களின் தினசரி நடமாட்டங்களை – சூரியனை அல்லது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டன. நாளடைவில் இந்தக் குறிப்புகள் மெருகூட்டப் பட்டு நாட்காட்டிகள் நடைமுறைக்கு வந்தன.

நாட்காட்டிகள் பற்றிய சில சுவையான தகவல்கள் இதோ:

மாயன் நாட்காட்டி: (Mayan Calendar)

மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி இது. மாயன் நாட்காட்டி 3 வகையான, ஒன்றுக்கொன்று இணையான காலக் கணிப்பு முறையை (parallel dating system) பயன்படுத்துகிறது. முதலாவது லாங் கவுண்ட் (Long Count), இரண்டாவது சோல்கின் (Tzolkin) எனப்படும் டிவைன் நாட்காட்டி (Divine Calendar), மூன்றாவது ஹாப் (Haab) என்று கூறப்படும் சிவில் நாட்காட்டி  (Civil Calendar). இவைகளுள் ஹாப் நாட்காட்டி மட்டுமே முழு வருடத்திற்குமான  விவரத்தைக் காட்டும். பலரும் நம்புவதுபோல 2012 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்பதை மாயன் நாட்காட்டி முன்கூட்டியே கணித்துக் கூறவில்லை.

ஆஸ்டேக் நாட்காட்டி (Aztec Calendar):  இந்த நாட்காட்டியும் மாயன் நாட்காட்டியும் அடிப்படையில் ஒன்றுதான். மாயன் நாட்காட்டியில் சிறிது மாற்றம் செய்து உருவாக்கப்பட்டது இது. இதில் இரண்டு வகையான வருடக் கணக்குகள்  உண்டு. முதலாவது 365 நாட்களைக் கொண்ட உழவுத் (Agricultural Calendar) தொழிலை – அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட  நாட்காட்டி. இன்னொன்று 260 நாட்கணக்கு கொண்ட புனித (Sacred Calendar) நாட்காட்டி. இவை இரண்டும் சேர்ந்து அமைந்ததுதான் 52 வருடங்களுடன் கூடிய நூற்றாண்டு (Century).

இந்த நாட்காட்டி இன்றும் மெக்ஸிகோ நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் (Museo Nacional de Antropologia) பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வியக்கத்தக்க விஷயம் இந்த நாட்காட்டியில் என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வராத நாட்கள் என்று சில நாட்களை வாழ்க்கையை சுதந்திரமாக ரசிக்க, கொண்டாட என்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். மாயன் நாட்காட்டியில் சூரிய வருடத்தின் கடைசி 5 நாட்கள் அடுத்த வருடத்திற்கான மாற்றத்திற்கும் அதற்கான தயார்படுத்துதலுக்காகவும் என்று கணக்கிடப்பட்டு “பெயரில்லாத நாட்கள்” எனப்பட்டன.

எகிப்திய மாதங்கள்

எகிப்திய நாட்காட்டி: (Egyptian Calender)

இந்த நாட்காட்டியின் சரித்திரம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்; 12 மாதங்கள்; ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்; ஒவ்வொரு வருடக் கடைசியிலும்  5 அதிக நாட்கள்! ஒவ்வொரு மாதமும் 10 நாட்களைக் கொண்ட 3 வாரங்கள். வெள்ளம் வருவதை முன்கூட்டியே இவர்களால் கணித்துக் கூறமுடிந்தது ஒரு ஆச்சரியமான விஷயம். கிரேக்கர்களையோ, மெசபடோமியர்களையோ போல் அல்லாமல் தங்களுக்கென்று ஒரு ராசிமண்டலத்தை உருவாக்கி இருந்தனர். பாப்பிராஸ் செடியிலிருந்து தயார் செய்யப்பட்ட காகிதத்தில் இவற்றையெல்லாம் மிக அழகான முறையில் (Pictoglyphs) விளக்கக் காட்சிகளாக செய்து வைத்திருந்தனர்.
தகவல்கள் தொடரும்……..

நாட்காட்டியின் சரித்திரம் – 2

8 thoughts on “நாட்காட்டியின் சரித்திரம் – 1

 1. இதுவரை அறிந்திராத தகவல்.
  \\மிகவும் வியக்கத்தக்க விஷயம் இந்த நாட்காட்டியில் என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வராத நாட்கள் என்று சில நாட்களை வாழ்க்கையை சுதந்திரமாக ரசிக்க, கொண்டாட என்று ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.\\
  இந்தத்தகவல் மிகவும் சுவாரசியமாகயிருந்தது. எகிப்தியர்கள் முன்பே வெள்ளம் வருவதைக் கணித்தனர் என்பது ஆச்சர்யமாகயிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

 2. நான் வியக்கும் பல விஷயங்களில் இந்த நாட்காட்டியும் ஒன்று சில நாட்களில் தினசரி நாட்காட்டியில் தெதியை கிழிக்கும்போது இன்று மழை பெய்தால் நல்லது என்று இருக்கும் இதை முன்பே எப்படி கணிக்கமுடிந்தது என்று ரொம்ப வியப்பாக இருக்கும் நிறைய தெரிந்து கொண்டோம் ரஞ்சனி நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

 3. வணக்கம்
  அம்மா

  நல்ல பயனுள்ள விடயத்தை பகிர்து கொண்டிங்கள் இதில் மாயன் நாட்காட்டி
  எகிப்திய நாட்காட்டி ,ஆஸ்டேக் நாட்காட்டி போன்ற நாட்காட்டியில் என்ன வியங்கள் உள்ளது என்பதை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றியம்மா அனைவருக்கும் பயன் உள்ள படைப்பு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 4. “முதலாவது 365 நாட்களைக் கொண்ட உழவுத் (Agricultural Calendar) தொழிலை – அதாவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி. இன்னொன்று 260 நாட்கணக்கு கொண்ட புனித (Sacred Calendar) நாட்காட்டி. இவை இரண்டும் சேர்ந்து அமைந்ததுதான் 52 வருடங்களுடன் கூடிய நூற்றாண்டு (Century).”

  அருமையான அறிந்திராத தகவல்.
  அழகு …
  நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s