சொந்தக் கதை

 

நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 25 வருடம் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன்.

தும்கூரில் என் கணவரின் வேலைக்காக (GM, TVS Electronics) இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன்.

எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். இப்போதும் ஒன்றிரண்டு மாணவர்கள் வருகிறார்கள். வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம். அதேசமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.

என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேசவேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். இப்போது அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு! வெளியில் சென்று வேலை பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.

அதனால் ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கைநீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் பதிய ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார்.

என் எழுத்துக்களுக்கு நல்வரவு சொன்ன திரு பிரகாஷ், திரு பிரதீப், திருமதி ஸ்ரீ வித்யா, (a2ztamilnadu) மற்றும் திரு சுகந்தன் (ஊர்.காம் ) இவர்கள் அனைவருக்கும் என் இதயம் நனைந்த நன்றிகள்!

ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். இந்த மாத ஆரம்பத்தில் இருந்து எனக்கே ஒரு பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். நானே என் எழுத்துக்களை வெளியிடவும் முடியும். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்? எனக்குக் கொடுத்த இந்த பொறுப்பை மிகவும் கவனமாகக் கையாளுகிறேன். பல முன்பின் தெரியாதவர்கள் என் எழுத்தைப் பாராட்டும் போது மகிழ்ச்சியுடன் பொறுப்பும் அதிகமாவதை உணருகிறேன். நான் எழுதுவதை எல்லாம் வோர்ட்பிரஸ்ஸிலும் போடுகிறேன். இதன் மூலம் பல பேரின் நட்பு கிடைத்திருக்கிறது.

பல ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் மொழியாக்கமும் செய்கிறேன்.

சில மாதங்கள்தான் ஆனாலும் என் ப்ளாகிற்கு கணிசமான வாசகர்கள் வருகை தந்து எனது எழுத்தை தினமும் படிப்பது மிகவும் மகிழ்ச்சி உரிய விஷயம்.

வோர்ட்பிரஸ் நண்பர்கள் திருமதி காமாட்சி, திருமதி சித்ரா சுந்தர், திரு சந்தோஷ், திருமதி கேரி ஆண்ட்ரூஸ், திருமதி மேகி ஆகியவர்களுக்கு என் நன்றி, நன்றி, நன்றி!

என் எழுத்துக்களை உடனே படித்து தனது கருத்தையும் உடனே பதிவு செய்யும் என் பத்திரிக்கை தோழி திருமதி ராதா பாலுவுக்கு என் நன்றிகள். இவரது எழுத்துக்களுக்கும் நிறைய விசிறிகள்; இருந்தும் சக எழுத்தாளரை வாயார வாழ்த்தும் இவரது குணம் மிக அரிது. பாராட்டுக்கு உரியது.

பலர் படித்தாலும் சிலர்தான் கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். படிக்கும் அத்தனை பேரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் எனது எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவியாயிருக்கும்.

படிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

66 thoughts on “சொந்தக் கதை

 1. This feedback is sent by Sri Suganthan, ooooor.com
  Hi,

  Lovely, you are the best on what you do.

  Thanks for including my name on your list 🙂

  Happy mothers day 🙂

  Good luck.

  Regards,
  Suganthan
  Sent wirelessly from my BlackBerry device on the Bell network.
  Envoyé sans fil par mon terminal mobile BlackBerry sur le réseau de Bell.

 2. Wish you a Very Happy Birthday and Many More Happy Returns! 🙂

  Had seen your comments in Chitra akka’s blog, but came to know about your blog just now. Glad that I came here on your Birthday! 🙂

  Nice to know about you, Happy blogging!

  1. Thanks a lot Mahi. I too visited your blog through Chitra’s blog. You have posted many nice pictures and your recipes are really mouth-watering!

 3. Hi Namaskarm.

  I am recent visitor (only a week) to your blog (came across from Kamakshi mami’s blog, who is our family friend) and found your articles very interesting. I got my id added to your mailer list & receiving all the new entries in my mail.

  First of all wish you a belated Happy Birthday.

  it is a very inspiring article to all the pople like me who always think that what ever we could not achieve is due to destiny/fate / other facts is not true but only we did not try hard enough to achieve.

  Thanks for sharing all needful informations like how much water to drink, …. or the interesting articles like Parupu usli jeens .. (After I found some of your recent ones interesting I tried to reall your entries.)

  Awaiting to read the next one.

  Best Regards

  1. Dear Sheela, Nice to hear from you. your kind words are very encouraging to a blogger like me. Keep reading and post your comments without fail. Thanks for the birthday wishes!

 4. ரஞ்சனி,

  இன்றுபோல் இனி வரும் பிறந்த நாள்களையும் இதே சந்தோஷத்துடன் கொண்டாட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.தாமதமாக வந்திருக்கிறேன். திறமையுடன் விருப்பமும்,முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம் என்பதை உங்கள் ‘சொந்தக் கதை’ உணர்த்தியது.நீங்கள் எழுதுவதை நாங்கள் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். என்னையும் உங்கள் நண்பர்கள் வரிசையில் சேர்த்ததில் மிக்க ம‌கிழ்ச்சி.

 5. மிக்க நன்றி சித்ரா. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்திருக்கிறீர்கள்.

 6. அன்புள்ள ரஞ்ஜனி ஆசிகள் பல. பார்த்தேன் உன் பதிவை.2நிமிஷத்திற்கு முன். அதிகம் வலைகளில் படிக்க நேரமில்லாத சூழ் நிலை. இருந்தது. பரவாயில்லை இன்றாவது பார்த்தேனே என்று ஸந்தோஷப் பட்டுக் கொள்கிறேன். அறுதாவது வயது பிறப்பைக் கொண்டாடிய உனக்கு ஸதாபிஷேக வயதைப்பூர்த்தி செய்த நான் நிறைய ஆசிகளை வழங்குகிறேன். நல்ல
  முன்னேற்றமான, படிப்படியான படிப்பும்,பணியும், வாழ்வின் முன்னேற்றங்களும் அமைந்ததிற்கு உன் எழுத்துக்கள் தெளிவாக விளக்கியது. என் ப்ளாக் மூலமும் ஷீலா உன்னை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உன் பதிவுகளைப் படிக்கிறேன். எனக்கும் கமென்ட் பார்த்தேன்., ஸந்தோஷம். தொடருவோம். அன்புடன்

 7. அன்புள்ள காமாட்சி அம்மா அவர்களுக்கு,
  உங்களது ஆசிகளுக்கு எங்கள் (என் கணவருடைய, என்னுடைய ) மனமார்ந்த நன்றிகள். ப்ளாக் மூலம் அறிமுகம் என்றாலும், நிறைய நாட்கள் பழகியவரைப் போல நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மனதை தொடுகின்றன. உங்கள் நட்பு கிடைத்ததற்கு ரொம்பவும் புண்ணியம் செய்திருக்கிறேன்.
  என் அம்மாவுக்கு 84 வயதாகிறது. அவளைப் பற்றி ‘மே 13 ஆம் நாள்’ என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். என் அம்மாவுக்கு நான் காட்டும் ஒரு சின்ன பரிவு அந்தப் பதிவு. இதோ அதற்கான லிங்க்:
  https://ranjaninarayanan.wordpress.com/2012/05/13/%E0%AE%AE%E0%AF%87-13-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/
  அன்புடன்,
  ரஞ்சனி

 8. அன்பு ரஞ்சனி…..இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன். என்னைப் பற்றி ரொம்பவே எழுதியிருக்கிறீர்கள். நானும் உங்களைப் போலதான். திருமணத்திற்குப் பின் ஆசைப் பட்டவைகளைக் கற்றுக் கொண்டு என் குழந்தைகளை சிறப்பாக உருவாக்கி, இன்று என் நேரத்தை பயனுள்ள விதத்தில் உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறேன். பிடித்த விஷயங்களைப் பாராட்டுவது எனக்குப் பிடித்த விஷயம். அதற்காக என்னை உங்கள் சொந்தக் கதையில் இணைத்து பாராட்டியமைக்கு மிக மிக நன்றி. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

  1. அன்புள்ள ராதா,
   உங்கள் பின்னூட்டம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. ஒரு நாள் நான் மிகவும் சோர்ந்திருந்த போது உங்களுடன் ‘சாட்’ செய்தேன். அப்போது நீங்கள் கொடுத்த யோசனைகள், நம்பிக்கை ஊட்டும் அறிவுரைகள் மறக்க முடியாது. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் – உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’
   உங்களது பெருந்தன்மை அளவிட முடியாதது.
   நன்றியுடன்,
   ரஞ்ஜனி

 9. நான் தமிழில் ஏழுதவில்லை என் வலைத்தளத்தில் அனால் தமிழ் மேல் என்னக்கு பற்று அதிகம் .உங்கள் வலைதளத்தை படிக்கும் பொது அது இன்னும் அதிகம் ஆகிறது .மேலும் மேலும் ஏழுதா எனது வாழ்த்துகள் .

  1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, உமா. நீங்களும் தமிழில் எழுதுங்கள். உங்கள் முதல் விசிறியாக நான் இருப்பேன்!

 10. உங்களை பற்றி தெரியவேண்டியது நிறைய உள்ளது… உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது அதைவிட அதிகமாக உள்ளது அம்மா.. அவ்வளவோ ஆச்சர்யம் எனக்கு உங்கள் திறமையை கண்டு!!!
  மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறீர்கள்… உங்களை போல வர வேண்டும் என ஆவல் பிறக்கிறது.. ஆனாலும் அது பேராசைதான் எனக்கு!!!

  உங்களுக்கு late -க கிடைத்தாலும் எல்லாமே latest தான்… மென்மேலும் சிறப்புற இறைவனை வேண்டுகிறேன்!!! நீங்கள் எனக்கெல்லாம் ஒரு வழிகாட்டி, ஒரு கிரியா-ஊக்கி….உங்கள் நட்பு கிடைத்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்…எனக்கும் எழுத்தும் ஆவல் வருகிறது உங்களை நினைக்கும் போது….

  1. அன்பு சமீரா, உன் பாராட்டுக்கு நன்றிகள் பல. கூடிய சீக்கிரம் உனது வலைப்பதிவுகளைப் படிக்க ஆசை!

 11. அன்பின் ரஞ்சனி மேடம் – சொந்தக்கதை அருமை – நன்று நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 12. அதென்ன புரட்டாசி – வந்து விட்டதா என்ன ? இன்று ஆவ்ணி 16 தானே – செப்டம்பர் முதல் நாள் தானே ?

  1. அன்பு சீனா ஐயாவுக்கு,
   தமிழில் பதிவுகள் இருப்பதால் ஆகஸ்ட் என்பது ஆவணியாகவும், செப்டம்பர் புரட்டாசியாகவும் மாறிவிட்டது!

   1. அன்பு சீனா ஐயாவுக்கு,
    பதிவர் விழாவில் ஒரு திரு சுரேகா கூறினார்: உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் ‘நட்புடன் சீனா’ என்று மறுமொழி இல்லையென்றால் நீங்கள் பதிவர் இல்லை’ என்று.
    இத்தனை விரைவில் பதிவுகளைப் படித்து பின்னூட்டமும் அளித்ததற்கு நன்றிகள் கோடானு கோடி!
    நான் ஓர் பதிவர் என்று இப்போது பெருமையுடன் சொல்லிக் கொள்ளுவேன்!

 13. தங்களின் முயற்சியைக் கண்டு வியக்கிறேன். தங்களின் முன்னேற்றத்தைக் கண்டு அதைவிட வியக்கிறேன். வலை தள நண்பர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி.ஊக்கம் தரும் தங்களின் எழுத்து ஒரு பாடம்.

 14. அன்புள்ள ருக்மிணி அம்மாவிற்கு,
  உங்கள் பின்னூட்டம் மிகவும் தெம்பாக இருக்கிறது.
  நன்றி!

 15. வணக்கம்
  (ரஞ்சனி.அம்மா )

  உங்களின் சொந்த வாழ்கையை ஒரு கதையாக வடிமைத்து அதை பிரபஞ்சம் எங்கும் நடமாட
  உயிர் கொடுத்து வாசகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளவைத்து
  விட்டிர்கள் கதையை படித்து பார்த்தபின்பு அதில்நானும் ஒருவன்…..
  இந்த எழுத்துலகில்.உங்கள்படைப்புக்கள் மேலும் வெளிவரவும்.உங்கள்எழுத்துப் பணிதொடர எனதுவாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 16. வாழ்க்கையில் என்னைப்போலவே மற்றொருவராகத் தங்களைப் பார்த்ததில், தங்கள் சுய சரித்திரத்தைக் கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் எழுத்துலக முன்னேற்றத்தைப் படிப்படியாகவும், பொடிப்பொடியாகவும் விளக்கியுள்ளது அழகோ அழகு தான். நமக்குள் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. 2005 தான் நான் என் முதல் சிறுகதை ஒன்றை எழுதினேன். ”தாயுமானவள்” என்பது தலைப்பு. என் இந்த முதல் கதைக்கே பாராட்டுக்களும், பரிசுகளும் கிடைத்தன.

  http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html தாயுமானவள்-1
  http://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html தாயுமானவள்-2
  http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html தாயுமானவள்-3

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html உடம்பெல்லாம் உப்புச்சீடை

  பிறகு தொடர்ந்து பல தமிழ் வார மாத இதழ்களில் 2010 வரை எழுதினேன். அவை பெரும்பாலும் வெளியிடப்பட்டன.

  இந்த ”தாயுமானவள்” என்ற என் கதையும், ”உடம்பெல்லாம் உப்புச்சீடை” என்ற மற்றொரு பிரபலமான என் கதையும், தங்களைப்போலவே இசையிலும், தமிழ் மற்றும் கன்னட எழுத்துலகிலும் மிகப்பிரபலமான வேறொரு [பெங்களூரில் வசிக்கும் பெண்மணியால்], கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, கன்னட மாத இத்ழான ”மஞ்சரி” யில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  பிறகு வலைத்தளத்தில் 02.01.2011 முதல் எழுத வைத்தார் என் ஆருயிர் நண்பரும், நலம் விரும்பியும் ஆன திரு ரிஷபன் அவர்கள்.

  அதற்கு முன்பு தமிழில் சரிவர டைப் அடிக்கத்தெரியாத நான் வெறி பிடித்தாற்போல 2011 ஆண்டு மட்டுமே 200 படைப்புகளைக் கொடுத்து, வலையுலகில் சற்றே பிரபலமானேன்.

  2011 நவம்பர் இரண்டாம் வாரத்தில் என்னை தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராக ஜொலிக்க வைத்தார்கள்.

  தாங்கள் சொல்வதுபோல பலரின் நட்பும் பாராட்டுக்களும் தொடர்ந்து கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

  தங்களின் இந்தப்பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  VGK

  1. அன்புள்ள வை.கோ. அவர்களுக்கு,
   தங்களது விரிவான கருத்துரையைப் பல முறை படித்துவிட்டேன்.
   உங்களது கதைகள் கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பது பற்றி மிகவும் சந்தோஷம்.
   எழுதுவதிலும், நம் எழுத்துக்களை பிறர் பாராட்டுவதும் மனதிற்கு எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கின்றன என்பதை நம் போன்ற எழுத்தாளர்களே அறிவார்கள்.
   எழுத்தின் மூலம் உங்களை அறிந்ததில் மிகவும் பெருமைப் படுகிறேன்.
   நன்றியுடன்,
   ரஞ்ஜனி

 17. Dear Ranjani amma,
  vanakkam. thankgal valaipathi miga nanraga Irukku. Migavum saralamaga neril uraiyaaduvathu pol iyalbaga irukku. tamilil pathiya theriyaatha kaaranaththal tngilishil pathiyum
  anbudan
  somle

 18. நல்வரவு திரு சோமலே அவர்களுக்கு!
  சோமலே என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார், அவரா நீங்கள்?
  தவறாக இருந்தால் மனிக்கவும்.
  உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

 19. அன்பின் ரஞ்சு அம்மா,

  உங்களைப்பற்றி இப்போது தான் வை.கோ (கோபு அண்ணா) மெயில் அனுப்பி இருந்தார். படித்ததும் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்…. உங்க படத்தை பதிவர் மாநாட்டில் பார்த்தேன்.

  உங்களைப்பற்றி, நீங்க எழுத்துலகம் பிரவேசித்தது பற்றி விரிவாக வாசித்தேன்… சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு நீங்க சரியான உதாரணம் அம்மா…

  கல்யாணம் ஆனப்பின்னர் தான் கற்க உங்களுக்கு இத்தனை வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள்…. உங்கள் எழுத்துகளை வாசிக்கும் நாங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலிகள் அம்மா…

  வாழைக்காய் கரமுது, வடை இல்லாமல் என்ன கல்யாணம்?? அப்டி கேட்ட உறவுகளை எல்லாம் தனியா ஒரு ட்ரீட் வைச்சிருக்கக்கூடாதோ வாழைக்காய் கரமுது, மெதுவடை போட்டு 🙂

  ரசித்தேன் அம்மா உங்கள் வரிகளை….

  உங்க எழுத்துலகில் உங்கள் ரசிகைகளில் இனி நானும் ஒன்று….

  அன்பு நன்றிகள் அம்மா பகிர்வுக்கு.

  1. வாருங்கள் மஞ்சுபாஷிணி! திரு வை.கோ. உங்களைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

   உங்களை என் பதிவுகளில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!

   உங்கள் பின்னூட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, உங்கள் பெயரைபோலவே!

   வருகைக்கு நன்றி!

 20. Bela(aaaaaaaa)ted Hearty Sixtieth Birthday greetings, Ranjani. I am delighted to have come across your blog today and as I go through your writings ‘about you’ and personal info, I am taken back to good old days in Purasawalkam, way back in 70s, where we used to stroll the ‘tank’ area for hours together…. (Hope you recollect). I am really proud that my ‘friend’ has become so successful as a ‘writer’ and a ‘blogger’. Hats off to you.
  Sincerely,
  Jayanthi.

 21. ஆஹா…ஜெயந்தி! இத்தனை நாள் நான் பதிவு எழுதியது மீண்டும் உன்னை என் பதிவுகள் மூலம் சந்திக்கத்தானோ என்று தோன்றுகிறது!

  உன் கடிதத்தைப் படித்ததிலிருந்து பழைய நினைவுகள்தான்!

  கூடிய விரைவில் சந்திப்போம்!

 22. dear ranjani very much impressed to see ur chontha kadhai very nice i am completing 60yrs in 2014 i am also sailing in the same boat of lonliness ur writing is very good and tells the facts of life i too want to write a lot but how i donot know i used to write poems when i was in the college now i am a regular reader of aval and mangayarmalar i wrote some samayal kurippugal to them but they were not published now i have lots of time to think and write and where to start i donot know give me some idea i worked as a teacher in a pvt school for 25 yrs and produced so many enggs doctors and software people i live in hyd advice me

  1. அன்புள்ள விஜயா,

   உங்கள் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். ஆசிரியை ஆக இருந்த நீங்கள் வலைப்பதிவு உலகத்திலும் சாதிக்கலாம்.

   சமீபத்தில் எப்படி வலைப்பூ துவங்குவது என்று எழுதி இருந்தேன். இணைப்புகள் கொடுக்கிறேன்.

   படித்துப் பாருங்கள். வோர்ட்பிரஸ்- ஸில் ப்ளாக் ஆரம்பிப்பது வெகு சுலபம். wordpress.com என்று புதிய tab- இல் போடுங்கள். ‘create a blog’ என்று வரும். follow the instructions! 5நிமிடங்களில் ஆரம்பித்து விடலாம்.

   http://wp.me/p244Wx-kJ – வலைப்பதிவில் ஒரு புதிய பயணம்

   http://wp.me/p244Wx-kO – பெயர் சூட்டுவோம்! (உங்கள் ப்ளாகிற்கு என்ன பெயர் வைப்பது)

   http://wp.me/p244Wx-kS – என்ன விஷயங்கள் விலை போகும்? ( எதைப்பற்றி எழுதுவது?)

   http://wp.me/p244Wx-kZ (இதுவும் தலைப்புகள் பற்றியதுதான்)

   http://wp.me/p244Wx-lc – உங்கள் அனுபவங்களை எழுதுவது பற்றி

   சீக்கிரமே ஆரம்பியுங்கள். வாழ்த்துகள்!

  1. ஹலோ ரஞ்சனி அம்மா, எப்படி இருக்கீங்க ? என்னோட மாமியார் நிறைய புத்தகம் வாசிப்பாங்க…. அவங்க உங்களோட ” அத்தையும் ராகி முத்தையும் ” பிப்ரவரி 2000 மங்கையர் மலரில் வந்த பக்கங்களை எடுத்து வைத்து இருந்தார்கள்… அதை படித்து விட்டு எல்லோரும் சிரித்து கொண்டே இருந்தோம்…

   1. வாங்கோ ப்ரியாராம்!
    என் எழுத்துக்களுக்கு எங்கெங்கோ ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எத்தனை மகிழ்ச்சியான செய்தி!

    நன்றி, தொடர்ந்து வாருங்கள்!

    உங்கள் மாமியாரை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்!

 23. உங்களின் வாழ்க்கை பயணத்தை வரிகளில் சொல்லி விட்டீர்கள்… 🙂 .கற்கவும்,கற்பிக்கவும் வயது ஓர் தடையல்ல என நிரூபித்து விட்டீர்கள்..

 24. உங்களை பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
  ரொம்ப நெகிழ்வாய் இருக்கிறது

 25. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகளை தங்களுக்குச் சொல்வதை விட முன்கூட்டிய பிறந்த நாள் (13 May, 2013) நல்வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வது சிறந்தது என்று கருதுகின்றேன்.

  ஆகவே, கணம் கோட்டார் அவர்களே!,

  இவ்வலைப்பூவின் நாயகி அவர்களுக்கு எந்தன் சார்பில் முன்கூட்டிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

 26. இத்தனை பன்முகத் திறமைகள் கொண்ட உங்களின் அனுபவங்கள் எல்லோருக்கும் பாடமாக இருக்கும். தன்னைத்தானே செதுக்கும் சுயம் பலருக்கு கைவராத அரிய குணம். அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது…
  வாழ்த்துக்கள்…

 27. இதன் முலம் நிறைய அறிய முடிந்தது. மிக்க நன்றி. மேலும் உயர வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம.

 28. உங்களது பதிவுகள் ஒவ்வொர்ன்றும் ஒருரகம் எல்லாமே அருமை வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் கவியாழி!
   உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

   பாராட்டுக்களுக்கு நன்றி!

 29. Hello Ranjani Mam

  wish you and your family a happy new year.

  Awaiting more and more interesting / useful articles from you in the oncoming year & pray the God to shower his blessings for your good health & happiness.

  Best Regards

 30. இத்தனை நாள் உங்கள் எழுத்துக்களை தவற விட்டிருக்கிறேனே என்று தோன்றுகிறது.சொந்தக் கதை பலருக்கு ஊக்குவிப்பாக இருக்குமென்று தோன்றுகிறது

  1. வாருங்கள் ராஜி!
   உங்களுக்கு என் எழுத்துக்கள் பிடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 31. இப்பொழுது தான் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.. நிறைய எதிர்பார்த்து படிக்கிறேன்.. வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் நிக்கி,
   உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா தெரியாது.
   என் எழுத்துக்களைப் படிப்பதற்கு நன்றி!

 32. அகவை ௬௦ .கலைமகள் அருளும் மலைமகள் சக்தியும் திருமகள் ஆசியும் பெற்று
  அவனியில் அனந்த ஆண்டுகள் தீர்க்க ஆயுளுடன் இலக்கியப்பணி ஆற்ற வாழ்த்துக்கள்..முப்பெரும்தேவிகளிடம் பிரார்த்தனைகள். ஆதார் அட்டை பெரும் விவரம் முக புத்தகத்தில் வந்தது.அப்பொழுது உங்கள் சொந்தவிவரம் படித்தேன்.
  மகிழ்ச்சி யான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  1. வாருங்கள் ananthaகிருஷ்ணன்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் உங்களது அருமையான, அழகான வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   எனது பிறந்தநாள் மே மாதம்.

 33. உங்கள் சொந்தக் கதையைப் படிக்கும் போது ஆச்சரியமாக, வியப்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு திறமைகள் உங்களுக்குள் இருக்கிறது. இருந்தும் சாதாரணமாக இருக்கிறீர்கள். இது தான் நான் முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

  1. வாங்க உமையாள் காயத்ரி!
   முதல் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் நன்றி!
   இனி தொடர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

 34. உங்கள் சொந்தக் கதையைப் படித்தேன், நடை நன்றாக இருகிறது. தமிழ்மணத்தில் இருகீங்களா? வாழ்த்துக்கள்

  1. பாராட்டிற்கு நன்றி . தமிழ்மணத்தில் இருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s