Beauty products

சருமப் பாதுகாப்புக்கு சில எண்ணெய்கள்


முன்னொரு காலத்தில் எண்ணெய்க் குளியல் பல வீடுகளில் வழக்கத்தில் இருந்து வந்தது. இன்றைக்கும் ஆயுர்வேதம் பல சிகிச்சைகளுக்கு எண்ணெய் வகைகளை பரிந்துரை செய்கிறது.

ஆலிவ், எள், கடுகு, தேங்காய், பாதாம், சூரிய காந்தி, ஆமணக்கு முதலியவற்றில் இருந்து எண்ணெய் பிழிந்து (Pressed oils) எடுக்கப் படுகின்றது. பல நூறு ஆண்டுகளாக இந்த எண்ணெய்கள் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை மசாஜ் செய்யப் பயன்படுத்தப் படும் எண்ணெய்கள் ஆகும்.

எள் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மிகவும் லேசானது; வாசனை அற்றது; நம் சருமத்தால் சுலபமாக உள்ளிழுக்கப் படுவது. ஆயுர்வேதம் இந்த எண்ணை சமச்சீரான எண்ணெய் என்பதால் எல்லா தோஷங்களுக்கும்  நல்லது என்கிறது. போஷாக்கு சத்தும் குணப்படுத்தும் ஆற்றலும் நிறைந்தது. எள்ளில் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை தடுக்கும் பொருட்களான SPF உள்ளது. அதனால் தோலில் ஏற்படும் சின்னச்சின்ன தடிப்புகள், கட்டிகள் இவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. விட்டமின் E, தாதுப் பொருட்கள், புரதப் பொருட்கள், லேசிதின் நிறைந்துள்ள எண்ணெய் இது.

பாதாம் எண்ணெய் உலர் சருமம் இருப்பவர்களுக்கு மிக நல்லது. இதுவும் மசாஜ் எண்ணெய் தான். குளிர் காலத்தில் சருமத்தைக் காக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய் மிக இலேசானது. நம் உடலில் இருக்கும் அமிலத்தன்மை, காரத்தன்மையை சீராக வைக்க உதவுகிறது.

நறுமண சிகிச்சையில் தாவரப் பொருட்களில் இருந்து எடுக்கப் படும் எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை மேற்சொன்ன பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய்களிலிருந்து வேறுபட்டவை. இவைகளை அத்தியாவசிய எண்ணைய்கள் (Essentail Oils) என்கிறார்கள். இந்த எண்ணெய் பூக்கள், இலைகள், விதைகள், மரப்பட்டைகளில் இருந்தும் எடுக்கப்படுகின்றன. ரோஜா, சந்தனக் கட்டை, மல்லிகை, லாவண்டர் ஆகியவற்றில் இருக்கும் நறுமணம் இந்த அத்தியாவசிய எண்ணெய்களினால் வருபவை. அதனால்  இவற்றை அப்படியே பயன்படுத்தக் கூடாது. பிழிந்தெடுத்த எண்ணைகளுடனோ அல்லது ரோஸ் வாட்டருடன் கூடவோ சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்க வேண்டும்.

நறுமண மசாஜ் எண்ணை:

பாதாம், எள் எண்ணையுடன், சில துளிகள் ரோஸ் அல்லது சந்தன எண்ணெய் சேர்த்து கலந்தால் நறுமணம் மிக்க உடல் மசாஜ் எண்ணெய் கிடைக்கும். சந்தன எண்ணெய் சொறி, சிரங்குகளிலிருந்து காக்கும். ரோஸ் எண்ணெய் நல்ல இரத்த ஓட்டத்துக்கும், சருமத்தை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவும். இந்த இரண்டு எண்ணைகளும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றன. 50 கிராம் பிழிந்தெடுத்த எண்ணையுடன் 5 துளிகள் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து நறுமண மசாஜ் எண்ணை தயாரிக்கலாம்.

உலர் சருமத்திற்கு:

முட்டை மஞ்சள் கருவுடன் சில துளி ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். சருமம் வெளுக்க இத்துடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து பூசலாம்.

முகத்திற்கு போடும் மாஸ்க் தயாரிக்க: (Face mask) கோதுமைத் தவிட்டுடன் (wheat Bran) ஒரு தேக்கரண்டி ஆரஞ்சுப் பழத் தோலின் பொடி, தேன், தயிர், ஆலிவ் ஆயில் இவை தலா ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 20 அல்லது 30 நிமிடம் கழித்து கழுவவும்.

உலர்ந்த கூந்தலுக்கு:

முட்டையின் மஞ்சள் கருவுடன்  பாதாம் எண்ணெய் சேர்த்து கூந்தலில் தடவலாம். உலர்ந்த கூந்தல், நுனி பிளந்த கூந்தல் இவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணம் தரும் இந்தக் கலவை.

இளம் குழந்தைகளின் உச்சந்தலையில் செதில் செதிலான சருமம் காணப்படும். இவற்றை அப்படியே கையால் பிய்த்து எடுக்கக் கூடாது. சுத்தமான ஆலிவ் எண்ணையை சிறிதளவு பஞ்சில் தோய்த்து இவற்றின் மேல் தடவ வேண்டும். அடுத்தநாள் இவை மிருதுவாகி விடும். பேபி ஷாம்பூ போட்டு தலையை அலசினால் போய்விடும்.

கைகளுக்கு:

கைகளுக்கு எள் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் நன்றாகப் பூசி ½ தேக்கரண்டி சர்க்கரையை ஸ்கரப்பர் (scrubber) போலத் தேய்க்கவும். சர்க்கரை முழுவதும் கரைந்த பின் கைகளை ஒரு ஈரத் துவாலையால் துடைக்கவும்.

நகங்கள்: பாதாம் எண்ணெய்யை சுட வைத்து நகங்கள் மற்றும் அவற்றை சுற்றி இருக்கும் தோலின் மேலும் மசாஜ் செய்யுங்கள். இதை முழங்கால், முழங்கைகளிலும் தேய்க்கலாம்.

கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையங்கள்:

சுத்தமான பாதாம் எண்ணெய்யை கண்ணுக்குக் கீழ் தடவி மோதிர விரலால் நிதானமாக வட்ட வடிவில் ஒரு நிமிட நேரம் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.

கூந்தலுக்கு எண்ணெய் :

10 லிருந்து 15 கிராம் உலர்ந்த நெல்லிக்காய், ஒரு தேக்கரண்டியளவு மெந்தியம் இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இந்தக் கலவையை 100 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் உடன் கலக்கவும். இதனை ஒரு கண்ணாடி ஜாடி அல்லது பாட்டிலில் கொட்டி 15 நாட்கள் வெய்யிலில் வைக்கவும். தினமும் நன்றாக குலுக்கி விடவும். ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பயன்படுத்தவும். எல்லா விதமான கூந்தலுக்கும் பொடுகு வராமல் காக்கவும் மிகச்சிறந்த எண்ணெய் இது.

Advertisements

3 thoughts on “சருமப் பாதுகாப்புக்கு சில எண்ணெய்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s