Uncategorized

வீட்டு வைத்தியம் – பாகம் 2

வீட்டு வைத்தியம் – பாகம் 2

போனமுறை சென்னை போயிருந்த போது கடுமையான ஜலதோஷம், ஜுரம்! மருத்துவரிடம் போனால் ஊசி போட்டுவிட்டு “வெந்நீர் குடியுங்கள், 2 நாட்கள் குளிக்க வேண்டாம்” என்று சொன்னார். சென்னையின் கடுமையான வெய்யிலில் வெந்நீர் குடித்துக்கொண்டு, ஜுரம் இறங்க மருந்துகள் சாப்பிடுவதால் வியர்த்து வியர்த்து….. குளிக்கவும் முடியாமல்……கொடுமைடா சாமி…….

சரி இத்தனைக்கு பிறகாவது ஜலதோஷம் விட்டதா, இருமல் குறைந்ததா என்றால், அதுவுமில்லை. வறட்டு இருமல் இரவில் தூங்க விடாமல் படுத்தியது. என்ன செய்வது என்று யோசித்த போதுதான் இயற்கை வைத்தியத்தின் நினைவு வந்தது. இரவு படுக்கப்போகும் முன் ஒரு தம்ளர் சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடி, சிறிது மிளகுப் பொடி போட்டுக் குடிக்கலாம் என்ற குறிப்பின் படி செய்ய ஆரம்பித்தேன். வறட்டு இருமல் போயே போச்! இட்ஸ் கான்! போயிந்தி!

இப்போதெல்லாம் ஜலதோஷம் வரும் அறிகுறிகள் தோன்றியவுடனே தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகு போட்டுக் கொதிக்க வைத்துச் சாப்பிட ஆரம்பித்து விடுகிறேன். என் அனுபவத்தில் இது மிக நல்ல கை வைத்தியம்.

சாதாரண ஜலதோஷம், கூடவே சளி, (மார்புச் சளி அல்ல) தும்மல் இவற்றிற்கு வைட்டமின் – C அதிகம் உள்ள பானங்கள் நல்லது. ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து ½ மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து சாப்பிடுங்கள். ஜலதோஷம்? இட்ஸ் கான்!

வீட்டு வைத்தியம் பாகம் – 1 படிக்காதவர்களுக்கு இதோ இணைப்பு சுட்டி:

https://ranjaninarayanan.wordpress.com/2012/02/20/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

இன்னொரு கை (கண்ட) மருந்து: இஞ்சி, தேன் கலந்த தேனீர்.

செய்முறை: ½ அங்குலத் துண்டு இஞ்சியை சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இந்தத் தண்ணீரை வடிகட்டி ஒரு மேசைக்கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலக்கிக் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை சாப்பிடவும். ஜலதோஷம்? போயே போச்!

பட்டை, மிளகு மற்றும் தேன் இவை நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. இவை எப்போதும் உங்கள் சமையலறையில் இருக்கட்டும். ஒரு தம்ளர் நீரில் சில பட்டை துண்டுகள் போட்டுக் கொதிக்க விடவும்.இதனுடன் 2 தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுக் குடிப்பதும் ஜலதோஷத்திற்கு நல்லது.

தலைவலிக்கு:

எலுமிச்சம் பழ சாறு கலந்த கருப்பு டீ மிக நல்லது.  இது மூளையின் நரம்புகளைத் தளர்த்தி தலைவலியை குறைக்கிறது. ஒரு கப் தேநீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். தலைவலி………… gone!

வறட்டு இருமலுக்கு:

உலர்ந்த திராட்சை சாறு தொண்டையில் ஏற்படும் தொற்றுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.

50 கிராம் உலர்ந்த திராட்சையைத்  தண்ணீர் விட்டு அரைக்கவும். அத்துடன் 50 கிராம் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கெட்டியாக (சாஸ் போல) ஆகும் வரை கொதிக்க விடவும். தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம்.

அஜீரணம், வாயுத்தொல்லை இவற்றிற்கு வெள்ளைப் பூண்டு சேர்த்த பால் நல்ல நிவாரணம் கொடுக்கும்.

செய்முறை: 2 பூண்டுப் பற்கள் எடுத்து நன்றாக தட்டி சற்று சூடான பாலில் கலந்து குடிக்கவும்.

இன்னொரு வீட்டு வைத்தியம் அஜீரணத்திற்கு:

சோம்பை  நன்கு வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன் ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டியளவு சோம்புப் பொடியைப் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் இந்த நீரை வடிகட்டிவிட்டு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிடவும்.

இன்னொரு முறை: இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு இவற்றை பொடி செய்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கொதி நீரில் போட்டு வடிகட்டி தேன் விட்டு சாப்பிட அஜீரணம் மறையும்.

அசிடிடி குறைய ஷாஜீரா உதவும். இந்த விதைகளில் இருக்கும் எண்ணையில் ஜீரணத்தைத் தூண்டும் முக்கியமான பொருட்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் (anti-oxident) பொருட்களும் உள்ளன. இவை ஜீரணத்தை அதிகரித்து வாயு சேர்வதையும் அசிடிடியையும் குறைக்கிறது.

ஒரு தம்ளர் நீரில் ஷாஜீரா ½ தேக்கரண்டி சேர்த்துக் கொதிக்க விடவும். சிறிய தீயில் 10 நிமிடங்கள் வைக்கவும். தினமும் 2, 3 முறை சற்று சுட வைத்துப் பருகவும்.

மாத விலக்கு சமயத்தில் வரும் வயிற்று வலிக்கு:

இஞ்சியை நன்கு அலம்பி தோல் சீவிவிட்டு தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இதனுடன் சிறிது வெல்லம் சேர்க்கவும். ஒரு பத்து நிமிடங்கள் கொதித்த பின் அடுப்பை அணைக்கவும். சற்று சூட இருக்கும்போது ஒரு தேக்கரண்டி அல்லது இரண்டு தேக்கரண்டியளவு அளவு சாப்பிடவும். உடனடி நிவாரணி இது.

Advertisements

10 thoughts on “வீட்டு வைத்தியம் – பாகம் 2

 1. ரஞ்சனி,

  வீட்டு வைத்தியம்_பாகம் 1 & பாகம் 2 ல் நல்லநல்ல குறிப்புகளாக,நிறைய சொல்லியிருக்கீங்க.இவற்றை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

 2. வீட்டு வைத்தியம் குறித்த தங்கள் பதிவு மிக உபயோகமான பதிவு. இப்போது சரக்குன்னா மருத்துவமனைக்கு செல்கிறார்கள். நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவை பயன்படுத்தினால் எடுத்ததிற்கெல்லாம் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை. நல்ல பகிர்வு. தொடருங்கள்.

  1. வாங்க சித்திரவீதிக்காரரே!
   ரொம்பவும் உண்மை நீங்கள் சொல்வது. எல்லோருமே அலோபதிக்கு மாறிவிட்டார்கள். பொதிகை தொலைகாட்சியில் ஒவ்வொரு வெள்ளி இரவு 7.3௦ மணிக்கு வரும் பாரம்பரிய வைத்தியம் பற்றிய நிகழ்ச்சியைப் பாருங்கள். டாக்டர் திருநாராயணன் மிக அழகாக மருத்துவ, மூலிகை செடிகளைக் காட்டி விளக்குகிறார்.

   வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

 3. ரஞ்சனி நாராயணன் எம் பி பி எஸ்[ வீட்டு வைத்தியம்] பட்டம் போதுமா?
  வேறு ஏதாவது வேண்டுமா? நானும் நிறைய முயற்சி செய்வேன் ஆனாலும் அந்த வைத்தியருக்கு தட்சிணை கொடுத்தால்தான் எதுவும் போகும் என்ன செய்வது என் ராசி அப்படி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s