சாணக்கியன் சொல்!
மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள் இருக்காது.
- ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது. நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும். நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.
- விஷமில்லாத பாம்பானாலும் விஷமுள்ளதைப் போல நடிக்க வேண்டும்.
- எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
- எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் உங்களை நீங்களே 3 கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்: ஏன் செய்கிறேன்? முடிவு என்னவாக இருக்கும்? வெற்றி அடைவேனா? இந்த 3 கேள்விகளையும் ஆழமாகச் சிந்தித்து திருப்தியான பதில் கிடைத்தபின் செயலை ஆரம்பியுங்கள்.
- ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்து விட்டால், தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்து பாதியில் விட்டு விடாதீர்கள். உண்மையாக உழைப்பவர்கள் தான் சந்தோஷமாக இருப்பவர்கள்.
- பயம் உங்கள் அருகில் வரும்போதே அதை அடித்து நொறுக்கி சிதைத்து விடுங்கள்.
- பூவின் நறுமணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும். ஒரு மனிதனின் நல்லதன்மை எல்லா திசைகளிலும் பரவும்.
- உலகில் மிகவும் வலிமை பெற்றது இளமையும் ஒரு பெண்ணின்அழகும்.
- படிப்புதான் உண்மையான நண்பன். கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் மரியாதை. படிப்பு அழகையும் இளமையையும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
- கடவுள் சிலைகளில் இல்லை. உங்கள் நல்ல எண்ணங்கள் தான் கடவுள். ஆத்மா தான் கோவில்.
- ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.
- உங்களை விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடமோ, மிகத் தாழ்ந்தவர்களிடமோ நட்பு கொள்ள வேண்டாம். இத்தகைய நட்புக்கள் ஒரு போதும் மகிழ்ச்சி உண்டாகாது.
- முதல் 5 வயது வரை உங்கள் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுங்கள். அடுத்த 5வருடங்கள் நன்றாகத் திட்டுங்கள். 16 வயதாகும்போது ஒரு நண்பனைப் போல நடத்துங்கள். உங்களின் வளர்ந்த குழந்தைகள் உங்களின் மிகச்சிறந்த தோழர்கள்.
- குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.
மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல; தவறாக குறிப்பிடப்பட்டுள்ள்து. :::: மனிதன் தன் செயலால் உயருகிறான். பிறப்பால் அல்ல
sanakkayan words are most poerful and more useful.
மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல; தவறாக குறிப்பிடப்பட்டுள்ள்து. :::: மனிதன் தன் செயலால் உயருகிறான். பிறப்பால் அல்ல
Arumai… Vinoth SIr…