பூமி தினம் (Earth Day)

பூமி தினம் (Earth Day)
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்? பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.
இரண்டாவது காரணம்:
இந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க!
இது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.
ஏன் உயிரினங்கள் அழிந்து போயின? மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள் ஆயின. அங்கு வாழ்ந்து வந்த உயிரினங்களின் உறைவிடங்கள் குறைந்தன அல்லது மறைந்து போயின. பூமியின் நிலவளம் மனிதனால் சூறையாடப்பட்டது. நீர் வளத்தையும் பாதுகாக்க தவறினான்.
பூமியில் இருக்கும் அத்தனை செல்வங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனிதனின் பேராசையால் பருவநிலை மாறியது. சுற்றுச்சூழல் மாசடைந்தது. கிட்டத்தட்ட 300 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் இந்த நிலை பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. பல உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. பல அழியும் தருவாயில் இருக்கின்றன.
ஒரே ஒரு சின்ன ஆறுதல்: பூமியில் இன்னும் சில இடங்கள் சுமார் 15 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றையாவது பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தவே இந்த பூமி தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலகளாவிய அளவில் சுமார் 175 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த பூமி தினத்திற்கு ஒரு கொடி, ஒரு பாடல் இரண்டுமே உண்டு. இதோ அவை பற்றிய விவரங்கள்:

இதுதான் ‘சூழலியல் கொடி’ (Ecology flag). இதை 1969 இல் கார்ட்டூனிஸ்ட் திரு. ரான் காப் (Ron Cobb) உருவமைத்தார். நடுவில் இருக்கும் குறியீடு ஆங்கில ‘E’ (environment) மற்றும் ‘O’ (Organism) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் கலவையாக கிரேக்க எண் (8) ‘தீட்டா’ (theta) வடிவத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்க நாட்டுக் கொடியைப் போலவே 13 கோடுகள் பச்சை வெள்ளை நிறங்களில் மாறிமாறி இருக்கிறன. இடது ஓரத்தில் பச்சை சதுரமும் அதில் மஞ்சள் கலர் ‘தீட்டா’ (theta)வும் அமைந்துள்ளது. கிரேக்க எண் (8) ‘தீட்டா’ ‘Earth Day’ வில் உள்ள 8 எழுத்துக்களைக் குறிக்கின்றது.
Earth Anthem
Joyful joyful we adore our Earth in all its wonderment
Simple gifts of nature that all join into a paradise
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
உலகின் பல அரிய செல்வங்களை – குடி தண்ணீரிலிருந்து விலையுயர்ந்த ரத்தினக்கல் வரை – பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த வளங்கள் எல்லாம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. இந்த பூமியில் பிறந்த புழு, பூச்சிகள், செடி கொடிகளுக்கும் இவற்றை அனுபவிக்க உரிமை உண்டு. அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் மனித வாழ்க்கை சிறக்கும். நமது அடுத்த தலைமுறை செழித்து வாழும் என்பதை இந்த பூமி தினத்தில் நினைவு கொள்ளுவோம். பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. இந்த பூமி தினத்தில் பூமியின் வளங்களைக் காத்து சக உயிரினங்களின் வளமான வாழ்க்கைக்கு வழி செய்வோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுவோம்.

8 thoughts on “பூமி தினம் (Earth Day)

 1. வணக்கம்
  ரஞ்ஜனியம்மா

  25,11,2012 இன்று உங்களின் ஆக்கம் ஒன்று வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் மிகவும் அருமையான படைப்பு நல்ல கருத்தை சொல்லியிருக்கிங்கள் பாராட்டுக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. தகவலுக்கு நன்றி ரூபன். ஊரில் இல்லை அதனால் தாமதமாக இந்தப் பதில்.மன்னிக்கவும்.

 2. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என்
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் அம்மா …

 3. அருமையான பகிர்வு பாராட்டுக்கள் ரஞ்சனி பூமித்தாயை வாழ்த்தி வணங்குவதோடு அதைப் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது

 4. இப்படி ஒரு தினம் இருக்கிறதா?நல்ல வேளை.. பூமி இல்லாவிட்டால் வாழ்வாதாரம் ஏது.? எவ்வளவு நல்ல விஷயங்கள்? நல்ல பகிர்வு.. நாமும் மனதால்க் கொண்டாடுவோம். அன்புடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s