துஷாவிடம் எப்படிச் சொல்லுவது?

துஷாவிடம் எப்படிச் சொல்லுவது?

http://www.dailymail.co.uk/femail/article-2123333/How-tell-Thusha-doctors-say-probably-dance-walk-again.html

துஷாவின் 7 வது பிறந்தநாள் ஜூலை 20 ஆம் தேதி. இன்னும் 4 மாதங்கள் இருந்தபோதிலும் தனது ஆவலை அடக்க முடியவில்லை. ‘என்னால் நடக்க முடியுமா? நடனம் ஆட முடியுமா?’ என்று சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கேட்கும் கேள்விகளுக்கு நிஜத்தை சொல்ல முடியாமல் அவளது அப்பா கமலேஸ்வரனும், தாய் ஷர்மிளாவும் மனதுக்குள் துடிக்கின்றனர்.

என்னவாயிற்று துஷாவுக்கு?

 

 

போன வருடம் மாரச் 29 ஆம் தேதி தன் மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல தன் பெற்றோர்களுடன் வந்தாள்  துஷா துஷாவின் மாமா தெற்கு லண்டனில் ஸ்டாக்வெல் ஃபூட் அண்ட் ஒயின் கடை வைத்திருப்பவர். மாமாவின் கடைக்குள் வெகு உற்சாகத்துடன் நடனம் ஆடிக் கொண்டிருத்த துஷா, கடை வாசலில் ஏதோ அரவம் கேட்வே அந்தப் பக்கம் போயிருக்கிறாள்.

கடை வாசலில் இரண்டு கொலை வெறி பிடித்த கும்பல்கள் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். கிரான்ட் என்பவனது துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு சின்னஞ் சிறுமி துஷாவின் மார்பைத் துளைத்தது. துஷாவின் பிஞ்சு இதயம் இரண்டு முறை துடிப்பை நிறுத்தியது. சமயத்தில் வந்த மருத்துவர்களின் உதவியால் துஷாவைப் பிழைக்க வைக்க முடிந்தது. ஆனால் அவளது முதுகெலும்பு சிதைந்து விட்டதால் இனி அவள் மார்புக்கு கீழே உணர்ச்சி அற்றுத்தான் தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இப்போது துஷாவிற்கு கால்களில் சிறிது உணர்ச்சி தெரிகிறது. பெருவிரலை சிறிது அசைக்க முடிகிறது. ஆனாலும் மருத்துவர்கள் துஷா நடப்பது சாத்தியமில்லை என்றே கூறுகின்றனர். துஷாவின் பெற்றோர்கள் அவளது கால்கள் பலம் பெற பயிற்சிக்காக அமெரிக்காவிலிருந்து ஒரு சைக்கிளை வரவழைத்து இருக்கிறார்கள்.

“நாங்கள் ஸ்ரீலங்காவிலிருந்து புகலிடம் தேடி வந்தவர்கள். எங்கள் நாட்டில் நடக்கும் உள்நாட்டு சண்டைகளையும் கொலைகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் தான் இங்கே வந்தோம். எங்கள் குழந்தைகள் இங்கே லண்டனில் பாதுகாப்புடனும், அமைதியுடனும் வாழ்வார்கள் என்று நம்பினோம். துஷாவின் மேல் நடந்த துப்பாக்கிச் சுடு லண்டனில் துப்பாக்கிக் குற்றங்கள் எல்லை மீறிவிட்டன என்பதையே காட்டுகிறது. ஏதாவது ஒரு அதிசயம் நடந்து துஷா மீண்டும் பழையபடி பாடவும் ஆடவும் செய்வாள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்கிறார் துஷாவின் அம்மா ஷர்மிளா.

நாமும் சிறுமி துஷாவுக்காகப் பிரார்த்தனை செய்வோம்.

published in ooooor.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s