Uncategorized

பாட்டியின் மரபணு!

பாட்டியின் மரபணு!

Elderly woman or old lady mowing the lawn and sweating in the hot sun clipart                                       Grandma and Grandchild Putting Flowers in Vase clipart                        Grandma - precious-and-sweet-grandma photo                                          Precious and Eternal - precious-and-sweet-grandma photo

ஒரு சோப் விளம்பரத்தில் பாட்டி சொல்லுவார்: “Like பாட்டி! Like பேத்தி!” அதாவது அழகு, அறிவு எல்லாவற்றிலும் பேத்தி தன்னைக் கொண்டிருக்கிறாள் என்று. இது வெறும் விளம்பரச் சொற்றொடர் அல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையிலேயே பாட்டிக்களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் மரபணு ரீதியாக மிகுந்த தொடர்பு இருக்கிறது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல பல வீடுகளில் இளம் தாய்மார்களை விட பாட்டிமார்கள் மிகுந்த உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். இதற்குக் காரணம் பெண்களுக்கு இயற்கை தரும் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்படுவதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. தங்களது சந்ததிகளை நன்றாக போஷித்து ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்கவே இயற்கை பெண்களுக்கு மெனோபாஸ் என்ற ஒன்றைக் கொடுக்கிறது என்று ஒரு புனைவுக் கருத்து (hypothesis) நீண்டகாலமாக இருந்து வருகிறது.

நல்ல ஆரோக்கியமான  பாட்டிகள் புதிய தாய்மார்களுக்கு சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்ப்பதில் மிகச் சிறந்த உதவியாளர்களாக விளங்குகிறார்கள். மனிதக் குழந்தைகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியாதது மட்டுமல்ல; நீண்ட காலத்திற்கு அம்மாவை சார்ந்தே இருக்கின்றன. மற்ற விலங்கினங்கள் போல் அல்லாமல் 3 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தை பிறக்கும் வாய்ப்பு மனித குலத்திற்கு இருப்பதும் பாட்டியின் தேவைக்கு ஒரு காரணம். புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையை தாய் பார்த்துக்கொண்டால் முன்னால் பிறந்திருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஒரு பாட்டி வேண்டுமே!

மனிதவியல் வல்லுநர் திருமதி. க்ரிஸ்டன் ஹாக்ஸ் என்பவர் 1980 இல் தான்சானியாவில் உள்ள ஒரு வேட்டையாடும் பழங்குடியினர் இடையே  ஆராய்ச்சி நடத்தியதில், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு கொடுத்து அவர்களை போஷித்துப் பாதுகாப்பது இந்த இனத்தில் இருக்கும் மூத்த பெண்மணிகள் என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கு பிறகு பின்லாந்து நாட்டில் 2004 இல் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மெனோபாஸ் முடிந்து நீண்டகாலம் வாழும் பாட்டிமார்களுக்கு நிறைய பேரக் குழந்தைகள் இருப்பதை சுட்டிக் காட்டியது. பாட்டியின் சீராட்டலால் பேரக் குழந்தைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் செய்தார்களாம்.

தங்களை வளர்த்து ஆளாக்கும் பாட்டிகளிடம் பேரன் பேத்திகள் அலாதியான அன்பும், பாசமும் காட்ட வேறு ஒரு காரணமும் உண்டு. அது அவர்கள் பகிர்ந்துகொள்ளும் மரபணுத் தொடர்பு!

எல்லாப் பெண்களுக்கும் இரண்டு X குரோமோசோம்கள் உண்டு. ஆணுக்கு ஒரு X குரோமோசோம் ஒரு Y குரோமோசோம் இருக்கின்றன. ஒரு ஆண்மகன் தன் தாயிடமிருந்து கிடைக்கும் ஒரே ஒரு X குரோமோசோமை தன் மகளுக்குக் கொடுக்கிறான்.

இதனால் தந்தை வழிப் பாட்டி தனது பேத்திகளுடன் 50% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். ஆனால் தன் பேரன்களுடன் (பெண்களுக்கு Y  குரோமோசோம் இல்லாததால்) எந்தவித குரோமோசோம் தொடர்பும் அற்றவளாக இருக்கிறாள். தாய்வழிப் பாட்டி தன் பேரன் பேத்திகளுடன் ஒரே சீராக 25% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். மரபணுத் தொடர்பு பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் 23% லிருந்து 31% வரை இருக்கிறது. ஏன் X குரோமோசோம்? நமது மரபணுக்களில் 8% இந்த X குரோமோசோம்களால் ஆனது. குழந்தைப் பேறும் இதில் அடக்கம்.

மிகவும் சுவாரஸ்யமான இந்த அறிக்கை Proceedings of the Royal Society, Series B, Biological Sciences இல் வெளியானபோது மிகப் பெரிய அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட 10 கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் ஒரு கேள்வி மனதை நெருடுகிறது. வெறும் மரபணுவை வைத்து மட்டுமே பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

குரோமோசோம்கள் தவிர, குழந்தைகள் வாழும் சூழ்நிலை, அவர்களது கலாச்சாரம் இவையும் கூட உறவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன என்பதுதான் நிஜம்.

ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் இருக்கும் வாசேடா பல்கலைக் கழகப் புரொபசர் திரு. யாசுயுகி ஃபுகுகவா (Yasuyuki Fukuoka) 3,168 பெண்களை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை, தந்தை வழிப் பாட்டியின் செல்வாக்குத்தான் குழந்தைகளின் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது; மகன்களுக்கு விரைவில் முதல் குழந்தை பிறப்பதற்கும், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லாமல் இருப்பதற்கும் தாய் வழிப் பாட்டி தான் காரணம் என்கிறது.

இதற்கு இவர் சொல்லும் காரணம்: ஜப்பான் நாட்டில் மருமகள் திருமணத்திற்கு பிறகு மாமியார் வீட்டில் வந்து  வசிப்பதுதான்!

 

 

published in ooooor.com

cartoons courtesy:  clip art  and so sweet grandma

Advertisements

8 thoughts on “பாட்டியின் மரபணு!

  1. அருமையான விளக்கம்….என் தாத்தா விளையாட்டாக சொல்லுவார்…அப்பாவைப் பெற்றவர்கள்தான் சொந்த தாத்தா பாட்டியாம்! அம்மாவின் பெற்றோர் ஓசி தாத்தா பாட்டிதான் என்பார்! அது சரிதான் போலும்!

  2. எந்த வழிப் பாட்டியானாலும் கூட இருந்து வளரும் பேரன் பேத்திகளுக்குத்தான் மேனரிஸம்கூட ஒத்தமாதிரி இருக்கிறது. ருசி,ஸுபாவம், மற்ற விஷயங்கள் கூட தந்தை வழிப்பாட்டியினுடயது
    அதிகத் தாக்கம் இருக்கிறது. நல்ல சிந்திக்கும்படியான விஷயங்கள். படிக்க நன்றாக இருந்தது. வயதானவளாதலால் யோசிக்கவும் வைத்தது.

    1. ‘Grandma Gene’ என்பது அறிவியலில் மிகப் பெரிய கண்டுபிடிப்பு. ஆங்கிலத்தில் வந்திருந்த இந்தக் கட்டுரையை பல முறை படித்து எழுதி, பல முறை திருத்தி பின் வெளியிட்ட கட்டுரை இது. எனக்கு மிகவும் பிடித்தது கூட!
      பின்னூட்டத்துக்கு பல பல நன்றிகள், VGk ஸார்!

  3. அன்பின் ரஞ்ஜனி – பொதுவாக பாட்டிகளுக்குப் பேரன் பேத்தி இருவரையுமே நன்கு பிடிக்கும். மரபணு ஆராய்ச்சி எல்லாம் படிப்பதற்கு நன்றாக இருக்கும் – அவ்வளவு தான் – கட்டுரை அருமை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s