மார்ச் மாதத்தில் வான வேடிக்கை!!!

மார்ச் மாதத்தில் வான வேடிக்கை!!!


“உங்களுக்கு இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கப் பிடிக்குமா?”

“ஆமா….”

“மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு அண்ட வெளியில் மிதக்கும் விண்மீன்களை ஆராயப் பிடிக்குமா?”

“ம்……ம்…….ம்……..”

“திருமணத்தின் போது ‘அதோ, அருந்ததி’ என்று புரோகிதர் கை காட்ட, காலை வேலையில் எங்கிருந்து அருந்ததியும் அனசூயையும் தெரிவார்கள் என்று நினைத்தது உண்டா?”

“உண்டு…….”

அப்படியானால் மார்ச் மாதம் உங்களுக்கு வான வேடிக்கைதான்!

இன்று இரவு மாடிக்கு வந்துடுங்க வான வேடிக்கைப் பார்க்க…….

இந்த மாதத்தில் வெறும் கண்களாலேயே வான் வெளியில் மிதக்கும் கோள்களைப் பார்க்கலாம்.

இந்த மாதத்தில் பார்க்க முடிந்த சில கோள்களைப் பற்றிய சிறு குறிப்பு இதோ:

இம்மாதத்தின் முதல் பாதியில் மெர்க்குரி (புதன்) என்கிற கோளை பார்க்க முடிந்தது.

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் சிறிய கோள் இது. இம்மாதத்தின் பின் பகுதியில் வீனஸ்

(வெள்ளி), மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர் (வியாழன்), யுரேனஸ், சனி முதலிய கோள்களைப் பார்க்கலாம்.

வீனஸ் (சுக்கிரன் அல்லது வெள்ளி) சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்திருக்கும் கோள். மிகப் பிரகாசமாக இருக்கும் இதை, வான் வெளியைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட சுலபமாகப் பார்க்கலாம். சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகப் பிரகாசமாக இருக்கும் கோள் இதுதான். பூமியைப் போல இருக்கும் இது மிகவும் வறண்ட கோள். மிக மிக வெப்பமாகவும்இருக்கும் இதனை காலை நட்சத்திரம் அல்லது மாலை நட்சத்திரம் என்று சொல்லுவார்கள்.

இந்த மாதத்தில் இந்தக் கோளை மேற்கு அடிவானத்தில் சூரியனின் மறைவுக்குப் பிறகு காணலாம். வீனஸ் இந்த மாதம் முழுவதும் நம் கண்களுக்குப் புலப் படும். மீன ராசி நட்சத்திரக் கூட்டத்தில் மாலை 7 (IST) மணி அளவில் இதனைக் காணலாம். அந்தி மாலைப் பொழுதின் அரை இருட்டோ, நகரத்தின் விளக்குகளோ இந்த “பளிச்” கோளை மறைக்க முடியாது. மார்ச் மாதம் 3 வது வாரத்தில் இக்கோளை மேற்கு வானத்தில் தடங்கல் இல்லாமல் பார்க்க முடியும்.

மார்ஸ் எனப்படும் செவ்வாய் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் அமைந்திருக்கும் ஒரு கோள். இதன் பரிமாணம் இந்த மாத இறுதியில் குறைந்து விடும். சூரியன் மறையும் நேரத்தில் தென்கிழக்கு அடிவானில் இதனைப் பார்க்கலாம். சூரியன் உதிப்பதற்கு சில மணி நேரம் முன்பு இந்தக் கோள் மறைந்து விடும். இரவு நேரத்தில் 7 மணி (IST) அளவில் தென் கிழக்கு அல்லது மேற்கு அடிவானத்தில் இதனைப் பார்க்கலாம். மெர்க்குரி, வீனஸ் போல் அல்லாமல், செவ்வாய் கோளை வானத்தில் சூரியனின் சுற்றுப் பாதையில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், காணலாம்.

ஜூபிடர் அல்லது வியாழன் சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள். சூரியனிலிருந்து 5 வதாக இருக்கிறது. இதனை மாலை சுமார் 6.45 IST கிழக்கு, தென்கிழக்கு அடிவானத்தில் காணலாம். இந்த மாத ஆரம்பத்தில் மிக மங்கலாகத் தோற்றமளித்த இந்தக் கோள் இப்போது ஒரு பிரகாசமான மாலை நேர நட்சத்திரமாக காட்சி அளிக்கிறது. இதனை மேஷ ராசி நட்சத்திரக் கூட்டத்தில் காணலாம். வியாழன் கோளில் அமைந்திருக்கும் “பெரும் சிவப்புப் பிரதேசம்” (Great Red Spot) வியாழனின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கோட்டில் அமைந்துள்ளது. தொலைநோக்கி, அல்லது பைனாகுலர் மூலம் வியாழனின் பிரபலமான கலிலியோ நிலாக்களைக் காணலாம். கலிலியோவால் 1610 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலாக்கள் இவை.

சனிக் கோள்:

சூரிய மண்டலத்தின் 6 வது கோள் சனி. சூரிய மண்டலத்தின் வெளிப்புற கோள் இது. விடியற்காலை 1.30 (IST) மணிக்கு உதயம் ஆகும் இது காலை நேர வானில் மேற்கு அடிவானத்தில் காணக் கிடைக்கும். சனி கோள் ஏப்ரல் 15 ஆம் தேதி பூமிக்கு அருகில் வருகிறது. இப்போது காலை 6 மணி வரை சனி கொலைப் பார்க்கலாம். சாதாரண தொலை நோக்கி மூலம் சனியின் மிகப் பெரிய நிலாவான டைட்டனையும் (Titan), சற்றுப் பெரிய தொலை நோக்கி மூலம் மேலும் சில நிலாக்களையும் காணலாம்.

வலிமை மிக்க தொலை நோக்கி உங்களிடம் இருந்தால் வீனஸ் மற்றும் ஜூபிடர் இடையில் இருக்கும் யுரேனஸ் கோளைக் காணலாம்.

வான் வேடிக்கையைக் கண்டு மகிழ வாழ்த்துக்கள்!

published in ooooor.com


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s