Uncategorized

பசுமை நிறைந்த நாட்கள்!

பசுமை நிறைந்த நாட்கள்!

நாங்கள் சிறுவர்களாக  இருந்த போது எங்கள் பாட்டி சொல்லுவார்: “எங்கள் காலத்தில் தங்கம் பவுன் 30 ரூபாய் தான்!”
உடனே நாங்கள் கேட்போம்:”அப்பவே நீங்கள் நிறைய தங்கம் வாங்கி சேர்த்திருக்கவேண்டும்; இப்போது பாருங்கள் ஒரு பவுன் 2000 ரூபாய் ….. ” பாட்டியின் பதில் என்ன தெரியுமா? “உங்கள் தாத்தாவுக்கு சம்பளமே 20 ரூபாய் தானே…….!?”
இளைய தலைமுறை எப்பவுமே முதிய தலைமுறையைக் குறை சொல்லும். இந்த வழக்கம் இப்போதும் தொடர்கிறது. இதோ ஒரு சின்ன கதை: எப்போதோ படித்தது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
ஒரு மூதாட்டி ஒரு கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்குகிறார். வாங்கிய சாமான்களைப் போட பை கேட்கிறார். இளம் வயது
விற்பனையாளர் சொல்லுகிறார்: “பாட்டி!, பிளாஸ்டிக் பை இப்போது பயன் படுத்தக் கூடாது. சுற்றுச் சூழல் பாழாகிவிடும். நீங்கள் உங்களது ஷாப்பிங் பை கொண்டு வரவேண்டும்…! recycle, reuse and reduce இதெல்லாம் தெரியுமா பாட்டி உங்களுக்கு?”
பாட்டி சொல்லுகிறார்: “ஓ! அப்படியா? எங்கள் காலத்தில் இதெல்லாம் கிடையாதுப்பா…!”
“அதனால் தான் இப்போது நாங்கள் கஷ்டப் படுகிறோம்……. உங்கள் காலத்தில் சுற்றுச் சூழலை பாதுகாத்திருந்தால் இந்நிலை வந்திருக்குமா?”
நிதானமாக இளம் விற்பனையாளரைப் பார்த்து சொன்னார் பாட்டி:
 “நிஜம்தான் உங்களை மாதிரி சுற்றுச் சூழல் பற்றிய தனியான அறிவு எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்தோம்….”
 • அந்தக் காலத்தில் பால் எங்களுக்கு பாட்டிலில் வந்தது; பாட்டிலைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம்; பால் பண்ணைக்கு பாட்டில்கள் அனுப்பப் பட்டு சுத்தப் படுத்தப் பட்டு பால் நிரப்பி வரும். இப்போது recycle என்று சொல்லுகிறீர்களே, அதை நாங்கள் சொல்லாமல் செய்து கொண்டு இருந்தோம்….
 • எழுதும்  பேனாக்களுக்கு மையை நிரப்பிப் பயன் படுத்தினோம்; ஒவ்வொரு முறையும் நாங்கள் புது பேனா வாங்கியதில்லை;
 • சவரம் செய்யும் ரேசரின் பிளேடுகளை மட்டும் மாற்றினோம். பிளேடு மழுங்கி விட்டது என்று ரேசரையே தூக்கிப் போடவில்லை; நீங்கள் சொல்லும் reduce இதுதானே?
 • கடைகளிலும் அலுவலகத்திலும் மாடிப் படிகளில் ஏறி இறங்கினோம். எங்கள் காலத்து கடைகளிலோ அலுவலகத்திலோ நகரும் படிக்கட்டுகளோ, லிப்ட் களோ இல்லை. பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் செல்ல வாகனங்களை நம்பியிருக்கவில்லை. எங்கள் கால்களை நம்பினோம்; எங்கள் உடல் வலுப் பட்டது.
 • குழந்தைகளின் உள்ளாடைகள் துணிகளால் தைக்கப் பட்டவை. தினமும் துவைத்து உலர்த்தி பயன் படுத்தினோம்; குழந்தைகளின் உள்ளாடைகளை தூக்கிப் போடவில்லை;
 • நாங்கள் உடுத்தும் ஆடைகளை நாங்களே துவைத்தோம்; துவைத்த துணிகளை உலர்த்த சூரிய ஒளியையும், காற்றையும் நம்பினோம். மின்சாரத்தை விழுங்கும் இயந்திரங்கள் எங்களிடம் இல்லை.
 • எங்கள் அக்கா, அண்ணன் போட்டிருந்த உடைகளை பெருமையாக நாங்கள் அணிந்துகொண்டோம்;  reuse! பிறந்த நாளைக்கு என்று வருடம் ஒரு முறை புதுத் துணிகள் வாங்குவோம்.
 • அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு டீவீ , ஒரு வானொலி தான் இருந்தது. இப்போது போல ஒவ்வொரு அறையிலும் ஒரு டீவீ கிடையாது. டீவீ யின் திரை சின்னதுதான். உங்களிடம் இருப்பது போல மெகா சைஸ் இல்லை.
 • சமையலில் அரைப்பது, கலப்பது எல்லாமே கையில்தான். எங்களிடம் மிக்ஸி இல்லையே!
 • ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு சாமான்களை பழைய பேப்பர்களில் சுற்றி அனுப்பினோம்; அப்போது பிளாஸ்டிக் பப்பிள் ராப்பர்கள் இல்லை.
 • தோட்டத்தில் இருக்கும் புற்களை கைகளால் இயங்கும் இயந்திரத்தால் வெட்டினோம். பெட்ரோல் பயன்படுத்தி இயங்கும் புல்வெட்டி அப்போது இல்லை.
 • போதுமான உடல் உழைப்பு இருந்ததால் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம்  எங்களுக்கு இல்லை. உடற் பயிற்சி எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்தது.
 • தண்ணீர் என்பது இலவசப் பொருளாக இருந்தது. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விலைக்குக் கிடைக்கும் பொருளாக மாறவில்லை எங்கள் காலத்தில்.
 • அந்தந்த பருவங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை தான் சாப்பிட்டோம். வெளிநாட்டு உணவுகள் எங்களுக்கு பழக்கமில்லை; எங்கள் ஆரோக்கியத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
 • இயற்கையில் விளைந்த பொருட்களை வாங்கி வீட்டிலேயே சமையல் செய்து சாப்பிட்டோம்; டின்களில் அடைத்த பொருட்கள் எங்களுக்கு அறிமுகமில்லாதது. கறிகாய்களை நாங்களே கழுவி நாங்களே நறுக்கி உபயோகப் படுத்தினோம்.
 • வெளியிலோ அலுவலகங்களுக்கோ செல்ல டிராம் அல்லது பேருந்துகள் தான் அந்தக் காலத்தில்; குழந்தைகள் சைக்கிள்களில் பள்ளிக்குச் சென்றனர். மாசற்ற இயற்கை சூழலில் வாழ்ந்தோம்; அதனால் சுற்றுச் சூழலை விசேஷமாக கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை;
 • மின்சாரத்தை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தினோம்; வீடு முழுவதும் மின்சாரக் கம்பிகள், இணைப்புக்கள் கிடையாது.
 • ஓரிடத்திற்கு செல்ல வழி தெரியவில்லையா? வாயில் இருக்குது வழி என்று பிறரைக் கேட்டு கேட்டு சென்றோம்; உங்களைப் போல கையில் ஒரு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் இடத்தை படத்தில் தேடவில்லை;
 • சமைத்தவுடன் சாப்பிட்டோம்; உணவுகளை மறுபடி சூடாக்க இயந்திரம் தேவை படவில்லை;
 • மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட்டோம்; இயந்திரங்களுடன் அல்ல;
பட பட வென்று சொல்லிவிட்டு ‘போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது போல பார்த்தார் பாட்டி.
விற்பனையாளர் பதில் பேசாமல் பாட்டி வாங்கிய சாமான்களை ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு விட்டு,” பாட்டி, இந்தப் பைக்கு இரண்டு ரூபாய் தனியாகக் கொடுக்க வேண்டும்….”
“ஓ! இரண்டு ரூபாயில் சுற்றுச் சூழலை சரி படுத்தி விடுவீர்களா?” என்று கேட்டு விட்டு நடையைக் கட்டினார் பாட்டி!
published in ooooor.com
Advertisements

4 thoughts on “பசுமை நிறைந்த நாட்கள்!

 1. These are the comments when this article was published in ooooor.com

  Ramya wrote: 2012/02/26 at 11:31 am
  பேப்பர் ப்ளேட்டுகள் இல்லாமல், தொன்னையில் சாப்பிட்ட காலங்கள் உண்டு. அதனால், நாம் சாப்பிடுவது மட்டுமன்றி, ஆடு மாடுகளுக்கும் உணவு கிட்டயது. வாழை இலை,மந்தார இலை கொண்டு உணவு பொட்டலங்கள் கட்டுவது உண்டு. ஹொர்லிக்ஸ் பாட்டில்களை என் அம்மா தேய்த்து வெயிலில் காய வைத்து, “reuse” செய்வாள்.
  இது போன்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதை பின் பற்ற கொஞ்சம் நாமும் முயர்சி செய்யலாம்.

  Velanai Sivam wrote: 2012/02/26 at 2:17 pm
  Now in canada they have the plates made out of tree leafs… please guys we all should think about saving every thats another big mistakes we make… we don’t realize how much electricity we date in a day….
  if you can write about the tips and techniques on saving electricity.

  Radha Balu wrote: 2012/02/27 at 2:17 am
  ம்ம்ம்….அந்தக் காலம் திரும்ப வராதானு ஏக்கமா இருக்கு…..இன்று ஐம்பதுக்கு மேல் வயதான பலரும் இதில் பாதியை அனுபவித்திருக்கிறோமே?

  Uthayasegaram wrote: 2012/02/27 at 4:05 pm
  We are looking for articles likes this on ooooor. Good Job ranjani.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s